தெரிந்த பேயா.. தெரியாத பிசாசா? அம்பா வில்லா? ஆப்பா தோப்பா?



    2002 இல் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் 2005 இல் தேர்தலை புறக்கணிக்கச்சொன்னது எத்தனைய விபரீத விளைவுகளை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்த விடயம் ஒன்று.. 2002 இல் முகமாலையில் கிடைத்த அபரிமித அங்கீகாரமும் மரியாதையையும் அவதானித்த நான்காம் ஐந்தாம் மட்ட தலைமைகள் தம் தகுதிகளின் செல்வாக்கை அறிந்து கொண்டபின் அவற்றை இழப்பதை விரும்பவில்லை.. விளைவு 2005 இல் ஏற்பட்ட குழப்பநிலைகளின் பின்னரான தம் பக்க இழப்புகளை மூடிமறைக்க விரும்பின… சக மட்டங்களை சேர்ந்தவர்கள் தத்தம் தவறுகளை பூசி மெழுகி தமக்குள் தகிடுதத்தம் ஆடியதால் மேல்மட்டங்கள் அதைப்பற்றி அறியாமல் கடைசி காலத்தில் கையறு நிலையிலிருந்து அநியாயமாக மரணித்துப்போயினர்.. நான் எதைப்பற்றிக்கூறுகிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.. வீம்புக்கு சண்டைபிடிக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.. ஆனால் வழமை போல இதுவரை இழந்தவற்றை மூலையில் வைத்துவிட்டு வாழ்க்கையை செப்பனிட தொடங்கிவிட்டார்கள் தமிழ் மக்கள் .. அதில் முதற்படியாக தற்போது ஜனாதிபதித்தேர்தலை வரவேற்கத்தயாராகிவிட்டார்கள்..


    வரும் 26ஆம் திகதி நடக்கவிருக்கும் தேர்தலில் சும்மா பலரும் போட்டியிட்டாலும் பிரதானமாக அடிபடும் பெயர்கள் மஹிந்த ராஜபக்ச, பொன்சேகா.. விக்கிரமபாகு, சிவாஜிலிங்கம்.. விக்கிரமபாகுவும் சிவாஜிலிங்கமும் தோல்வி நிச்சயமென்று தெரிந்திருந்தும் வாக்கைப்பிரிப்பதற்காக போட்டியிடுகிறார்கள் என்பது தெட்டத்தெளிவாகத்தெரிகிறது. அதில் விக்கிரமபாகுவின் தேர்தல் பிரசாரத்திற்கு எங்த வர்த்தகர்களும் உதவிக்கு வராத நிலையில் அவர் தன் செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வது அவருக்கு புலம் பெர்ந்தோர் அல்லது வேறு ஏதாவது வெளிநாட்டுச்சக்தி உறுதுணையாயிருப்பதை உறுதி செய்கிறது..


    சிவாஸிலிங்கத்தார் மசாலாப்படத்தில் வரும் காமெடியன் போல இங்கு வந்தாலும் , குறித்த எண்ணிக்கையான தமிழ் ஓட்டுக்களை திருப்பும் சமயத்தில் அவருக்கு 50 இலட்ச ரூபாய் பணமும் கொழும்பில் குறித்த இடத்தில் பெறுமதி மிக்க காணியும் கிடைக்கவருப்பதாயும் செய்திகள் பரவியவண்ணம் உள்ளன. அவர் எடுத்த துணிகர முடிவுகளை அவதானிக்கும் போது மேற்படி செய்தியை மறுக்க முடியவில்லை.. யாழில் தமிழ் தேசியம் மற்றும் தமிழ் உணர்வாரள்களி;ன் ஓட்டுக்கள் இவர்களிருவக்கும் செல்லவிருப்பதை மறுப்பதற்கில்லை..




    அடுத்து சரத் பொன் சேகா.. தம் கட்சியை உயிர்ப்பிக்க ஐதேக வைத்திருக்கும் கடைசி ஆயுதம்.. வந்தால் மலை போனால் உயிர் என்று களத்தில் இறங்கியிருக்கும் யானையின் தும்பிக்கை.. ஆரம்பத்தில் அனுதாபம் மூலம் ஆச்சரியப்படுமளவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றிருந்த இவர் தனது உளறு வாய் மூலம் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டார்.. புலிகளின் அரசியல் குழுவை கோத்தபாய சுடச்சொன்ன கதையில் 60 சதவீதமாக இருந்த ஆதரவு 20 சதவீதமாகிப்போனது இவருக்கு.. காட்டிக்கொடுப்பவன் என்ற பெயர்வேறு.. இந்த நிலையில் சற்றும் மனம்தளராமல் தமிழ் மக்கள் மீது நம்பிக்கை வைத்து களமிறங்குகிறார்.. ஆனால் இலங்கை சிங்களவர் தேசம். என்று இனவெறியுடன் இவர் கதை;தததை ஊடகங்கள் மறுபடியும் எடுத்து ஊத கடந்த 2 ஆம் திகதி ஜயலத், மனோகணேசன், ரணில் சகிதம் நல்லூரில் இறங்கி பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி விட்டார்..




    பலாலி சர்வதேச விமானதளம், பாதுகாப்புவலய நீக்கம், காணாமல் போனோருக்கு நடவடிக்கைகள், மீன்பிடித்தடை நீக்கம், அவசரகாலச்சட்ட நீக்கம் , ஆயுததாரிகளுக்கு ஆப்பு, பல ஊர்களை தொழிநுட்ப நகர்களாக்குதல், மீன்பிடித்தடை நீக்கம் என்று பத்திரிகை வாசிப்பவர்களெல்லாம் பரபரப்புடன் கதைக்குமாறு நல்லூர் கூட்டம் ஒரு வெற்றியாகவே அமைந்து விட்டதெனலாம்.. நடுவில் நான் இனவெறியன் அல்ல என்றும் அழுது குழறி தன் புலி வைத்த வெடியில் பிரிந்த தொப்பையை காட்டியவாறு நல்லூரில் பூஜையும் செய்து விட்டு சென்றுவிட்டார்.. என்னதான் சொன்னாலும் சரத்தின் இந்த விஜயம் ஒரு வெற்றிதான்..



    இதற்கு கௌண்டர் செய்ய வுண்டிய கட்டாயம் மஹிந்த அரசுக்கு இருக்கிறது ..


    குடும்ப அரசியல் ஊழல், ஆயுத ஊழல், புலிகளி;ன் நிதியை சொந்த நிதியாக்கியமை, அரச நிறுவனங்களில் ஊழல், தனியார் நிறுவனங்களில் கட்;டாய பங்கு பறிப்பு என்று ஏராளமான குற்றச்சாட்டுக்களால் பிதுங்கியிருக்கும் ராஜபக்சேக்களின் ஒரே ஆயுதம் அவர்களின் மூளை.. யார்தான் எப்படித்தான் தலை குப்புற கிடந்து குளறினாலும் இத்தனை வருடங்களாக வெற்றிகொள்ளப்படமுடியாதிருந்த புலிகளை வெட்டிச்சசாய்த்தது ராஜப்சேக்கள்தான்.. அதிலும் கோத்தபாய ராஜபக்சவின் மூளை எனக்கு வராதா என நான் ஏங்கியிருக்குமு ஒன்று..

    மேற்குலக நாடுகளின் கோமணத்துள் கொச்சிக்காயை கரைச்சு ஊத்திய ஆள் இவர்.. ஆங்கிலத்தில் தொடர்பாடல் சற்று தடக்கினாலும் அவரது சிங்கள மொழி பேட்டிகளை கேட்டீர்களானால் உள்ளங்காலிலிருந்து நடுங்கும்.. கடைசியாக மிஹின் லங்கா பற்றிய செய்தியை வாசித்திருப்பீர்களாயின் உங்களுக்கும் உச்சந்தலை நடுங்கும்.. மிஹின் லங்கா ஒரு தோல்வி என்றுதான் பலர் நினைத்திருந்தாலும் அது உண்மையில் ஒரு வெற்றி.. எப்படித்தெரியுமா? சட்டவிரோதமாக தருவிக்கப்பட்ட ஆயுதங்களை இறக்குவதன் மூலம் மலிவாக புலிகள் ஆயுத சப்ளையை வைத்துக்கொண்டார்கள்.. ஆனால் அரசுக்கு அது முடியவில்லை.. புலிகள் 3 மோட்டர் வாங்கும் விலையில் அவர்கள் 1 மோட்டாரே வாங்க முடிந்தது.. ஆனால் கடந்த முறை யுத்தத்தில் இராணுவத்தால் மோட்டார்கள் அள்ளி இறைக்கப்ட்டன.. புலிகள் மூச்சு வாங்க நேரம் தராமல் குண்டு மழை பொழிந்தது.. எப்படி எவ்வாறு என்று அவர்கள் சிந்திக்க முன்னம் எல்லாமே முடிந்து விட்டது.. ஆனால் எப்படி?

    ஆள ஊடுருவல், கெரி;ல்லா தாக்குதல் முறை என்று தாக்குதல் முறைகளில் புலிகளை காப்பியடித்த அவர்கள் *** இறக்குமதியிலும் அவர்களை கொப்பியடித்திருந்தார்கள்.. அண்மையில் தாயலாந்தின் ஆயதங்களுடன் கைப்பற்றப்பட்ட விமானம் தொடர்பாக நீங்கள் அறிந்திருந்தால் அண்மையில் ஒரு அமைச்சர் மிஹின்லங்காவின் வெற்றி குறித்து அறிவித்த தகவலுடன் கோர்த்து யோசித்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்..

