பாடசாலைக்காலம் - 6-11


  இந்த பதிவை ஒரு சுயபுராணமாகவன்றி ஒரு அலசலாக எழுத எண்ணியுள்ளேன்.. பார்க்கலாம் எவ்வளவு சக்சஸ் புள்ளாக அமையவிருக்கிறது என்று..  95 ஆம் ஆண்டு , நாங்கள் இனி மிடில் ஸ்கூலாம் .. பெரியாக்களாம் .... என்ற ஒரு பரவசத்துடன் ஆறாம் வகுப்புக்கு புதுச்சட்டையும் போட்டுட்டு வந்திருந்தோம்..

  அப்பதான் ஏல் முடிச்ச ரீச்சர்ஸ் சும்மா கும்முன்னு அப்பிடியும் அப்பிடியும் திரிய நமக்கு ஒரே கிளுகிளுப்பு..

  ஆகா இதுதான்டா லைப் எண்டு நம்மோட நாலைஞ்சு வருசமா படிச்ச நண்பர்களோட அரட்டை அடிச்சிட்டிருந்தா.... திடீரெண்டு ஒரு பெரிய குழப்பம்..

  திமுதிமு எண்டு ஒரு 50 60 புதிய மாணவர்கள்.. எல்லார் முகத்திலும் ஒரு எக்ஸ்ரா அறிவுக்களை... ஆணவக்குழை..
  யாரடா இந்த வெருளிக்குஞ்சுகளெல்லாம் எண்டு பாத்தா அவங்களெல்லாம் பொஸ்கோவிலிருந்து வந்த புது அட்மிசன் மாணவர்களாம்..
  அவர்களுடைய பந்தாவும் தங்களுக்கயே கதைத்து சிரித்ததும் சீனியர்களாகிய எங்களுக்கு கடுப்பைத்தந்தது.. நல்லாகாலம் அவங்கள் எல்லாரையும் தனித்தனி வகுப்புகளுக்க விட்டதால நாங்கள் மானம்போகாது தப்பித்தம்..


  அப்போதான் எல்லாத்தையும் வெண்ட புரளி நடந்தது.. புலிகள் இயக்கத்தலைவரின் மகன் தனது பாடிகாட்டுகள் சகிதம் அமுல்பேபி போல நொளுக்கு மொளுக்கென வந்துகொண்டிருந்தார்..

  ஆகா இதென்னடா புது வம்பாப்போச்சுதே என்று பார்த்தால் அவரும் சாதாரண மாணவர் போல எல்லாருடனும் இணைந்து கொண்டதும் பாடிகாட்டுகள் விலகிச்சென்று விட்டனர்.. அந்தப்பெடியன் சும்மா இருந்தாலும் நம்ம பெடியங்களெல்லாம் ஒவ்வொரு கொப்பியா கொண்டு போய் ஓட்டோ கிராப் கேட்டு அவன் ஆக்களை கண்டாலே அலறுகிற நிலமைக்கு ஆக்கிப்போட்டாங்கள்.. அப்பா கடுமையா எச்சரிந்திருந்தமையால நான் அவனுக்கு கிட்டயே போகேல்ல.. பாடசாலை முடிந்தததும் அவனும் சாதாரண மாணவர்கள் பொல யாருடனேயோ சைக்கிளில் ஏறிச்செல்ல அவதானித்திக்கிறேன்..

