ABCD இடியப்பம் தாடி..

    மிகவும் பழைய பாத்திரம் ஒன்று எனக்கு காமெடிப்பதிவர் கனககோபியால் வழங்கப்பட்டது.. அதற்குள் ஊற்றுவதற்கு என்னிடம் புதிதாய் எதுவுமில்லை.. ஆகவே சும்மா மொக்கைப்பதில்களை போடாமல் அல்லது பெரிய தத்துவவாதி போல காட்டிக்கொள்ளாமல் உண்மையாகவே பதிலளிக்கிறேன்.. என்னைப்பற்றி சிறிது தெரிந்து கொள்ளுங்களேன்.


    விதிகள்:


    விதிகளை மீறுவதில் ஒரு சுகம் உண்டு.. ஆகவே மன்னிக்கவும் மீறிவிட்டேன்..


    தமிழ்:

    அன்புக்குரியவர்கள்:
    ஒரு அணில் குஞ்சு சிறிய வயதில் வளர்த்தேன் .. அதை சேட் பொக்கட்டினுள் விட்டால் இரண்டு மூன்று முறை சுழன்று விட்டு சுருண்டு படுக்கும்.. அதை மேலிருந்து பார்க்கும் போது வந்தது அன்பாக இருக்கலாம். மற்றும்படி எனக்கு நெருக்கமானவர்கள் எப்பவும் நலமாக இருக்கவேண்டுமென்று நினைப்பதுவும் அவர்களுக்கு ஒரு துன்பமென்றால் பதறுவதும் அன்பென்று நினைக்கவில்லை.

    ஆசைக்குரியவர்:
    உண்மையாக ஆசைக்கு டெபினிசன் தெரியாது..
    பாசமான ஆசையா? ஆபாசமான ஆசையா? எதை கேட்கிறார்கள்..
    இலவசமாய் கிடைப்பது:
    சூரிய ஒளி , காற்றைத்தவிர வேறு எதுவும் இருப்பதாக தெரியவி்ல்லை..

    ஈதலில் சிறந்தது:
    உண்மையா உழைப்பவன் கஷ்டத்தில் இருக்கும் போது கொடுக்கும் காசு..

    உலகத்தில் பயப்படுவது:
    ஆயுதம் வைத்திருக்கும் மனநோயளிகளை கண்டு.. எல்லாம் உயிராசையால் தான்.. ஆனால் பேய்ப்படம் பார்க்க பயங்கரப்பயம்..

    ஊமை கண்ட கனவு:.
    உண்மையாக அப்படி இதுவரை எதுவுமில்லை..

    எப்போதும் உடனிருப்பது:
    என் ஐடென்டிகாட்டும் போலீஸ் றிப்போட்டும்..

    ஏன் இந்த பதிவு:
    கோபி அழைத்ததால்... நமக்கும் ஒரு பதிவு கூடுதுதானே..

    ஐஸ்வர்யத்தில் சிறந்தது:.
    நிறைய பணம் மற்றும் கொஞ்சம் ஊக்கம் இருந்தால் இந்த உலகத்தில் எல்லாம் கிடைக்கும்.. இப்போதைய காதல் உட்பட..
    ஒரு ரகசியம்:
    எங்கட ஊரில இப்போதைக்கு ரகசியம் எண்டால் பின்றோட்டுப்பெட்டை ஆமிக்காரனோட ஓடின கதைதான்..

    ஓசையில் பிடித்தது:
    பகிடிக்கில்லை ... உண்மையா தூரத்தில விழும் ஷெல் சத்தம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. ஒரு கும் எண்ட சத்தமும் அதுக்கு பிறகு அந்த ஜன்னல் கிடுகிடு எண்டு ஆடுற சத்தமும் கேட்டு இப்ப சரியா 9 வருசம்..

    ஔவை மொழி ஒன்று:
    வாது முற்கூறேல் (Don't gossip or spread rumor.) .. இந்தக்குணம் தமிழரில் காணப்படும் அசிங்கங்களில் ஒன்று.. சொல்வதெற்கென்ன என்னிடம் கூட இது பலகாலமாக இருந்தது.. பழைய கிழவிகளிடம் இருந்து ஒட்டிக்கொண்டிருந்திருக்கலாம்.. ஆனால் புரிந்து சட்டென்று ஏதோ நிறுத்திவிட்டேன்.. அதன் பலன் எனக்கு நிறைய நண்பர்கள்..

    (அ)ஃறிணையில் பிடித்தது:
    பிறந்து 6 மாதமான குழந்தை .. தொட்டால் அது சிரித்தால் மணியா இருக்கும்..

