இன்ட்ரெஸ்டிங்காய் கொஞ்சம் எலக்ரோனிக்ஸ்... எப்எம் ரேடியோ







    காலை ஏழு மணி… மாணிக்கத்தாரின் சைக்கிள் கடை ……. ஒரு மூலையிலிருந்த பழைய ரேடியோவில் , வெட்டி எஃப் எம்மின் வெடியல் நிகழ்ச்சி.;.. தம்பி லூஸ்மோசன் வழமைபோல போளை அடிக்கும் விளையாட்டு பற்றி அலறிக் கொண்டிருந்தார் , . றப்பர் வாசமும் சாம்பிராணி நாற்றமும் அதனுடன் கலந்து பரவிக் கொண்டிருக்க , ஒரு காதால் அதைக்கேட்டபடி , காற்றடிக்க வந்த மாணவர்களுடன் சேர்ந்து ஜோக்கடித்துக்கொண்டிருந்தார் நம்ம தம்பர்.




    டேய் தம்பிகளா.. உதோ உந்த ரேடியோவில கதைக்கிறானே பெடி , அவன் முந்தி அடிக்கடி இங்க வாறவன் தெரியுமோ.. சொன்னா நம்ப மாட்டியள் சின்ன வயதிலயே காத்தடிக்கிறதில அவன் ஒரு கிங்.. நாங்களெல்லாம் எந்த மூலைக்கு... இப்ப முன்னேறி ரேடியோவுக்குள்ள பூந்திட்டான்.


    பெடியங்கள் கிக்கிலித்தனர்.


    சேர்ந்து சிரித்த தம்பர் சட்டென்று அமைதியாகி ஏதோ தீவிரமாக சிந்திப்பது போல பாவ்லா காட்ட ஆரம்பித்தார்.


    டேய் ஓடுங்கடா பள்ளிகூடத்துக்குஇதுல நிண்டு ஏன் உந்த விசரனோட வெட்டிக்கதை கதைக்கிறியள்? கொப்பர்மாரட்டசொல்லட்டோ? ? “


    உறுமியபடி வந்த கனகண்ண தம்பரை எரிப்பது போல் பார்க்க , தம்பரின் பலான ஜோக்குகளுக்காக காத்திருந்த சிறுவர்கள் எடுத்தனர் ஓட்டம்.. தம்பரோ தான் ஏதோ சம்பந்தப்படாதது போல்


    வாங்கோ கனகண்ணை ! எப்பிடி சுகமோ? அக்கா நல்லா கவனிக்கிறாவோ என்று கேட்டுவிட்டு “ அண்ணே ! பாத்தீங்களே உந்த மோசன் தம்பி எவ்வளவு நல்லா ப்ரோகிராம் செய்யுது.. அது சரி இவ்வளவு தெளிவா கேக்குதே , எங்க உந்த கோப்பாய் ட்வரிலதான் ஏறியிருந்து கத்துறானோ ? தெரிஞ்சா போய் பாத்து வேர்க்கிற பிள்ளைக்கு கொஞ்சம் விசுக்கி விட்டுட்டு வரலாம் என்ன?




    அதிர்ச்சியடைந்த கனகண்ணை “டேய் யார்ரா சொன்னது அவன் டவரிலயிருந்து கத்துறானெண்டு ? படுபாவி


    குழப்பமடைந்த தம்பர்
    ! அப்ப அப்பிடியில்லையே? போன கிழமை யாழுக்கு வெட்டி எப் எம் வந்தபோதுஅண்டைக்கு உந்த டவரில ஏதோ ஒரு ட்ரம் மாதிரி ஒண்ட கஷ்டப்பட்டு ஏத்தினாங்கள்.. ஏன்டா உதை முக்கி முக்கி ஏத்துறீங்கள் எண்டு கேக்க , உதுக்க ஏறி இருந்துதான் தொண்டை கிழிய எனொன்ஸ் பண்ணுற எண்டு சொன்னானே அந்த படுபாவி ட்ரைவர்




    செக்கு மாடு ! ட்ரைவரிட்ட விஞ்ஞான விளக்கம் கேட்டா அவன் என்ன செய்வான் பாவம்.. சரி விடு விடு.. எப்பிடி எப் எம் ரேடியோ வேலை செய்யுதெண்டு எனக்கும் தெரியாதுதான் , நம்மட நல்ல காலத்துக்கு கோபாலசிங்கத்தாற்ற பெடியள் ரெண்டும் இங்க வாறாங்கள.. ரெண்டும் என்சினியருக்கு படிக்குதுகள் கண்டியோ! கேட்டா கட்டாயம் சொல்லுவாங்கள்
    தம்பிமார் வாங்கோ வாங்கோ


    சொல்லுங்கோ கனகண்ணை .. நேற்றுத்தானே கோயிலில கண்டு கதைச்சனாங்கள் இண்டைக்கு என்ன ஏதாலும் பிரச்சனையே?


    இல்லையப்பன் இந்த எப் எம் ரேடியோ எப்பிடி வேலைசெய்யுதெண்டு ஒரு சந்தேகம் அதுதான் கேட்டுத்தெளிவாக்குவமெண்டு…


    இந்த அறிவிப்பாளர்கள் எங்கயப்பன் இருக்கின? அந்த இடத்த என்னென்ன உபகரணகள் இருக்கும்? எப்பிடி அவ கதைக்கிறது கனதூரத்துக்கு கேக்குது?




    ம்ம்.. சரி அண்ணை .. ரெண்டு பேரும் இப்பிடி இருங்கோ சொல்லுறன்அந்த அறிவிப்பாளர்கள் கொழும்பில இருக்கின.. அவை அங்க அவையிண்ட ஸ்டேசனில இரந்து கதைப்பினம்.. அந்த ஸ்டேசனில..




    தம்பி! பொறப்பன் பொறப்பன் தம்பன் என்ககொரு டவுட்… அப்ப அந்த வெள்ளை ட்ரம்முக்குள்ள யாரப்பா இருக்கிறது?

    அடக்கடவுளே.. அது மைக்ரோவேவ் அண்டெனா (microwave antenna) அண்ணே .. அதுக்குள்ள யாரும் இல்ல… அதைப்பற்றி பிறகு சொலலுறன்.. இப்ப நான் சொல்லுறத கேளுங்கா..