    இப்படிப்பட்ட ராஜபக்சே சகோதரர்கள் செஸ் விளையாட்டு போல 64 மூவ்மெண்டுகள் பற்றி யோசித்துதான் எதையும் செய்கிறார்கள்.. ஆகவே நிச்சயம் சரத்தின் யாழ்ப்பாண விஜயத்துக்கு ஆப்பு வைக்கும் வகையில் ஏதாவது செய்வார்கள்.. அத்துடன் ஜனாதிபதி தற்போது நன்கு தமிழ் கதைக்கிறாராம்.. ஆகவே அதிநவின ஆப்பொன்றை எதிர்பார்க்கலாம்.. அத்துடன் சரத் வழங்கிய வாக்குறுதிக்கு மேலதிகமாக வழங்க வேண்டிய கடைப்பாடும் இருக்கலாம்..

    இதெல்லாம் இருக்கட்டும்.. இருவரும் வென்றால் என்ன நடக்கும் என்று பார்பபோமே..?

    சரத்தின் ஒரே நோக்கம் ராஜபக்சேக்களை போட்டுத்தள்ளுவது.. அவர் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் ராஜபக்சேக்கள் அவதிக்குள்ளாகுவார்கள்.. ராணுவ அதிகாரிகள் பிரச்சனைக்குள்ளாகுவார்கள்.. தனது பழிவாங்கலை உச்சமாக நடத்துவார் சரத்.. அத்துடன் மேற்குலக நாடுகள் ராஜபக்சேக்களை ஆத்திரத்துடனேதான் நோக்குகிறன.. ஆகவே தேர்தல் முடிந்த பின் ரணகளமாகத்தான் இருக்கும்.. கருணா,பிள்ளையான் , டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கும் ஆப்புதான்.. இது நிச்சயம் புலம்பெயரந்தோருக்கு சந்தோசமான விடயமாக இருக்கும்.. ஆனால் இலங்கை வாழ் தமிர்களுக்கு என்ன நடக்குமோ தெரியாது … இதில் பகிடி என்னவென்றால் சரத்தின் ராஸினாமாவுக்கு முதல் நாள்வரை சரத்தின் குடும்பமே கருகிச்சாகும்படி வசை பாடியவர்கள்தான் தற்போது குடைபிடிக்கிறார்கள்.. ஆகவே ஆட்சி செம காமெடியாகத்தான் இருக்கும்.. தனியார் தொழில் முதலீட்டார்களும், அரசாங்க ஊழியர்களும் சரத்திற்கு ஓட்டுப்போடப்போவது நிச்சயம்.. தமிழரும் சரத்திற்கு ஓட்டிட்டால் மொத்தமாக 50 சதவீதமான ஓட்டை அவர் பெற வாய்ப்புண்டு..

    அடுத்து மஹிந்த வென்றால் …
    தற்போதைய அபிவிருந்திகள் முன்னெடுக்கப்படலாம்..
    யாழ்ப்பாணத்தில் பல ஆயதக்குழுக்களின் அலுவலகங்கள் திறக்கப்படலாம்..
    ஊழல் மோசடிகள் அதிகரிக்கலாம்.. (ஆனால் அதனால் தமிழ்ர்களுக்கு பாதிப்பு வராது.)
    மேவின் சில்வா இன்னும் சிலரின் பல்லை உடைக்கலாம்..

    ஆனால் தங்கள் நாட்டின் மீது உண்மையான நேசத்துடன் இவர்கள் செயற்பட்டால் இவர்களது மூளை இலங்கையை தென்னாசியாவில் ஒரு சிறந்தநாடாக மாற்றும் வல்லமை உண்டு..

    சரி சரத் தோற்றால்?
    சரத் தோற்றால் ரணில் பாடையில் ஏறி படுத்தவாறு தான் உயிரோடு கொழுத்திய ரோஹண விஜயவீரவை நினைத்து கண்ணீர் சிந்த வேண்டியதுதான்.. சரத் அமெரிக்காவுக்கு போய் ஆதாரங்களை அள்ளி வழங்குவார்..


    மஹிந்த தோற்றால் சரத் என்ன செய்வாரெண்டு நான் சொல்லத்தான் தெரியணுமா?

    சரி யாழ்மக்கள் ஓட்டிட்டவர் தோற்றால்?
    கிளைமோர் வெடிப்பால் ஏ9 மூடப்படும் வேறென்ன?

    அதுதான் பி எல் ஏ அது இதென்று ஏராளமானவை உருவாக்கப்பட்டுள்ளனவே! மறுபடியும் ஏரோலங்கா பொட்டியை நிரப்பும்..


    இப்படி சிக்கல்கள் இருப்பதால் யாழ்மக்கள் வடிவாக சிந்தித்து வெல்லும் ஆளுக்குதான் ஓட்டிட வேண்டும்.. பாதிபாதியாக போட்டாலும் பிரச்சனையில்லை.. ஆனால் தோற்றவருக்கு 85 வீpதம் போட்டிருந்தால் அடுத்தடுத்த கிழமை ஏ9 மூடப்படுவது உறுதி.. உண்மையில் சரியானவரை தெரிவுசெய்து மக்களுக்கு அறிவிக்கும் பொறுப்பு உதயனுக்கும் வலம்புரிக்கும்தான் உள்ளது என்று நான் கூறினால் மிகையாகாது.. ஏனெனில் யாழ் மக்களின் ஒரே ஊடகம் உதயனும் வலம்புரியும்தான்.. அவர்கள் வானொலி பெரிதாக கேட்பதில்லை.. டிவியில் இந்திய நிகழ்சஜசகளைத்தான் பார்க்கிறார்கள்.. ஆகவே மேற்படி பத்திரிகைகள் முக்கியத்துவப்படுத்துபவைதான் தேர்தலில் செல்வாக்கு செலுத்தப்போகிறன.. ஆகவே இந்தப்பாரிய பொறுப்பு உதயனுக்கும் வலம்புரிக்கும் வந்து விட்டது..

    தற்போது டி என் ஏயும் சரத்துக்கு ஆதரவு தெரிவிப்பதால் அன்னம் கொஞ்சம் குளுக்கோசடித்தது போல இருக்கும்.. ஆனால் தவறிக்கிவறி 80 வீதம் சிங்கள மக்கள் மஹிந்தவுக்கு வாக்களிக்கும் சாத்தியக்கூறு தெரிந்தால் யாழ் பத்திரிகைகள் கூத்து;பார்க்கும் புத்தியை விட்டு விட்டு தமிழ் மக்களை வெல்லும் பக்கம் சாய்த்து வேதனைகளை குறைப்பதே உகந்தது என கூறி முடிக்கிறேன்..
    நன்றி வணக்கம்

    46 Responses

    1. தல...........
      அலட்டலில்லாத அற்புதமான அரசியல் ஆய்வு...
      கலக்கிவிட்டீர்கள்....

      பொதுவாக அனேகமான கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன், முக்கியமாக உதயன் மற்றும் வலம்புரிக்குள்ள கடப்பாடு பற்றிய உங்கள் கருத்து மிக முக்கியமானது.
      தமிழ்மக்கள் தேர்தலில் வெல்பவருக்குத் தான் வாக்களிப்பது சிறந்தது என்பது தான் என் கருத்தும்.

      மஹிந்த பக்கம் இருக்கும் இன்னொரு விடயம் என்னவென்றால் அவர் தேர்தலில் வென்றால் இப்போது வழங்கப்படும் சலுகைககள் இன்னும் சிறிது காலம் நீடிக்கப்பட வாய்ப்புக்கள் உண்டு, ஏனென்றால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலையும் பற்றிச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு மஹிந்தவுக்கு உண்டு.

      மறுபுறத்தில் சரத் கட்சி காராதவர் என்பதால் அவரிடம் அந்தளவுக்கு சலுகைககளை எதிர்பார்க்க முடியாது.

      என்றாலும் உங்கள் கருத்தில்
      //இதில் பகிடி என்னவென்றால் சரத்தின் ராஸினாமாவுக்கு முதல் நாள்வரை சரத்தின் குடும்பமே கருகிச்சாகும்படி வசை பாடியவர்கள்தான் தற்போது குடைபிடிக்கிறார்கள்.. ஆகவே ஆட்சி செம காமெடியாகத்தான் இருக்கும்.. //

      இது மட்டும் சிறிது குழப்பமாக இருக்கிறது.
      சரத் ஜனாதிபதியானதும் இந்தக் குடைபிடிப்பவர்கள் அவருக்கு ஏன்?
      அவர் இவர்களை தன்னோடு கூட வைத்திருக்க வேண்டி அவசியம் என்ன?

    2. தம்பி.. அடுத்த பாராளுமன்றத்தேர்தல் ஏப்ரலில் வருகிறது.. அதற்குள் ஆளும் கட்சியினரை மாற்ற முடியுமாயின் மாற்றிவிட்டு விளையாட்டு காட்டலாம்.. இல்லாவிட்டால் உள்ளே கறுவிக்கொண்டு கைகாவலுக்கு என்று வைத்திருப்பார்..

    3. அது சரி, ஆனால் சரத் ஒரு கட்சியையும் சாராதவர் என்பதால் இன்று மஹிந்தவிற்கு வால்பிடிக்கும் அமைச்சர்பெருமக்கள் நாளை சரத் இற்கு வால்பிடித்து தங்கள் அமைச்சுப் பதவிகளைக் காத்துக் கொள்ள மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?
      அரசியலில் எதுவும் நடக்கலாம் தானே?

      அத்தோடு சிவாஜலிங்கத்திற்கு தேசியவாதிகளின் வாக்குகள் பெருமளவில் கிடைக்கும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை, அவர் மஹிந்தரிடம் பணம் வாங்கியதாக அவரது கட்சியினரே வெளிப்படையாக அறிக்கை விடுவதாலும், கட்சி என்று அவர்கள் வேறு ஒருவரை ஆதரிப்பதாலும் தேசியம் கதைப்பவர்களின் வாக்குகளும் இரண்டாகப் பிரிவடையும் தானே?

    4. புல்லட்...

