இன்றுடன் ஒரு வருடம் :-)

  இன்றுடன் நான் புல்லட்டாக வலையில் எழுதவந்து ஒரு வருடமாகிவிட்டது..

  ஆரம்பத்தில் என்னடா எல்லோரும் எழுதுகிறார்கள்
  என்றும் பின்னர் பின்னூட்டம் எனும் போதையை அனுபவிக்க எண்ணியும் பின்னர் என்னையும் ஒரு ஆளாக மதித்த பதிவுலக நண்பர்களுக்காயும் எழுத ஆரம்பித்து இப்போது ஒரு கவலையோ சந்தோசமோ குழப்பமோ என்னுள் கிடந்து குமுறும் உணர்வை நண்பர்களுடன் பகிரும் தளமாய் வலைப்பூவை பயன்படுத்துகிறேன்..


  ஆரம்பத்தில் வலைப்பூவில் பெண்கள் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்
  பெண்களுக்கு எதிரான கடுமையான என் உள்ளக்கிடக்கைகளை முன்வைத்தபோது சுட்டெரிக்கும் எதிர்ப்பலை வந்தாலும் எதிர்த்தவர்களில் அனேகர் பின்னர் நண்பர்களாகி விட்டனர்.. அதிலும் பல பெண்கள் தனிப்பட்ட நண்பர்களாய் சகோதரிகளாய் அன்பைப்பொழிந்து என்னில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டார்கள்.. அவர்களுக்கு ஒரு சலூட்.. நன்றி தாய்க்குலங்களே.. :-) .. (இங்க நன்றி சொல்லாட்டா அதுக்கு தனிய கவனிப்பாங்க :-( )


  அத்துடன் நான் போடும் மொக்கைகளுக்கு சிரித்து , நட்பால் என்னை மகிழவைத்து , கடந்த ஒரு வருடத்தை மிகவும் சுகமாக்கிய அனைத்து வாசக மற்றும் பின்னூட்டப்பெருமக்களுக்கும் நன்றிகள்.. :-)


  நடுவில் ஒரு முறை எனக்கொரு குழப்பம் வந்தது..
  ”ஏன்டாப்பா எழுதுறாய்..
  இதால உனக்கு ஒரு 5 ருபாய் வருமானம் கூட இல்லையே .. பிறகென்ன இழவுக்கு அநியாயமாய் ஒரு மணித்தியாலத்தை வீணாக்குகிறாய்..
  இப்படி
  ஒரு சிந்தனை ..!
  உள்மனம்
  போட்ட அந்த கேள்வி என்னை திக்குமுக்காடச்செய்தது..
  முட்டிமோதி
  வாழும் இலங்கைத்தமிழனாய் சேமிப்பையும் உழைப்பையும் வாழ்க்கையின் இலக்காக கொண்டு வாழ்ந்து மடியும் ஒரு சாதாரண தமிழனாய் அந்த உள்மனம் சிந்தித்ததில் பிழையேதுமிருக்கவில்லை..
  உண்மைதானே
  ? எதற்கு எழுதுகிறாய்?


  குழப்பத்திற்கு விடை கிடைக்கவில்லை.. அப்போதுதான் Pursuit of happiness என்ற படம் பார்க்க கிடைத்தது.. அது பல குழப்பங்களை தீர்த்து விட்டது.. நாம் உழைப்பது எதற்கு? சாப்பிடவும் சந்தோசமாய் இருக்கவும்தானே? பதிவெழுதி அதை
  பலர் வாசிப்பதை பார்க்கையில் ஒரு புதுவித சந்தோசம்.. அதை அந்த ஒரு மணித்தியாலத்தில் ஒரு ஓவர் டைம் செய்தோ இல்லை ஒரு றிசேர்ச் பேப்பரை படித்தோ பெறமுடியாது.. பதிவெழுதுவதில் அதை படிக்க வருபவர்களை பார்க்கையில் சந்தோசம் வருமாயின் நிச்சயமாக எழுதுவேன்.. நீங்களும் எழுதுங்கள்.. அப்படி எழுத முடியாதவர்கள் மற்றவர்களை எழுதுவதை படித்து சந்தோசமடைகிறார்களாயின் சிரிக்கிறார்களாயின் சிந்திக்கிறார்களாயின் அந்த ஒரு மணித்தியாலத்தை பற்றி நீங்கள் சிந்திக்கவே கூடாது..


  வயி;ற்றுக்கு வஞ்சமில்லாமல் ஒரு வேலை, அதை தக்க வைக்க கொஞ்சம் உழைப்பும் தேடலும், வாழ்க்கையின் அடுத்த படிக்கு போவதற்கு வேலைப்பொழுது தவிர்ந்த நேரத்தில் கொஞ்சம் உழைப்பு , குடும்பத்துக்கொரு குறித்த நேரம் போக மிகுதியாய் நேரமிருந்தால் பதிவுலகத்தில் மகிழ்வாக செலவிடுவதில் எதவித பிழையும் இல்லை .. இதுவே அந்த குழப்பத்தின் முடிவில் நான் பெற்றுக்கொண்ட விடை.. :-) ஆனால் பதிவுக்காகவோ பின்னூட்ட மயக்கத்திலோ மேற்கூறிய எதையும் தியாகம் செய்து விடக்கூடாது.. அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சுதான்..


  அத்துடன் கடந்த வருடத்தில் இலங்கையின் முதலாவது பதிவர் சந்திப்பினை வெற்றிகரமாக நடத்தியவர்களில் ஒருவனாக ஒரு பெருமை கிடைத்தது.. இரண்டாவது சந்திப்பிலும் பங்கு பெற்றும் பாக்கியம் கிடைத்தது.. அவற்றின் முலம் கிடைத்த பலரின் நட்புகள் மிகவும் மிகவும் பெறுமதியானது..


  முதலாவது சந்திப்பின் ஏற்பாட்டாளர்களாக உருவான நட்பு இதுவரை எத்தனை பொழுதுகளை மகிழ்ச்சியாக தந்தது என எண்ணமுடியாது..
  அண்மையில் லியோனியின் பட்டிமன்றத்தை ரசித்துவிட்டு ஆதிரை வாங்கித்தந்த லட்டை தின்றவாறு இரவிரவாக நடந்து வந்த அனுபவமும் ஒருக்காலும் மறக்காது.. நடுவில் கோபி , லோசன் அண்ணாவின் மகன் கையில் வைத்திருந்ததை பிடுங்கி தின்ன சென்ற வேளை அவன் கோபியை பார்த்து , மழலை மொழியால்..“நமீதா டொம்மா” என்றுவிட்டான்.. றோட்டால் வந்த லாரியின் முன்னால் பாயமுயன்ற கோபியை லாரியின் நன்மை கருதி நாலு பரோட்டாவை காட்டி நிறுத்தினோம்....


