பாடசாலைக்காலம்... நேசரி- ஆண்டு 5  அப்போது 1989.. சித்தப்பா 87 இல் வாங்கித்தந்த சோக் பொக்ஸ் (அவ்வளவு காலமா அப்பா அதை வாங்கி அலுமாரிக்க பூட்டிட்டார்) சின்ன ட்ரிங்ஸ் போத்தல் குட்டி பாக் எல்லாம் கொண்டு அம்மாவோட போய் செஞ்ஜோன்ஸ் நேசரில இறங்கியாச்சு... போன வீச்சிலயே ஒரு புரளி.. ஒரு கண்ணாடி கோட்ட கிழவி மிஸ் சும்மா இருந்த என்னை பிடிச்சு சிரிக்க நான் அய்யோ பூச்சாண்டி எண்டு கத்தி ஊரைக்கூட்டினதில அம்மாவுக்கு சரியான வெக்கமாப்போச்சு.. பிறகு ஒரு வடிவான டீச்சர் வர அவாண்ட சீலைய புடிச்சுக்கொண்டு அம்மாவை சொன்னனாம் நீங்க போட்டு பிறகு வாங்க எண்டு...


  பிறகு நானும் அந்த டீச்சரும் பயங்கர பரெண்ட்ஸ்... பெரிதாக எனக்கு நேசரி தொடர்பான ஞாபகங்கள் இல்லாட்டாலும் அங்கு அந்த கிழவி மிஸ் வாசித்த பியாணோவும் , ட்ரிங்ஸ் போத்தல் கொழுவிய பலகையும் உடைந்த சீமெந்து நிலமும் , வான் ஏத்த வரும் ஏகாம்பரம் அண்ணையும் , வானுக்குள் கடலை போட்ட பெண்களும் ( அப்ப கடலை என்றால் அதுகள் கொண்டு வருவதை நாசமாக்குவது ...சாப்பாடோ றப்பரோ எதுவெண்டாலும் சப்பி துப்பிவிடுவேன் வீட்ட ஏகாம்பரத்தார் வந்து சொன்னா எனக்கு திட்டு விழும் பட் நான் நெவர் மைண்ட் ஹிஹி..) இன்னும் அழியவில்லை


  ஏதோ ஒரு முறை விளையாடும்போது நான் கரடியாம் எண்டு சொல்ல பொடிபொட்டையெல்லாம் எனக்கு சேந்து கும்மியதில் கடைசியா அந்த கிழவி மிஸ்தான் காப்பாத்திவிட்டா.. தாக்குதலின் சூத்திரதாரி ஏபிரகாம் என் பரம எதிரியானான் .. கிழவி மிஸ் என் நண்பியாகிவிட்டார்...இப்ப அந்தக்கிழிவி செத்திருக்கும்.. ஆனால் இந்த பதிவு எழுதும்போ 20 வருசத்துக்கு பிறகு அவாண்ட முகத்தை ஞாபகத்துக்கு கொண்டுவர முயற்சிக்கிறன்.. முடியல்ல.. நல்ல மனுசி..ம்ம்..
  அப்பிடியே 1990 வந்திட்டுது.


  சென்ஜோன்ஸ் பள்ளி எண்டர் பண்ணுறது பெரிய மேட்டரா இருக்கேல்ல.. இன்டவியுவில அப்போது பிரின்சிப்பலா இருந்த தேவசகாயம் சேரைப்பாத்து முதல்ல பயந்தாலும் ஏதோ சமாளிச்சு பதில் சொல்லிட்டன்... நான் ஒரு கேள்விக்கு பிழையா பதில் சொன்னபோது அவர் ஏதோ ஜோக்கடித்தார்.. அதற்கு நானும் சிரித்ததை பாத்து அவர் அட்மிசன் தந்திட்டார்.. இனி சில சில சம்பவங்களை தொகுத்து தாறன்..
  ஆண்டு 1 படிக்கும் போதே ஒரு முறை ஹெட்மாஸ்டரிடம் சணல் பூசை வாங்கியிருக்கிறன்.. அப்பா என் குழப்படிகளுக்காக கெரில்லா முறை பூசைகளை பயன்படுத்துவதால் உந்த மரபுவழிப்பூசைகள் என்னை எதுவும் செய்வதில்லை.. பாடசாலை சேர்ந்து சில மாதங்களில் விளையாட்டுப்போட்டி.. விளையாட்டுபோட்டியில் நான் பங்கு பெறுவதானால் றூல்சைத்தான் மாற்ற வேண்டும்.. 50 மீட்டர் நிண்டு நிண்டு ஓடலாம்.. சாக்கு ஓட்டம் சாக்கை கழட்டி கையில கொண்டு ஓடலாம்... பனங்கொட்டை பொறுக்கும் போது அதற்குள் புழு இருந்தால் பாம்பை கையால் பிடித்துவிட்டது போல அழுது குழறி, ஓடச்சொன்ன டீச்சரின் சீலையை உரியலாம் எண் பலப்ப றூல்கள் புதிதாக தேவைப்படும்..
  ஆகவே பாடசாலையின் நன்மை கருதி என்னை விளையாட்டுக்கு சேர்கவில்லை.. பொழுது போகாமல் கரையில் இருந்து , மற்ற பெடியங்கள் விளையாடுவதை இன்னும் சில புறக்கணிக்கப்பட்டோருடன் பார்த்க்கொண்டிருந்தேன்.. சரி சும்மா இருக்கிற நேரம் ஒரு நாலுபேரை சிரிக்க வைக்கலாமே எண்டுட்டு எனக்கு தெரிந்த ஒரே விளையாட்டான கிளுகிளு மூட்டலை(tickle) ஏனைய புறக்கணிக்கபட்டோர் மீது ஆரம்பித்தேன் ...

