நண்பர் குழாம் ஒரு முறை நான் டயலோக்கில் வேலை செய்தநேரம் ஜா எலவில் ஒரு ஆறு பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.. அவ்வெளை அந்த ஆற்றின் கரையிலிருந்து கொஞ்ச தூரத்திலிருந்த டயலாக் டவர் செயலிழந்து விட்டது.. மனேச்சர் என்னையும் என் தோழனையும் அழைத்து இரு டெக்னீசியன்களுடன் சென்று அதை திருதத்தி விட்டுவருமாறு கட்டளையிட்டுவிட்டு போய்விட்டார்.. 3 மணிநேரம் அலுத்த வாகனப் பயணத்தின் பின்பு அந்த இடத்தை அடைந்தால் போகும் வழியெல்லாம் இடுப்புவரை வெள்ளம்.. அசூசையுடன் ஒருவாறாக தடவிதடவிச்சென்று திருத்திவிட்டு வந்தோம்.. அந்த அருவப்பான ஞாபகம் ஆறுகள் குறித்து ஒரு வேண்டாத சிந்தனையையே ஊக்குவித்திருந்தது. அந்த சம்பவம் நடந்து ஏறத்தாழ 3 வருடங்களின் பின்பு கடந்த ஞாயிறு வாழ்நாளில் முதன்முறையாக ஒரு ஆற்றில் இறங்கியிருந்தென்..கடந்த சனி நண்பன் கேதா சடுதியாக அரேஞ் பண்ணிய ட்ரிப் , ஞாயிறு காலை கித்துள்கல நோக்கி புறப்டுவதாயும் அங்கு white water rafting செய்வதாயும் பின்னர் மாலை வீடுதிரும்புவதாயும் ப்ளானிங்கில் தீட்டப்பட்டது. ஆதிரை , கௌபாய் மது , புல்லட் (நான்) உட்பட பல்கலைகழக சகபாடிகள் பன்னிருவர் இளைந்து கொண்டோம். நண்பன் குட்டி சுவாமிகள் ஏற்பாட செய்த வாகனம் சகோதர இன ட்ரைவர் பிரதீப் ஐயாவுடன் காலை ஆறு மணிக்கு ஐபிசி றோட்டை அடைய , வெள்ளவத்தையிலிருந்தவர்களை ஏற்றிக்கொண்டு பம்பலப்பிட்டி க்கு சென்று , அங்கு உமாகா சுவாமிகளை ஏற்றிக்கொண்டு (அவரும் நண்பர்தான்) , பின்னர் பாமன் கடைக்கு மீண்டு அங்கு ஏனையவர்களை ஏற்றிக்கொண்டு கித்துள்கலை நோக்கி விரையலாயிற்று..பலகாலம் கழித்து ஒன்றுகூடியதால் வழியில் நக்கல்களுக்கும் நளினங்களுக்கும் குறைவிருக்கவில்லை. மாறிமாறி கடிபட்டுக்கொண்டு , பழைய கதைகளையும் கதைத்துக்கொண்டு , றோட்டால் போபவர்கள் அக்சிடன்ட் படுமளவுக்கு சிரித்துக்கொண்டு போன போது நடுவில் ஓரிடத்தில் இறங்கி காலை உணவை மு
டித்துக்கொண்டொம்.. அதை உமாகா சுவாமிகள் தன் போன் மூலமாக வீடியோ பிடித்து முகப்புத்தகத்தில் போட பிறதேசங்களிலிருக்கும் நண்பர்கள் கமண்ட் போட ஆரம்பித்தனர்..அதைதொடர்ந்து வாகனத்தில் மீள ஏறி பயணத்தை தொடர எமக்கு கௌபாய் மது போட்டி ஒன்றை வைத்து திசையை திருப்பினார்..அது புதிதாய் ஒன்றுமில்லை.. பாட்டுக்குப்பாட்டு. ஆதிரையும் ரெப்பாவும் பார்வையாளராய் ஒதுங்கிவிட ஏனையவர் கழுதைக்குரலில கத்தலாயினர்.. உமாகா சுவாமிகளுக்கு ஒருபாடலும் தெரியவில்லை. ஆகவே அவர் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்துவிட்டு எப்பொதாவது ஆலாபரணங்கள் அல்லது இசைக்குறிகள் வரமிடத்தில் கீயாமாயா என்று கத்தி எரிச்சலெழுப்பவே எல்லாரும் சேர்ந்து அவருக்கு கிச்சுகிச்சு மூட்டி சரணயைடய வைத்தனர். அதைத்தொடர்ந்து பாட்டுக்குபாட்டு சுவாரசியமாக நடைபெற்றபோது நண்பன் சொத்தி குயிலைப்பிடிச்சு பாடலை குரூரமாக பாடவெ (அதாவது பலான அர்த்தத்தில் .. அதுவும் தவறுதலாக வந்து விட்ட.து) எல்லாரும் கண்ணீர்வரும் வரை சிரித்தனர்.. அதைத்தெடர்ந்து, சொத்தியை நக்கலடித்துக்கொண்டிருந்தவேளை கித்துள்கலையும் வந்து விட்டிருந்தது. இடம் வலம் தெரியாமல் கேதா யாருக்கோ போன் போட்டு பரபரத்துக்கொண்டிருக்கும்போது திடீரென வண்டியை பொலீசார் மறித்தனர்.