  உது இப்பிடியே கழிய அந்த வருடம் ஒக்டோபர் மாதம் தென்னந்தோப்பில் வேலியடைக்கும் பணியில் சின்னத்துரை அண்ணை வேலை செய்து கொண்டிருந்தார்.. ஏதோ நாட்டுப்பிரச்சனையாமெண்டு ஸ்கூல் லீவு.. சனமெல்லாம் எங்கயோ போக ரெடியாம்.. ஆமி வருதாம்..  சிஙகளவனெண்டால் ஏதோ தமிழனை கண்டதுண்டமா வெட்டும் பேய் போலத்தான் உருவகப்படுத்தியிருந்தார்கள்.. பேப்பரில பலி.. சூடு.. தாக்குதல் எண்டு கொட்டை எழுத்தில வரும்.. நமக்கெல்லாம் சனிக்கிழமை பேப்பரில வாற குறுக்கெழுத்துபோட்டியும சிறுகதையும் தவிர வேற எதுவும் பிரயோசனப்பட்டதில்ல.. விளங்கினதுமில்ல.. எப்பவாவது ப்ளேன் வந்தா பங்கருக்க ஓடுவம்.. அதுவே ஒரு ஜாலியா இருக்கும்.. படிக்கத்தேவையில்ல.. இருட்டுக்க அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில ஒரு மலத்தியோன் மணத்தோட ஏதோ விரலை தொட்டு தொட்டு நானும் தம்பியும் விளாடிட்டிருப்பம்..

  அப்படி ஒரு நாளிலதான் (ஒக்டோபர் 30 ம் திகதி 1995 ம் ஆண்டு) தென்னந்தோப்ல அப்பாவும் கூலியாள் சின்னத்துரை அண்ணையும் வேலை செஞ்சிட்டிருக்கும் போது நாங்கள் மஞ்சமுண்ணா மரத்தில முசுறுக்கு கூட்டுக்கு கல்லெறிஞ்சி அதுங்களோட முட்டைங்க பொல பொலன்னு கொட்டுறதை ரசிச்சிட்டிருந்தோம்..

  அப்போதுதான் ஒரு ஒன்பது மணியவில அம்மன் கோயில மணியடிச்சு ஓஞ்ச கணத்தில உய்ச்ர்ர்ர்ர் எண்டு ஒரு சத்தம் கேட்டது..

  "தம்பி படுங்கடா" எண்டு அப்பா கத்தினது காதில உறைக்க முன்னம் ..

  அம்மாடி என்ன ஒரு சத்தம்..!
  காது கிண் எண்டு கொண்டிருந்தது..
  என்ன நடக்குது எண்டு விளங்கமுன்னம் அப்பா எங்களை இழுத்திட்டு வீட்ட ஓடி அப்புறம் நடந்தது எல்லாம் தனி ஒரு வரலாறாயே எழுதலாம்..
  அப்புறம் கொடிகாமத்தில் இடம்பெயர் வாழ்வு வாழ்க்கையில ஒரு புதிய சவாலாயிருந்தது.. ஒரு வசதியான வாழ்க்iயிலிருந்து சடுதியாக ஒரு கீழ் மட்டத்துக்கு சென்றபோது முதலில் சமாளிக்க கஸ்டமாயிருந்தாலும் பின்னர் அதிலேயே ஒரு சுவை தொற்றிப்போனது.. தென்னமட்டை கிரிக்கட் விளையாட்டுக்களும் , ஜாதிப்பிரிவினைகள் பார்க்காமல் எல்லாருடனும் பழக கிடைத்தமையும் , ஒரு சிறிய தோட்டம் காட்டுவிலங்குகள் அது இதென்று அது ஒரு புதிய சூழலும் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை எடுத்துக்காட்டியதை மறுக்க முடியாது.. படிப்பே தெவையில்லாத அந்த காலத்தில ஒரு றாத்தல் பாணுக்கா எத்தனை பெரிய கியுவில் நின்றதையெல்லாம் ரசித்திருக்கிறேன்.. காரணம் பயமோ பொறுப்போ அப்படி ஒரு சிரியஸ்தன்மை அச்சிறுவயதில் எனக்கு இருக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்..