  சிரித்தபடி ஓடும் எல்லாரையும் பார்க்க எனக்கு சந்தோசம்.. ஆனால் ஓரே ஒருத்தன் மட்டும் மரக்கட்டை மாதிரி அமர்ந்திருந்தான்.. நானும் பலவிதமாக ட்ரை பண்ணிப்பார்த்தேன்... முடியலை கடைசியா அவன் கழுத்தாங்குத்தியைப்பிடிச்சு கொறகொறவெண்டு புழிய ஆரம்பித்தேன்.. அவனுக்கு மூச்சு முட்டி காற்சட்டையுடன் ஒண்ணுக்கு போய்விட்டான்.. கொலை முயற்சியெண்டு கேசை குத்திட்டாங்க.. பிறகு ஏதோ கடைமை க்கு பூசைய வைச்சிட்டு ஹெட்மாஸ்டர் விட்டுட்டான்.. ஆனா அதை அதோட விட்டிருக்கலாம் .. அதை என்ட அம்மாட்ட பலபேருக்கு முன்னால சொல்லி அவங்கள வெக்கப்பட வச்சிட்டானே எண்டு அவனில இண்டைக்கு வரைக்கும் கடும்கோவம்.. ஆனா அவனிண்ட மகள்தான் எங்கட 1ம் வகுப்பு டீச்சர்.. அவா நல்ல வடிவு .. நல்ல ஸ்ட்ரக்சர்.. பயல் அதால தப்பிச்சான்..  90 இண்ட பிற்பகுதியில கோட்டை அடிபாடு..
  பசிலன் , பங்கர் எண்டு கொஞ்சநாள் ...
  பிறகு கெற்பலில இடம் பெயர்ந்திருந்தம்... அந்த நேரம் படிப்பாவது புண்ணாக்காவது.. விறைச்சு நிக்கிற வெண்டிக்காய்த்தோட்டம், அங்கவாற கருங்குரங்குக்கு வெடி வைக்கிறது , தும்படிக்கிறது எண்டு செம என்ஜோய்மெண்ட்.. இப்போதுதான் கட்டுத்துவக்கோட அந்த வீட்டிலிருந்த அப்பு ஆச்சியின் ஞாபகம் வருது.. துரவுக்குள் ஆமை முட்டை எண்டு நுரைக்கு கல்லெறிந்ததும் ஞாபகம் வருது..


  பிறகு மூண்டாம் ஆண்டில ஒரு டீச்சரை விழுந்து விழுந்து விரும்பி முடிவு கேக்கப்போன கதையெல்லாம் முன்னொரு பதிவில எழுதியிருக்கிறதால இப்ப தவிர்க்கிறன்.. ( அவா ஒரு மொட்டைத்தலையனை முடித்துக்கொண்டு போனது தான் முடிவு...)

  எனக்கு
  பிடிக்காத பாடம் தையல் ... எனக்கு அம்மா ஒரு உதவியும் செய்யமாட்டா .. ஆனா மற்ற பிள்ளையளிண்ட தாய்மார் தையலுக்கு படம் எல்லாம் கீறிக்குடுத்து விடுங்கள்.. அவங்கள் சங்கிலித்தையல் எண்டால் அதைப்பாவிச்சு ஒரு கைக்குட்டை செஞ்சு நடுவில டிசைன் எல்லாம் போட்டு நூறுக்கு 90 எடுப்பாங்கள்.. நானும் ஏதோ சொந்தமா செய்யுறேன் எண்டுட்டு தைச்சு முடிச்சா, அதால மூக்கு சீறுவதை கூட நினைச்சு பாக்க முடியாது .. தைச்சிருக்கிற கொண்டிசனை பாத்தால் பக்கத்து வீட்டு அப்பு குளிக்கிறப்போ கட்டுற கோமணம் மாதிரி கிடக்கும்.. கடைசில டீசசர் பாவம் பாத்து ஒரு 50 60 கிடைக்கும்..