  புதிய துரோகி ஆதிரை, கவ்விய மண் மறக்க முன்னம் காதல் பாடம் எடுக்கும் கோபி, போட்டோக்கார பவன் , நயன் சிங்க லோசண்ணர் , “சூப்“பிய வந்தியதேவர் , கவிதை எழுதி கலக்கும் கும்குமுக்கு மற்றும் யாழினி, அம்மா அப்பா படித்த சுபாங்கன் , திருமணச்சேவை புகழ் சுபானு, அரசியலவாதி அசோக்கு , பங்குச்சந்தை ரங்கன் , போட்டோஷொப் யோவாய்ஸ், பலாத்கார் பற்றி எழுதும் மது , விஜய் புகழ்பாடும் சதீஸ், விடிவெள்ளி , மருதமூரான், பாலகுடி, அகசியம் வரோ ,டொக்டர் முருகானந்தம் , மயுரேசன் , யாழ் பாலவாசகன் அவர் இவர் என்று நான் படிக்கும் இலங்கைப்திவர்கள்; ஏராளம்..

  மேலதிகமாக தமிழிஸ் இல் முதலிடம் வகிக்கும் இந்திய பதிவுகளும் வாசிப்பேன்..

  அவ்வாறே புலம்பெயர் இலங்கையர்களின் பதிவுகளையும் வாசிப்பேன்;.. அவர்களுள் அருள்மொழிவர்மன், கதியால் , சினேகிதி, ட்ரையம்பு , தியாகி , கமல் , கிருத்திகன், டொன்லீ முக்கியமானவர்கள்.. அவர்களில் பலர் எழுதுவதை நிறுத்திவிட்டது கவலைக்குரியது..

  அத்துடன் அருள்மொழிவர்மன் கதியால்களின் நட்பு பலகாலத்துக்கு பிறகு பதிவுலகம் மூலம் மீண்டமை ஒரு இன்ப அதிர்ச்சி..

  நிலாவின் பதிவுகள் எதவும் புரியாமல் அவமானத்துடன் பின்னவீனத்துவம் குறித்து மேலும் வாசிக்க எண்ணி , பைத்தியக்காரன் சாரு நிவெதிதா போன்றவர்களை படிக்க வெளிக்கிட்டு , அம்மா தாங்காது என்று மேலும் விசரனாகாத குறையா திரும்பி ஓடிவந்தது ஒரு சம்பவம்.. அதில ஒரு காமெடி என்னவென்றால், சாரு நிவேதிதாவிண்ட கட்டுரையில ஏதோ என் உயிர்த்தோழா என்ற ஒரு வலைப்பதிவைப்பறிற பெருமையா எழுதியிருக்க நானும் ஓடிப்போய்ப்பார்க்க.. கிளுகிளுப்பில ஒரே நாளில முழு பதிவும் வாசிச்சிட்டன்.. பிறகுதான் ஒரே குழப்பம் .. கலியாணம் கட்டாம சன்னியாசியா போவமோ எண்டு கூட யோசிச்சன்.. பொம்பளைல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் பயமா மாத்தி விட்டுட்டுது அந்த வலைப்பூ.. தெளிய ஒரு ரெண்டு மாசம் எடுத்திச்சப்பா..
  இந்த பின்னவீனத்துவம் என்பது பதிவுலகம் அறிமுகப்படுத்தியதாயினும் எனக்கு அது பிடிப்பமில்லை.. புரிவதுமில்லை.. ஆனால் அதை எழுத ஒரு தனித்திறமை அவசியம் என்று நான் நினைக்கிறேன்..

  எனக்கு பின்னூட்டமிடுபவர்களின் பதிவுகளை நான் வாசிக்கத்தவறுவதுமில்லை.. பிடித்துப்போயிருந்தால் பின்னூட்ட தவறுவதுமில்லை.. ஓட்டளிக்க மறப்பதுமில்லை..

  என்னதான் இருந்தாலும் பதிவுலகத்துக்கு வந்ததுக்காக இதுவரை நான் கவலைப்பட்டதில்லை.. மாறாக சந்தோசப்படுகிறேன்.. கடந்த ஒருவருடமாக என்னுடன் சேரந்து சிரித்த அனைத்து பதிவுலகத்தாருக்கும் நன்றிகள்..

  வாழ்க தமிழ்.. வெல்க தமிழர்..  புல்லட் :-)

  85 Responses

  1. வருடப்பூர்த்தி இல்ல ஆண்டுவிழா.. ம்ம்கூம்.. வெற்றிப்பதிவாண்டு.. எது??
   இதை விட
   வாழ்த்துக்கள்.. தொடரவேண்டும். வாழ்த்துக்கள் புல்லட் உங்களுடன் நான் இல்லாவிட்டாலும் எப்பொழுதும் உங்க பதிவு எனக்கு மனசுக்கு பிடிக்கும். தவறுவதில்லை வாசிக்க பின்னூட்டமிடத்தவறினாலும்.

  2. வாழ்த்த்துக்கள்...
   தொடருங்கள்.....

  3. வாழ்த்துகள் அண்ணா, எத்தினை மணிக்கு சிந்து கஃபேயில் சந்திக்கலாம்? அல்லது லோஷன் அண்ணாவுடன் ஏதாவது சைனீஸ் ரெஸ்ரொரன்டா?

  4. best wishes....

   அருமையா ஒரு பதிவை வாசிச்சு கொண்டு வரும்போது கடைசில ஒரு உம்மாண்டியின் படத்தை போடுடீன்களே...
   தொடர்ந்து எழுதுங்கள் , உங்கள் சேவை வலைபதிவுக்கு தேவை..

  5. //Subankan said...
   எத்தினை மணிக்கு சிந்து கஃபேயில் சந்திக்கலாம்? அல்லது லோஷன் அண்ணாவுடன் ஏதாவது சைனீஸ் ரெஸ்ரொரன்டா?//

   அட பாவி ! வெள்ளவத்த சைனீஸா? எனக்கு தெரியாமல் போச்சே...

  6. cogratz bullet brother:D

  7. வாழ்த்துக்கள்.
   தொடர்ந்து எழுது.
   :-)

  8. வாழ்த்துக்கள் அண்ணா...
   தொடர்ந்து சுடுங்கள்.... (ஐயோ... புல்லட் எண்டபடியா சுடுதல் எண்டதச் சொன்னன்...)

   நான் எங்கயப்பா லோஷன் அண்ணான்ர மகனிற்ற பறிக்கப் போனன்?
   அவனாத் தந்தான்... ;)

   லொறி பற்றி நீங்கள் சொன்னதை ஏற்றுக் கொள்றன்....

   பின்நவீனத்துவம்... ஹி ஹி....
   ஒரே இரத்தம்.... :)

   வாழ்த்துக்கள் அண்ணா....

  9. அவ்.. கோபி பின்னால இப்பிடி ஒரு லாரிக்கதையா??? ஹி..ஹி..