      #இப்படி சிக்கல்கள் இருப்பதால் யாழ்மக்கள் வடிவாக சிந்தித்து வெல்லும் ஆளுக்குதான் ஓட்டிட வேண்டும்.. பாதிபாதியாக போட்டாலும் பிரச்சனையில்லை.. ஆனால் தோற்றவருக்கு 85 வீpதம் போட்டிருந்தால் அடுத்தடுத்த கிழமை ஏ9 மூடப்படுவது உறுதி.#

      அப்ப ஆப்பு எங்கட கையிலன்னு சொல்லுங்கோ ஐயய்யோ ... இது சிக்கல் அந்த மாரியாத்தா தான் காப்பாத்தணும்

    5. புல்லட்டின் வலையில் அரசியலா? நம்ப முடியவில்லை.
      இதுதான் யதார்த்ததின் பக்கம். தமிழர்கள் வெல்லுபவருக்கு போடவேண்டிய நிர்ப்பந்தம். பேரம் பேசி ஒருவரை வெற்றியாளராக்கியிருக்கலாம் ஆனால் தமிழ்த் தலைமைகள் பேரம் பேசுவதை சுன்னாகச் சந்தையிலும் வெள்ளவத்தைச் சந்தையிலும் தான் காட்டுவார்கள். சில தலைமைகள் மஹிந்தரையும் சில தலைமைகள் சரத்தையும் சில தலைமைகள் இரண்டும் கெட்டான் நிலையிலும் ஒரு தலைமை தனித்தும் நிற்பதால் தமிழர்கள் மீண்டும் பிரிந்துதான் கிடக்கின்றார்கள்.

      ஆள் அம்பு சேனை போன்றவற்றையும் பிரச்சாரத்தையும் வைத்துப் பார்க்கும் போது தற்போதைய ஜனாதிபதியே ஜனாதிபதியாக வரும் வாய்ப்பு உள்ளது. இறுதி நாட்களில் ஏதாவது மாயம் அல்லது மந்திரன் நடந்தால் சரத்திற்க்கு வாய்ப்பு ஏற்படும். மற்றும்படி தமிழர்களுக்கு எதிர்பார்க்கும் எதுவும் உடனடியாக நடக்காது.

      இன்னும் சிலவற்றை எழுதலாம் ஆனால் ஜனநாயக நாட்டில் அமைதியாக இருப்பதே நல்லது.

    6. கனககோபி.. சந்திரிக்கா ஜனாதிபதியாயிருந்தபோது ரணில் ஆட்சியமைத்தது போல ஒரு பிடுங்குப்பாடு வராதிருக்க ஐ தே வை பொலிவுபடுத்து சரத் முனையலாம்.. பொறுத்திருந்ததான் பார்க்கவேண்டும்..

      சிவாஜிலிங்கம் ஒரு பியுஸ் போன பல்பு.. தமிழ் தேசியவாதிகள் யாராவது தமிழருக்கு ஓட்டிட வேண்டும் என நினைப்பவர்கள் சிலவேளை அவருக்கு ஓட்டிடிடலாம்.. அல்லது புறக்கணிக்கலாம் ஆனால் அப்படிச்செயவது தவறு.. ஓட்டைப்பிரித்து விளையாட இது தருணமல்ல என்பது என்கருத்து..

    7. பாலவாசகன் ஆப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது.. ஆனால் அதை உங்களுக்கே செருகப்போகிறீர்கள்..அதுதான் கொஞ்சம் வித்தியாசம்

    8. நீங்கள் கூறுவது உண்மைதான் வந்தியண்ணா!

    9. வந்தியண்ணா,
      வெற்றி குறித்து கதைக்க இந்தத் தருணம் சிறிது காலம் முன்பாக இருக்கிறது என்று நம்புகிறேன்.
      இன்றுதான் தொலைக்காட்சியில் சரத் இன் விளம்பரம் பார்த்தேன்...
      வழிமையைப்போல ஒற்றுமை, கிராமங்கள்,இராணுவத்தினர் என்று அடித்தட்டு மக்களைக் குறிவைத்து எடுத்திருந்தார்கள்.
      ஆகவே இன்னும் பொறுத்திருந்து கருத்துத் தெரிவிப்பது நலம் என்று கருதுகிறேன். முக்கியமாக தமிழ் மக்களின் வாக்குகள் பிரிக்கப்படும் இந்தத் தருணத்தில் (சிவாஜி, டக்ளஸ், த.தே.கூ) முடிவுகளை கணிப்பது சரியாக வருமா?


      புல்லட் அண்ணா,
      அப்போது சந்திரிக்கா ஒரு கட்சியைச் சார்ந்தவராயிற்றே?
      அவரது கட்சி எதிர்க்கட்சியாக இருந்ததால் பிடுங்குப்பாடு வந்தது, ஆனால் இப்போது இவருக்கு கட்சியே இல்லாதபோது இவர் யாருக்காக பிடுங்கவேண்டும், பாடுபடவேண்டும்?

    10. நல்லாருக்கு புல்லட்டு... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    11. மன்னிக்கவும் பொடியள் சந்திரிக்காவா? யார் அவர் ? பாவம் அவரும் அவரது குடும்பமும் செய்த பாவங்களுக்கு அரசியல் அநாதைகளாகிவிட்டார்கள். ஆகவே அவரினால் ஒரு துரும்பைக்கூட தூக்கிப்போடமுடியாது.

      புல்லட் சொல்வது போல் இம்முறை தமிழர்கள் வோட்டைப் பிரித்தால் பிரச்சனை தீரவே தீராது. சரியோ பிழையோ மஹிந்தருக்கு அல்லது சரத்துக்குத்தான் போடவேண்டும். தமிழன் என்பதற்காக சிவாஜியருக்கும் நல்லவர் என்பதற்க்காக விக்கிரமபாகுவிற்க்கும் வோட்டைப் போட்டு சிதறடையச் செய்யதால் கதை அதே கதைதான்.

    12. சிவாஜிலிங்கத்தைப்பற்றி பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல்

    13. Hi Boss, Superb blog da! good work! keep it up

    14. Udhayan editor Vidhyadharan was interviewed in Jaya TV by Rabi Bernard. Vidhyadhran feels that Sarath is better than Rajapakshe. I also feel so, although I don't have vote in Eelam.

    15. ammata hudu... என்னமா எழுதிரிக்கீங்க.. நாடு முன்னேறினாச் சரி

    16. புல்லட் யாழ்ப்பாணம் போய் வந்த கையோட எழுதிய பதிவு, நல்ல பதிவாய் இருக்கிறது. தலைமைகளுக்கு தெரியாமல்தான் தவறுகள் நடந்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னை பொறுத்தவரையில் தலைமைகள் களத்தைவிட புலத்தை நம்பி தம்மை நம்பியிருந்தவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததுதான் உண்மை என்று நம்புகிறேன். அத்தோடு இந்த தேர்தல் தொடடர்பில் யாழ் மக்கள் என்ன ஒட்டுமொத்த தமிழ் மக்களுமே ஒரு குழப்ப நிலையில் உள்ளது உண்மை. இருந்தாலும் சிவஜியாருக்கு போடுமளவுக்கு குழப்பமிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. உண்மையை சொல்லப்போனால் வெள்ளவத்தையிலும் வெளிநாடுகளிலும் இருக்கிறளவுக்கு தேசிய உணர்வும் இலட்சிய கனவுகளும் அடிபட்டுப்போன வன்னி மக்களுக்கும் எதோ கொஞ்சம் ஆறுதலா இருக்கெண்டு நினைக்கிற யாழ்ப்பாண மக்களுக்கும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. அமைச்சரின் செயற்பாடுகள் சிலபகுதிகளில் கணிசமான ஆதரவை திரட்டியுள்ளதும், எதிரணிக்கு களத்தில் பணியாற்ற உறுதியான ஆட்பலம் இல்லாததும், யாழ் இளைஞர்கள் வீதிகளில் இறங்கி ஆதரவு தேடும் சூழ்நிலை இல்லாததும் எதிரணிக்கு யாழ் வாக்குகளை திரட்டுவதிலுள்ள தடங்கல்கள். யாழ் கண்டி வீதி மூடப்படும் வாய்ப்பு மிக மிக குறைவு. காரணம் வீதி திறந்தபிறகு அதிகம் வருவது தென்பகுதி மக்கள்தான், யார் வென்றாலும் வடக்கில் வசந்தம் வீசும் என்று சொல்லித்தான் முதலீடுகளை சேர்க்கமுடியும். இனிவரும் சவால்கள் பழைய சவால்கள் போலிருக்காது, புதிதாய் புதுவடிவில் இருக்கும் என்பது எனது நம்பிக்கை. நண்பர் ஒருவர் சொன்னார் " சரத்தை பற்றி கவலையில்லை எப்பிடியும் இப்ப இருக்கிறவரை மாற்றவேணும்". இதுதான் அந்தக்காலத்தில இருந்து இந்த நாட்டின் வரலாறு.

    17. கனககோபி
      அப்போது சந்திரிக்கா ஒரு கட்சியைச் சார்ந்தவராயிற்றே?
      அவரது கட்சி எதிர்க்கட்சியாக இருந்ததால் பிடுங்குப்பாடு வந்தது, ஆனால் இப்போது இவருக்கு கட்சியே இல்லாதபோது இவர் யாருக்காக பிடுங்கவேண்டும், பாடுபடவேண்டும்?//

      இலங்கை அரசியல் எப்பொதும் கட்சி சார்ந்ததாய்தான் இரந்திருக்கிறது.. தற்போது இலங்கை மக்களுக்கு சரத் ஐ தே க சார்பில் பொட்டியிடுவது பொனற மாயையே காூணப்படுகிறது.. சரத் ஜனாதிபதி தேர்தலில் வென்றால் எப்படியும் பாராளுமன்னற தெர்தலில் ஐதேக வெல்ல சாத்தியக்கூறு உண்டு.. இந்த காரணத்துக்காக சரத் யானையுடன் செர்ந்து லத்தி போடலாம்.. பொறுத்திருந்த பார்ப்போம்ஃஃ

    18. அண்ணாமலையான்
      நல்லாருக்கு புல்லட்டு... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... //
      நன்றி அண்ணாமலையான் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    19. குடுகுடுப்பை நசரேயன் குட்டி டொன் மற்றும் அஸ்பர்.. நன்றி உங்கள் பின்னூட்டங்களுக்கு..