  அப்ப நான் யோசிச்சிருக்கன் எனக்கும் வீட்ட செஞ்சு தந்தா எவ்வளவு நல்லாருக்கும்.. மற்ற அம்மாமாரோட எண்ட அம்மாவும் போட்டி போட்டா எப்பிடியிருக்குமெண்டு.. ஆனால் நல்ல காலம் அப்பிடி நடக்கேல்ல எண்டு இப்ப யோசிக்கிறன்..ஹிஹி.. என் வழியில் விட்டதுக்கும் , சிறு பராயத்தை என்ஜோய் பண்ண விட்டதற்கும் பெற்றோருக்கு இப்ப தாங்கஸ் சொல்லவேணும்.. :-)

  ஸ்கொலசிப் எக்சாம் குறித்து பெரிசா அலட்டிக்கொள்ளாட்டாலும் ஏதோ ஒரு பேமசான டியுசனிலிருந்து அப்பா முன்னோடி பேப்பர் கொண்டந்து தருவார்.. அதை செய்வது செம ஜாலியா இருக்கும்... பெரிசா வராட்டாலும் 164 எடுத்து பாஸ் பண்ணிட்டன்.. அதுக்கு அப்பா கேக் அடிக்க வெளிக்கிட்டு பேக்கரிக்காரன் கடைய இழுத்து மூடின கதையெல்லாம் நடந்தது.. கேக்கை அடிச்சு உடைச்சுதான் ட்ரேயிண்ட சில பகுதிகளை மீட்க முடிந்தது..
  எனக்கு பிடித்த சேர் ரகுநாதன்.. அவர் நல்ல கதையளெல்லாம் சொல்லி படிப்பிச்சவர்.. ஆனால் அவருக்கும் ஒருக்கா விளையாட்ட குடுத்தனான்...வீட்டு வேலையொண்டில (home work) ஒத்த சொல் கேட்ட இடத்தில எதிர்ச்சொல் எழுதிட்டன்.. பிறகுதான் வடிவா கேள்விய பாத்தா கேட்டது ஒத்த சொல்.. விடைய மாத்த பஞ்சி.. கேள்வியை மாத்திட்டன்.. அடுத்த நாள் அந்தாள் பிடிச்சிட்டுது .. பிறகென்ன மறுபடியும் மரபுவழித்தாக்குதல முறியடிச்சதுதான்..(அடிச்ச அடில தடி முறிஞ்சிட்டு.. மேலதிக ஆயுத சப்ளை கிடைக்காததால தாக்குதல் நிறுத்தப்பட்டாலும் முறியடிக்க பட்டதுமாதிரிதானே?)
  பேய்க்தை சொல்லும் ஆங்கில பாட்டுவாத்தியார் சொறுபன், அன்புக்கு இலக்கணமான ஜீவானந்தம் மிஸ், ஆப்புக்கு இலக்கணமான ஜெயசிங்கம் மிஸ் , அடிக்கு இலக்கணமான தேவதாசன் சேர் என்று பலர் இருந்திருந்தாலும் ஒருவரும் தற்பொது பாடசாலையில் இல்லை என்பது மனதை கனக்க வைக்கிறது..

  இப்பிடி பல தில்லாலங்கிடி வேலைகள்.. சில மாட்டுப்பட்டுள்ளேன்.. பல வெற்றி பெற்றுள்ளேன்.. உந்த பருவத்தில் கிடைத்த அனுபவங்கள் என் தமிழ் மற்றும் ஆங்கில மொழியறிவை விருத்தி செய்தது உண்மை..
  அடுத்த பாகம் .. மிகமிக கிளுகிளுப்பான விறுவிறுப்பான 6-11 .. எனக்கு வாழ்வில் மிகவும் பிடிததமான காலம்

  வேறு சில பதிவுகளின் பின் சந்திக்கும் வரை விடை பெறுவது உங்கள் அன்பின் புல்லட்..:)


  32 Responses

  1. :-))) செஞ் ஜோன்ஸு காலம் மறக்க முடியாது,

  2. அடக் கடவுளே!!!