  பின்னர் 96 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக்குள் வந்த வேளை பலப்பல மாற்றங்கள்.. சினிமா சோடா கன்டோஸ் அது இதென்று ஒரு பரவச சூழ்நிலை.. எல்லாமே மகிழ்சியாகத்தான் சென்று கொண்டிருந்தது..  அதே வேளை இதுவரை கட்டிக்காக்கப்பட்ட பல சமாச்சாரங்கள் உடைக்கப்பட்டமை சமுதாயத்தை ஒரு விபரீத நிலமைக்கு இட்டுச்செல்வதை எமக்கு உணரமுடியாமல் இருந்தது.. எனக்கு அவ்வேளை அது புரியாமல் இருந்தாலும் அதன் தாக்கங்கள் மெதுமெதுவாக என்னையும் அண்மிக்க ஆரம்பித்தன..


  அடுத்த பகுதி சற்று இசகு பிசகானது ;-).. ஆகவே பெண் வாசகர்களும் குட்டிப்பையன்களும் தவிர்ப்பது நல்லது.. பெரிதாக ஒன்றும் பயப்படவேண்டாம்.. என்னுடைய கடைசி விஜயத்தின் போது பலர் சாடும் யாழில் காலாசார சீர்கேடு குறித்தான பல தகவல்களை திரட்டிக்கொண்டேன் .. அது குறித்து என்னுடைய காலத்தையும் தற்போதைய காலத்தையும் ஒப்பிட்டு சும்மா ஒரு கலந்துரையாடல்.. அவ்வளவுதான்.. நான் அப்படியான விடயங்களை எழுத மாட்டேன் என் நம்புவர்களுக்கு ஒரு டிமிக்கி ;-) முடியுமாயின் இன்றிரவே எதிர்பார்க்கலாம்..


  12 Responses

  1. ஆவலோடு எதிர்பார்க்கிறேன்...

  2. அடுத்த பகுதிக்காக வெயிட்டிங் இக்கி இக்கி

  3. என்னுடைய கடைசி விஜயத்தின் போது பலர் சாடும் யாழில் காலாசார சீர்கேடு குறித்தான பல தகவல்களை திரட்டிக்கொண்டேன் .. //

   நானும் கேள்விப்பட்டேன். அப்பாவின் சுகயீனம் காரணமாக அவரை பார்க்க சென்றதால் என்னால் திரட்ட முடியவில்லை . நேற்று யாழ்பாணத்திளிருந்து வந்த நண்பனும் பல கலாசார சீரழிவுகள் பற்றி சொன்னான். எழுதுங்கள் நன்றாக இருக்கும். இன்னும் கொஞ்ச காலத்தில் கொழும்பு எங்களுக்கு எவ்வளவோ தேவல போல படும்.

  4. பதிவு ஜூப்பரு! :)

  5. //அப்பதான் ஏல் முடிச்ச ரீச்சர்ஸ் சும்மா கும்முன்னு அப்பிடியும் அப்பிடியும் திரிய நமக்கு ஒரே கிளுகிளுப்பு.. //

   அடப்பாவமே....
   6ஆம் ஆண்டிலயேவா?

   ஹி ஹி...
   நல்ல சுவாரசியா இருந்தது.
   சில விசயங்களை (இடப்பெயர்வு உட்பட) ஞாபகப்படுத்தியும் இருந்தீர்கள்.

   இத்தால் நான் சகலருக்கும் அறியத்தருவது என்னவென்றால் புல்லட் அண்ணாவின் அடுத்த பதிவை நான் வாசிப்பதிலிருந்து தவிர்த்துக்கொள்கிறேன்....
   நன்றி வணக்கம்.

  6. 100 followers கிடைத்ததுக்கு வாழ்த்துக்கள்,

   பள்ளிக்காலத்தை நல்லா சொல்லியிருக்கீங்கள்

  7. அண்ணாமலையான்
   ஆவலோடு எதிர்பார்க்கிறேன்...//

   ஓ... நன்றி நன்றி

   Subankan
   அடுத்த பகுதிக்காக வெயிட்டிங் இக்கி இக்கி//

   டேய் தெரியும்டா உங்களபத்தி.. ;-)

   VARO
   எழுதுங்கள் நன்றாக இருக்கும். இன்னும் கொஞ்ச காலத்தில் கொழும்பு எங்களுக்கு எவ்வளவோ தேவல போல படும் //