    ரேடியோ ஸ்டேசனில கன பொருட்கள் இருக்கும்..
    அதில பல மிக்சிங்க் கருவிகள் பிச்பே மற்றும் குவாலிட்டி பில்ட்ர்களாக (mixing equipments and Audio or Pitch Bay equipments)இருக்கும்…
    மைக்கில இருந்து அறிவிப்பாளர் கதைக்க , ஒரு கொம்ப்யுட்டர் பின்னணி இசை குடுக்க இன்னொரு கொம்ப்யூட்டர் ஜிங்கிள் குடுக்க இன்னும் பலது பலதை குடுக்க எல்லாம் ஒரு சதவிகிதத்தில சேர்ந்து எப் எம் டரான்ஸ்மிட்டருக்க(fm transmitter) போகும்…




    அட அநியாயமே? அப்ப அப்பிடி கடமுட கடமுட எண்டு சத்தம் போடுறது எனொன்சர் இல்லயே? நான் அவனல்லோ பேணியள் கோப்பையள் வழிய தட்டி உப்பிடி கல்லு றோட்டில மாட்டு வண்டில் போனமாதிரி சத்தம் போடுறவனெண்டு நெச்சன்



    டேய் தம்பு அவனை சொல்ல விடடா!



    ஹிஹி! இனி சற்று டெக்னிக்கலாகவே பார்ப்போம்…
    முதலில நீங்கள் கதைக்கிறது , போடுற பாட்டெல்லாம் லெப்ட் சௌண்ட் , றைட் சொளண்ட்(left & right channels) எண்டு இரு பகுதிகளா போகும்..
    அந்த ஒலி முதலில கொம்பிறசர் (compressor ) அல்லது லிமிட்டர் (limiter) என்ற தொகுதியினூடே செலுத்தப்படும்..
    உங்கட மிக்ஸ் பண்ணப்பட்ட , ஒலிபரப்பப்பட வேண்டிய ஒலி முதலில அந்த தொகுதியால் கேட்கப்பட்டு fine tune பண்ணப்படும்.
    வெளிவரும் ஒலியின் உரப்பு (volume) வித்தியாசங்கள் அளக்கப்பட்டு ஒரு குறித்த வீச்சினுள் மட்டுப்படுத்தப்படும்.. அத்துடன் சராசரி உரப்பு (vloume) ஒரு குறிபிபட்ட அளவில் பேணப்படும்..
    இதனால்தான் நேயர்களின் காதுக்கு ஒரு இனிமையான ஒலி ஒரே அளவு தெளிவுடன் கேட்கிறது..
    இல்லாவிட்டால் மாரியில தவக்கை கத்தியது போலத்தான் ஏறி இறங்கி கேட்கும்…



    ஹிஹி! அதாவது நான் இடியப்பம் புழியும் போது மனுசி சைஸ் சரிபிழை சொல்லுறது மாதிரி.. ம்ம்.. பீட்பக்கு மட்டும் நல்லா குடுப்பாளுவயள்..



    டேய் சும்மா இரடா.. நீங்க சொல்லுங்க தம்பி..



    அந்த ஒலி (லெப்ட் & ரைட்) ஆனது ஸ்டீரியோ என்கோடரினூடு (stereo encoder) அனுப்பப்டும்.. அது லெப்ட்ரைட் எண்டு இருக்கிற ஒலிய வித்தியாசம் விளங்காதமாதிரி தனி ஒலியாக மாற்றும்..
    அதற்கான அல்கோரிதங்கள்..புரோட்டொக்கோல்கள் (algorithms & protocols )அந்த தொகுதிக்கு உண்டு..






    அடஅப்பிடியே சங்கதி? சில பாட்டுகள கேக்கும்போது சில வாத்தியங்கள் வலப்பக்கம் மட்டும் கேட்கும்? அதுகள் ஸ்டீரியோ சவுண்டே?



    ஓமண்ணே.. போனகிழமை உவர் விஜய டி ராஜேந்தர் திருக்குறள் பாடுற பரோக்கராம் ஒண்டு டிவியில போட்டதுதான் போட்டாங்கள்.. அதக்கேட்டதிலயிருந்து இருந்து வலப்பக்க காதில மட்டும் , எந்த நேரமும் “என்ட ஐயோ என்ட ஐயோ” எண்டு யாரோ ஸ்டீரியோவில கத்திறமாதிரியே கிடக்கு..
    ஏனண்ணை? ஒருவேளை அது திருவள்ளுவரா இருக்குமோ?



    தம்பர்… இனி சைக்கிள் பம்மாலதான் அடிப்பன் சொல்லிக்கிடக்கு .. சும்மா இரு பாப்பம்..



    ஓமோம் ஸ்டீரியோ மொனோ பற்றி தனிய ஒரு நாள் கதைப்பமண்ண.. இப்ப மறுபடி கதைக்கு வருவம்..
    ஒரே கலவையாக்கபட்டுவிட்ட அந்த சிக்னல் (கொம்போசிட் மல்டிப்ளெக்ஸ்ட் சிக்னல்/ composite multiplexed Signal) இப்ப பரீக்குவென்சி மொடியுலேட் (FM: Frequency modulation / மீடிறன் மட்டிசைப்பு )பண்ணப்டும்


    என்னது மொட்டைய லேட் பண்ணுறதா? என்னாங்கடா இழவு அது?


    இம்முறை மிகவும் கோபமாகவே தம்பரை பார்த்தார் கனகர்…



    மொடியுடீலேட்(modulate)… அது இன்னொரு விலங்கம்… அதை டெக்னிக்கலா விளங்க வேணுமெண்டால் நிறைய படிக்க வேணும்… பல்கலைக்கழகங்களில் கொமினுகேசன்(communication) பாடத்தில படிப்பிப்பாங்கள்.. சற்று கடினமானது.. நீங்கள் இப்பிடி யோசியுங்களன். அதாவது நீங்கள் கதைக்கிறது கேக்கிறது எல்லாம் 20-20000Hz க்குள்தான்.. அதை 88000000-108000000 Hz க்கு மாத்திறதுதான் , ப்ரோட்காஸ்டிங்கை பொறுத்தவரை , ப்ரீக்குவென்சி மொடியுலேசன்..;



    ஏன் அப்பிடி மாத்திறாங்கள்?