  3. பாடசாலை பருவம் என்றும் இனிமையானது தான் என்ன? பாடசாலை படிக்கும் காலத்தில் எப்படா படித்து முடிப்பம் என்றிருப்போம், ஆனால் இப்போது அந்த பாடசாலை காலம் மீண்டும் திரும்ப வராதா எண்ட ஏக்கமாக இருக்கும்!

  4. 5 ம் ஆண்டுக்குள்ளே இவ்வளவு கொடுமைகள் என்றால் 6 11 வரை இன்னும் என்ன கொடுமைகள் பண்ணினீர்களோ தெரியவில்லை. தொடருங்கள் பார்ப்போம். :)

  5. ஆஹா புல்லட் குட்டிப் பையன் ரெம்ப அழகாக இருக்கிறார். :)

  6. ’டொன்’ லீ
   :-))) செஞ் ஜோன்ஸு காலம் மறக்க முடியாது,//

   உண்மைதான் டொன்லீ.. ஆனால் பழைய ஞாபகங்களை மீட்டிப்பார்க்க பாடசாலை போனீர்களாயின் ஏதோ வெள்ளைக்காரனிண்ட யுனிவேசிட்டிக்கோனமாதிரிதான் இருக்கும்... ஒரு பழைய கட்டிடமும் விடாமல் உடைத்து நொருக்கி புதிதாக கட்டி விட்டார்கள்... ஆனால் அழகாக இருக்கிறது

  7. யாழினி
   அடக் கடவுளே!!! //
   ஏனிந்த அதிர்ச்சி?

   பாடசாலை பருவம் என்றும் இனிமையானது தான் என்ன? பாடசாலை படிக்கும் காலத்தில் எப்படா படித்து முடிப்பம் என்றிருப்போம், ஆனால் இப்போது அந்த பாடசாலை காலம் மீண்டும் திரும்ப வராதா எண்ட ஏக்கமாக இருக்கும்!//
   இருக்கும் வரைக்கும் அருமை புரியாது.. இது எல்லாத்துக்கும் பொது..

   5 ம் ஆண்டுக்குள்ளே இவ்வளவு கொடுமைகள் என்றால் 6 11 வரை இன்னும் என்ன கொடுமைகள் பண்ணினீர்களோ தெரியவில்லை. தொடருங்கள் பார்ப்போம். :)//
   அந்த அத்தியாயம் பொம்பிளைங்க தடை செய்யப்பட்ட பகுதி ;-)

   ஆஹா புல்லட் குட்டிப் பையன் ரெம்ப அழகாக இருக்கிறார். :)//
   அப்படியா? ஆனால் கேடுகெட்ட என் நண்பி ஒருத்தி கேட்கிறாள்
   "சரியான காமப்பர்வையால்ல இருக்கு? , போட்டோ எடுத்தது பொம்பிளையா?" எண்டு..
   என்ன ஒரு உலகம்..ஹம்ம்

  8. //ஒரு கண்ணாடி கோட்ட கிழவி மிஸ் சும்மா இருந்த என்னை பிடிச்சு சிரிக்க நான் அய்யோ பூச்சாண்டி எண்டு கத்தி ஊரைக்கூட்டினதில அம்மாவுக்கு சரியான வெக்கமாப்போச்சு.. //
   ஹா ஹா ஹா... என்ன கொடுமை சேர் இது...
   எப்பிடி...

   //பிறகு ஒரு வடிவான டீச்சர் வர அவாண்ட சீலைய புடிச்சுக்கொண்டு அம்மாவை சொன்னனாம் நீங்க போட்டு பிறகு வாங்க எண்டு... //
   அட அநியாயமே...
   அப்பயே அப்பிடி எண்டா, இப்ப எப்பிடியோ...???!!!

   நீங்களெல்லாம் பிறக்கும் போதே இப்பிடியே லொள்ளுகளோட தான் பிறந்தீங்க போல?

  9. ஹா ஹா ஹா! சிரிப்பை அடக்க முடியல புல்லட் brother...... !!!

  10. எமது www.sindhikkalam.blogspot.com தளத்தை பார்வையிடவும்.
   பிடித்திருந்தால் பின்தொடருங்கள்

  11. // 1ம் வகுப்பு டீச்சர்.. அவா நல்ல வடிவு .. நல்ல ஸ்ட்ரக்சர்.. பயல் அதால தப்பிச்சான்..//

   //பிறகு ஒரு வடிவான டீச்சர் வர அவாண்ட சீலைய புடிச்சுக்கொண்டு அம்மாவை சொன்னனாம் நீங்க போட்டு பிறகு வாங்க எண்டு... //

   //பிறகு மூண்டாம் ஆண்டில ஒரு டீச்சரை விழுந்து விழுந்து விரும்பி முடிவு கேக்கப்போன கதையெல்லாம் முன்னொரு பதிவில எழுதியிருக்கிறதால இப்ப தவிர்க்கிறன்..//

   ஆகா தாய்க்குலமே பார்த்து, புல்லட்டிடம் இரண்டடி தள்ளியே நிற்பது நல்லது.