    English

    1. A – Avatar (Blogger) Name / Original Name :
    புல்லட் / பவன்

    2. B – Best friend? :
    சில பாடசாலை நண்பர்கள்..

    3. C – Cake or Pie? :
    பனாட்டா பனங்காப்பணியாரமா எண்டால் பட்டெண்டு சொல்லலாம்.. pie இதுவரை நான் சாப்பிட்டதில்லை.. கேக் கொஞ்சம் பிடிக்கும்..

    4. D – Drink of choice :
    வன்பானம் போமாலிட்டிக்கு கூட தொடுவதில்லை.. மென்பானங்களில் கடும் வெயிலால் வந்தபிறகு ஒரு மீடியம் கூல் fanta குடிப்பது தனி சுகம்..

    5. E – Essential item you use every day? :
    வேறெது கணணிதான்..

    6. F – Favorite color ? :
    லைட் நீலம் மற்றும் சாம்பல்

    7. G – Gummy Bears Or Worms :
    Gummy Bear வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கொண்டுவருவார்கள்.. நானும் ஒரு முறை சிங்கப்பூரில் 50 டொலருக்கு ஒரு பெரியா பாக்காக வாங்கிவந்து கட்டு கட்டியிக்கிறேன்.. இப்பொதெல்ாம் பெரிய ஆர்வமில்லை.. அது சரி
    Gummy Bear க்கும் worm க்கும் என்ன டேஸ்ட் வித்தியாசம் ஏதாவது உண்டா?

    8. H – Hometown? :
    யாழ்ப்பாணம்

    9. I – Indulgence? :
    காலையில கனநேரம் தூங்கிறது

    10. J – January or February? :
    எல்லாம் ஒண்டுதான்.. முந்தியெல்லாம் ஜனவரி பிறந்தா புதுக்கொப்பி புது டீச்சர் எண்டு சந்தோசம் .. இப்ப அய்யோ வயசு போகுதே எண்டு கவலை.. ஹம்ம்

    11. K – Kids & their name :
    அவைன்ட பெஸ்ட் நேம் இன்னும் தெரியாட்டாலும் லாஸ்ட் நேம் உங்களுக்கும் தெரியும்

    12. L – Life is incomplete without :
    g00d friends

    13. M – Marriage date?
    ஹிஹி ...

    14. N – Number of siblings :
    இரண்டு

    15. O – Oranges or Apples :
    ரெண்டும்தான் கனகாலமா இரவுச்சாப்பாடா இருந்தது..

    16. P – Phobias/Fears? : உ
    யர மான இடங்களில ஏறினால் கால் வேர்க்கும்..உடம்பெல்லாம் கூசும்.. acrophobia வா தெரியல்ல

    17. Q – Quote for today? :
    Enjoy this moment

    18. R – Reason to smile? :
    பாடசாலை பற்றிய
    பழைய ஞாபகங்கள் வந்து போகையில் ..

    19. S – Season? :
    யாரோ வெள்ளைக்காரனிண்ட ப்ளொக்கில வந்த தொடர் எப்பிடியோ இங்க தமிழற்றைக்க வந்திட்டு எண்டு மட்டும் விளங்குது.. இலங்கையில ஏப்ரலயும் நவம்பரையும் தவிர மிச்சகாலமெல்லாம் ‌ நல்ல காலநிலைதான்..
    20. T – Tag 4 People? :
    பாவம் விட்டுடுவமே இதை ...

    21. U – Unknown fact about me? :
    அப்படியெதுவுமில்லை...


    22. V – Vegetable you don't like? :
    முந்தி கீரை பிடிக்காது.. அப்பா அதை சாப்பிடி வைக்க அடியலெ்லாம் போட்டிருக்கிறார்... இப்ப சிங்கள ஆக்களிண்ட சாப்பாடிட்டில இருக்கும் பெயர் தெரியாத ாய்கறிகள் ‌ பிடியாது.. நாசமறுவார் கண்ட எல்லாத்தையும் புடுங்கி காய்ச்சுறாங்கள்..

    24. X – X-rays you've had? :
    இல்லை

    25. Y – Your favorite food? :
    அம்மாவின் இட்லி சாம்பார்.. காலையில தொடங்கினால் பின்னேரம் வரை ஒரு 30 40 சாப்பிடுவன்..

    26. Z – Zodiac sign? :
    எனக்கு உதில நம்பி்க்கையில்ல .. ஏதொ ஒண்டு மூலம்.. இன்னொண்டு தனுசு..


    சரியான அலுப்பு பதிவு எண்டு மட்டும் விளங்குது..
    மற்றவை போல சுவாரசியமாக எழுத டியவில்லை.. நாளை அல்லது வி‌ைரவில் பதிவர் சநதிப்பு பகுதி 2 எதிர்பார்க்கவும்..