    நீங்கள் கதைக்கிறது கனதூரம்போக செய்யவுணுமெண்டால் அந்த அலைகளை அம்பிளிபை (Amplify) பண்ணி அன்டெனாவூடே(Antenna) அனுப்பவேணும்.. சின்ன ப்ரீக்குவென்சி(frequency) அலைகளை அனுப்ப பெரிய அண்டெனா தேவை.. உதாரணமா 3000Hz சிக்னலை ட்ரான்ஸ்மிட் செய்ய 25 km நீளமுள்ள அன்டெனா தேவை.. அது நடவாத காரியம்.. அதனால பெரிய ப்ரீக்குவென்சி அலைகளா மாத்திட்டால் சின்ன அன்டெனாவோட சமாளிக்கலாம்தானே? உதெல்லாம் அண்டெனா என்ற பாடத்தில அருமையா படிப்பிச்சவங்கள் கம்பசில..



    அதுசரிதான் பிறகு நாங்கள் எப்பிடி ரேடியோப்பெட்டியை தூக்கிட்டு போறது..? அணடைக்கு கனகண்ணய்ண்ட கொக்கத்தடியில பப்பாப்பழம் தொங்கினமாதிரிதான் ரேடியோ அன்டெனாவில தொங்கும்……
    ஹிஹி ஏனண்ணை முக்காவாசி காகம் கொந்தின பழம் எண்டாலும் விடமாட்டாவோ அண்ணி…


    கனகு பக்கதில் கிடந்த ஏதோ ஒன்றால் எறிய அதை லாவகமாக தம்பர் கட்ச் பிடித்துவிட்டு லுலுலாயி காட்டுகிறார்.. கனகு அதை கவனியாதவாறு…


    சரி மொடியுலேட் பண்ணின சிக்னலக்கு என்ன நடக்கும்?

    அதை பவர் அம்பிளிபையர் (Amplifier) ஊடே அனுப்புவாங்கள்.. அது அந்த மொடியுலேட் பண்ணப்பட்ட சிக்னலிண்ட வலுவை கூட்டி அன்டெனாவுடே பரப்பும்போது நிறைய தூரம் போகும்..


    அட உந்த ஊரில கோயில் வழிய “அம்ப்“ க்குள்ளாள எனொனஸ் ஸபீக்கருக்கு அனுப்பிறதெண்டது உதையே?



    ஓமண்ணை.. உந்த நாசமாப்போவார் காலமையே தொடங்கிடுவாங்கள்.. அந்த அதிர்ச்சியில பனங்காயெல்லாம் விழும்… கொல்லைக்கு பொக முடியாமல் கொன்ஸ்டிபேசன் வந்து கஸ்டப்பட்டது எனக்கல்லே தெரியும்....

    டேய் இப்ப போகப்புறியோ இல்லயோ?


    சரிசரி இனி கதைக்கேல்ல.




    ஹாஹாஹா! ஓமோம்.. அந்த சிக்னலை நம்ம ரேடியுப்பெட்டி தன்ட அன்டெனாவால உள்ளெடுத்து அதை மறுபடியும் டிமொடியுலேட்(demodulate) பண்ணி 20Hz-20000Hz க்குள்ள இறக்கி நம்மட காதுகளுக்கு விருந்தாக்கும்



    அப்ப எப்பிடி உந்த செல்போனெல்லாம் அன்டெனா இல்லாம உள்ள ரேடியோ இழுக்குது?




    ஆர் சொன்னது அன்டெனா இல்லையெண்டு.. அண்டெனாவில பலவகையிருக்கு.. அதில பச் அன்டெனா (patch antenna) என்ற ஒரு வகை அன்டெனா உள்ளே காணப்படுகிறது.. (some semiconductor based microwave detectors are also being used { a p-n junction is irritated by microwaves to create a small amount of electron flow} )


    ம்ம்.. அப்பாடி நல்ல விளக்கம்.. அனால் நிறைய ரேடியோ ஸ்டேசன்கள் இருக்கே , எப்பிடி ரேடியோ அதுகளை பிரித்து அறியுது?



    ம்ம் நல்ல கேள்வி.. இலங்கையில TRC (telecommunication regulatory communication ) என்ற ஒரு அமைப்பு இருக்குது.. அதட்டை போய் நீங்கள் ஒரு பரீக்குவென்சியை பாவிக்க அனுமதி வாங்கவேணும்.. உதாரணத்துக்கு நீங்கள் 99.6 KHz ஐ வாங்கினால் உங்களுக்கு 99500000Hz க்கும் 99700000Hzக்கும் இடையில ஒலிபரப்பமுடியும்.. பிறகு அந்த ப்ரீக்குவென்சியில வேற யாரும் ஒலிபரப்ப மாட்டீனம்..



    அதேன் 200000Hz இடைவெளி?


    ப்ரீக்குவென்சி மொடியுலேசன பற்றி உங்களுக்கு சொன்னனான்தானே?;… அதாவது கொஞ்சம் சின்ப்பிள்ளைத்தனமா சொன்னால் , மோசன் அண்ணா பலமா கத்தினா ஒரு பறீக்குவென்சியிலயும் , உதாரணத்துக்கு 99600901Hz இலயும் மெதுவா கத்தினா இனடனொரு ப்றிக்குவென்சியிலயும , உதாரணத்துக்கு 99500901Hzஇலயும் மின்காந்த அலைகளை ட்ரான்ஸ்மிட் (transmit) செய்வார்கள என்று வைத்துக்கொள்வோம்;.. உங்கள் ரேடியோவை 99.6க்கு செட் செய்ததும் அது வான வெளியில் 99500000Hz க்கும் 99700000Hzக்கும் இடையில் வரும் மின்காந்த அலைகளை பில்டர் செய்து எடுத்துக்கொள்ளும்.. பிறகு அந்த ரேஞ்சில வாற அலைகளை டிமொடியுலேட்டிரினூடே அனுப்பிஆஹா! , முதலில 99600901 பிறகு 99500901 இல அலை வருகுது.. ஆகவே மோசன் முதலில பலமாகத்தி பிறகு மெதுவா கத்தியிருக்கிறார் என முடிவு செய்து கொள்ளும்..



