குடி குட்டியைக் கெடுக்கும் ..





    கம்பஸ் படிக்கும்போது தண்ணிப்பார்ட்டி என்றால் எல்லாருக்கும் ஒரே சந்தோசம்.. எனக்கும்தான் .. ஆனால் மேட்டர் என்னவெண்டால் நான் குடிப்பதில்லை.. பிறகு என்ன சந்தோசம் என்று கேட்கிறீர்களா? இருக்குங்க..
    ஒரு காவாசிப்போத்தல் உள்ள போனதும் ஹீரோ தன்ட ரகசிய மேட்டரெல்லாம் அவுட்டு விட்டுவார் பாருங்க.. நடுவில அவர் வாந்தி எடுக்கிறாரோ இல்லியோ கேட்டுட்டிருக்கிற நீங்க எடுத்தாலும் எடுப்பீங்க.. அவ்வளவு நாறக்கதையெல்லாம் சொல்லுவார் ..
    மற்றவன் ரகசியத்தை அவன் வாயாலயே கேக்கிற ருசியிருக்கே ..
    அட அனுபவிச்சதில்லையா?
    உடனடியா ஒரு தண்ணிப்பார்ட்டிய அரேஞ்ச் பண்ணுங்க பாஸ்.. வாழ்க்கையில பாதிய மிஸ் பண்ணிட்டீங்க..


    நான் தண்ணி அடிக்காததுக்கு ஒரே காரணம் வெளிப்படையா சொல்வதானால் நம்ம கிட்டயும் நெறய்ய ரகசியம் இருக்கு..

    ரகசியம் இல்லாதவன் எவன் பாஸ் ? எல்லாமே ஓப்பினா இருக்கிறது இந்த பொல்லாத சமூகத்தில நல்லதுக்கில்லை.. சில விடயங்களை எல்லோரோட நன்மைக்காகவும் நம்ம மனைவி கிட்டேயா பெற்றோர் கிட்டயோ கூட மறைச்சித்தானாகணும்..

    ஒருத்தனுக்கு கம்பசில குப்பை கூட்டுற ஆயாவுல ஒரு கண்ணு இருக்கலாம்.. அதை குடிச்சிட்டு வெளில சொன்ன என்ன ஆவுறது.. அடுத்தநாள் லெக்சரரின்ட மண்டைலயே போஸ்டர் அடிச்சு ஒட்டிடுவாங்க.. அண்ணாவோட ஆயா கழிப்பறையில் கசமுசான்னு.. ஆகவே அந்த ரகசியங்கள் எவ்வளவு சின்னதா இருந்தாலும் அதை நமக்குள்ளயே வச்சிருக்கும் போதுதான் நாம நாமாத்தெரிவம்.. இல்லேன்னா எவனப்பாத்தாலும் மனசுக்க ஒரு குறுகுறுப்பாயே இருக்கும்..



    அப்புறம் குடி ஈரலை தின்னும் , கான்சர் வரும் அப்புடி இப்பிடின்னு எல்லாரும் மிரட்டினாலும் எல்லாரும் குடிக்கத்தான் செய்யுறாங்க.. ஏன்?
    சிலரு கவலைய மறக்க என்கிறாங்க. சிலர் சந்தோசமா இருக்க என்கிறாங்க.. இதெல்லாத்தையும் தீவிரமா ஆராயத்தான் நான் தண்ணிப்பார்ட்டியளுக்கு போவேன்..
    அங்கின பைட்சா கொண்டுவாற மிக்சர் , கோழிப்பொரியல் ,முட்டைப்போரியல் , உப்பு பிஸ்கட் அது இதுன்னு எல்லாத்தையும் ஒரு புடிபுடிச்சவாறே குடிமக்களை அவதானிக்கிறது ரொம்ப சுவாரசியமா இருக்கும்.


    தண்ணி அடிச்சாப்புறம் அவன் ஒரு குழந்தைப்பிள்ளை என்று ஒரு அங்கீகாரம் வழங்கப்படுகிறது .. ஏதோ சுயநினைவுக்கு தெரியாம செய்யுறான் எண்டு எல்லாரும் கதைப்பார்கள் . தங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பால் போக அனுமதிக்கும் அந்த பழக்கத்தில் , மனதை ஒரு லூசா விடும் தன்மைதான் மன இறுக்கத்தை தளர்த்தி சந்தோசத்தை தருகிறது என நினைக்கிறேன்..
    இது பின்விளைவுகள் சரியில்லாத ஒரு ஆறுதல் ..
    ஆனால் அந்த ஆறுதலுக்கு அடிக்ட் ஆகிவிட்டால் பின்னர் மீள்வது கடினம்..
    செம கேசுகளை பாத்திருக்கேன்பா .. குடிக்கு நியு அட்மிசன்சுகளா! கவனம்..!

    அப்புறம் நான் தண்ணிப்பார்ட்டிகளுக்கு போவதற்கு இன்னொரு காரணம் இருக்கு.. அதுதாங்க சமூக சேவை..


    போகும்போது ஆமிக்காரன் பாண்ட் வாசிக்கப்போவது போல லெப்ட்ரைட்டில் போவபர்கள் வரும்பொது நல்லூர்க்கந்தனுக்கு நாயுருவிப்பத்தைக்குள் பிரதட்டை அடித்துக்கொண்டு வருவார்கள்.. அதிலும் எவானவது பூட் வாங்கின கேசெண்டால் (அதுதாங்க லவ் பெயிலியர் ) அவள்தானென்று நினைத்து எங்காவது மரம் வழிய ஏறிவிடுவார்கள்.. அது பிறகு பெரிய சிக்கலாகிவிடும்.. விக்கிரமாதித்தன் பேயை மரத்தில பிடிச்ச மாதிரி கீழ நிண்டு புதுசா ஏதாவது கதை சொல்லித்தான் ஆளை கீழ கொண்டாரணும்..