    12 Responses

    1. //வன்பானம் போமாலிட்டிக்கு கூட தொடுவதில்லை.. //

      Yea yea believed u....... Pannadai anna

    2. பன்னாடை கள் வடிப்பதற்கு பயன்படும் உபகரணம்.. அதை கொண்டு என்னை ஒரு தூய பிறவியை ஏசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.. மலேசியாவில் எப்பிடி குடிகுடித்தனம் எல்லாம் போகுது? ;-)

    3. //குடிகுடித்தனம் //

      I DONT drink....

      பரதேசி அண்ணா, நான் குண்டு பூசணி என்டு சொன்னனியாம்...? Why did u lie like that.... u r குண்டு பூசணி

    4. //மீடியம் கூல் fanta குடிப்பது தனி சுகம்..//
      ரொம்ப கரெக்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும்........

    5. Balavasakan
      //மீடியம் கூல் fanta குடிப்பது தனி சுகம்..//
      ரொம்ப கரெக்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும்.......//

      உப்பிடித்தான் 2007ஆம் ஆண்டு பாதை பூட்டியிருந்த நேரம் கொழும்பால யாழ்ப்பாணம் டௌணுக்கு வந்து விடுவிடுடெண்டு ஒரு கடைக்கு பூத்து கேக்காம பறையாம எடுத்து பன்டா மீடியம் கூல் குடிச்சிட்டன்.. அண்ணே எவ்வளுவ எண்டு கேட்க வைச்சான் பாரு பில்லு கடைக்காரக் பில்லு.. சோடா 200 அதுக்கு கூல் பண்ண 50.. குடிச்சது காதால புகையா வந்தை ரெண்டு 3 பேர் எப்பிடியும் பாத்திருப்பாங்கள்..

    6. //Quote for today? : Enjoy this moment//
      hmm.... i like that bullet brother:)

    7. ம்....

      //நாளை அல்லது வி‌ைரவில் பதிவர் சநதிப்பு பகுதி 2 எதிர்பார்க்கவும்.//

      நாளையே விரைவில் எதிர்பார்க்கிறேன்

    8. // எனக்கு காமெடிப்பதிவர் கனககோபியால் வழங்கப்பட்டது..//

      என்னை நகைச்சுவைப் பதிவர் என்று அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 1ம் திகதி) நாடுமுழுதும் கடையடைப்பு நடத்தப்பட இருக்கிறது.
      என்னை நகைச்சுவைப் பதிவர் என்று அழைத்த உங்களுக்கு ஆப்பு நடக்க வேண்டும் என்று எண்ணி புத்த விகாரைகளில் பிரார்த்தனைகள் நடத்தப்பட இருக்கின்றன.

      //சரியான அலுப்பு பதிவு எண்டு மட்டும் விளங்குது.. மற்றவை போல சுவாரசியமாக எழுத டியவில்லை..//

      அட நல்லாத் தானே இருந்திச்சு?

      அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா.....

    9. பன்னாடை என்ன செய்யுமாம், நல்லதையெல்லாம் விட்டுட்டு தேவையில்லாததை மட்டும் பிடிச்சுக்குமாம், அதனால் தான் அப்படி ஒரு திட்டு. சரி அதை ஏன் உங்களிடம் உபயோகிக்கிறார்கள். ? :)

    10. //எல்லாம் ஒண்டுதான்.. முந்தியெல்லாம் ஜனவரி பிறந்தா புதுக்கொப்பி புது டீச்சர் எண்டு சந்தோசம் .. இப்ப அய்யோ வயசு போகுதே எண்டு கவலை.. ஹம்ம்//


      அப்பாடா இப்பவாவது வயசு போனதை ஒப்புக்கொண்டதுக்கு நன்றி...

    11. நல்ல நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள், ஒரு ரகசியம் சொல்லவா உங்களை இந்த தொடர் பதிவில் மாட்டிவிட்டது கோபிதான், ஆனால் நான் தான் உங்களது பெயரை அவருக்கு சிபாரிசு செய்தேன்..

    12. // அது சரி Gummy Bear க்கும் worm க்கும் என்ன டேஸ்ட் வித்தியாசம் ஏதாவது உண்டா?//

      உண்டா?ல் உண்டு?..
      ஹி ஹி நானும் கொஞ்சம் ரை பண்ணிப் பாத்தேன்.
      அருமை தலைவா.. வாழ்க....
      ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்..