    அடடே அற்புதம் தம்பி.. அப்ப ஏன் சிலவேளை இரையுறது?



    அதுக்கு பலப்பல காரணம் இருக்கும்.. முதலாவது இன்னொரு ரேடியோக்காரன் அதே ப்ரீக்குவென்சியில ஒலிபரப்பினா நம்ம ரிசீவர் குழம்பிடும்.. ஒரிஜினலிட்டயும் கள்ளனிட்டயும் இருந்து வாற சிகனல பிரித்தறிய முடியாமல் குதம்பலா தரவெளிக்கிடும்.. இல்லாட்டி வேற ஏதாவது வாகனங்கள் எலக்ரிக் உபகரணங்கள் குறித்த ப்ரீக்குவென்சியில அலைகளை உருவாக்கலாம்.. அல்லது உங்கள் ரேடியோ ரிசீவ் செய்யும் அலைகளன் வலு குறைவாக இருக்கலாம்…


    ம்ம் மிக நல்லம் தம்பி.. நல்லா சொல்லியிருக்கிறியள்.. ஏன்டா தம்பர் விளங்கினதோ?



    ஓம் தம்பி அருமையா விளங்கினது..
    முதல்ல என்ட மனுசின்ட தொண்டைக்குள்ள ஏதாவது பெரிய “அம்ப்இருக்குதோ எண்டு செக் பண்ணவேணும்நாசமாப்போவாள் கத்த வெளிக்கிட்டால் பக்கத்து ரோட்டு ஆடுமாடெல்லாம் குறைமாசத்தில குட்டி போடுது..



    இந்த விசரனிண்ட கதைய விடுங்கோ தம்பிமார்..நேரமாகிவிட்டுது … உங்கள அம்மா தேடப்போறா நீங்கள் வெளிக்கிடுங்கா.. நாங்களும் வெளிக்கிடுறம்.. வாறம் தம்பிமார்.. நன்றி..



    பொடியள் பொடியள்!! உங்களுக்கு ஏதாவது பலான மாட்டரில கிளியர் பண்ண வேணுமெண்டால் எண்ட மஜா சீடனுக்கு ஒரு பின்னூட்டம்போடுங்கோ.. டபிள்யுடபிள்யுடபிள்யு தொந்தி. கொம் இல அவர் ஒரு நாளைக்கு 3 பதிவுப்படி போட்டுக்கொண்டிருப்பார்.. அமுக்கிப்பிடிக்கலாம்.... பைபை!

    49 Responses

    1. மனதார வாழ்த்துகிறேன் புல்லட்.. உங்களை விட்டால் வேறு யாராலும் இவ்வளவு எளிதாக சுவையாக தொழிநுட்பப் பதிவு போட முடியாது..

      இந்தக் கால ஊடகங்களில் உள்ள பலருக்குமே இந்த விளக்கங்கள் தெரியாது..

    2. அதுசரி உந்தத் தம்பி மோசனையும் வந்தி லெவலுக்கு கொண்டு வந்து மோசம் போக வச்சிருவீங்க போலிருக்கே.. ;)

      தம்பர் மட்டும் அம்பிட்டால் சம்பு சம்பென்று சம்பி நொந்கேடுத்திடுவேன் எண்டு மோசன் சொல்லச் சொன்னார்..

      நாம் யாழ் பக்கம் இன்னும் எட்டாததை குத்தியதை ரசித்தேன்.. ;) வருவோம் விரைவில்..

      ரொம்பப் பெரிய சந்தோசம் & திருப்தி.. வந்தியருக்கு கடைசியில் கொடுத்த புகழாரம்.. ;)

      புல்லட் விட்ட குறையாக இருக்கும் உங்கள் அறிவுலகப் பதிவுகளை இத்தோடு மீண்டும் ஆரம்பிக்கவும்..

    3. நல்லா விளங்கப்படுத்தினிங்க....
      ஆனா வந்தியும் லோஷனும் தான் பாவம்....

    4. நல்ல பதிவு, தொழிலநுட்பத்தை இப்படிச் சொல்லித்தந்தால் நான் எங்கேயோ போயிருப்பேன்.

    5. புல்லட் அண்ணா!! எப்பிடி முடிகிறது உங்களால். நகைச்சுவையாக சிறந்த தொழில்நுட்பபதிவு..... உங்களுக்கே கைவந்த கலை அது..

      // பல்கலைக்கழகங்களில் கொமினுகேசன் பாடத்தில படிப்பிப்பாங்கள்.

      அடிப்படையான விசயம் 3ம் வருடத்தில படிப்பிச்சாலும் இறுதிவருடமே நிறைய பாடங்கள் இருக்கு. Training போய் கொஞ்சம் விளங்கினாங்க. உங்கட உதவியால எங்களுக்கு Final Year நல்ல Result வரும்போல கிடக்கு!!

    6. // நம்மட நல்ல காலத்துக்கு கோபாலசிங்கத்தாற்ற பெடியள் ரெண்டும் இங்க வாறாங்கள.. ரெண்டும் என்சினியருக்கு படிக்குதுகள் கண்டியோ! கேட்டா கட்டாயம் சொல்லுவாங்கள்…

      இதில ஒராள் நான்போல :) மற்றவர் அண்ணா நிருத்தியா?
      நீங்க வேற, எங்களை அன்ரனா கேபிளில Signal வருறதில ஏதோ பிரச்சனையெண்டு, என்னண்டு பாக்க தெரிஞ்சாக்கள் கூப்பிட நானும் அண்ணாவும் போய் அன்ரனாவை பாக்கிறெண்டு பக்கத்து வீட்டு அர்ச்சனாவை பாத்ததிலே அன்ரனா அப்பிடியே பைப்போட கீழ விழுந்து அந்த வீட்டு ஓடெல்லாம உடைஞ்சதும் எங்கட உயிர்போக பாத்ததும்தான் மிச்சம்!!!