நல்ல வேளையாக , சாரதி மாத்திரம் பொலீசாருடன் கதைத்து அக்சன் லங்கா போகவண்டுமென கேட்க அவர்கள் எம்மை சோதனை செய்வதை விடுத்து அது எங்கே இரக்கிறதென வாதிக்கலாயினர். கடைசியாக கேதா போனூடக இடத்தை தெளிவாக அறிந்ததும் நிம்மதிப்பெருமூச்சுடனும் ஒரு பரபரப்புடனும் அக்சன் லங்காவை அடைந்தோம்.. அந்கு போய் ஏற்கனவே செய்யப்பட்ட ஏற்பாடகளை உறுதிப்படுத்தி, ஆடைகளை மாற்றி ஹெல்மெட் , லைப் ஜக்கட் அணிந்து அறுவர் அறுவராக இரு போட்டினுள் ஏறினொம்.. கூடவே போட்டுக்கு ஒரு நெறிப்படுத்துனரும் ஏறிக்கொண்டார்.. பதினைந்து நிமிடம் கட்டளைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ராப்ட்டிங் ஆரம்பமானது..
மொத்தமாக 3 பாரிய அலைக்கிடங்குகள் மற்றும் 5 கிலொமீட்டர் ஆற்றுப்குதியை நாமாக வலித்து கடக்வேண்டும்.. உண்மையைச்சொல்வதானால் அப்படி ஒரு இனபமான அனுபவம் எனக்கு இதுவரை கிடைத்ததில்லை.. ஒவ்வொரு கிடங்கினுள்ளும் விழுந்து பாறைகளுடன் மோதும் போது உங்களை அறியாமலேுயே கூக்குரல் எழுப்புவீர்கள். முக்கால் மணிநேர ஓட்டத்தின் பின்பு ஒரு தெளிவான இடத்தில் கொண்டு போய் அனைவரையும் ஆற்றினுள் தள்ளிவிட்டார் பின்னாலிரந்த நெறிப்படுத்துனர். கால் கீழெ முட்டாத ஆழம்.. போட்டிக்கு துடுப்பு வலித்ததில் இளைக்கும் நெஞ்சு.. அதற்குள் மூச்சு முட்டும்படியாக குளிர் தண்ணீர்.. முதல் கொஞ்சநேரம் எல்லாரும் ஏதோ சாகப்போவது பொல அலறிக்கொண்டிருக்க நெறிப்படுத்துனர்கள் எம்மைப்பார்த்து நக்கலாக சிரித்தனர். அதில் உச்சக்கட்ம் எம்மில் சற்று குள்ளமான பெடியன் தன்னை கட்டை என்று கம்பஸ் காலத்தில் ஒத்துக்கொள்ளாதவன் ” ஐயோ நான் கட்டை நான் கட்டை என்னை காப்பாத்துங்கோ ” எண்டு அலறியதுதான்.. அவன் நினைத்தானாம் மற்றவர்களெல்லாரும் உயரம் அதனால் அவர்களுக்கு கால் முட்டுகிறது என.
ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டாரலும் ஹன்டர் (அவரும் நண்பர்தான்) பதறியடித்து எல்லாரையும் பிடித்து முக்கி கொல்லப்பார்த்துக்கொண்டிருந்தார்.. ஒரு 5 நிமிடம் கழிந்ததும் எல்லோரும் ஆசுவாசமாகி ஆற்றின் அழகையும் அந்த தணணீரின் மென்மையையும் தெளிவையும் ரசித்தவாறு கேதாவுக்கு நன்றி சொல்லலாயினர்.. கேதாவின் கண்கள் பெருமையில் பூத்தது..