    20. கிச்சா..

      அனேகமாக உதயன் மற்றுமு் வலம்புரியும் சரத்தைத்தான் தரிக்கப்ுபோகிறன என்று பார்க்கத்தெரிகிறது. ஆனால் அவர்கள் அதை யாழ் மக்களின் நன்மை கருதி வேண்டுமாியின் மறுபரிசீலனை செய்யவேண்டும்..

    21. அண்ணா இதுக்கு மேல போட்டு தாக்க ஒண்டும் இல்லை அண்ணா...இது நல்லா இருந்தது... 27 ஆம் திகதி தான் எல்லா தண்டவாளங்களும் தெரியும்...யார் வந்தாலும் எங்களுக்கு ஆப்பு தான்... மிக நல்ல அரசியல் அலசல் அண்ணா...

    22. மானுடன் //
      வழமை போல ஒரு புரட்சிப்ப பின்னூட்டம்

      தலைமைகளுக்கு தெரியாமல்தான் தவறுகள் நடந்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னை பொறுத்தவரையில் தலைமைகள் களத்தைவிட புலத்தை நம்பி தம்மை நம்பியிருந்தவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததுதான் உண்மை என்று நம்புகிறேன். //

      இல்லை.. கடைசி நேரத்தில் ஆள்பிடிகளை கவனிக்குமளவுக்கு தலைமைக்கு பிரச்சனைகள் குறைவாயிருக்கவில்லை.. சந்தர்ப்பத்தை பயன்படுத்துி எடுபிடிகள் அதிகாரத்தை கையிலெடுத்துக்கொண்டன..


      அத்தோடு இந்த தேர்தல் தொடடர்பில் யாழ் மக்கள் என்ன ஒட்டுமொத்த தமிழ் மக்களுமே ஒரு குழப்ப நிலையில் உள்ளது உண்மை. இருந்தாலும் சிவஜியாருக்கு போடுமளவுக்கு குழப்பமிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. //

      ஆதிரை கூறியது போல இது உண்மைதான்.. நேற்று நடந்த கூட்டத்தில் அவர்கள் ஈயோட்டிய போது அது உறுதியாகிவிட்டது..


      உண்மையை சொல்லப்போனால் வெள்ளவத்தையிலும் வெளிநாடுகளிலும் இருக்கிறளவுக்கு தேசிய உணர்வும் இலட்சிய கனவுகளும் அடிபட்டுப்போன வன்னி மக்களுக்கும் எதோ கொஞ்சம் ஆறுதலா இருக்கெண்டு நினைக்கிற யாழ்ப்பாண மக்களுக்கும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. //

      நான் முற்றுமுழுதாக ஒத்துப்போகும் உண்மை.. பல யாழ் மக்களுடன் மற்றும் வன்னி மக்களுடன் கதைத்த போது இதையே அவர்களின் எண்ணமும் பிரதிபலித்தது


      அமைச்சரின் செயற்பாடுகள் சிலபகுதிகளில் கணிசமான ஆதரவை திரட்டியுள்ளதும், எதிரணிக்கு களத்தில் பணியாற்ற உறுதியான ஆட்பலம் இல்லாததும், யாழ் இளைஞர்கள் வீதிகளில் இறங்கி ஆதரவு தேடும் சூழ்நிலை இல்லாததும் எதிரணிக்கு யாழ் வாக்குகளை திரட்டுவதிலுள்ள தடங்கல்கள். //

      உண்மைதன்..


      யாழ் கண்டி வீதி மூடப்படும் வாய்ப்பு மிக மிக குறைவு. காரணம் வீதி திறந்தபிறகு அதிகம் வருவது தென்பகுதி மக்கள்தான், யார் வென்றாலும் வடக்கில் வசந்தம் வீசும் என்று சொல்லித்தான் முதலீடுகளை சேர்க்கமுடியும். //
      இப்படித்தான் என் சிங்கள நண்பர்கள் கூறினார்கள்.. ஆனால் திடீர் திடீரென உவாக்கப்பட்ட விடுதலைக்குழுக்கள் (???) ஒரு வித சந்தேகத்தை கிளப்பிக்கொண்டுள்ளன..


      இனிவரும் சவால்கள் பழைய சவால்கள் போலிருக்காது, புதிதாய் புதுவடிவில் இருக்கும் என்பது எனது நம்பிக்கை. நண்பர் ஒருவர் சொன்னார் " சரத்தை பற்றி கவலையில்லை எப்பிடியும் இப்ப இருக்கிறவரை மாற்றவேணும்". இதுதான் அந்தக்காலத்தில இருந்து இந்த நாட்டின் வரலாறு.//
      ஹாஹா

    23. ஏசி அறையில் இருந்து கொண்டு எதையும் எழுதலாம். யார் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழனுக்கு விமோசனமில்லை. கொஞ்ச நாளைக்கு எல்லா வசதிகளும் வரும். என்ன கூத்தும் அடிக்கலாம்.

      நான் பிழைச்சிருந்தால் காணும் மற்றவன் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்பது தானே அநேகரின் எண்ணம். ஆள் பிடிகள் பிடித்ததைப் பற்றிக் கதைக்கும் உங்களுக்கு மகனும் மகளும் களத்தில் நின்றது தெரியாது என்று பொய் சொல்லவேண்டாம். அதைத் தவிர எத்தனையோ போராளிகளின் தளபதிகளின் வளர்ந்த பிள்ளைகள் (12 வயதில் ஒருத்தி கூட) களத்தில் நின்றது எல்லா மக்களுக்கும் தெரியும். தனது தந்தை இறந்தது கூட தெரியாமல் அந்த சிறு பெண் களத்தில் நின்றதைத் தெரியாது என்று கூறி "நடிக்க" வேண்டாம்.

      செத்தவர்களைப் பற்றிக் கதைக்குமளவுக்கு கீழ்த் தரமானவர்களா நீங்கள். சீய்ய்ய்... மானங்கெட்ட மானுடன்.

      யாழ்ப்பாணம் எம்சி அளவுக்கு வந்திட்டு என்டு கவலைப்படும் கலாச்சாரக்காவலர்களுக்கு, எல்லாம் சொர்க்க பூமியாக மாறும்.. கொஞ்ச நாளைக்குத் தான்.. பிறகு, நாளை உங்கள் பிள்ளைகள் உங்களை சபிக்கும் நாள் வரும் போது நீங்கள் விட்ட பிழைகளைத் திருத்தும் சந்தர்ப்பம் கிடைக்காமலே போகலாம்.

      நாயுக்கேன் போர்த்தேங்காய் என்று விளங்கியும் நாய் போர்த்தேங்காயை எடுப்பது "எரிச்சலையூட்டுகிறது"... எழுதுவது என்றால் உருப்படியாக எலக்ரோனிக் பற்றி அல்லது வேற ஏதாவ்து எழுது.. தேங்காயாலயே உன் மண்டையை உடைத்தால் தான் எனது ஆத்திரம் தீரும்.

      நாய் என்று புல்லட்டை சொல்லுகிறாள் என்று சில பல "பேடிகள்" மற்றும் "வேலை இல்லாப் பெண்டுகள்" திருப்ப உன்னை உசுப்பேத்தலாம். வாழ்த்துக்கள்.

      பி.கு: பிரச்சினை வரும் என்டு கொமன்றை டிலீட் செய்யாதே... பிறகு அந்த பேடிகளுக்கும் உனக்கும் வித்தியாசம் இராது.

    24. kalakkal... pathivu illai... mukilininta comment

    25. என்னடா விலங்கமாக ஒரு கமெண்டும் வரல்லயே என்று நினைத்தேன்.. :-).. பரவாயில்லை..

      உங்களுக்கு ஒன்று சொல்லவேண்டும் முகிலினி.. கடந்ததை பற்றி பேசி எதுவும் ஆவதற்கில்லை..தற்போது நடப்பதை தடுக்கவும் வழியில்லை.. தேர் ஓடும் போது அதை யுடேன் அடிக்கவைக்குமளவுக்கு தமிழர்களிடம் எது வித கருவியும் தற்போது இல்லை.. முச்சந்தியில் தேர் வலப்பக்கம் போவதா இல்லை இடப்பக்கம் பொவதா என்பதை தீர்மானிக்கும் சறுக்கு கட்டைதான் தற்போது எம்வசம்.. அதுவும் வேலை செய்யுமா தெரியாது என்றொரு நிலை..


      புலிகள் தலைமைக்கு தெரிந்து செய்தார்களா இல்லை கீழ்மட்ட பொறுப்பாளர்கள் தம்கையில் அதிகாரங்களை எடுத்க்கொண்டார்களா என்று ஆராயுவேண்டிய அவசியம் எமக்கில்லை..

      நான் ஒரு 25 வன்னிக்குடும்பங்களை சந்தித்தேன்.. அனைவரும் நெருப்பைத்தான் உமிழ்ந்தார்கள்.. தியாகங்களை தனியே வைத்து தம் இழப்புகளுடன் சமன் செய்யும் நிலையில் அவர்கள் இல்லை.

      நாய்க்கேன் போர்த்தேங்காய் என்றதாவது என் உயிருக்கு ஆபத்து வருமாறு நான் எழுதக்கூடாது என்பதையே சுட்டுகிறது.. இப்படி எழுதுவதற்கெல்லாம் ஒருவனைச்சுட்டால் நாட்டில நாய்கள் மட்டும்தான் மிஞ்சம் அம்மணி..