      இப்ப சொன்னாலும் நம்புறானுகள் இல்லை எஞ்சினியரிங் படிக்கிறெண்டு.. :(

    7. உங்களிடம் ஒரு வேண்டுகோள்!!
      பதிவுகள் இடும்போது பந்திகளை "Justify" செய்துபோட்டு போட்டால் இன்னும் நேர்த்தியாக ஒழுங்காக இருக்குமென நினைக்கிறேன்.

    8. LOSHAN //
      உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கு நன்றி அண்ணர்...

      //அதுசரி உந்தத் தம்பி மோசனையும் வந்தி லெவலுக்கு கொண்டு வந்து மோசம் போக வச்சிருவீங்க போலிருக்கே.. ;)//
      பாவாடைய உருவுறதில பாரபட்சம் காட்டுறதில்ல..

      //தம்பர் மட்டும் அம்பிட்டால் சம்பு சம்பென்று சம்பி நொந்கேடுத்திடுவேன் எண்டு மோசன் சொல்லச் சொன்னார்..//
      தம்பர் மண்டையப்போட்டு நாலு வருசமாச்சு.. எங்களின் கிராமத்தின்பாலியல் கல்வியை மறைமுகமாக கற்பித்து வந்தவர்.. அவரைப்பறிற ஒரு பதிவிடவேண்டும்

      //நாம் யாழ் பக்கம் இன்னும் எட்டாததை குத்தியதை ரசித்தேன்.. ;) வருவோம் விரைவில்..//
      பின்ன என்ன டிவியும் திறக்கப்போறீங்களாம்.. யாழ்ப்பாணம் வெற்றி இல்ல..

      //ரொம்பப் பெரிய சந்தோசம் & திருப்தி.. வந்தியருக்கு கடைசியில் கொடுத்த புகழாரம்.. ;)//
      பார்ரா!

      //புல்லட் விட்ட குறையாக இருக்கும் உங்கள் அறிவுலகப் பதிவுகளை இத்தோடு மீண்டும் ஆரம்பிக்கவும்..//

      நிச்சயம் அண்ணர்..

    9. வேந்தன்
      பின்னூட்டத்துக்கு நன்றி வேந்தன் .. பதிவுலகத்தில பாவம்எலலாம் பாக்கமுடியாது ப்ரதர்..

    10. வந்தியத்தேவன்
      நல்ல பதிவு, தொழிலநுட்பத்தை இப்படிச் சொல்லித்தந்தால் நான் எங்கேயோ போயிருப்பேன். //

      அப்பிடியா? நனறி வந்தியண்ணர்.. அது சரி எங்க போயிருப்பீங்க?

    11. கார்த்தி ஜஸ்டிபை வேக் பண்ணுதில்ல.. என்னுடைய டெம்லேட் பிரச்சனையென்று நினைக்கிறேன்.. ஊரி லுள்ள உண்மையான கரக்டர்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.. ஜிபிஎஸ் பற்றிய முன்னைய பதிவை வாசிக்கவும்..
      பின்னூட்டத்தக்கு நன்றி..

      கடைசில அர்ச்சனா யாருக்கு செட்டானது அண்ணைக்கா தம்பிக்கா? ;)

    12. இப்படியும் ஒரு தொழிநுட்பப்பதிவு போடமுடியுமா?
      மிகவும் அழகாக நகைச்சுவையாக பல விடயங்களைச் சொல்லி இருக்கின்றீர்கள். சிறு வயதில் நானும் வானொலிப்பெட்டிக்குள்ளேதான் இருந்து கதைக்கின்றனர் என்று நினைப்பதுண்டு.


      இப்பதான் யோசித்துப்பார்ப்பேன் அப்படி வானொலிப்பெட்டிக்குள் இருந்து கதைப்பதேண்டால் லோஷன் அண்ணா எப்படி அறிவிப்பாளரா வர முடியும். அவரால் எப்படி வானொலிப்பெட்டிக்குள் இருக்க முடியும்.


      //திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி? ;-)

      {நமக்கெல்லாம் நாலு நாளைக்கொருக்கா வோல் பேப்பர மாத்தணும்.. இந்த வள்ளலில கலியாணம் சரிப்பட்டு வருமா? பீக் கொஸ்யன்க்கு ஆன்சர் தேடிட்டிருக்கோம்..}//


      பல குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. விரைவில் திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி எனும் தொடர் நிகழ்ச்சி பதிவர் வந்தியின் தயாரிப்பில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கின்றது.


      அதுசரி எந்தத் தொலைக்காட்சி என்று சொல்ல மறந்துட்டேனே. வேறு எதுவுமில்ல மக்களை மடையர்களாக நினைத்துக்கொண்டிருக்கும் அந்த தொலைக்காட்சியில்தான்.

    13. பாராட்டுக்கள்.
      அருமையான பதிவு.

      இதில் வருகிற தொழிநுட்பக் கலைச்சொற்களுக்கான தமிழ்க்கலைச்சொற்களை தந்தால் நன்றாக இருக்கும். வானொலி தொடர்பான கலைச்சொற்களுக்கு பெரிதாக கஷ்டப்படத்தேவையில்லை 11ம் ஆண்டு விஞ்ஞான புத்தகத்திலேயே இருக்கும்.

      இவ்வாறான பதிவுகளில் தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்த ஒரு இலகுவான வழி இருக்கிறது.

      முதன் முதல் அந்தக்கலைச்சொல் வரும்போது அடைப்புக்குறிக்குள் அதற்கான ஆங்கிலச்சொல்லை ஆங்கிலத்தில் போட்டுவிடுவது. எடுத்துக்காட்டாக: சின்ன அதிர்வெண் (Frequency) கொண்ட அலைகளை அனுப்ப..

      என்று எழுதலாம். பிறகு அடுத்தடுத்து வரும் சொற்களுக்கு அடைப்புக்குறி விளக்கம் தேவையில்லை.

      இது வாசிப்பவர்களுக்கும் இலகுவாக இருக்கும். விளக்கமாகவும் இருக்கும்.