   //சிறு பராயத்தை என்ஜோய் பண்ண விட்டதற்கும் பெற்றோருக்கு இப்ப தாங்கஸ் சொல்லவேணும்.. :-)//

   :-))

  12. புல்லட் இன்றுமுதல் உன்னை என் தம்பி என்பதை வாபஸ் வாங்குகின்றேன்.அடப்பாவி இப்படியா சின்ன வயதில் குழப்படி செய்யவேண்டும்.
   என் நேர்சரி வாழ்க்கை ஒரே ஒரு நாள் (முதல் நாள் மட்டும் தான்) ரீச்சரின் சீலையைப் பிடித்து இழுத்துவிட்டேன் அத்துடன் நேர்சரிக்கு போகவே இல்லை.

   ஆனால் ஐந்தாம் வகுப்பு வரை குழப்படி குறைவு, அதே நேரம் ரீச்சர்களுடன் சர்ச்சரவுக்கு போவதுமில்லை.

   அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

  13. ///அடுத்த பாகம் .. மிகமிக கிளுகிளுப்பான விறுவிறுப்பான 6-11 .. எனக்கு வாழ்வில் மிகவும் பிடிததமான காலம்//

   அது எப்ப வரும்? எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.

  14. கனககோபி

   நீங்களெல்லாம் பிறக்கும் போதே இப்பிடியே லொள்ளுகளோட தான் பிறந்தீங்க போல?//

   யாருக்குத்தெரியும்... உப்பிடிச்செய்தனானாம் எண்டு அப்பா நக்கலடிக்கிறவர்.. எனக்கு ஞாபகமில்ல.. :-)

  15. deepthi
   ஹா ஹா ஹா! சிரிப்பை அடக்க முடியல புல்லட் brother...... !! //

   இப்ப அந்த ப்ரதர் எண்ட வார்த்தை தேவையா? எவளும் என்னை ப்ரதர் எண்டு கூப்பிடலாம்.. ஆனால் சமீரா ரெட்டி ச்பாபத்தி ரொட்டி எண்டு தன்னை கூப்பிட்க்கொள்பவர்கள் என்னை ப்ரதர் என்றழைத்தால் பராந்தன் ஆகிவிடுவேன்.. கஸ்டப்பட்டு கிட்டார் எல்லாம் பழகுறன்.. ப்ரதராம் ப்ரதர்.. ஹூம்...x-(

  16. Subankan

   ஆகா தாய்க்குலமே பார்த்து, புல்லட்டிடம் இரண்டடி தள்ளியே நிற்பது நல்லது.//

   ம்ம்!சுபாங்க சுவாமிகள் சொல்லுறார்.. எல்லாரும் தள்ளிப்போய் அவர் பக்கத்தில நில்லுங்க.. ;-)

  17. வந்தியத்தேவன்

   புல்லட் இன்றுமுதல் உன்னை என் தம்பி என்பதை வாபஸ் வாங்குகின்றேன்.அடப்பாவி இப்படியா சின்ன வயதில் குழப்படி செய்யவேண்டும்.
   என் நேர்சரி வாழ்க்கை ஒரே ஒரு நாள் (முதல் நாள் மட்டும் தான்) ரீச்சரின் சீலையைப் பிடித்து இழுத்துவிட்டேன் அத்துடன் நேர்சரிக்கு போகவே இல்லை.

   ஆனால் ஐந்தாம் வகுப்பு வரை குழப்படி குறைவு, அதே நேரம் ரீச்சர்களுடன் சர்ச்சரவுக்கு போவதுமில்லை.

   அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். //

   நேசரியிலயே பெட்டைப்பிரச்சனையால் சஸ்பென்சன் செய்யப்பட்ட ஒரே ஆளெண்டால் அது நம்ம வந்தியண்ணராத்தான் இரக்கும்... இந்த புகழ் பெற்ற நீங்கள் என்அண்ணன் பதவியை ராஜினாமா செய்வதை மீள் பரிசீலனைக்குட்படுத்தவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்..

  18. யோ வாய்ஸ் (யோகா)
   அது எப்ப வரும்? எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்//
   ஒவ்வொரு வார இறுதியிலும்தானட் என்னால் பதிவிட முடியும்.. ஆகவே இரு கிழமைகளாவது செல்லும்.. :-(..நன்றி யொவாய்ஸ்..