      மானுடன் தன் கருத்தை சொல்வதை காட்டுமிராண்டித்தனமாக நீங்கள் எதிர்ப்பது எவ்வாறு ஒரு ஜனனாயக நாட்டில் அனுமதிக்கபடுகிறதோ அதே போலத்தான் வெள்ளைவான்கள் மூலம் தேங்காயுடைத்த நாய்கள் நசுக்கப்பட்டன என சிலர் கூறலாமில்லையா?

      உதென்ன சபிப்பு கதை? வெளிநாட்டில் இருப்பவர்களின் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை சபித்துக்கொண்டா திரிகிறார்கள்? பப்புக்கு போய் வெள்ளைக்காரியுடனும் காப்பிலிக்கருப்பனுடனும் சல்லாபித்துவிட்டு வந்து தமிழ் பேப்பரால் துடைத்து விட்டு இங்கு யாழில் மட்டும் கலாச்சாரம் காவடியாட வேண்டுமென எதிர்பார்ப்பது மடத்தனம்..

      மேன்மக்கள் எங்கிருந்தாலும் எப்படியிருந்தாலும் கட்டுப்பாட்டுடன்தான் இருப்பர்.. விரைவில் இந்த குழப்பநிலையை சமாளிக்க யாழ்த்தமிழ் சமூகம் தயாராகிவிடும் என்றே நான் கருதுகிறென்..

      உங்கள் கமெண்டை டிலீட் செய்ய வேண்டிய அவசியமில்லை.. ஏனெனில் அப்படி பேடிகளோ பெண்டுகளோ இங்கு இருப்பதாக எனக்கு தெரியவில்லை..

    26. //ஏசி அறையில் இருந்து கொண்டு எதையும் எழுதலாம். //

      அண்ணே! புல்லட் அண்ணே! அறைக்கு ஏசி பூட்டினத எனக்கு சொல்லவே இல்ல?


      //யார் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழனுக்கு விமோசனமில்லை. கொஞ்ச நாளைக்கு எல்லா வசதிகளும் வரும். என்ன கூத்தும் அடிக்கலாம். //

      அப்ப என்ன செய்யலாம்? சிவாஜலிங்கத்த ஜனாதிபதியாக்குவமே?
      கொஞ்ச நாளைக்கும் கூத்தடிக்க முடியாது.


      //நான் பிழைச்சிருந்தால் காணும் மற்றவன் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்பது தானே அநேகரின் எண்ணம். ஆள் பிடிகள் பிடித்ததைப் பற்றிக் கதைக்கும் உங்களுக்கு மகனும் மகளும் களத்தில் நின்றது தெரியாது என்று பொய் சொல்லவேண்டாம். அதைத் தவிர எத்தனையோ போராளிகளின் தளபதிகளின் வளர்ந்த பிள்ளைகள் (12 வயதில் ஒருத்தி கூட) களத்தில் நின்றது எல்லா மக்களுக்கும் தெரியும். தனது தந்தை இறந்தது கூட தெரியாமல் அந்த சிறு பெண் களத்தில் நின்றதைத் தெரியாது என்று கூறி "நடிக்க" வேண்டாம். //

      அந்த பிடிபட்ட பிள்ளைகளின் பெற்றோர் யாராவது இந்தளவு பெருந்தன்மையாகக் கதைப்பார்களா? #சந்தேகம்
      என் அப்பா அம்மாவுக்கு நான் முக்கியம் போலத்தானே அந்த அப்பா அம்மாக்களுக்கும்?


      //செத்தவர்களைப் பற்றிக் கதைக்குமளவுக்கு கீழ்த் தரமானவர்களா நீங்கள். சீய்ய்ய்... மானங்கெட்ட மானுடன்.//

      அப்ப மஹிந்த 'போனாப்' பிறகு அவரப் பற்றி வாழ்த்துப்பா பாடுவீங்களோ?
      புல்லட் அண்ணா யாரையும் நோக்கி விரலை நீட்டவில்லை என்று நம்புகிறேன்.


      //யாழ்ப்பாணம் எம்சி அளவுக்கு வந்திட்டு என்டு கவலைப்படும் கலாச்சாரக்காவலர்களுக்கு, எல்லாம் சொர்க்க பூமியாக மாறும்.. கொஞ்ச நாளைக்குத் தான்.. //

      அப்ப சந்தோசப்படச் சொல்லுறியளோ?
      எவ்வளவு நாளைக்கு எண்டு சொல்லேலுமோ?


      கடைசியா உங்கட பாணியிலயே சொல்லுறன்,
      வெளிநாட்டில இருந்து நீங்கள் ஆயிரம் கதைக்கலாம், ஆனால் நாட்டுக்குள்ள இருக்கிற நாங்கள் புத்திசாதூர்யமாக செயற்படுவது அத்தியாவசியமானது. நாங்கள் ஏதும் வில்லங்கமா 2005 மாதிரிச் செய்தா அதால கஷ்ரப்படப்போறதும் நாங்கள் தான், மக்டொனால்ட்ஸ் இல சாப்பிட்டு விரதம் இருக்கிறாக்களில்ல...

    27. //விக்கிரமபாகுவும் சிவாஜிலிங்கமும் தோல்வி நிச்சயமென்று தெரிந்திருந்தும் வாக்கைப்பிரிப்பதற்காக போட்டியிடுகிறார்கள் என்பது தெட்டத்தெளிவாகத்தெரிகிறது//.

      உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன் அண்ணா!
      விக்கிரமபாகுவும் சிவாஜிலிங்கமும் தோல்வி நிச்சயமென்று தெரிந்திருந்தும் வாக்கைப்பிரிப்பதற்காக போட்டியிடுகிறார்கள் என்பது அல்ல ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தாம் வெளிநாடுகளில் தங்குவதற்காக அல்லது இந்த நாட்டை சேர்ந்தவர்கள் எனறு அடையாளப்படுத்திக்கொள்வதற்காக ஒரு அங்கீகாரமாக இதனை பயன்படுத்தலாம் என கேள்விபட்டேன்....
      ஒரு Diplomatic identity காக தாம் ஜனாதிபதி வேட்பாளர் என்பதை காட்டி அனுகூலம் பெறலாமாம்!!!
      கேள்விபட்டேன்....
      விசாரித்து பார்க்க!!..

    28. சைலஜா அவர்களே இந்த விடயத்தை முதலில் சொல்லியிருந்தால் நானும் போட்டிபோட்டிருப்பேன் வடை போச்சே

    29. முதலாவது, சந்தோசம் நீ பேடி இல்லை என்று நிரூபித்ததற்கு,,,,

      மற்றது, பேடியளும் வேலையில்லாப் பெண்டுகளும் இல்லை என்று மட்டும் சொல்லாதே.. யார் என்று உனக்குத் "தெட்டத்தெளிவாகத்" தெரியும் எனக்கும் "ஓரளவு" ஓரிருவரைத் தெரியும்....

      //பப்புக்கு போய் வெள்ளைக்காரியுடனும் காப்பிலிக்கருப்பனுடனும் சல்லாபித்துவிட்டு வந்து தமிழ் பேப்பரால் துடைத்து விட்டு இங்கு யாழில் மட்டும் கலாச்சாரம் காவடியாட வேண்டுமென எதிர்பார்ப்பது மடத்தனம்..//

      சீய்.. நீயுமா வெளிநாட்டூக்காரர் கொழும்புக்காரர் என்டு கதைக்கிறாய்.. ஆதிரையின்ட பதிவில் வெளி நாட்டுக்காரரும் கொழும்பு காரரும் கடி பட்டதைப் பாக்க ஏன் 35 வருசப் போராட்டம் நடுத்தெருவுக்கு வந்தது என்டு விளங்குது..

      நானும் வெளி நாட்டில இருக்கிறனான் தான்.. விரும்பி இருக்கேல்ல என்டு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.. சொந்த பந்தம் எல்லாம் செத்து வீடும் இல்லாமல் நாதியும் இல்லாமல் இருக்கும் என்னைப் போல் நிறைய பேர் (படிக்க வந்து இனி அங்க போக யார் இருக்கினம் என்டு) இங்கயே இருக்கிற முடிவோட இருப்பது உனக்குத் தெரியாது என்டு சொல்லாதே...

      எல்லோரும் சந்தோசமாகத் தான் வெளி நாட்டில் இருக்கினம் என்டு இனியும் அலம்பாத...

      ஏன் கொழும்பில இருக்கிற ஆக்களில் எத்தனை பேர் சல்லாபிக்காமல் இருக்கினம் என்டு ஒருக்கா நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கோவன்... கொழும்பில இருக்கிறவர்களிலும் ரெகுலரா சல்லாபிக்கிற‌ ஆக்கள் இருக்கினம்.. ஏன் புளொக்கர்களில் கூட இருக்கலாம்...

      வெளி நாட்டில் இருக்கிறவர்களில் கூட நீ சொன்ன ஆக்களுடன் சல்லாபிக்கிற‌ ஆக்களும் இருக்கினம்.. ஏன் யாழ்ப்பாணத்திலயும் இருக்கினம். இல்லை என்டு சொல்லாதே...

      ஆமி வந்த பிறகு நானும் யாழ்ப்பாணத்தில இருந்தனான் தான் கொஞ்ச நாளைக்கு.. எனக்கும் தெரியும் என்ன நடந்தது என்டு. .

      எல்லாம் வளர்ப்பைப் பொருத்தது... ஒரு சிலர் விடும் தவறால் எல்லோரையும் பார்த்து கை நீட்டுவதை இனியாவது நிப்பாட்டு.. உனக்குத் தெரியும் உன்ட புளொக்கர்ஸ் பிரன்டுகளில் எத்தனை பேர் "கற்புக்கரசர்கள்" / "கற்புக்கரசிகள்" என்டு...