ஒரு 20 நிமிடங்களின் பின்பு எம்மை படகில் இழுத்துப்போட்டு கரையில் சேர்த்தபின் நாம் மறுபடியும் ஓடிப்போய் தண்ணியில் விழுந்து குறைவான தண்ணீரில் நின்று வெகுநேரம் விளையாடினோம்..எமது உடமைகளுடன் நாம் வந்த வாகனம் நாம் கரையேறிய இடத்தில் நின்று கொண்டிரந்தது.. வழமையான அடல்ட் ஜோக்குகள் , அந்த வழியால் ராப்ட்டிங் சென்ற பெண்கள் மீது நக்கல்கள் அவர்களின் பதில்களுக்கு ஓ போடல்கள் என்று ரணகளமாக சென்ற வேளையில் கேதா தன் உயர்ரக கனொன் Digital SLR மூலமாக படங்களை சுட்டுத்தள்ளிக்கொண்டிருந்தான்...
மூச்சடக்கி எழும் வேளையில் கேதாவால் எடுக்கப்பட்ட அருமையான படம்
குப்புறக்குதிக்கும் கௌபாய்
குளிக்க மறுத்த ஆதிரையை குளிப்பாட்டும் நண்பர்கள்பசிக்கத்தொடங்கியதும் எல்லோரும் கரையேறி உடைமாற்றி வாகனத்தில் ஏற எம் கும்பலின் கவர்ச்சி கன்னி ரஜீ(அவன் ஒரு பெடியன்தான்) அந்த வழியால் வந்த பாம்பாட்டியின் மலைப்பாம்பை பிடித்து (யோவ் .. உண்மையான பாம்பப்பா) அங்கிங்கென்று எல்லா இடமும் சுற்றி போட்டொ எடுத்துக்கொண்டார்..
அந்த நேரம் எல்லா இடமும் சாப்பாடு முடிந்து விட்டிருந்தது. எம் ட்ரைவர் ஒரு கடையில் வாகனத்தை நிறுத்தி எமக்காக ஸ்பெசலாக சாப்பாடு செய்துதருமாறு வேண்டவே அவரும் 45 நிமிடம் பொறுக்குமாறு கேட்டுக்கொண்டு சமைக்க ஆரம்பித்தனர்.. 45 நிமிடங்கள் மிக்சர் முறுக்கு சொடாக்களுடன் கடையையே ரணகளப்படுத்திய பின்னர் சுடச்சுட தரப்பட்ட பிரியாணியை சுவைத்துச் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் அந்த ஆற்றில் ஒரு பாலம் இருந்த இடத்துக்கு சென்றோம்.. பாலத்தின் அடிப்பகுதியில் இருந்த பாறைகளில் இருந்து நுரைபொங்கும் ஆற்றை ரசித்து புகைப்படங்களை எடுத்தபின்பு மறுபடியும் வாகன்தில் ஏறிக்கொண்டோம்.. அந்த பாலத்தருகில் 54 ஆம் ஆண்டு ஒரு அங்கிலப்படத்துக்காக ஒரு டெம்பரரி பாலம் கட்டப்பட்டதாம்.. அது அழிந்து விட்டிரந்தாரும் அந்த பாலத்துக்காக துவாரமிடப்பட்ட பாறைகளை காணக்கூடியதாக இருந்துத. மேலும் அந்த படத்துக்கு பல விருதுகள் கிடைத்ததாம்..
நுரைபொங்கும் பாலத்தடி
படகோட்டும் உல்லாசப்பிரயாணிகள்
ஆற்றங்கரையில் ஆதிரைவரும் வழியில் எல்லாரும் களைத்துவிட்டிருந்ததால் நல்ல தாக்கம் போட்டிருந்தோம்.. கொழும்புவந்ததும் ட்ரைவர் எழுப்பி விட எல்லோரும் ஒரு நாளை நன்கு சந்தொசமாய் கழித்துவிட்ட திருப்தியுடன் வீடு சென்றோம்..