  19. //கழுத்தாங்குத்தியைப்பிடிச்சு கொறகொறவெண்டு புழிய ஆரம்பித்தேன்//

   சிறு வயதில் இருந்தே உங்களின் றெசிலிங் வெறி ஆரம்பித்திருக்கிறது போலும்
   ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்....

  20. This comment has been removed by the author.
  21. டேய் குழப்படிகாரா.. குறும்புக்காரா..
   நன்றாக வாய்விட்டு சிரித்தேன்..

   அப்பவே இவ்வளவு தொல்லை கொடுத்த பயலா நீ?
   அடுத்த அங்கத்துக்காக வெயிட்டிங்

  22. //ஒரு வடிவான டீச்சர் வர அவாண்ட சீலைய புடிச்சுக்கொண்டு அம்மாவை சொன்னனாம் நீங்க போட்டு பிறகு வாங்க எண்டு..//

   அட பாவி... நீ அவ்வளவு முத்தல் கேசா? சீச்சீ... எனக்கு இப்படி ஒரு அண்ணாவா? நான்டு கொண்டு சாகலாம் என்டு இருக்கு. என்ன சொல்லுறாய்யண்ணா?

   //தைச்சிருக்கிற கொண்டிசனை பாத்தால் பக்கத்து வீட்டு அப்பு குளிக்கிறப்போ கட்டுற கோமணம் மாதிரி கிடக்கும்.. கடைசில டீசசர் பாவம் பாத்து ஒரு 50 60 கிடைக்கும்.. //

   ஹி ஹி.. அது உண்மை தான். அம்மா தம்புக்கு செய்து குடுக்க மாட்டா. நான் களவா தைத்து கொடுப்பன். பாவம் தம்பி என்டு. அவனுக்கு நல்ல மாக்ஸ் கிடைக்கும்..

   Btw, வடிவாதான் சின்னனில் இருந்திருக்கிறாயண்ணா. இப்பதான், ஒரு மாதிரி கிழடு தட்டிப் போய் இருக்கிறாய். 40 வயசில் இதெல்லாம் சகஜம் தானே..

   //ஏதோ ஒரு பேமசான டியுசன்//
   பொன்ட்ஸ் என்டு நினைக்கிறன். அல்லது அந்த மாஸ்டரின் பெயர் பொன்ட்ஸ் ஆக இருக்கோனும், வீணாப்போன வாத்தி, வீட்ட ஈசி ச்யரில் இருக்காமல், கஷ்டமான பேப்பர் செட் பண்ணுவார். (Bonds or Britto if am not mistaken)

   அந்த ஆளின் பேப்பர்ஸ் சரியான கஷ்டம். எனக்கு தமிழுக்கு 25க்கு மேல வந்தது இல்லை தெரியுமே. அது அப்ப தான் இந்தியாவால நாங்கள் வந்த நேரம். தமிழ் தெரியாது. அம்மா வேற, அவனவன் தமிழீழம் கேட்டு சண்டை பிட்டிக்க நீ என்ன இங்கிலீஷ் ஈழம் கேக்கப் போறியே என்டு ஏசுவா. பாழாப் போன என்ட பாட்டி முறையானவ, பிரின்ஸியாக இருந்தவா, அவ தான் என்ட பேப்பர்களை திருத்துவது. கணிததுக்கு ஒரு மாதிரி 85 எடுப்பன். அதுக்கும் அம்மா ஏசுவா. அது என்ன கணிதத்துக்கு 85 தமிழுக்கு 25 என்டு... அந்த கொடுமை யாரிடம் சொல்லி அழுவது. ஒரு நாள் அப்பாவிட்ட அந்த வாத்தியைத் தேடிப் பிடிக்கச் சொல்லிட்டன். நான் சொன்னா ஏழு கடல் தாண்டியும் போய் எதையும் கொண்டுவரும் அப்பா, வாத்தியையா தேடிப் பிடிக்கமாட்டார். பாவம் வாத்தி..

   பிள்ளையளுக்கு ஆக்க பூர்வமாக பேப்பெரை செட் பண்ணுறது என்டால் வேலையை செய் இல்லாட்டி என்ட வாகனத்தாலேயே உன்னை அடிச்சு கொண்டு போடுவன் என்டு அப்பா போய் அந்த ஆளை வெருட்டின பிறகு தான் அவர் தன்ட கூத்த நிப்பாட்டினவை.

   விக்னா ரியூசன் சென்ரரில் அந்த பேப்பர் வித்தவை என்டு நினைக்கிறன். ஞாபகம் இல்லை.