      ஒராள் செய்வதை வைத்து எல்லா புளொக்கர்ஸ்சும் பிழை என்டு சொல்லலாமோ? நானும் தான கொஞ்ச நாள் எழுதினான்...

      //மேன்மக்கள் எங்கிருந்தாலும் எப்படியிருந்தாலும் கட்டுப்பாட்டுடன்தான் இருப்பர்.. //

      அப்படி வா வழிக்கு.. நீ தானே வெளி நாட்டு பெட்டையள் எல்லாம் அணில் கடிச்ச புருட்ஸ் என்டனீ.. இப்ப ஏன் கதைய மாத்திறாய்...

      இதைத் தான் நான் அப்ப இருந்தே கத்தி கத்தி சொல்லிக்கொண்டிருக்கிறன்.. யாழ்ப்பாணத்தில இருக்கிற எல்லாரும் கற்புக்கரசர்கள் இல்லை.. வெளி நாட்டில இருக்கிற ஆக்கள் எல்லாம் அணில் கடிச்ச புருட்ஸ்சும் இல்லை... அதனால் கண்ட பாட்டுக்கு கதையாதை என்டு தொண்டை கிழிய கத்தினனான்..

      இதில கடுப்பைக் கிளப்பும் பெண்கள் எழுதப்போறீயோ.. நீ யாட்டையோ பெட்டையை சைட் அடிச்சனி என்டு மகி மாமாட்ட நானே போட்டுக்குடுப்பன்... வேள்வியில தான் பங்கு பெறேல்ல.. இப்படியாவது களை பிடுக்குவது ஒரு வகையில் வேள்வியில் பங்குபெறாததுக்கு பிரயாச்சித்தம் என்டு சொல்லலாம்...

      //விரைவில் இந்த குழப்பநிலையை சமாளிக்க யாழ்த்தமிழ் சமூகம் தயாராகிவிடும் என்றே நான் கருதுகிறென்..//

      கிழிஞ்சுது....

      //உங்கள் கமெண்டை டிலீட் செய்ய வேண்டிய அவசியமில்லை.. ஏனெனில் அப்படி பேடிகளோ பெண்டுகளோ இங்கு இருப்பதாக எனக்கு தெரியவில்லை..//
      முன்னர் சொன்ன மாதிரி பேடிகள் பெண்டுகள் யார் என்டு உனக்குத் தெரியும்... கதையை மாத்தாத...

    30. @ கனககோபி

      //அந்த பிடிபட்ட பிள்ளைகளின் பெற்றோர் யாராவது இந்தளவு பெருந்தன்மையாகக் கதைப்பார்களா? #சந்தேகம்
      என் அப்பா அம்மாவுக்கு நான் முக்கியம் போலத்தானே அந்த அப்பா அம்மாக்களுக்கும்?//

      ஏன் அப்பு.. அப்ப அந்த மாவீரர் போராளிகளின் பெற்றோர் எல்லாம் சும்மாவே பிள்ளையப் பெத்தவை... சிலரின்ட உடலை எரித்து அதில் குளிர் காய நினைப்பது என்ன நியாயம்... நியாயம் கதைக்கும் கோபி நீயா இப்படி விதன்டாவாதத்துக்கு கதைப்பது...சீ என்டு இருக்கு

      //புல்லட் அண்ணா யாரையும் நோக்கி விரலை நீட்டவில்லை என்று நம்புகிறேன்.//
      நான் குறிப்பிட்டது மானுடனை.. ஒழுங்கா விளங்காமல் கதைக்கக்கூடாது.. அடுத்த முறை விளங்கிக் கதையும்.

      //வெளிநாட்டில இருந்து நீங்கள் ஆயிரம் கதைக்கலாம், ஆனால் நாட்டுக்குள்ள இருக்கிற நாங்கள் புத்திசாதூர்யமாக செயற்படுவது அத்தியாவசியமானது. நாங்கள் ஏதும் வில்லங்கமா 2005 மாதிரிச் செய்தா அதால கஷ்ரப்படப்போறதும் நாங்கள் தான்//
      யாரும் உங்களை புலிகளை தூக்கி தலையில் ஆடச் சொல்லேல்ல.. அப்படி சொல்ல எனக்கு பிறாந்தும் இல்லை... செத்தவர்களைப்பற்றி கதைக்காதீர்கள் என்டு தான் சொன்னனான்..

      கேவலம் கெட்ட ஆக்களையா நல்லவர்கள் என்று நினைத்தேன்.....

      // மக்டொனால்ட்ஸ் இல சாப்பிட்டு விரதம் இருக்கிறாக்களில்ல..//

      சீ நீருமா கோபி... வெளி நாட்டான் கொழும்பான் யாழ்ப்பாணத்தான் என்டு ஆளுக்கால் சேற்றை வாரி இறைக்கும் உங்களைப்போன்றவர்களையா நான் நல்லவர்கள் என்டு நினைத்து அன்பே புளொக்கர்ஸ் என்டு எழுதினான்.. தூ.... துப்புவது என் மேல் தான்...

      புல்லட்டுக்கு வெளி நாட்டானைப்பத்தி சொன்ன பதில் தான் உமக்கும்...

      கதை விளங்காமல் என்னத்துக்குள்ளேயோ குத்துதே குடையுதே என்டு சொல்ல வேண்டாம்....

      Again @ புல்லட்,
      நான் எங்கயும் போய்த் துலைய மாட்டன்....

      உலகத்தில் எத்தனை வகையான ஈனப்பிறப்பு நாய்கள் இருக்கு என்டு எனக்கு அறியத்தரும் புளொக்கர்ஸ்சை விட்டு நான் எங்கயும் போகமாட்டன்... என்ட 23 வருச வாழ்க்கையில், இந்தியா, இலங்கை, மலேசியா, நோர்வே, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்ந்து இருக்கிறேன்.. எனக்கு புளொக் மூலம் தெரிய வந்த அநேகர் மாதிரி கீழ்த் தரமானவர்களை நான் எங்கும் காணவில்லை... எல்லோரையும் சொல்லவில்லை.. விளங்க வேண்டியவர்களுக்கு விளங்கினால் சரி...

      நாளைக்கு என்ன நடக்கும் என்டு தெரியாது.. அதுக்குத் தான் சொல்லுறன்... குதியோ குதி என்டு குதிக்காமல் அடங்கி இருங்கோ... சுபாங்கன் சொன்னது போல, பக்கத்து வீட்டுக்காரனுக்குக்கூட நீங்கள் பெரிய கொம்பன் என்டு தெரியாது.. கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லது... கொஞ்ச நாட்கள் நட்பாக இருந்த குற்றத்துக்காக சொல்லுறன்...

      கடைசியாக ஒரு வேண்டுகோள்... கொஞ்சம் வடிவா வாசிப்புப் போட்டு சில முந்திரியக்கொட்டைகள் கதைத்தால் நல்லம்.. சும்மா சும்மா முழங்குவதற்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க உண்மையில் வேலை வெட்டி இல்லாத ஆள் நானில்லை...

    31. முகிலினி உங்களிடம் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். சின்னக்கடையில் மீன் விக்கும் பெண்கள் குடிபோதையில் பேசுவது போன்ற உங்கள் வார்த்தை பிரயோகங்களை சற்று நிறுத்தினால் நல்லது. ஏனென்றால் என்னைப்போன்ற மானங்கெட்ட யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு, பொலநறுவை, பதுளை, காலி மற்றும் கண்டி என இலங்கை மக்களுடன் வாழ்ந்து தரங்கெட்டுப்போன கிணற்று தவளைகள் போன்றவர்களைவிட தமிழ் பற்றும் இன உணர்வும் விடுதலை வேட்கையும் இலட்ச்சிய கனவுகளும், பல நாடுகளில் வாழ்ந்த அனுபவமும் சில நாடுகளில் குடியுரிமையும் கொண்ட நீங்கள் நீடுழி வாழ்ந்து தமிழை வளர்க்கவேண்டும் என்பதே பேரவா. எதிர்கால சந்ததிகள் தமது இலக்கிய தேடல்களுக்காக உங்கள் சுவடுகளை தொடர்ந்து உங்கள் பதிவுகளையும் உங்கள் பின்னூட்டங்களையும் ஆழ்ந்து கற்க ஆவலுறலாம். ஆதலால் பான்மைகேட்டு, பாமரராய் விலங்குகளாய் போன என்னைப்போன்ற ஈனப்பிறவிகளை திட்டும்போதுகூட நீங்கள் சற்று பொறுப்போடு உங்கள் வார்த்தைகளை கையாளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    32. //ஏன் அப்பு.. அப்ப அந்த மாவீரர் போராளிகளின் பெற்றோர் எல்லாம் சும்மாவே பிள்ளையப் பெத்தவை... சிலரின்ட உடலை எரித்து அதில் குளிர் காய நினைப்பது என்ன நியாயம்... நியாயம் கதைக்கும் கோபி நீயா இப்படி விதன்டாவாதத்துக்கு கதைப்பது...சீ என்டு இருக்கு //

      நான் விரும்பிச் சென்றவர்களைப் பற்றி எதுவுமே கதைக்கவில்லை...
      நான் போராட்டம் பற்றியும் எதுவும் கதைக்கவில்லை.
      ஆனால் என் வயதுப் பையன், என் வயது சகோதரி ஒருத்தி இன்று கட்டாயமாகப் பிடிக்கப்பட்டு இன்று புனர்வாழ்வு முகாம்களில் இருக்கும்போதும், அவர்கள் அங்கிருந்து கொண்டு இங்குள்ள ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அளிக்கும் பேட்டிகளைம் வாசித்தால் தான் மனித உணர்வு வரும்.
      (தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அனுமதி இருக்கோ தெரியாது, இருந்தாலும் எந்தப் பத்திரிகையும் பேட்டி காணாது.... சவால்...)
      அந்த சகோதர சகோதரிகள் அங்கே இருக்கும் போது நாங்கள் மட்டும் இங்கே சுதந்திரமாக எங்களுக்கு விரும்பியதைச் செய்யும்போது மனித உணர்வுகள் எங்களை 'நீ சுயநலக்காரன்' என்று சொல்லும்போது வரும்வலி தெரியுமா?