      ஆங்கிலச்சொற்களை தமிழ் எழுத்தில் எழுதுவது விரும்பத்தக்கதல்ல. அது வாசிக்கவும் சிரமம். தவறான விளக்கத்தையும் கொடுக்கும். ஆங்கில கலைச்சொற்களை ஆங்கிலத்திலேயே எழுதவிடுவது பயனுள்ளது.

    14. ஆகா, சிரிச்சுச் சிரிச்சு .. முடியல. எப்படி உங்களால மட்டும் முடியுது? அதுசரி, லோஷன் அண்ணா இனி டீவிப்பெட்டுக்குள்ளயும் இருந்து கதைக்கோணுமோ? அதையும் சொல்லிடுங்களேன். பாவம் மனுசன் கஸ்டப்படப்போறார்.

      //பொடியள் பொடியள்!! உங்களுக்கு ஏதாவது பலான மாட்டரில கிளியர் பண்ண வேணுமெண்டால் எண்ட மஜா சீடனுக்கு ஒரு பின்னூட்டம்போடுங்கோ.. டபிள்யுடபிள்யுடபிள்யு தொந்தி. கொம் இல அவர் ஒரு நாளைக்கு 3 பதிவுப்படி போட்டுக்கொண்டிருப்பார்.. அமுக்கிப்பிடிக்கலாம்.... பைபை! //

      நயந்தாரா அக்காவோட படம் போட்டாரே அவரோடதா?

    15. // ஓம் தம்பி அருமையா விளங்கினது..
      முதல்ல என்ட மனுசின்ட தொண்டைக்குள்ள ஏதாவது பெரிய “அம்ப்” இருக்குதோ எண்டு செக் பண்ணவேணும்… நாசமாப்போவாள் கத்த வெளிக்கிட்டால் பக்கத்து ரோட்டு ஆடுமாடெல்லாம் குறைமாசத்தில குட்டி போடுது..

      என்ன தத்துவம் அண்ணா :)

      இயற்கையில்லை பெண்களுக்கு பிறிக்குவண்சி கூடத்தானே புல்லட்டண்ணை:

      ஏன் அண்ணை பின்னுட்டம் இடுரவைக்கும் பாவாடை உரியிறியள் : பாவம் கார்த்தி அன் பருத்தி :0

    16. technical - 20% அறுவை - 80%
      anyway keep effort :)

    17. இதை வாசிக்கும்போது தான் முன்னேரு நாள் நடந்த உண்மை ச்ம்பவம் ஞாபகத்துக்கு வருது(இது எனக்கு நடக்கவில்லை). நம்மாளு( ஒரு communication Engineer) இப்படித்தான் ஊருக்கு போனார். என்சினியர் பிள்ளை தானே ஊரிலே எல்லாரும் வந்து விசாரிப்பினம் தானே. அப்ப வயசான ஐயா என்னப்ப கொழும்பில்லை செய்கிறாய் என்று. அப்ப அந்த அண்ணையும் சொன்னா Communication site இல் வேலை செய்யிறன் ஐயா என்று. அப்ப நீ என்சினியர் வேலை செய்யாமல் கொமினிகேசனில்லை வேலை செய்கிறாய் என்று கேட்க அந்த அண்ணைக்கு புகை போச்சுதாம். முந்தி என்டால் Civil and Mechanical இரண்டை தவிர ஊர் மக்களுக்கு மற்ற எஞ்சினியரிங்கைப்பற்று தெரியாது.

      உங்கட எழுத்து நல்லாயிருக்கு . என்னும் கலக்குங்கோ!

    18. நல்ல பதிவு

    19. // கடைசில அர்ச்சனா யாருக்கு செட்டானது அண்ணைக்கா தம்பிக்கா?

      அது இரண்டு பேருக்கும் அல்வா கொடுத்துட்டு ஓட்டோக்காரனோட ஓடிப்போட்டுதாம் எண்டு கேள்வி. அர்ச்சனா போனா என்ன அபிராமியை பாக்க வேண்டியதுதான்!!!! :(

    20. அருமையான விளக்கங்களுடனான பதிவு.
      நன்றி புல்லட்

    21. // LOSHAN
      September 18, 2009 11:56 PM மனதார வாழ்த்துகிறேன் புல்லட்.. உங்களை விட்டால் வேறு யாராலும் இவ்வளவு எளிதாக சுவையாக தொழிநுட்பப் பதிவு போட முடியாது..

      இந்தக் கால ஊடகங்களில் உள்ள பலருக்குமே இந்த விளக்கங்கள் தெரியாது..//

      unmai....adiyen udpada.

    22. சந்ரு//

      உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கு நன்றிகள்.. உங்களது கடைசி பதிவுக்கு பின்னூட்டவில்லை..காரணம் பதிவு ஏனோ பிடிக்கவில்லை.. சரி விடுங்க.. ஏதோ உங்கள் எல்லாப்பதிவுகளும் வாசித்துவிடுவேன்..

      //சிறு வயதில் நானும் வானொலிப்பெட்டிக்குள்ளேதான் இருந்து கதைக்கின்றனர் என்று நினைப்பதுண்டு. //


      //லோஷன் அண்ணா எப்படி அறிவிப்பாளரா வர முடியும். அவரால் எப்படி வானொலிப்பெட்டிக்குள் இருக்க முடியும். //

      அவரின் வெல் பில்ட் பாடியை நக்கல் செய்தால் உங்களை கடத்திவந்து ரேடியோவுக்கு உண்மையிலேயே அடைத்துவிடுவேன்.. ;)


      //திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கின்றது மக்களை மடையர்களாக நினைத்துக்கொண்டிருக்கும் அந்த தொலைக்காட்சியில்தான் //

      எது அந்த சகதியிலா? இல்லை டண்டணக்காவிலா? ஏதோ பதில் கிடைச்சால் சரிதான்!

    23. மு.மயூரன்
      பாராட்டுக்கள்.
      அருமையான பதிவு.
      இதில் வருகிற தொழிநுட்பக் கலைச்சொற்களுக்கான தமிழ்க்கலைச்சொற்களை தந்தால் நன்றாக இருக்கும். //

      நன்றி மயுரன் அண்ணா! அடுத்த தொழிநுட்ப பதிவில் நிச்சயமாக நீங்கள் சொல்லுவதை நிச்சயம் கையாள்கிறேன்.