   தொடர்ந்து எழுதுங்கள்.. துணிச்சலாக நகைச்சுவை கலந்து எழுதும் எழுத்தாளர் நீங்கள். தொடர்க நிண் பணி ;)

   அது சரி எதுக்கு ஏதோ மாதிரி மனநிலை குளம்பிய பொடியன் மாதி ஒராளிட படத்தை கடசியில போட்டிருக்கீங்க

  10. //லோசன் அண்ணாவின் மகன் கையில் வைத்திருந்ததை பிடுங்கி தின்ன சென்ற வேளை//

   ஏன் கோபி அண்ணாக்கு இந்த வேலை..:p

   //லாரியின் முன்னால் பாயமுயன்ற கோபியை//

   கோபி தப்பியது லாரி செய்த புண்ணியம்..:p

   ***

   அண்ணே வாழ்த்துக்கள், கலக்குங்கள்..;)

   அதுசரி PARTY, TReEAT எல்லாம் எங்க?

  11. //கோபி தப்பியது லாரி செய்த புண்ணியம்..:p

   லாரி தப்பியது கோபி செய்த புண்ணியம்.

  12. அண்ணே கோவிச்சுக் கொள்ளாதேங்கோ அடிக்கடி வாறன் எண்டு....

   எப்பயண்ணே பார்ட்டி?
   சிந்து கபேயில தான் தருவியளோ?
   எப்ப வரோணும்? எங்க?

  13. றமேஸ்-Ramesh said...

   வருடப்பூர்த்தி இல்ல ஆண்டுவிழா.. ம்ம்கூம்.. வெற்றிப்பதிவாண்டு.. எது??
   இதை விட
   வாழ்த்துக்கள்.. தொடரவேண்டும். வாழ்த்துக்கள் புல்லட் உங்களுடன் நான் இல்லாவிட்டாலும் எப்பொழுதும் உங்க பதிவு எனக்கு மனசுக்கு பிடிக்கும். தவறுவதில்லை வாசிக்க பின்னூட்டமிடத்தவறினாலும். //

   ஓ நன்றி நன்றி. உங்கள் வார்த்தைகள் அமிர்தம்.. :-)

  14. சந்ரு said...

   வாழ்த்த்துக்கள்...
   தொடருங்கள்....//
   நன்றி சந்த்ரு..

  15. Subankan said...

   வாழ்த்துகள் அண்ணா, எத்தினை மணிக்கு சிந்து கஃபேயில் சந்திக்கலாம்? அல்லது லோஷன் அண்ணாவுடன் ஏதாவது சைனீஸ் ரெஸ்ரொரன்டா? //
   சிந்து கபேயில புட்டும் கடலையும்தான் ஸ்பெசல்.. எத்தினபேர் சாப்பிட்டாலும் நூறு ரூபாய் தாண்டாது.. அங்குயே வைப்பம்.. :P

  16. VARO said...

   best wishes....

   அருமையா ஒரு பதிவை வாசிச்சு கொண்டு வரும்போது கடைசில ஒரு உம்மாண்டியின் படத்தை போடுடீன்களே...
   தொடர்ந்து எழுதுங்கள் , உங்கள் சேவை வலைபதிவுக்கு தேவை. //
   நன்றி நன்றி..

   உம்்மாண்டியா? விருமாண்டி எண்டு எழுதநினைச்சிட்டு எழுத்துபிழை விட்டுட்டீங்கள் எண்டு நினைக்கிறன்.. இது எல்லாம்த பெரிய பிழை கிடையாது.. அதுக்கும் நன்றி..:P

  17. deepthi said...

   cogratz bullet brother:D //


   நன்றி .. ஆனா உந்த ப்ரதர் என்ற வார்ததைதான் கொல்லுது :P
   எப்படி நம்ம சூர்யா சுகமா இருக்காரா? எரிச்சலோட கெட்டதா சொல்லுங்க.. :P

  18. ஆதிரை said...

   வாழ்த்துக்கள்.
   தொடர்ந்து எழுது.
   :-) //
   நன்றிடா! ஆரமட்பத்தில் தொழிநுட்பரீதியாயும் பின்னர் தணிக்கைகள் செய்தும் அன்பு பாராட்டிய உன் உதவிகளை மறக்கமாட்டேன்..

  19. கனககோபி said...

   வாழ்த்துக்கள் அண்ணா...
   தொடர்ந்து சுடுங்கள்.... (ஐயோ... புல்லட் எண்டபடியா சுடுதல் எண்டதச் சொன்னன்...) //
   //

   நீங்கள் தோட்டாவின் பின்னால் தட்டிக்கொடுப்பதாலதான் புல்லட் வெடித்து பறக்கிறது :P

   உங்களுக்கும் நன்றிகள் தம்பி.

  20. Mayooresan said...

   அவ்.. கோபி பின்னால இப்பிடி ஒரு லாரிக்கதையா??? ஹி..ஹி.. //
   கோபி பின்னால லாரிநின்றாலே அது பெரிசா தெரியாது.. அதில கதையெல்லதம் எந்த மூலைக்கு..:P

   தொடர்ந்து எழுதுங்கள்.. துணிச்சலாக நகைச்சுவை கலந்து எழுதும் எழுத்தாளர் நீங்கள். தொடர்க நிண் பணி ;) //
   இது கொஞ்சம் ஓவர்.. பரவால்ல.. நன்றி

   அது சரி எதுக்கு ஏதோ மாதிரி மனநிலை குளம்பிய பொடியன் மாதி ஒராளிட படத்தை கடசியில போட்டிருக்கீங்க //
   அது மனநிலை கிடையாது .. அது தலைமயிர்.. தலைமயிர் குழம்பிய பெடியன் எண்டு நீங்கள் சொல்லவந்திருப்புது விளங்குது..ஆனாலும் மனநிலையும் மயிரும் மண்டையில் இருப்பதால் இத்தகைய குழப்பங்கள் ஏற்கத்தக்கவையே..:P

  21. Bavan said...
   அண்ணே வாழ்த்துக்கள், கலக்குங்கள்..;) //

   நன்றிடா வடுவா!

   அதுசரி PARTY, TReEAT எல்லாம் எங்க? //

   அண்ணனும் தம்பியும் திங்கிறதுக்கெண்டே அலையுறாங்கள். :P

  22. வாழ்த்துக்கள் நண்பரே...

  23. அப்ப ஒரு வயசு கொயந்தையா நீ??? வாழ்த்துக்கள்!!

   இப்படிக்கு,
   முக்கா வயது கொயந்த

  24. வாழ்த்துக்கள் கஞ்சரே!

   புல்லட்டாக எழுத வந்தேன் என சாதாரணமா சொல்லிட்டிங்க... புல்லட்டாக எல்லோரையும் போட்டுத் தாக்க வந்தேனு சொல்லுங்க

   உண்மை தான் எத்தனை நட்புக்களை தேடித்தந்துள்ளது. நன்றிகள் சொல்லித்தான் ஆக வேண்டும்.