      //யாரும் உங்களை புலிகளை தூக்கி தலையில் ஆடச் சொல்லேல்ல.. அப்படி சொல்ல எனக்கு பிறாந்தும் இல்லை... செத்தவர்களைப்பற்றி கதைக்காதீர்கள் என்டு தான் சொன்னனான்..//

      நானும் அதத் தான் சொன்னன்...
      யாருக்கும் வாக்களிக்காமல் விடுவது என்பது முட்டாள்தனம், அதனால் இருவரில் ஒருவரில் வாக்களிப்பது, ஆகவே இதை வெளிநாடுகளில் இருப்பவர்கள் இங்கிருக்கும் எம் மீது திணிக்காதீர்கள் என்று,..


      //சீ நீருமா கோபி... வெளி நாட்டான் கொழும்பான் யாழ்ப்பாணத்தான் என்டு ஆளுக்கால் சேற்றை வாரி இறைக்கும் உங்களைப்போன்றவர்களையா நான் நல்லவர்கள் என்டு நினைத்து அன்பே புளொக்கர்ஸ் என்டு எழுதினான்.. தூ.... துப்புவது என் மேல் தான்... //

      நான் வெளிநாட்டில் இருப்பவர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை.
      வெளிநாட்டில் இருந்துகொண்டு எம்மமைத்தூண்டுகின்றவர்கள் இப்படியும் இருக்கிறார்கள் என்றேன்.
      அவர்கள் எம்மைத்தூண்டி எதைச் செய்தார்கள்?
      அதைத்தவிர வெளிநாட்டில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ, அவர்களின் பழக்கவழக்கங்கள் குறித்தோ நான் எதுவும் கதைக்கவில்லை.
      நான் பதிவராக இருந்தாலும் எனது உண்மையான கருத்தை மறைத்து அதன்மூலம் மற்றவர்களை என்னை விரும்புமாறு செய்வது கேவலமானது, நான் என்னை மறைக்கவில்லை.


      //கதை விளங்காமல் என்னத்துக்குள்ளேயோ குத்துதே குடையுதே என்டு சொல்ல வேண்டாம்....//

      அதே....
      கதை விளங்காமல் என்னத்துக்குள்ளேயோ குத்துதே குடையுதே என்டு சொல்ல வேண்டாம்....



      //கொஞ்சம் வடிவா வாசிப்புப் போட்டு சில முந்திரியக்கொட்டைகள் கதைத்தால் நல்லம்.. சும்மா சும்மா முழங்குவதற்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க உண்மையில் வேலை வெட்டி இல்லாத ஆள் நானில்லை...//

      ;)
      நான் பதில் எதிர்பாக்கேல....


      //நாளைக்கு என்ன நடக்கும் என்டு தெரியாது.. அதுக்குத் தான் சொல்லுறன்... குதியோ குதி என்டு குதிக்காமல் அடங்கி இருங்கோ...//

      நிச்சயமில்லாத நாளைக்காக நிச்சயித்த இன்றைய நாளை இழக்க முடியாதே?
      நாளை பற்றி யோசிக்காமல் சிலர் எடுத்த தீர்மானங்கள் பலரின் 'நாளை'யையே பறித்துப் போனதே?


      //சுபாங்கன் சொன்னது போல, பக்கத்து வீட்டுக்காரனுக்குக்கூட நீங்கள் பெரிய கொம்பன் என்டு தெரியாது.. கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லது... கொஞ்ச நாட்கள் நட்பாக இருந்த குற்றத்துக்காக சொல்லுறன்... //


      நிச்சயமா... நாம் சாதாரணர்கள்...

      சாதாரணன் ஒருவன் அரசியல் கதைக்கக்கூடாது என்று சொல்றது போல இருக்கு.
      இலங்கைக்கு வாருங்கள், இலங்கையின் யதார்த்தம் புரியும்.

    33. நான் சொல்ல நினைத்தது எல்லாத்தையும் கனககோபி அழகாக சொல்லி விட்டான்.. அத்தனை கருத்துக்களும் ஒவ்வொரு முத்து.. சரி.. கதம் கதம்..

      மேலதிகமாக , யாழில் கலாச்சார சீர்கேடாம் என்று வெளிநாட்டில் இருந்து கதைக்க கூடாது என்றுதான் நான் கூறியிருக்கிறேன்..வெளிநாட்டு நிலமைக்கும் கொழும்பு நிலமைக்கும்தான் யாழ் செல்லுகிறது.. அதை கண்டிக்க அதப்பறிற கவலைப்பட தகுதியுடையவர்கள் யாழில் தற்போது வசிக்கும் மக்கள் மட்டும்தான் என்பது என் கருத்து.. தற்போதுதான் யாழ் சென்று மீண்டிருப்பதால் இது குறித்து விரைவில் நான் எழுதுவேன்..

    34. சைலஜா உங்கள் தகவலுக்கு நன்றி.. நானும் உுதை பற்றி மேலோட்டமாக கேள்விப்பட்டுள்ளேன்.. வேறுநாடகளில் அரசியல் தஞ்சம் கொரலாமென்று.. அப்படியானால் பல லட்சம் ரூபாய் செலவளித்து முகவருடே கண்டெயனரில் போவதிலும் பார்க்க பேசாமல் ஒரு 75000 ரூபாய் கட்டுப்பணத்துடன் டிக்கட் போட்டுவிடலாம் என்று சொல்லுகிறீர்களா?

    35. தமிழர்கள் என்றாவது ஒற்றுமையாக இருந்துள்ளார்களா? மூவேந்தர் கால
      மெல்லாம் ஒருவரோடுஒருவர் மோதிக்கொண்டிருந்தார்கள்.அவர்கள் ஒற்றுமை
      யானது ஒரு கறைபடிந்த நிகழ்ச்சியான பாரிமகளைக்கற்பழிக்கும் முயற்சியில்
      மட்டுமே.தமிழன் ஒரு பாபப்பட்ட சமுதாயம்.இவ்வளவு அழிவின் பின்புகூட
      ஈழத்தமிழரிடம் ஒற்றுமை ஏற்படவில்லை.இன்றும் யாழ்ப்பாணம், மட்டக்கிளப்பு,
      வெளிநாட்டான்,கொழும்புக்காரன் என்ற பாகுபாடு புரையோடிப்போய்யுள்ளது.
      எப்போது இந்நிலை மாறும்.என்னசெய்தால் மாறும் யாராவது சொல்வீர்களா?

    36. //இங்குள்ள ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அளிக்கும் பேட்டிகளைம் வாசித்தால் தான் மனித உணர்வு வரும்.//


      நான் செத்தவர்கள் மீது சேற்றை அள்ளி வீசுவது பிழை என்டுறன்.. நீங்களோ சேற்றை அள்ளித் தான் வீசுவன் என்கிறீர்கள்... என்னத்துக்கோ எப்பவும் நக்கிற புத்தி என்டு சொல்லாமல் சொல்லுகிறீர்களா?

      அது இருக்க.. ஒரு கதைக்குத் தான் கேக்கிறன்... பேட்டிகள் எல்லாம் உண்மை என்டு சொல்லுறியளா.. அதுவும் இலங்கை ஊடகங்கள் உண்மையை எப்ப சொல்லி இருக்கு... ஆமியினட கட்டுப்பாட்டில் இருக்கேக்க மஹிந்த மாமா சிந்தாபாத் என்டு சொல்லத் தான வேணும்.. அது கூட தெரியாத அப்பக்கோப்பைகளா நீங்கள்..

      //இங்கே சுதந்திரமாக எங்களுக்கு விரும்பியதைச் செய்யும்போது மனித உணர்வுகள் எங்களை 'நீ சுயநலக்காரன்' என்று சொல்லும்போது வரும்வலி தெரியுமா?//
      மனிசனுக்குத தான் வலிக்கும்.. சேற்றப் பூசும் மரக்கட்டைகளுக்கு எங்க வலிக்கும்... ஏதோ அடுத்தவரின் கண்ணீரைத் துடைப்பது போல இவ்வளவு பில்டப் எதுக்கு..


      //செத்தவர்களைப்பற்றி கதைக்காதீர்கள் என்டு தான் சொன்னனான்..//

      நானும் அதத் தான் சொன்னன்...//

      என்னது? அதையே தான் சொன்னனியளோ.. சேத்தை டன் கனக்கில் அல்லவா அள்ளி பூசுறியள்...

      //யாருக்கும் வாக்களிக்காமல் விடுவது என்பது முட்டாள்தனம், அதனால் இருவரில் ஒருவரில் வாக்களிப்பது, //
      எப்ப இருந்து வாக்களிப்பு பற்றி உங்களுகளுக்கு இவ்வளவு அக்கறை வந்தது..

      யாரோ இல்லை என்டு என்ன ஆட்டம் ஆடுறீயள்..

      // வெளிநாடுகளில் இருப்பவர்கள் இங்கிருக்கும் எம் மீது திணிக்காதீர்கள்//
      அப்ப உள் நாட்டில் இருப்பவன் திணிக்கலாமோ.. இரும் என்ட பிரண்டுட்ட சொல்லுறன்..