   //அதை செய்வது செம ஜாலியா இருக்கும்... //
   யாரோ இங்கிலீஷ் பாவிக்காது எழுதுவம் என்டு சபதம் எடுத்த ஞாபகம் இருக்கு. ஜொலி எப்ப இருந்து தமிழ் சொல் ஆச்சு அப்பு..

   //பெரிசா வராட்டாலும் 164 எடுத்து பாஸ் பண்ணிட்டன்.. //
   பரவாயில்லை மானத்தைக் காப்பாத்திட்ட அண்ணே.. எனக்கு 174 ஆக்கும்.. ஹி ஹி.. அப்ப நான் உன்ன விட புத்திசாலியா அண்ணே? கிராதகி என்டு நீ கத்திறது கேக்குது.. ஹி ஹி...

   //எனக்கு பிடித்த சேர் ரகுநாதன்..//
   எனக்கும் தம்பிக்கும் பாடசாலையில் நடக்கிறதை அன்டு அன்டே சொல்லாட்டி நித்திரை வராது. அது மட்டுமல்ல, அடிக்கடி சென் ஜோன்ஸ் போவதால், பலரையும் தெரியும்.. பேரெல்லாம் 40 வயசாகியும் ஞாபகம் வச்சிருக்கிறாப்போல.

   //விடைய மாத்த பஞ்சி.. கேள்வியை மாத்திட்டன்.. அடுத்த நாள் அந்தாள் பிடிச்சிட்டுது .. பிறகென்ன மறுபடியும் மரபுவழித்தாக்குதல முறியடிச்சதுதான்//

   உன்னான, உன்னை அப்பவே போட்டுத் தள்ளி இருக்கோணும் அண்ணே.. நீ இவ்வளவு வாலா?

   //பேய்க்தை சொல்லும் ஆங்கில பாட்டுவாத்தியார் சொறுபன், அன்புக்கு இலக்கணமான ஜீவானந்தம் மிஸ், ஆப்புக்கு இலக்கணமான ஜெயசிங்கம் மிஸ் , அடிக்கு இலக்கணமான தேவதாசன் சேர் என்று பலர் இருந்திருந்தாலும் ஒருவரும் தற்பொது பாடசாலையில் இல்லை என்பது மனதை கனக்க வைக்கிறது..//

   சொரூபன் சேரைக் கண்டால் நானே ஓடிவிடுவேன் என்டால் பாருங்கோவன். அந்த ஆள், ஆள் கிடைக்காமல், (நான் சுண்டுக்குளியில் இருந்த நாட்களை விட சென் ஜோன்சில் இருந்த நாட்கள் அதிகம் என்ட காலமும் ஒன்டு இருந்தது.. ஹி ஹி... ) எனக்கு பேய்க் கதை சொல்ல, எனக்கு நித்திரை வராது. பிறகு என்ன, அந்த ஆளைக் கண்டால் பேயைக் கண்டது போல ஓடிப் போவன்.

   ஜீவானத்தம் மிஸ் தம்புக்குப் பிடித்த மிஸ். நல்லா பாசமானவதான். தேவதாசன் சேர் பிறகு பிரின்ஸியாய இருந்தவரே?

   மறந்திட்டன். நான் உங்கள்ட சைக்கிள் பாக் அடியில ஒரு மரம் நட்டனான். சின்னப் பிள்ளையா இருக்கும் போது. இங்க மரம் இருந்ததே...

   6 ‍ முதல் 11 தான் நல்ல பம்பலான காலம். எந்த சுண்டுக்குளி அக்கா எந்த சென் ஜோன்ஸ் அண்ணாவோட சுத்திறா என்டு நோட் பண்ணத் தொடங்கின காலமல்லே. என்னட்ட கேட்டா எனது 9ம் ஆண்டு தான் பெஸ்ட் ஆண்டு என்டு சொல்லுவன். அவ்வளவு அருமையான ஆண்டு.. ஹ்ம்ம்ம்ம்ம்... அது ஒரு காலம்... இல்லாடாண்ணா?

  23. இந்தப் பால்வடியும் முகத்திலா இத்தனை குறும்பு.

   தொடரட்டும்

   6...............................

  24. @இலங்கள்..
   ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்...//


   அடப்பாவி.. தெரியாம சொல்லிப்போட்டன்டா விட்டுடு.. ப்ளீஸ்..

  25. என் இதயத்திலிருந்து....
   Super.... //
   சுவீடன் தம்பி தாங்சுப்பா..:-)

  26. LOSHAN
   டேய் குழப்படிகாரா.. குறும்புக்காரா..
   நன்றாக வாய்விட்டு சிரித்தேன்..

   அப்பவே இவ்வளவு தொல்லை கொடுத்த பயலா நீ?
   அடுத்த அங்கத்துக்காக வெயிட்டிங் //

   உதெல்லாம் என்ன ஜூஜூபி.. நிறைய கிடக்கு.. எங்க பொயிடப்போறீங்க .. இருங்க ஆறுதலா கதைப்பம்..