   //(இங்க நன்றி சொல்லாட்டா அதுக்கு தனிய கவனிப்பாங்க :-( )//
   இதோ பார்டா ஆசையை.

   இன்னும் பல்லாண்டுகள் வலையுலகில் பிரகாசிக்க பதிவர்கள் சார்பாக வாழ்த்துகின்றேன்

  25. உங்கள் ஒரு வருட சாதனையை மெச்சுகின்றேன் இருந்தும் உங்களிடம் இந்த நல்ல நாளிலே ஒரு அன்பான கோரிக்கை கும்குமுக்கு வை மறந்துடுங்களே..... :( :( :(

  26. முனைவர்.இரா.குணசீலன்
   வாழ்த்துக்கள் நண்பரே... //
   நன்றி சேர்.. :-)

  27. கலையரசன் said...

   அப்ப ஒரு வயசு கொயந்தையா நீ??? வாழ்த்துக்கள்!!

   இப்படிக்கு,
   முக்கா வயது கொயந்த //
   ஹாஹா! நன்றி உங்க பதிவெல்லாம் செம காமெடியப்பா! முக்காவயசு கொயந்த பெருசா வர வாழ்த்துக்கள்..

  28. /*...இன்றுடன் நான் புல்லட்டாக வலையில் எழுதவந்து ஒரு வருடமாகிவிட்டது..
   */

   புல்லட் பாண்டியாக சுட வந்து "கடுப்பை கிளப்பும் பெண்கள்" உடன் நொந்து நூடில்ஸ்ஸாகி "புல்லட்" ஆக மாறி அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டி பேமஸ் ஆகும் அண்ணர் பவனுக்கு வாழ்த்துக்கள்...

   அடிக்கடி வரும் சிரிப்பு பதிவுகளையும் அவ்வப்போது உங்களின் எழுத்துக்களில் தெரியும் ஆழ்ந்த கருத்துக்களையும் சத்தமின்றி ரசித்து வருபவர்களில் நானும் ஒருவன்(Comment போடாடத தான் அய்யா அப்படி சொல்லுறாரு..)... நானும் இந்த வலைப்பூவை வாசிக்க ஆரம்பித்து ஒரு வருடம் ஆகப் போகிறதா.. நினைக்கையில் வியப்பாயிருக்கிறது...

   தொடர்ந்து வெற்றி நடைபோட அடியேனுடைய வாழ்த்துக்கள்...

  29. ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

   வாழ்த்துக்கள் கஞ்சரே! //
   ம்கும்.. நன்றி :@

   புல்லட்டாக எழுத வந்தேன் என சாதாரணமா சொல்லிட்டிங்க... புல்லட்டாக எல்லோரையும் போட்டுத் தாக்க வந்தேனு சொல்லுங்க //
   ஏனிந்த கொலைவெறி? ஐ ஆம் வெரி பாவம்..

   உண்மை தான் எத்தனை நட்புக்களை தேடித்தந்துள்ளது. நன்றிகள் சொல்லித்தான் ஆக வேண்டும். //
   உண்மைதான்..


   //(இங்க நன்றி சொல்லாட்டா அதுக்கு தனிய கவனிப்பாங்க :-( )//
   இதோ பார்டா ஆசையை. //
   அடி வாங்க யாருக்கப்பா ஆசை?

   இந்த நல்ல நாளிலே ஒரு அன்பான கோரிக்கை கும்குமுக்குவை மறந்துடுங்களே..... :( :( :( //
   அய்யொ என்ன இது? உங்களை மறக்கிறதா? ஏதோ நான் வன் சைட் அப்பிளிக்கேசன் போட்டு நீங்கள் மறுக்கிறமாதிரியலலோ எல்லாரும் நினைக்கப்போறாங்கள்.. கடவுுளே.. உடனடியா மறுப்பறிக்கை விட்டுடுங்கோ.. இல்லாட்டா நான் செத்தேன்.. இப்பவே ஆதிரையின் அலுப்படி தாங்கல..

  30. Thinks Why Not - Wonders How said...

   அண்ணர் பவனுக்கு வாழ்த்துக்கள்...

   சத்தமின்றி ரசித்து வருபவர்களில் நானும் ஒருவன்(Comment போடாடத தான் அய்யா அப்படி சொல்லுறாரு..)...தொடர்ந்து வெற்றி நடைபோட அடியேனுடைய வாழ்த்துக்கள்... //

   நன்றிகள்.. தங்களது வாழ்த்தைப்பாத்தா, இன்னும் சர்ச்சையில அம்பிட்டு புல்லட் அடிவாங்கினா நல்லாருக்கும் எங்கிற போல இருக்கு.. :P

  31. /*...
   நன்றிகள்.. தங்களது வாழ்த்தைப்பாத்தா, இன்னும் சர்ச்சையில அம்பிட்டு புல்லட் அடிவாங்கினா நல்லாருக்கும் எங்கிற போல இருக்கு.. :P
   */

   சாச்சா அப்படி எல்லாம் இல்லை...
   இதில உட்குத்து வெளிக்குத்து அப்புறம் ஏதோ சொல்லுவாங்களே.. ஆங... நடுக்குத்து... அப்படி ஏதும் இல்லை..

   வஞசகம் ஏதுமறியா ஒரு அப்புறானியின் வாழ்த்து அப்பு...

   நான் பச்சிளம் பாலகன் இல்லை ஆப்பு வைக்க.. ஏதுமறியா குழந்தை... அவ்..

  32. வாழ்த்துக்கள் புல்லட்...

  33. This comment has been removed by a blog administrator.
  34. //எனக்கு பின்னூட்டமிடுபவர்களின் பதிவுகளை நான் வாசிக்கத்தவறுவதுமில்லை.. பிடித்துப்போயிருந்தால் பின்னூட்ட தவறுவதுமில்லை.. ஓட்டளிக்க மறப்பதுமில்லை..//

   நான் பின்னூட்டம் போட்டாச்சு.. இனி உங்க பங்களிப்புத்தான் பாக்கி

   :D :D

  35. ஒரு வருட பூர்த்திக்கு வாழ்த்துகள் பவன் அல்லது புல்லட், எனது பல கவலையான நேரங்களில் பலரது பதிவை திரும்ப திரும்ப வசிக்து என் மன நிலையை மாற்றிகொள்வது உண்டு. அதில் உங்களது பதிவும் ஒன்று. ஒரு வருடமாக எங்களை மகிழ வைத்ததுக்கு நன்றிகள் பல கோடி.

   சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை உங்களது டுமீல் பதிவுகள்

  36. ஒ....வாழ்த்துக்கள் புல்லட் தொடர்ந்து கலக்குங்கள்... உங்கள் நகைச்சுவையான எழுத்து பாணிதான் உங்கள் பலம் இந்த பதிவு கூட பல இடங்களில் உதடுகளில் சிரிப்பை கொண்டு வருகிறது...