    24. Ramanc
      உங்கட எழுத்து நல்லாயிருக்கு . என்னும் கலக்குங்கோ!//
      நன்றியப்பன்

      //இயற்கையில்லை பெண்களுக்கு பிறிக்குவண்சி கூடத்தானே புல்லட்டண்ணை://
      நல்லா அளந்திருக்கிறியள் பொல கிடக்கு? ஹிஹி வாழ்த்துக்கள்..

      //ஏன் அண்ணை பின்னுட்டம் இடுரவைக்கும் பாவாடை உரியிறியள் : பாவம் கார்த்தி அன் பருத்தி :0//
      கருத்தி அன்ட் பருத்தி எனக்கு சொந்த தம்பிமார் மாதிரி... அவங்களை கடிக்காமல் வேறையார கடிக்கிறது? எல்லாம் ஒரு ஊர்ப்பாசம்தான்..



      //Civil and Mechanical இரண்டை தவிர ஊர் மக்களுக்கு மற்ற எஞ்சினியரிங்கைப்பற்று தெரியாது.//
      பலபேருக்கு மொறட்டுவை யுனிவேசிட்டி இருக்கிறதே தெரியாது.. யுனிவேசிட்ட எண்டால் போராதெனிய எண்டு தான் ஒரு கருத்து இப்பவும் நிலவுது

    25. Subankan
      நன்றியப்பன் பின்னூட்டத்துக்கு...

      //லோஷன் அண்ணா இனி டீவிப்பெட்டுக்குள்ளயும் இருந்து கதைக்கோணுமோ? //
      அப்பிடியெண்டால் யப்பான் காரன் இனி 110 இஞ்சி டிவியல்லோ செய்யவேணும்..

      //நயந்தாரா அக்காவோட படம் போட்டாரே அவரோடதா?//
      மஜா , அஜால் குஜால், கிசுகிசு ,அட்டு ,பிட்டு எண்டு யாராவது ஒரு பதிவரை பற்றி கதைக்கிறாங்கள் எண்டால் அவர் வேறு யாருமல்ல நீங்கள் குறிப்பிட்ட அதே பதிவர்தான்..

    26. நாகு
      நல்ல பதிவு//

      நன்றி நாகு..

    27. ஆதிரை
      அருமையான விளக்கங்களுடனான பதிவு.
      நன்றி புல்லட்//

      வெல்கம் ஆதிரை

    28. பிரபா
      இந்தக் கால ஊடகங்களில் உள்ள பலருக்குமே இந்த விளக்கங்கள் தெரியாது..//

      unmai....adiyen udpada.//

      திருப்பதி தரும் பின்னூட்டம்... பின்னூட்டியமைக்கு நன்றி

    29. கல்பனா
      technical - 20% அறுவை - 80%
      anyway keep effort :) //

      ஹிஹி மகளிர் பிரிவு மணக்குது! அறுவையாம்..!
      இப்ப புரியுதா பப்ளிக்.. ஏன் எனக்கு பொம்பளையள கண்ணிலயும் காட்டகூடாதெண்டு? 95% க்கு தாங்க பெரிய பருப்பு எண்ட நினைப்பு.. முடியல.. :D

    30. உங்கள் கேள்வி =>=>=>


      திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி? ;-)


      {நமக்கெல்லாம் நாலு நாளைக்கொருக்கா வோல் பேப்பர மாத்தணும்.. இந்த வள்ளலில கலியாணம் சரிப்பட்டு வருமா? பீக் கொஸ்யன்க்கு ஆன்சர் தேடிட்டிருக்கோம்


      எங்கள் பதில் =.=>=>


      http://shanthru.blogspot.com/2009/09/blog-post_19.html

    31. பலருக்கும் தெரியாத தொழில்நுட்பத்தினை ரொம்ப நகைச்சுவையாக சொன்னீர்கள்... அருமை.
      நான் பல மாதங்களாக வெறும் பார்வையாளனாக மட்டும் இருந்து இப்போது தான் எழுதலாம் என்று எண்ணி வலைப்பதிவினை ஆரம்பித்துள்ளேன்...

    32. Nice one... Good Job... Nalla loshan annava nakkaladikiriyal. athu vilangamal 1st aalla comment pani irukkiraar.. he he... Btw, there are so many typing errors... Few: இரந்து its irunthu, என்ககொரு its enakkoru, கேளுங்கா ka not kaa... ,கொம்ப்யுட்டர் yuu vanna, நெச்சன் (?), விலங்கம் (?), எலக்ரிக் its electric or electronic?

    33. //அறுவையாம்..!
      இப்ப புரியுதா பப்ளிக்.. ஏன் எனக்கு பொம்பளையள கண்ணிலயும் காட்டகூடாதெண்டு?95% க்கு தாங்க பெரிய பருப்பு எண்ட நினைப்பு.. முடியல.. :D//

      Its true.. Enna nakkala.... க்கு தாங்க பெரிய பருப்பு எண்ட நினைப்பு? Uthai vilum.. Kavanam

      - Kirathaki :D

    34. அட மட சாம்பிராணிகளே,
      பெண்களுடைய குரல் நாண் மெல்லியது. அதனால், அதிர்வெண் அதிகம். ஆண்களின் குரல் நாண் தடித்தது. அதனால், அதிர்வெண் குறைவு. இது ஆண்டு 6 பாடமப்பு..

    35. அருமையான பதிவு புல்லட். வாழ்த்துக்கள்!

    36. It was excellent brother.. keep doing
      i have been having a doubt and hope you will tell the ans.
      how does the helicopter move in horizontal path?
      is it by means of the fan which fixed at the back? that s 4 to change direction. isn't t it?
      sorry to ask this doubt here.

    37. நல்ல பதிவு...