   நன்றி நன்றி

   யாழினி
   பதிவு ஜூப்பரு! :) //

   டாங்கூ டாங்கூ

   கனககோபி
   அடப்பாவமே....
   6ஆம் ஆண்டிலயேவா?
   அடுத்த பதிவை நான் வாசிப்பதிலிருந்து தவிர்த்துக்கொள்கிறேன்....
   நன்றி வணக்கம்.//
   கூடச்சேட்டை விட்டியோ லெமன் பப் கதைய வெளில விட்டுடுவன்.. அது சரி நீ ஏன் பாக்கமாட்டாய்? ஓ பெண்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கல்லோ? அதுதான் கறுப்பு நமீ கூச்சப்படுது


   யோ வொய்ஸ் (யோகா)
   100 followers கிடைத்ததுக்கு வாழ்த்துக்கள்,
   பள்ளிக்காலத்தை நல்லா சொல்லியிருக்கீங்கள்//
   நன்றி நன்றி

  8. எப்பவாவது ப்ளேன் வந்தா பங்கருக்க ஓடுவம்.. அதுவே ஒரு ஜாலியா இருக்கும்.

   எல்லாம சரி இது மட்டும் பொய் ஏன்னா எனக்கெல்லாம் பிளேன் சத்தத்தை கேட்டாலே அந்த நேரம் வயித்த கலக்கும் ...

   எங்காவது றோட்டால போகேக்க பொம்மர் வந்திச்சின்னா பறந்தடிச்சு பாதுகாப்பு வலயம் ன்னு அறிவித்திருந்தாரகளே ஆசுபத்திரிய சுத்தி எண்டு நினைக்கிறன் அங்க நோக்கித்தான் ஓடுவன்

  9. காலாசார சீர்கேடு என்னபது கொழும்பு போன்ற பெருநகரங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படாமல் எல்லா பிரதேசங்களுக்கும் பரவலாக்கப்படுவதே சிறந்த ஜனநாயகமாகும்...!

   உங்களோட 6 வகுப்புக்க வந்தவர் என்னோட முதலாம் வகுப்புக்கு வந்தார், அது தான் குழப்பமா இருக்கு...

  10. //அப்பதான் ஏல் முடிச்ச ரீச்சர்ஸ் சும்மா கும்முன்னு அப்பிடியும் அப்பிடியும் திரிய நமக்கு ஒரே கிளுகிளுப்பு.. //

   அட அங்கதான் நிக்கிறார் புல்லட் அண்ணே..;)

   //குட்டிப்பையன்களும் தவிர்ப்பது நல்லது..//

   அப்ப என்னைத்தவிர்க்கச்சொல்ருறீங்க.. சரிசரி.. :p

   //பெரிதாக ஒன்றும் பயப்படவேண்டாம்//

   அப்பசரி..

   //முடியுமாயின் இன்றிரவே எதிர்பார்க்கலாம்//

   சீக்கிரம்.. சீக்கிரம்..;)

  11. நல்ல விடயங்கள்.. எழுதவேண்டிய விடயங்கள்.. எனக்கு யாழ்பற்றி குறைவாக்கூடத் தெரியாது.. இதுகளை வாசிச்சுத்தான் அறியவேண்டும்...

  12. //திமுதிமு எண்டு ஒரு 50 60 புதிய மாணவர்கள்.. எல்லார் முகத்திலும் ஒரு எக்ஸ்ரா அறிவுக்களை... ஆணவக்குழை..
   யாரடா இந்த வெருளிக்குஞ்சுகளெல்லாம் எண்டு பாத்தா அவங்களெல்லாம் பொஸ்கோவிலிருந்து வந்த புது அட்மிசன் மாணவர்களாம்..
   //

   இதனை கடுமையாக எதிர்க்கின்றேன்.. புல்லட்டுக்கு என்ன கடுப்பு பொஸ்கோ மேல்... கடுப்பா அல்லது பொறாமையா புல்லட்...