  37. வில்லு பார்க்க பொய் பல்லு போன கதையில் இருந்து உங்கட ப்ளாக் வாசிக்க தொடங்கினான். இன்று வரை நல்ல எழுதுறீங்க .... தொடரட்டும் உங்கட பணி

  38. வாழ்த்துகள் புல்லட்...சென் ஜோன்ஸ் பற்றிய பதிவில் இருந்து உங்களுக்கும் எனக்கும் அறிமுகம்...:-) எங்கட பேச்சு வழக்கில் அடிச்சு விடும் பகிடிகள் தான் உங்கள் ++....தொடர்ந்து அடிச்சு விடுங்கள்...:-))

  39. உனக்கு இன்னும் கொழுப்பு போகேல்லை.. வாழ்த்துக்கள் இடுப்பை முறிக்காமல் இருப்பதற்கு... இன்டைக்கு ஒரு வருசம் என்டு தெரியாமல் கொஞ்சமல்ல நல்லாவே கடிச்சு மெயில் போட்டுட்டன்.. சகிச்சுக்கொள்

  40. இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியேலயே.... சும்மா நய்யு நய்யு எண்டுகொண்டு....

  41. FUCK OFF LOOSU.. I think I should not waste talking to Loosu Like u.

  42. வாழ்த்துக்கள் புல்லட் நீங்கள் மேலும் மேலும் சிறக்க! :)

  43. //முகிலினி said...
   FUCK OFF LOOSU.. I think I should not waste talking to Loosu Like u. //

   Called me?
   I think u have to study something how to behave in a public place.
   Right?
   Fuck off may not be bad as the first part means, but it's still a vulgar, a very very ruse way to say get lost...
   U r Tamil know? Can't u type it in Tamil?
   (I don't like to reply u in Tamil, when u have talked in English.)
   So u cannot get those right when u speak in English.
   Behave like a human being....
   Do not try to create a scene....
   Right?
   Get lost my dear sister....

  44. வாழ்த்த்துக்கள் புல்லட்

   உங்கள் சேவை நாட்டுக்கு தேவை....சிரிக்க.... சிந்திக்க...


   //பங்குச்சந்தை ரங்கன்//

   அது அப்பாவின் பெயர்

   நான் பங்குச்சந்தை அச்சு

  45. வாழ்த்துக்கள் புல்லட்.

   புல்லட் என்ற நபருடன் எனக்கு முதன் முதலில் தொலைபேசி மூலம் தான் தொடர்பு ஏற்பட்டது. தொலைபேசியில் பேசும் போது மொரட்டுவ எஞஞியர் பொடியன் ஆகவே அடக்கமாக அறிவாக இருப்பான் என நினைத்துத்தான் மரியாதையுடன் பேசினேன்.

   பின்னர் எங்கள் வரலாற்று ஏடுகளில் பதிக்கபடவேண்டிய நான் புல்லட்டைச் சந்தித்த இடம் நளபாகம் முன்னால். சிறிது நேரம் பேசியதுமே கவனித்துவிட்டேன் பொடியன் சரியான கொமடியன் கவனமாகத் தான் வார்த்தைகளை விடவேண்டும் என. முதல் தடவை என்னைச் சந்திக்கும்போதே என்னைக் கலாய்க்கத் தொடங்கியவன் இன்றைக்கும் தொடருகின்றான்.

   புல்லட்டின் எழுத்தில் இருக்கும் நக்கல், நளினங்கள் நேரடியாக கதைக்கும் போதும் இருக்கும். அன்றைக்கு தொடங்கிய நட்பு எத்தனையோ ரணகளமான விடயங்கள் வரை தொடர்கின்றது.

   புல்லட்டின் எழுத்தில் பலருக்கும் பிடித்தது சீரியசான விடயத்தையும் நகைச்சுவையாகச் சொல்வது. இந்தப் பதிவில் கூட சீரியசாக தன்னுடைய ஒரு வருட பூர்த்தியை அறிவித்தவர் இறுதியில் தன்னுடைய படத்தை பிரசுரித்து சிறந்த நகைச்சுவையாக மாற்றிவிட்டார்.

   கர்ணனுக்கு எப்படிக் கவசகுண்டலம் பிரியாமல் இருக்குமோ அதேபோல் புல்லட்டிற்க்கும் கூலிங் கிளாஸ் இரவில் கூட பிரியாமல் இருக்கும்.

   என் அன்புத் தம்பி, இனிய நண்பர் புல்லட்டின் ஒரு வருட பூர்த்தியை பாராட்டி விரைவில் சகோதரி கும்குமுதா என் சார்பில் கவிதை எழுதுவார். புல்லட்டைப் பாராட்டி ஒரு கவிதை எழுதலாம் என நினைத்தேன் ஆனால் ஏன் வீண் வில்லங்கம் என விட்டுவிட்டேன்.

   வாழ்த்துக்கள் மை டியர் ஸ்வீட் ராஸ்கல்.

  46. This comment has been removed by the author.
  47. Check Oxford for the ref... And sister????? Please!!!!!!!!!! I dont want a jerk to even address me as sister for god sake.

   U started the scene. I saw you commenting abt me under Shandru anna's blog as well and that really annoyed me. You are talking about human behaviour. MY FOOT !!!!

   Lastly, Its my wish to write in English. Who the hell are you to tell me to type in Tamil.

   Again JUST FUCK OFF !!!!!!!

  48. வாழ்த்துக்கள் புல்லட்..

   வில்லுப் பார்க்கப் போன உங்க சொக்கக் கதையிலிருந்து வாசிக்க ஆரம்பித்து உங்கள் பதிவுகளின் ரசிகனானவன் நான்..
   உனது இயற்கையான நகைச்சுவை,நையாண்டிகளைப் பார்த்து சில சமயம் பொறாமை கூட வருவதுண்டு.. :)

   அறிவியலும்,அரசியலும், நக்கல்,நையாண்டிகளும், சமூக உணர்வும் கூட நிறைந்திருக்கும் நடமாடும் களஞ்சியம்.. (வழமையான வாருதல் இல்லை :))

   எங்களுக்கிடையில் நட்பையும் தொடர்பையும் ஏற்படுத்தித் தந்த பதிவர் சந்திப்புக்கு நன்றிகள்.. :)

   பதிவுலகம் பற்றி யதார்த்தமாய் சொன்னது சிந்திக்க வைத்தது..
   ரசித்தேன்..