      நான் ஒன்டும் திணிக்கேல்ல.. செத்தவர்கள் மீது சேற்றை வாறி இறைக்காதீர்கள் என்டு தான் சொல்லுறன்.. சீய்

      //நான் வெளிநாட்டில் இருப்பவர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. வெளிநாட்டில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ, அவர்களின் பழக்கவழக்கங்கள் குறித்தோ நான் எதுவும் கதைக்கவில்லை.//
      அப்ப யாரை பேகர் சாப்பிட்டு விரதம் இருக்கிறவை என்டு சாடினியள்.. ஏன் வெளி நாட்டான் கொழும்பான் என்டு சேற்ற வாறி இறைக்கிறியள்... என்னட்ட கேட்டால் நான் எப்பவும் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவள் என்டு தான் சொல்லுவன்.. வெளி நாட்டுக்காரி இல்லை.. அது தானே சொன்னனான்.. ஒரு மண்ணும் இனி மிச்சமில்லை அங்க போய் என்னத்த பிடுங்குவது என்று...

      //வெளிநாட்டில் இருந்துகொண்டு எம்மமைத்தூண்டுகின்றவர்கள் இப்படியும் இருக்கிறார்கள் என்றேன்.
      அவர்கள் எம்மைத்தூண்டி எதைச் செய்தார்கள்?//
      இப்ப என்னத்தை தூண்டுகிறார்கள் என்டு துள்ளுறீர்.. பன்னிகளுக்கு எப்பவும் என்னத்தையோ தின்னுறது தான் பிழைப்பு மாதிரி சேத்தை பூசாதீர்கள் என்டு சொல்லுவது திணிப்பா.. .

      //நான் பதிவராக இருந்தாலும் எனது உண்மையான கருத்தை மறைத்து அதன்மூலம் மற்றவர்களை என்னை விரும்புமாறு செய்வது கேவலமானது, நான் என்னை மறைக்கவில்லை.//
      நன்று.. அதனால் தான் உங்களை மாதிரியான ஆக்களின் சுயரூபம் நல்லாத்தெரியுது..

      இதை எல்லாம் யாரோ இல்லை என்டு தான குதிச்சு குதிச்சு சொல்லுறீயள்...

      உங்களை மாதிரி களைகள் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவில்லை..

      ஒருத்தர் ஒரு கருத்தை வைத்தால் உடனேயே நீ வெளி நாட்டான் என்டு பொயின்ட் பிடிப்பது உங்கள் சிறு புத்தியை நீங்களே காட்டிக்கொள்ள வழிவகுக்கும்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

      //நாளை பற்றி யோசிக்காமல் சிலர் எடுத்த தீர்மானங்கள் பலரின் 'நாளை'யையே பறித்துப் போனதே?//
      அதை எடுக்கக்கூட துணிவில்லாத பேடிகள் அந்த தீர்மானங்களைப் பற்றிக்கதைக்கக் கூடாது.. அதுவே பிழைச்சிருக்காட்டி எங்கள் தலைவன் பிரபாகரன் என்டு சொல்லிக்கொண்டு வடக்குக்கு வந்திருப்பியள்..

      //சாதாரணன் ஒருவன் அரசியல் கதைக்கக்கூடாது என்று சொல்றது போல இருக்கு//
      சேற்றை வாறி இறைப்பது அரசியல் என்டு எனக்குத் தெரியாது.. அப்படியா கோபி...

      //இலங்கைக்கு வாருங்கள், இலங்கையின் யதார்த்தம் புரியும்.//
      நீங்கள் இருப்பது கொழும்பின் ஒரு மூலையில்.. ஏதோ எல்லாம் தெரியும் மாதிரி குதிக்கக்கூடாது..

    37. //சின்னக்கடையில் மீன் விக்கும் பெண்கள் குடிபோதையில் பேசுவது போன்ற உங்கள் வார்த்தை பிரயோகங்களை சற்று நிறுத்தினால் நல்லது. //
      ஏன் ஆம்பிளையள் சாராயம் குடிப்பதில்லையா.. இல்லை கதைப்பதில்லையா.. புல்லட் சல்லாபிப்பது பற்றி கதைக்கலாம் நான் சொன்னால் குத்துதோ...

      சாராயம் குடிக்காமலேயே நீங்கள் அதிகம் கதைக்கிறியளே.. அதை நிப்பாட்டுங்கோ..


      //தரங்கெட்டுப்போன கிணற்று தவளைகள் போன்றவர்களைவிட //
      சபாஷ்.. தரங்கெட்டுப்போன ஆக்கள் என்டு ஒத்துக்கொண்டதுக்கு...

      நாடுகளை ஒப்பிட்டது தமிழனின் சாபப்பட்ட வரத்தை சுட்டிக்காட்டத்தான்.. அது உமக்கும் தெரியும்...

      சேற்றை வாறி இறைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களுகளே தான்..

      சேற்றை வாறி இறைக்காதீர்கள் என்டு சொன்னால், நீ வெளி நாட்டுக்காரி என்டு ஒரே குதிப்பு.. அதுவே சொல்லுகிறது உங்கள் தவற்றை மறைக்க நீங்கள் எடுத்துக்கொண்ட ஆயுதம் நீ வெளி நாட்டுக்காரி..

      சீ மடையர்களே நான் வன்னியில் 2006 இறுதி வரை இருந்தவள். அங்கு இருந்த தாய் தகப்பன் அற்ற் பிள்ளைகளை யூ என் வந்து ஏற்கும் வரை யுத்த பூமியை விட்டு நகராது உயிர் நீத்தவள் எனது தாய்... திருப்ப அவர்கள் வந்தால் முதல் ஆளாக போய் நிற்பேன்.. அவர்கள் இல்லாத பூமியில் கால் வைக்க இஷ்டமில்லை.. அதனால் இனியும் வெளி நாட்டுக்காரி என்டு சொல்லி வெறுப்பேற்றாதே... உம்மைப் போன்றவர்களுக்கு விளக்கத் தேவை இல்லை... ஆனாலும் சொல்லுகிறேன்.. அத்துடன் இறந்தவர்கள் மீது சேற்றை இறைக்காதே... அது ஒரு மனவியாதி..

      நக்கிற நாயுக்கு தெரியுமா சிவலிங்கம் எது செக்கு எது என்டு...ஆனாலும் சொல்லிப்பாக்கிறேன்..

      நீங்கள் எல்லாம் எக்கேடு கெட்டும் போங்கள். ஆணவத்தில் ஆடுவது எல்லாம் கொஞ்ச காலம் தான்.. தர்மமே நிலைக்குதில்லையாம்.. நீங்கள் எல்லாம் எம்மாத்திரம்.. ஒழிந்து போங்கள்...

      கடைசியாக தேவஷ்‍ இன் கொமன்ற் பாத்த பிறகு ஒரு மன நிறைவு.. எங்களை மாதிரியும் ஆக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்டு.. அது மாறாது தேவேஷ்... நல்லதைச் சொன்னால் நீ வெளி நாட்டுக்காரி என்டு குதிப்பார்கள்..

    38. Lastly மானுடன், இந்த சாரயக்காரி கதை எல்லாம் என்னை ஒன்டும் செய்யாது..I really dont give a damn abt it.. I am cool as I know, "பேடிகளை விட நான் எத்தனையோ மேல்"

    39. அண்ணன் நல்லா யோசிச்சு எழுதியிருக்கிறீங்கள், பதிவ விட கொமென்ற் வாசிக்க கூட நேரம் போச்சுது.. sigh
      இந்த நவீன 'பாரதி'களிண்ட தொல்லை தாங்க முடியேல்ல!! உங்கனெக்க சேத்து வாளியோட யாராவது நிண்டா எங்கயாவது வெளியில அனுப்புங்கோப்பா..

    40. புல்லட், தெளிவான , யதார்த்தமான அணுகுமுறை..
      நானும் ஆரம்பத்தில் புறக்கணித்தல் அல்லது நல்லவருக்கு என்று நினைத்தாலும் ஆழமான யோசனை & 2005 அனுபவம் முடிவை மாற்ற செய்து விட்டது..

      ஒவ்வொரு நாளும் இப்போது ஆள்வோருக்கு எதிராக கணிசமான வாக்குகள் திரள்வதை உணர்ந்திருப்பீர்கள்..

      சில விஷயங்களை நாசூக்காக உணர்த்தி இருக்கின்றீர்கள்.

      பின்னூட்ட சேறுகள்,சக்திகள் பார்த்தேன்..
      பட்டதெல்லாம் பட்டுவிட்டோம்.. எம்மை விட அனுபவித்துப் பரிதவித்த மக்கள் பற்றி நினைக்கவேண்டுமே தவிர இன்னும் உணர்ச்சிவயப்பட்டு கொந்தளிப்பது மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி நிலைக்கே கொண்டு செல்லும்.

    41. நல்லதொரு அரசியல் ஆய்வு புல்ல‌ட்!


      // மானுடன் Said
      நண்பர் ஒருவர் சொன்னார் " சரத்தை பற்றி கவலையில்லை எப்பிடியும் இப்ப இருக்கிறவரை மாற்றவேணும்//


      பெரும்பாலானோர் இப்படித் தான் சொல்ல நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.


      கடைசியாக "தெரிந்த பேயா.. தெரியாத பிசாசா?" யார் வந்தாலும் எல்லோரும் தமிழனுக்கு Dragula தான்!

    42. AV, no yards, a film for free to see, self-timer mapping, Elizabeth Childs-Johnson, breeze forums, chat rooms for adults, adult movies, adult literary, adult map area, adult sites, leaf texture feelings Area, pornographic comics, romantic novels, love Color Forum, Taiwan erotic network, pornographic movies, pornography, adult Studios, 080 video chat rooms, a film, A Man, h Man, Lai color games, color religion, Comrade Hall, AV Actress, SEX, Roaring mice , 85cc free movie, is wall-mei, ut chat room, Doudou chat rooms, chat rooms, erotic novels, aio, adults, breeze adult, sex, adult maps, 18 adults, toot adult network, aio friends love Hall , erotic literature, erotic fiction, porn sites, erotic, A film download, Dudu-color screen lover, adult video, adult pictures, adult articles, adult fiction, adult comics, video chat rooms, a film, AV Actress, chat rooms, erotica, sex