உண்மையைச்சொல்லப்போனால் நாங்கள் வழமையாகபோகும் டே ஔட்டோ இல்லை ட்ரிப்புகளோ 3000 இருந்து 6000 வரை செலவாகும்.. ஆனால் இவ்வளவு fun ஒரு போதும் அனுபவித்ததில்லை.. ஆனால் இந்த ட்ரிப்புக்கான மொத்த செலவு தலைக்கு 2000க்கும் குறைவு.. ராப்டிங் தலைக்கு வெறும் ஆயிரம் ரூபாய் மாத்திரமே.. வாகனச்செலவு 5000 .. ஆகவே மிகவும் பண்ம் மற்றும் அதற்கான ஓளட்புட் போன்றவற்றை கணக்கிலெடுக்கும்போது மிகமிக பிரயோசனமானது. எல்லோருக்கும் நான் இந்த ட்ரிப்பை ரெகமண்ட் செய்வேன்.. ஆகவே நீங்களும் கித்துள்கலைக்கு ஒருமுறை விசிட் செய்து மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்..
விடைபெறும் புல்லட்
39 Responses
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். இவற்றை வாசித்துப் படங்களைப் பார்த்த போது 80 களில் பதுலுஓயா;
துன்கிந்தை அருவி போன்றவற்றில் அடித்த் கூத்துக்கள் ஞாபகம் வந்தது.
அருமை அனுபவியுங்கள்.
புல்லட்.. நல்லா எழுதியிருக்கிறாயப்பா... நிஜமாவே அந்த நாள் நல்லா இருந்திச்சு... போட்டிருக்கிற படங்களும் அருமை..
//குளிக்க மறுத்த ஆதிரையை குளிப்பாட்டும் நண்பர்கள்//
ஓ! அவர் இப்பிடித் தானோ?
என்ன ஆதிரை அண்ணா? சீச்சீ...
நல்ல அனுபவம்...
படங்களும் அருமை.......
அன்றே படங்கள் பார்த்துவிட்டேன். மூஞ்சிப்புத்தகத்திலும், மின்னஞ்சலிலும். அந்த உல்லாசப்பிரயாணிகளின் குளோசப் படத்தையும் போட்டிருக்கலாமே :P
நான் இலங்கை வந்தால் அங்க கூட்டிடு போவீரா?
சும்மா தமாஷ்....
வருவேன் விரைவில்! சந்திப்பேன் எல்லோரையம்!!
//அது சரி.. எல்லா ஆம்பிளையளும் இப்படி தானே? இத வேற எழுதி மானத்த வாங்கிறியளோ.. //
புல்லட் அண்ணாவால் ஒட்டுமொத்த ஆண் சமூகத்துக்கே கேடு......
கித்துள்களை அனுபவம் பதிவாகவே வந்துவிட்டதா?
அந்த பிரபல ஆங்கிலப் படத்தின் பெயர் The Bridge on the River Kwai . மிகவும் நல்ல படம் சிடியில் கிடைத்தால் பார்க்கவும்.
ஆதிரை குளிக்காததன் ரகசியம் இப்போதுதான் தெரிகின்றது.
இனிமையாக இருந்தது உங்கள் பயணக் கட்டுரை! :)
பாரிஸ்(Johan-Paris)
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். இவற்றை வாசித்துப் படங்களைப் பார்த்த போது 80 களில் பதுலுஓயா;
துன்கிந்தை அருவி போன்றவற்றில் அடித்த் கூத்துக்கள் ஞாபகம் வந்தது.
அருமை அனுபவியுங்கள். //
*********************
நன்றி அங்கிள்.. நாங்கள் பிறந்ததிலருந்து ஒரே தரித்தரத்தைத்தான் அனுபவிச்சனாங்கள்.. இப்பதான் ஏதோ கொஞ்சம் இடைவெளி கிடைச்சிருக்கு.. அந்த வகையில நீங்கள் எவ்வளவோ குடுத்து வைச்சனியள்.. பாப்பம்.
மதுவதனன் மௌ. / cowboymathu
புல்லட்.. நல்லா எழுதியிருக்கிறாயப்பா... நிஜமாவே அந்த நாள் நல்லா இருந்திச்சு... போட்டிருக்கிற படங்களும் அருமை.. //
நன்றி கௌபாய்..ராமராஜன் போல வந்து கௌபாய் கலக்கியது என்றைக்கும் மறக்காது..;-)
அது சரி.. தலைகுப்புற நிண்ட பொது காது மூக்கினுள் தண்ணி பொகவில்லையொ?
கனககோபி
December 2, 2009 5:14 PM
//குளிக்க மறுத்த ஆதிரையை குளிப்பாட்டும் நண்பர்கள்//
ஓ! அவர் இப்பிடித் தானோ?