   முன்பு புஸ புல்லட் புராணம் தந்த மகிழ்ச்சி உமக்கு நினைவிருக்கலாம்.. இந்த ஒரு வருடப் பூர்த்தியையும் அப்பிடி ஒரு புராணம் மூலமாகக் கொண்டாடுவோமா? ;)

  49. இன்னொன்று மறந்திட்டேன்..
   உங்கள் அந்த அரசியல் ஆசை, 'அந்தக்' கட்சிக்கான விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டேன்.. ;)
   அடுத்த தலைவர் நீங்க தான்..

   அதுக்கு முதலில் உங்களது முன்னைய சமூக நலன் பதிவைக் கருத்திலெடுத்து 'கலாசாரக் காவலன்' என்ற படத்தைப் பெருமையுடன் வழங்குகிறோம்..

   புல்லட் பாண்டி நலன்புரி அமைப்பு.. ;)

  50. //LOSHAN said...

   முன்பு புஸ புல்லட் புராணம் தந்த மகிழ்ச்சி உமக்கு நினைவிருக்கலாம்.. இந்த ஒரு வருடப் பூர்த்தியையும் அப்பிடி ஒரு புராணம் மூலமாகக் கொண்டாடுவோமா? ;)//

   நான் ரெடி அண்ணே புல்லட்டிற்க்கா ஒரு கவிதையே எழுதிவைத்திருக்கின்றேன்.

  51. //அதுக்கு முதலில் உங்களது முன்னைய சமூக நலன் பதிவைக் கருத்திலெடுத்து 'கலாசாரக் காவலன்' என்ற படத்தைப் பெருமையுடன் வழங்குகிறோம்.. //

   வாழ்க வாழ்க....

   எண்டாலும்,
   //புல்லட் பாண்டி நலன்புரி அமைப்பு.. ;) //

   சங்கப் பெயரை அனுமதியின்றிப் பயன்படுத்த வேண்டாமென்று அன்பாகக் கேட்குடு் கொள்கிறோம்...

   --
   புல்லட் பாண்டி நலன்புரி அமைப்பு - மக்கள் பிரிவு.

  52. இந்த நேரத்திலும் எங்கே இருந்தடா கிளம்பி வர்றீங்க?

   //புல்லட்டிற்க்கா ஒரு கவிதையே எழுதிவைத்திருக்கின்றேன்.//
   ஆகா வந்தி கவிதை எழுதிட்டாராம் டோய்.. ஓடுங்கடா....


   //புல்லட் பாண்டி நலன்புரி அமைப்பு - மக்கள் பிரிவு//
   என்னாது மக்கள் பிரிவா? அப்போ நாங்க என்ன மாங்காய் பிரிவா?

  53. //அப்போ நாங்க என்ன மாங்காய் பிரிவா? //

   இன்னொருத்தன் வந்து தேங்காய்ப் பிரிவு என்பான்; அதற்கொருத்த்ன் வந்து சிரட்டைப் பிரிவு என்பான்.

   ஈற்றில் வந்தி இங்கேயும் சொ.செ.சூ. வைப்பார்....

   இதுதானே உங்கள் எண்ணம் லோஷனார்..

  54. //LOSHAN said...
   இந்த நேரத்திலும் எங்கே இருந்தடா கிளம்பி வர்றீங்க?//

   ஹா ஹா....
   உங்கள் தொனி புரிகிறது... ஹி ஹி...

   //புல்லட்டிற்க்கா ஒரு கவிதையே எழுதிவைத்திருக்கின்றேன்.//
   ஆகா வந்தி கவிதை எழுதிட்டாராம் டோய்.. ஓடுங்கடா....//

   நிக்காம ஓடு ஓடு எண்டுறீங்களா?


   //புல்லட் பாண்டி நலன்புரி அமைப்பு - மக்கள் பிரிவு//
   என்னாது மக்கள் பிரிவா? அப்போ நாங்க என்ன மாங்காய் பிரிவா? //

   அதப்பற்றி எங்களுக்குத் தெரியாது...
   மங்களமானவர் புதுசா இப்பிடி ஒண்டு ஆரம்பிக்கும்போது மற்றவங்கள் யாரும் இப்பிடி 'அப்ப நாங்க என்ன சு கட்சி மாங்காப் பிரிவோ?' எண்டு கேட்டாங்களோ?

  55. ஆகா நாங்கள் வெகு விரைவில் வந்தியை சேதாரமில்லாமல் காக்கும் அமைப்பு ஒன்றை நிறுவியே ஆகவேண்டும் போல இருக்கே? ;)

   எங்கே அடித்தாலும் அந்த மனுஷன் மேல் போய் விழுதே..
   இவரை'கலைஞர்' என்று அன்றொரு நாள் நான் சொன்னது தப்பே இல்லைப் போல..

  56. புல்லட் ஒரு முழுநேர அரசியல் வாதி ஆனால் கங்கோன், நீ தான் கொ.ப. செ என்று முன்பதிவு செய்து விட்டாயா?

   மங்கள ஆரம்பித்ததே மாங்காய் பிரிவு தானே.. என்ன அனார்கலி அவர் பக்கம் இருக்கவில்லை.. ;)

  57. // LOSHAN said...
   புல்லட் ஒரு முழுநேர அரசியல் வாதி ஆனால் கங்கோன், நீ தான் கொ.ப. செ என்று முன்பதிவு செய்து விட்டாயா? //

   முன்பதிவு கட்டாயமாக செய்ய வேண்டுமா? தானாக வந்து சேரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.... :P

   //மங்கள ஆரம்பித்ததே மாங்காய் பிரிவு தானே.. என்ன அனார்கலி அவர் பக்கம் இருக்கவில்லை.. ;) //

   அதெப்பிடி உங்களுக்குத் தெரியும்?
   அவங்க இருந்தாங்க, ஆனா இருக்கேல.... ;)

  58. சரி சரி சண்டை பிடிக்காதிங்கோ...

   லோசன் அண்ணா உங்களுக்கு "அரசியல் பிரிவு"

   வந்தி அண்ணருக்கு "இலக்கிய பிரிவு"

   ஆதிரை அண்ணருக்கு "இடர் முகாமைத்துவம் & புலம்பெயர் அலுவல்கள்"..

   "புல்லட் பாண்டி - மகளிர் அணியைப்" பற்றி நான் பேச வரேல...

  59. //Thinks Why Not said...
   சரி சரி சண்டை பிடிக்காதிங்கோ...

   லோசன் அண்ணா உங்களுக்கு "அரசியல் பிரிவு"

   வந்தி அண்ணருக்கு "இலக்கிய பிரிவு"

   ஆதிரை அண்ணருக்கு "இடர் முகாமைத்துவம் & புலம்பெயர் அலுவல்கள்"..

   "புல்லட் பாண்டி - மகளிர் அணியைப்" பற்றி நான் பேச வரேல... //

   யோவ்... (ஹி ஹி... மன்னிக்கவும்...)
   கன்கொன் எங்க?

   (ஆகா.... திரும்பவும் சுபா அண்ணான்ர 400 பின்னூட்டம் மாதிரிப் போகுதோ?)