  27. முக்கிழினி .. அது பொண்ட்ஸ் தான்.. பிறகென்ன ..

   தமிழுக்கு 25 எடுத்த காவாலி.. மலேசியாவிலருந்து வந்திடாத.. மாட்டூசி போட்டு கொண்டு போடுவன்..

   அப்ப உன்னை பாத்த எபெக்டிலதான் சொறுபன் வாத்தி எங்களுக்கு பெய்க்கதை சொ ல்லுறவரோ? ம்ம்.. அவற்ற பேய் கூட கதையில வளவள எண்டு அலட்டும்..;-)

  28. மாதேவி

   இந்தப் பால்வடியும் முகத்திலா இத்தனை குறும்பு.

   தொடரட்டும் //

   என்ன மாதேவி அக்கா.. வீட்ட இப்ப ஒழுங்கா தண்ணி வருதா? பதிவெல்லாம் எழுதிறியள்.. பிள்ளையள் குழப்படி காணாது.. என்னட்ட ஒருக்கா அனுப்பியெடுங்க.. ;-)

  29. //முக்கிழினி //

   அது முகிலினி.... முக்கிழினி இல்லை.. போய் கண்ணாடியப்போடுண்ணா.... Argh........ Hmph...... Grrrrrr....

   //தமிழுக்கு 25 எடுத்த காவாலி.. மலேசியாவிலருந்து வந்திடாத.. மாட்டூசி போட்டு கொண்டு போடுவன்..//

   Grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr...............

   //அப்ப உன்னை பாத்த எபெக்டிலதான் சொறுபன் வாத்தி எங்களுக்கு பெய்க்கதை சொ ல்லுறவரோ? ம்ம்.. அவற்ற பேய் கூட கதையில வளவள எண்டு அலட்டும்..;-)//

   அட மொக்கு அண்ணா, பேய் என்டால் ஆம்பிளை... பிசாசு தான் பொம்பிளை.. அது கூட உனக்கு தெரியாதே.. என்னை காவாலி என்டுறாய்....

   சொறூபன் வாத்திக்கு நான் செல்லப்பிள்ளை... ஏன் உங்களின்ட பிரின்சியை கூட ஆட்டி வைச்சிருக்கிறன்.... என்னப் பற்றி உனக்கு இன்னும் தெரியேல... ஹம்ப்.... ஹி ஹி....

   நான் பிடாறி ஆக்கும்... அப்பாவி என்டு நினைச்சியே.. ஹை.... சரியான போண்டி அண்ணா நீ... பாவம்... சரி சரி அழாத...

   மட்டது... ஆண் சிங்கங்களுக்கு வேணும் என்டால் உன்ட கும்மல் தாங்கேல்லாமல் இருக்கும்.. நாங்கள் பெண் சிங்கங்களாக்கும்.... கும்முற கும்மில நீ காலி..

   மட்டது, உனக்கு என்ட பேரில சூனியம் வச்ச பிரண்ட் ஹாய் சொல்ல சொன்னவள்... என்ன உன்ட பதில்... அவள் உனக்கு ரூட் போடுறாள் போல... ஹி ஹி.. ஒரே உன்னைப் பற்றி விசாரிக்கிறாள் அண்ணை...

  30. ஆஹா! பேய்க்கு பெண்பால் பிசாசு எண்டு கண்டுபிடித்ததோடு மட்டுமில்லாமல் தன்னை ஒரு பிசாசு மற்றும் பிடாரி என்றும் ஒத்க்கொண்ட பல்லுக்கிளினிக்..மன்னிக்கவும் .. முக்கிழினிக்கு எமது பாராட்டுக்கள்..

   பெண்சிங்கள் இல்லை பெண்தவக்கையள்.. உங்குளோட வாயடிக்கேலாமல்தான் எல்லாரும் ஓடறது.. லொடலொட எண்டு ஓப்பன் பண்ணினா ஒரே ஒப்பேராதான்..

  31. எனதருமை கும்மியடிக்கும் கட்சித் தொண்டர்களே... புல்லட் போண்டி கணக்க உங்கள் கட்சிக்காரர் ஒருவரைப் பற்றி கதைக்கிறார்... கொஞ்சம் கும்முங்கோவன்.. பெண் பாவம் பொல்லாதது.. சொல்லிப்போட்டன்...