என்ன ஆதிரை அண்ணா? சீச்சீ...
நல்ல அனுபவம்...
படங்களும் அருமை....... //
அடேய் அவன் பயங்கர உசார்ப் பார்ட்டி.. ஆறு தன்னை இழுத்துக்கொண்டு பொய் கடலில ஏற்றி விடும் என்றபயத்தில அவன் ஆற்றில இறங்க மறுத்தான்..
பின்னூட்டத்துக்கு நன்றியப்பு..
Subankan
அன்றே படங்கள் பார்த்துவிட்டேன். மூஞ்சிப்புத்தகத்திலும், மின்னஞ்சலிலும். அந்த உல்லாசப்பிரயாணிகளின் குளோசப் படத்தையும் போட்டிருக்கலாமே :P //
தம்பி .. எக்சாமுக்கு இன்னும் எத்தினை நாள் கிடக்கு? அவையள குளோசப்பில பாக்கோணுமோ?
அது சரி யாருதுகளை மின்னஞ்சலிலை அனுப்புறது?
//அது சரி யாருதுகளை மின்னஞ்சலிலை அனுப்புறது?//
குளிக்க அடம்பிடிக்கிறவர் தான்....
இளந்தி...
நான் இலங்கை வந்தால் அங்க கூட்டிடு போவீரா?
சும்மா தமாஷ்....
வருவேன் விரைவில்! சந்திப்பேன் எல்லோரையம்!!//
கட்டாயம் கட்டாயம்.. ;-)
இதில அந்த துன்பியல் சம்பவத்தை குறிப்பிடாமல் தட்டிகழித்து விட்டிரே பாண்டி!!! 11 காமுகர்கள் கனவுக்கன்னி ரஜீனை கதறகதற கற்பழித்ததாகவும் அதை முன்னின்று வழிகாட்டியாக செயற்பட்டவர் காமராஜன் மது என்றும் இரகசிய தகவல்மூலம் அறியக்கிடைத்தது!!! பொலிஸாரின் தகவல்படி 9 பேராலேயே கனவுக்கன்னி சூறையாடப்பட்டதாகவும், மிகுதி 2 பேரும் வெறும் காத்தடிக்கும் பம்பு எனவும் அறிக்கை விவரிக்கிறது!!!
முகிலினி
அந்த பாறையில படுத்திருந்து போஸ் குடுக்கேக்க உன்னை தள்ளி மண்டையை உடைச்சு இருக்கவேணும்.. பிழை விட்டுட்டாங்கள் உன்ட பிரன்ஸ்.
நல்ல ஆண் சிங்கங்கள் தான்... அட ச்சா..
அது சரி.. எல்லா ஆம்பிளையளும் இப்படி தானே? இத வேற எழுதி மானத்த வாங்கிறியளோ..
Rafting is a good sport. படகை கவுத்துப்போட்டு நீந்திறது இன்னும் பம்பலாக இருக்கும்.. அதுக்கு தைரியம் வேணும்...//
கடன்காரி.. இரு இரு உன்னை தனிய கவனிக்கிறன்.. ஒண்டு சொல்லவேணும்.. நாங்கள் உசார்மடையர்கள் இல்லை.. அதனால்தான் தப்பிப்பிழைத்து இருக்கம் கண்ணு..
யாரோ பைரவரின்ட சேப்பில இருந்த ஆள் (நீ தானப்பு) //
அப்படியா ? யாரந்த பைரவர்? அவருக்கு ஜிம்பாடியா?
குளிக்காம வந்து நாறடிச்சவராம்.. அதை பத்தி ஏன் சொல்லேல்ல.. //
ஓம் நான் மலேசியா வாறன். அங்கதானாமே யாரும் குளிக்கிறதில்ல..அப்ப என்னை பெரிசா கணக்கெடுக்கமாட்டாங்கள்..
எல்லா படமும் பேஸ்புக்கில் பாத்தனான். நீ தான் குண்டு பூசணீ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......//
சரி .. நான் இப்ப எல்லர்ருக்கும் அறிவிக்றின்.. முகிலினி ஒரு big பீப்பாய்..பிரிஞ்ச பிலாக்காய்.. நீத்துப்பூசணிக்காய்.. இனி உனக்கு சங்குதான் மவளே.. பாத்துக்கொள்..