  60. நானும் அரசியலுக்கு வருகிறேன் எனக்கும் ஏதும் பதவி தரலாமே.

  61. //லோசன் அண்ணா உங்களுக்கு "அரசியல் பிரிவு"
   //
   என்னாது அரசியலா? எனக்கா?
   அரிசி இயல் எண்டால் தாங்கோ நான் ரெடி.. ;)

   //வந்தி அண்ணருக்கு "இலக்கிய பிரிவு"//
   இலக்கியத்தில் கடிதம் எழுதலும் வரும் தானே? ;)


   //ஆதிரை அண்ணருக்கு "இடர் முகாமைத்துவம் & புலம்பெயர் அலுவல்கள்"../
   இடர் முகாமைத்துவம் என்றால் பிச்சை போடுவதும் அடக்கமோ? ;)

   //"புல்லட் பாண்டி - மகளிர் அணியைப்" பற்றி நான் பேச வரேல//
   இதாண்டா எஸ்கேப்பு.. ;)

  62. //அரிசி இயல் எண்டால் தாங்கோ நான் ரெடி.. ;) //

   ஏதோ குறைக்கப் போறன் எண்டு யாரோ ருவீற்றின மாதிரி இருந்தது? ;)

  63. ம்ம்ம்ம்.. ஆனா முடியலையே..

  64. //LOSHAN said...
   ம்ம்ம்ம்.. ஆனா முடியலையே.. //

   உங்களக் குரவா ஏற்றுக் கொள்ளலாம் எண்டா இப்பிடி ஒருநாளில முயற்சியைக் கைவிட்டு 'மாமனிதர்' பட்டத்தை மறுத்துவிட்டீர்களே அண்ணா....

   (எதுக்கும் சுபா அண்ணா அண்ணாவின் 400 பின்னூட்டங்கள் ஞாபகம் வந்து அடிக்கடி கிலியை வரச் செய்வதால் நான் சென்று வருகிறேன்.... நான் அப்பாவி....)

  65. அட நாசமாப்போக.. ஒரு படத்தை பாத்துட்டு வந்தா அறுபத்தி சொச்ச கமெண்ட் எண்டு காட்டுது.. நானும் ஏதோ இந்தியாச்சனமெல்லாம் உள்ள புந்திட்டோ? இல்லாட்டி ஏதாவது ஜனாதிபதி வேட்பாளர்கள் எனக்கு பின்னூட்டினவுயோ (இப்ப இதுவும் ஒரு முறையாம் ( உங்க பதிவு நல்லாருக்கு அப்பிடிுயே எனக்கும் ஓட்டிடுங்க )? எண்டு குழம்பிட்ன்.. கும்மியா ? கொஞ்ச நேரத்தில கோழி கூவப்போகுது.. கும்மியாம் கும்மி..

   நடுவில கொஞ்சம் பீட்டர் பறந்திருக்கு பிறகென்ன? :P

  66. எங்கள் கும்மி கட்சி மீண்டும் புத்துயிர் பெற்றுவிட்டது... விரைவில் எங்கள் பணிகள் ஆரம்பம். புதிய உறுப்பினர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.

  67. நன்றி அண்ணாமலையான் சேர்..

   எகொசார்.. முதல் மறையா வந்திருக்கறீங்க.. நன்றி..நிச்சயம் பங்களிப்பை எதிர்பாருங்கள்..

   யோவாய்ஸ்… உங்கள் பின்னூட்டம் நெகிழவைத்தது.. உங்கள் கவலைகளின் சந்தோசப்படுத்தியதற்காக எனக்கு ஒரு நிறைவு உணர்வு வருகிறதுஃஃ நன்றி

   பாலவாசகன்.. நன்றி.. பலத்தை மெருகூட்ட உங்கள் எல்லோரினதும் அன்பு தொடர்ந்தாலே போது;ம்..

   சிறுவன்.. நன்றி.. உங்கள் விஞ்ஞான விளக்க கேள்விகள் எனக்கு பிடித்தவை ..

   டொன்லீ.. உங்கள் சந்திப்பு குறித்தான பதிவுகளில் காணப்படும் நகைச்சுவையை விடவா நான் எழுதிவிடப்போகிறேன்..? நன்றி

   முகிலினி.. நன்றி.. உங்கள் நீண்ட மடல் கிடைத்தது.. படித்து புளகாங்கிதம் அடைந்தேன்..


   யாழினி.. நன்றி உங்கள் வாழ்த்துக்கு

   அச்சு .. நான் பார்த்து பிரமிக்கும் பதிவர்களில் நீங்கள் ஒருவர்.. பதிவுலகை உங்கள் தொழில் வாழ்க்கைக்கும் பயன்படுத்தும் பொக்கு அபாரமானது.. மன்னிக்கவுமு; ரங்கன் என்பது பதிந்து விட்டது.. நன்றி உங்கள் வாழ்த்துக்கு..

   வந்தியண்ணா.. நெகிழ வைத்த பின்னூட்டம்.. பின்னால் கவிழ வைத்த ‘பின’;னூட்டம் ..
   மிக்க நன்றி அண்ணன்..


   லோசன் அண்ணா.. உங்கள் பின்னூட்டம் கண்டும் நெகிழ்ந்தேன்.. உங்கள் எளிமைக்கு ஒரு ஒப்பீடே இல்லை.. நன்றி நன்றி.. இன்னொரு புராணம் போட்டால் புராணநாயகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்.. புராணம் எழுதியவரை இந்தியா வரை ராமர்பாலத்தால் துரத்திச்சென்று போட்டுத்தள்ளியதற்காக.. (அண்ணே .. உண்மையா குடுத்திட்டியளோ? அப்படீன்னா உடனடியா புல்லட் புறூவ் ஜக்கட் வாங்கணும் புல்லட்டுக்கு , அதுக்கு பிறகு அறிக்கை விடுறதுக்கு கொ ஞ்ச டெம்லேட் கொப்பியடிக்ககணும்.. அப்புறம் யாராவது மண்டையப்போட்டா அதில எப்பிடி சனத்தை மடக்கணும் எண்டு ப்ரக்டிஸ் எடுக்கணும் .. சோ ஐ ஆம் கொய்ங் டு பி வெரி பிசி யு நோ..)

  68. உங்கள் பொன்னான வாக்குகளை வீணடிக்காது நல்லவர், வல்லவர் நாலும் தெரிந்த ஒருவருக்கே இடுங்கள். இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

  69. நகைச் சுவை பதிவு தொடரட்டும் வாழ்த்துக்கள் புல்லட்.