      //ஹிஹி! இனி சற்று டெக்னிக்கலாகவே பார்ப்போம்…
      முதலில நீங்கள் கதைக்கிறது , போடுற பாட்டெல்லாம் லெப்ட் சௌண்ட் , றைட் சொளண்ட்(left & right channels) எண்டு இரு பகுதிகளா போகும்..
      அந்த ஒலி முதலில கொம்பிறசர் (compressor ) அல்லது லிமிட்டர் (limiter) என்ற தொகுதியினூடே செலுத்தப்படும்..
      உங்கட மிக்ஸ் பண்ணப்பட்ட , ஒலிபரப்பப்பட வேண்டிய ஒலி முதலில அந்த தொகுதியால் கேட்கப்பட்டு fine tune பண்ணப்படும்.
      வெளிவரும் ஒலியின் உரப்பு (volume) வித்தியாசங்கள் அளக்கப்பட்டு ஒரு குறித்த வீச்சினுள் மட்டுப்படுத்தப்படும்.. அத்துடன் சராசரி உரப்பு (vloume) ஒரு குறிபிபட்ட அளவில் பேணப்படும்..
      இதனால்தான் நேயர்களின் காதுக்கு ஒரு இனிமையான ஒலி ஒரே அளவு தெளிவுடன் கேட்கிறது..
      இல்லாவிட்டால் மாரியில தவக்கை கத்தியது போலத்தான் ஏறி இறங்கி கேட்கும்… //

      இந்த பாராதான் சற்று அதிக தகவல்களோடு இருக்கிறது என்று நினைக்கிறேன்! சாதாரணமாய் கேட்பவர்களுக்கு புரிவது கொஞ்சம் கஷ்டம்தான்.

    38. தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளில் நல்லா முயற்சி ! கேலியான பேச்சுமொழியும் வெகுவாய் ரசிக்கவைக்கிறது! தொடருங்கள்!

      :)

    39. என் இதயத்திலிருந்து....

      நான் பல மாதங்களாக வெறும் பார்வையாளனாக மட்டும் இருந்து இப்போது தான் எழுதலாம் என்று எண்ணி வலைப்பதிவினை ஆரம்பித்துள்ளேன்..//

      நன்றி... உங்கள் வலைப்பதிவை பார்வையிடுவேன்..

    40. Triumph
      Nice one... Good Job... //
      நன்றி ட்ரையம்ப்...

      many typing errors...//
      ஓமோம்.. திருத்த வேண்டும் ஆனால் திருப்பி வாசிக்க திருத்த பஞ்சி..


      ஆண்களின் குரல் நாண் தடித்தது. அதனால், அதிர்வெண் குறைவு.//
      மெலிசானதை வச்சிட்டே ஆட்டிப்படைக்கிறாளுவள்..

      Uthai vilum.. Kavanam//
      ஓ! நீங்களும் அந்த பருப்பு கேசில ஒண்டு இல்ல? மறந்திட்டேன்.. ;)

    41. யாழினி
      அருமையான பதிவு புல்லட். வாழ்த்துக்கள்!//

      நன்றி யாழினி..

    42. SIRUVAN
      It was excellent brother.. keep doing//
      Thank you bro!

      //i have been having a doubt and hope you will tell the ans.
      how does the helicopter move in horizontal path?
      is it by means of the fan which fixed at the back? that s 4 to change direction. isn't t it? //

      You can read it from here..
      http://www.aerospaceweb.org/question/helicopters/q0084.shtml

      As a helicopter rotor is rotating about its vertical axis, the blades are constantly changing, not only in location, but also in pitch, and more importantly in angle with respect to the vertical axis. It is this variation in angle that gives the helicopter a forward motion.
      sorry to ask this doubt here.

      The picture gives the clear explanation you wanted ;)

    43. ஊர்சுற்றி
      நல்ல பதிவு...//

      நன்றி சுற்றி..

      //இந்த பாராதான் சற்று அதிக தகவல்களோடு இருக்கிறது என்று நினைக்கிறேன்! சாதாரணமாய் கேட்பவர்களுக்கு புரிவது கொஞ்சம் கஷ்டம்தான்//

      உண்மைதான்.. நானும் நினைத்திருந்தேன்.. ஆனால் ஸகிப் பண்ணிட்டு போனாலும் விளங்கும்...

    44. ஆயில்யன்
      தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளில் நல்லா முயற்சி ! கேலியான பேச்சுமொழியும் வெகுவாய் ரசிக்கவைக்கிறது! தொடருங்கள்!

      :)//

      நன்றி எண்ணெயன்.. நல்ல பெயர் ஐ லைக் இட்.. ;)

    45. Yo helicopter is our field.. athila kaivaika electronics aakalukku anumathi illai... buuuaaaaaah

      //ஓ! நீங்களும் அந்த பருப்பு கேசில ஒண்டு இல்ல? மறந்திட்டேன்.. ;)//
      Nakkal.. Naathukku illai kilava..

    46. //டேய் தம்பிகளா.. உதோ உந்த ரேடியோவில கதைக்கிறானே பெடி , அவன் முந்தி அடிக்கடி இங்க வாறவன் தெரியுமோ.. சொன்னா நம்ப மாட்டியள் சின்ன வயதிலயே காத்தடிக்கிறதில அவன் ஒரு கிங்.. நாங்களெல்லாம் எந்த மூலைக்கு... இப்ப முன்னேறி ரேடியோவுக்குள்ள பூந்திட்டான். //

      இது புதுசா இருக்கே...

      நல்ல தொழிநுட்பப் பதிவு அண்ணா...
      அசத்திவிட்டீர்கள்..

      ஆனால் ஒரே சந்தேகம்...

      வெட்டி எப்.எம் என்பதன் அர்த்தம் என்ன?
      தமிழ்ப்படுத்தினால் வெட்டி பண்பலை என்றல்லவா வரும்?
      ஏன் வெட்டி வானொலி என்று பயன்படுத்துவதில்லை?
      ஆங்கில வானொலிகளும் எப்.எம் என்று தானே சொல்கிறார்கள்?
      வானொலி என்பதற்கும் எப்.எம் என்பதற்கும் ஒரே அர்த்தம் இல்லையே...???

    47. அசத்தல் பதிவு டெக்னிக்கல் மற்றும் நகைச்சுவை கலந்த பதிவு புல்லட்.

      நல்லா சுட்டுருக்கீங்ககககககககககககக

    48. machi super da....I am still laughing.....If you can write about business behind the radio broadcasting...

      Rama from UK

    49. thanx.. 4 ur response brother.. u r da one responding even u hv got plenty of comments.. nice....