அதுசரி நீஎப்பிடி எங்கட பொட்டோவை பாக்கலம்? உன்னை யார் உள்ள விட்டது? ம்ம்.. இந்த லோசண்ணாவுடேதான் வந்திருப்பாய்.. அவருக்கு ஒர குட்டு போடவேணும்..
கனககோபி
//அது சரி.. எல்லா ஆம்பிளையளும் இப்படி தானே? இத வேற எழுதி மானத்த வாங்கிறியளோ.. //
புல்லட் அண்ணாவால் ஒட்டுமொத்த ஆண் சமூகத்துக்கே கேடு......//
ஆண்களுக்குதானே கேடு ? அதால உங்களுக்கு ஒரு பிரச்சனையுமில்லதானே நமீதா ? ;-)
வந்தியத்தேவன்
அந்த பிரபல ஆங்கிலப் படத்தின் பெயர் The Bridge on the River Kwai . மிகவும் நல்ல படம் சிடியில் கிடைத்தால் பார்க்கவும் //
தகவலுக்கு நன்றி அண்ணன்..
யாழினி
இனிமையாக இருந்தது உங்கள் பயணக் கட்டுரை! :)//
நன்றி யாழினி..
யாழினி
இனிமையாக இருந்தது உங்கள் பயணக் கட்டுரை! :)//
நன்றி யாழினி..
முகிலினி //
எதுக்கு நீச்சல் விற்பனியின்ட அண்ணாவா இருந்து கொண்டு மானத்த வாங்குறாய்..ஃஃ
உன்ட வளவளப்பு தாங்க முடியல்ல..நீ விற்பன்னியோ இல்லை சீமைப்பன்னியோ எந்தப்பன்னியாயிருந்தாலும் தலைகுப்புற நிண்டால் தண்ணி காதுமூக்குள்ள போகத்தான் செய்யும்..
வந்துட்டா குலுக்கிமினுக்கிக்கொண்டு.. ஓடு சூய்க்..
rooto
அது சரி யாரந்த காத்தடிச்ச ரெண்டு பேருரும் எண்ட தகவல் வெளில கசிஞ்சதா?
வாவ். அருமை.
முடியல....
பாசம் வழியும் பின்னூட்டங்களைப் பார்க்கும் போது
அந்தரங்க தகவல்கள் இங்குவெளிவிடக்கூடாது என மேலிடத்து உத்தரவு!!! உங்களை நேரில் சந்திக்கும்போது அந்த பம்புகளை பற்றி கூறுகிறேன்!!!
அன்பின் பதிவர்,
இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு சம்மந்தமாக இங்கே சென்று விபரங்களை அறிந்து உங்கள் வருகையை உறுதிப்படுத்த அங்கே பின்னூட்டமொன்றை இட்டுவிடுங்கள். நீங்கள் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிவராயின் நேரடி ஒளிபரப்புப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.
அன்புடன்,
இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - அமைப்புக் குழு
ஆகமொத்தம் ரொம்ப சந்தோஷமாய் அனுபவிச்சிருக்கிறீங்க..... ம்ம்ம்ம்... நல்லது......
படங்களை ஏற்கெனவே பார்த்தேன்.. மூஞ்சிப் புத்தக உபயம்.. ;)
அதிலேயும் பசுப்பையன் ராமராஜன் வந்து பயமுறுத்தியதால் இங்கே வரப் பயந்தால், அருமையான பயணக் கட்டுரை..
உங்கள் நண்பருக்கு பாராட்டுக்களை சொல்லுங்கள்.. படங்கள் வாவ்.. அருமை..
உள் வீட்டு ரகசியம் நிறைய வருது போல.. ;) (முகிலினி - புல்லட் மோதல் எங்கே போய் முடியப் போகுதோ? எல்லாம் நல்லா நடக்க அண்ணனின் வாழ்த்துகள்.. ;))
அதுசரி ஏண்டாப்பா சும்மா இருக்கிற என்னை சிண்டு முடிஞ்சு அழைக்கிறீங்க?
வந்தி சொன்ன படம் சரி.. நானும் கித்துல்கல போனபோது அங்குள்ள விடுதியில் முழுவிபரமும் அறிந்தேன்..
உள் வீடா? எங்கே அது இருக்கு...?
//
//உள் வீடா? எங்கே அது இருக்கு...?//
You dont want me to answer this quest.. Do you?
//
யார் குற்றினாலும் எனக்கு அரிசியானால் சந்தோஷம்....:)
Post a Comment