  70. சிந்து கபேயின் காலை நீ,
   நளபாகத்தின் மாலை நீ,
   சைனீஸின் மதியம் நீ,
   நீ எழுதுபவை மற்றவர்களுக்கு புல்லட்,
   பெண்களுக்கு கடுப்படித்த மன்னன் நீ,
   வில்லுப் பார்த்து நொந்து போன தளபதியும் நீ
   காதலில் உன் அண்ணன் வந்தி போல் நீயும் ஒரு அப்பாவி
   உன்னைக் கெடுக்க நினைப்பதோ உன் நண்பன் கடலேறி
   கறுப்பு நமீதாவின் ரகசிய சினேகிதன் நீ
   புளொக்கில் நீ செய்யும் குறும்புகள் ஹைக்கூ
   ட்விட்டரில் வைப்பதோ ஆப்பு,
   பேஸ்புக்கில் பெண் நண்பிகள் இல்லாத இன்னொரு வந்தி நீ,
   எலக்ரோனிக்ஸ் புல் டைம் ஜொப்,
   எலி பிடிப்பது பார்ட் டைம் ஜொப்,
   விடியல் நாயகனிடம் பரிசு பெற்ற டரியல் நாயகன் நீ
   பரியோவானின் தவழ்ந்து
   மொரட்டுவையில் வளர்ந்து
   நெடுந்தீவில் குதிரையால் விழுந்து
   அமெரிக்காவில் கைபிடிக்கும் கனவானே வாழ்க நீ
   என் அன்புத் தம்பி புல்லட்டே நீ என்றென்றும் வாழ்க‌

   பின் குறிப்பு : கவிஞர்கள் மன்னிக்கவும்

  71. @ வந்தியத்தேவன் அண்ணா....

   தெய்வமே....

   நீங்க எங்கயோ போய்ற்றீங்க.......

   கலக்கல் அண்ணா.......

   எண்டாலும் அவர் என்ர இரகசிய சினேகிதன் எல்லாம் இல்ல....
   வதந்தியக் கிளப்பப்படாது.... :P

  72. @வந்தியத்தேவன்
   // கறுப்பு நமீதாவின் ரகசிய சினேகிதன் நீ//

   @கனககோபி
   // எண்டாலும் அவர் என்ர இரகசிய சினேகிதன் எல்லாம் இல்ல..//

   ஃ கறுப்பு நமீதா = கனககோபி

  73. // ஆதிரை said...
   @வந்தியத்தேவன்
   // கறுப்பு நமீதாவின் ரகசிய சினேகிதன் நீ//

   @கனககோபி
   // எண்டாலும் அவர் என்ர இரகசிய சினேகிதன் எல்லாம் இல்ல..//

   ஃ கறுப்பு நமீதா = கனககோபி //

   எலி பிடிக்கிற நேரத்தில ருவிற்றரில நிண்டிருந்தா அது நான்தான் எண்டு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்......

  74. This comment has been removed by the author.
  75. நன்றி மாதேவி அக்கா!

   வந்தியண்ணா.. கும்குமுக்காவுக்கு போட்டியா கிளம்பிட்டீங்குளோ? நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..

   பேஸ்புக்கில் பெண் நண்பிகள் இல்லாத இன்னொரு வந்தி நீ //

   கங்கோன்: வந்தியத்தேவரே ! நீர் சொன்ன பாட்டில் ஒரு பொருட்குற்றம் இருக்கிறது..

   வந்தி: என்னது என்பாட்டில் குறை கண்டீரா? எஙகே ஒரு முறை என் மூஞ்சையை பார்த்துச் சொல்லும்..

   கங்கோன்: ஆ! அய்யோ!மங்களபோல் மையமுடைய மஜாப்பதிவர் நீருமாகுக.. ஆனால் ,மூஞ்சையென்ன மூஞ்சை ? உம் தொப்பையைக்காட்டினும் குற்றம் குற்றமே..

   வந்தி: நமீதாஆஆஆ!

   புஸ்ஸ்ஸ்ஸ்....

  76. வாழ்த்துக்கள் அண்ணா, தொடர்ந்தும் எழுதுங்கோ...

  77. வாழ்த்துகள் புல்லட் அண்ணா

  78. அனைத்து நண்பர்களுக்கும்
   பொங்கல் வாழ்த்த்துக்கள்

  79. வாழ்த்துக்கள், இன்னும் பல ஆண்டுகள் உங்கள் புல்லட்டுகளால் தாக்குதல் செய்ய வேண்டும். நான் முதல் முதல் பதிவுலகிலை, தேடி வாசிச்சு சிரிச்ச பதிவுகள் உங்களுடையவை தான்....

   புல்லட் அண்ணா பதிவுலகில் மட்டுமல்ல இசையிலும் பெரிய மேதை என்பது பலருக்குத் தெரியாது, கிட்டார், புல்லாங்குழல் வித்துவான்.
   தொடர்ந்து எல்லாத் துறையிலும் சிறக்க வாழ்த்துக்கள்.

   அது சரி நான் எழுதுற பினாத்துவம், நீங்கள் சாருநிவேதிதாவை தேடி வாசிக்கிற அளவுக்கு காயப்படுத்தியிருக்குதா ...அடக் கடவுளே... இந்தப் பாவத்துக்கு ஏதாவது குளத்திலை மூழ்கப் போறன். பதிவுலகமே மன்னிக்கவும் !

  80. //அது சரி நான் எழுதுற பினாத்துவம், நீங்கள் சாருநிவேதிதாவை தேடி வாசிக்கிற அளவுக்கு காயப்படுத்தியிருக்குதா ...அடக் கடவுளே... இந்தப் பாவத்துக்கு ஏதாவது குளத்திலை மூழ்கப் போறன். பதிவுலகமே மன்னிக்கவும் ! //

   இதுக்கென்னத்துக்கு மன்னிப்பு?
   பதிவுலகம் கொண்டாடப் போறதாக் கேள்விப்பட்டன்...

   அதுவும் லெமன் பவ் பார்ட்டியாம்...
   முடியுமானால் கலந்து கொண்டுவிட்டு அந்த நல்ல காரியத்தைச் செய்யவும். ;) :P

  81. This comment has been removed by the author.
  82. Congratz Bullet.

   Write more and more articles creamed with your humuor . I and my friends always talk about the skill you have , to make others laugh through your writing , Itz just amazing.. Moreover, I like your replies to the feedbacks. They are really funny and smart.

   Anyway, I'm a fan of Bullet.. (Not to that funny guy sitting over there :P . Wwhy did you put that foto there? eew! :P ) Good Luck.

  83. வாழ்த்துக்கள் அண்ணா, தொடர்ந்தும் பல மொக்கை, நகைச்சுவை பதிவுகளை தரவும் ;-)

  84. நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று தான் உங்கள் புளொக் ஐ வாசிக்கக் கிடைத்தது.

   நான் மறந்து விடுங்கள் என்று சொன்னது கும்குமுக்கு எனும் பெயரை மட்டுமே....... இங்கே எந்த உள் அர்த்தமும் இல்லை இல்லை இல்லை

   வந்தி அண்ணா கவிதை அருமை