    அண்மையில நான் நண்பர்களோட நெடுந்தீவுக்கு இயற்கையை ரசிக்க போனபோது இரண்டாம் நாள் ஏழேட்டுக் கலரிப்போத்தலோட வந்திறங்கிவிட்டாங்கள் சில இம்போட்டட் குடிமக்கள் .. நாம செட் செய்த இடத்த கூட்டிவந்து இருந்திட்டு , வீட்டு ஓனர் அன்டி சொன்ன கண்டிசன்களை சொன்னோம்..

    “மச்சான் வீட்டில தண்ணிணடிக்கப்படாது.. இரவில சத்தம் போடப்படாது.. வெளில தண்ணி சாப்பிட்டா அமைதியா வந்து படுத்திடணும்.. “
    ஆட்டினாங்களய்யா ஆட்டு தலையை எல்லாரும் ஒரேயடியா..
    பலிக்கு விட்ட ஆட்டையல்லாம் லைனில விட்டு மஞ்சத்தண்ணி ஊத்தினாப்போல..
    நம்பினது நம்ம பிழ ராசா..

    ரெண்டு கிலோமீட்டர் தள்ளிப்போய் கடற்கரைல ஒரு ஆலமரத்தடியில பின்னெரமா உக்காந்தோம்.
    நம்ம செட்டு ( அதுகள் தண்ணி தொடாத கேசுகள்..) கொஞசம் தள்ளி கடலை பாத்திட்டு இருக்க , இவங்கள் தொடங்கிட்டாங்கள் திருவிழாவை..
    குடிக்கத்தொடங்கினாப்பிறகு பண்ணின ஆர்ப்பாட்டத்தில ஊர்ச்சனமும் ஈபிடிபிக்காரரும் சிஐடியளும் எண்டு மளமளவெண்டு வந்து சேந்திட்டாங்கள்.. நமக்கெல்லாம் ஒவ்வொரு CIDயும் வரும் பொது விஜய் வருமாப்போல குலைநடுங்குது துடிதுடிக்குது..
    ஆனா அவங்களோ ” நாங்கள் எல்லாரும் ஒரே நாட்டின் குடிமக்கள் ” எண்டு , மொழி , அரசியல் , இனம் எல்லாம் கடந்து ப்ரெண்ட்சாயிட்டாங்கள்..
    நம்ம கூட்டணி தலைல கைய வச்சவாறு இருந்துட்டு , இரவு வருவதாக கூறிவிட்டு இடம் சுற்றிப்பார்க்க புறப்பட்டுவிட்டொம்..
    இரவு மறுபடி வந்து பார்த்தா , மற்ற எல்லாரும் போய்விட்டிருக்க, பாரின் ரிடேன்ஸ் எல்லாம் நிறை வெறியில் குதிரைச்சாணிக்குள் உருண்டு கொண்டிருந்தனர்..

    சரி , நம்ம நம்பி வந்ததுகளை கூட்டிட்டு போவமெண்டு எல்லாரையும் கைத்தாங்கலா கூட்டிட்டு போனால் வீடு வரும் வரையும் 2 கிலோமீட்டர் தூரமும் ஒரு சத்தமும் போடாமல் வந்தாங்கள்..
    எங்களுக்கும் பயங்கர சந்தோசம் “அடடா நல்ல குடிகாரர்களாயிருக்காங்களே. !.இருந்தா இப்படியிருக்கணும்! போகும் போது ஓட்டோகிராபும் வாங்கணும் எண்டு ஞாபகப்படுத்திக்கொண்டேன்.. ஆனால் எல்லாம் அந்த சொத்தை (குடிமகன் ஒருவனின் பட்டப்பெயர்) அந்த கறுத்த கிடாய் ஆட்டைக்காணும் வரைதான்..


    அடுத்தநாள் விருந்துக்கு அடிப்பதற்கென்று ஒரு ஆட்டை வாங்கி வாசலில் கட்டியிருந்தார்கள்..
    முதலில் அதை ஒரு காமப்பார்வை பார்த்த சொத்தை , அதற்கு முன்னால் போயிருந்து "இந்த ஆடு கத்தும் போது என்ட அப்பப்பா மாதிரியே " இருக்கெண்டு சொல்லி ஆட்டைக்கட்டிப்பிடித்தவாறு பெருங்குரலில் கதறி அழலானான்..

    அய்யய்யோ இதென்னடா இழவாப்போச்சு .. பக்கத்து வீட்ட ஓனர் அன்டி இருக்கிறாவே ! வந்தா சிக்கலாயிருக்கப்போகுதே” எண்டு நாங்கள் பதைபதைத்தோம்..
    அதுக்குள்ள எம் நண்பன் கோண்டா , சொத்தைக்கு ஆட்டின் வாலைக்காட்டி "அடேய் உன்ட அப்பப்பாக்கு வால் இந்த இடத்தையோ இருந்தது " எண்டு ஒரு கேள்வியைப்போட்டான்.. கடுமையாக குழம்பிய சொத்தை “பொறு மச்சான் வாறன்” என்று சிந்தித்த கப்பில் (gap) எல்லாரையும் விறுவிறுவென்று தூக்கி உள்ளே கிடத்திவிட்டோம்..

    எல்லாரும் தூங்கியாகி விட்டது.. ஒரு பதினொரு மணியிருக்கும்.. சுயிந்து (தண்ணிப்பார்ட்டி ஒருவன்) வந்து எம்மை தட்டியெழுப்பி “டேய் ஒரு பொறின் பொத்தில் இருக்கு மச்சான் வந்து ஒரு கம்பனி குடுக்கிறது “ என்று எல்லார் சாரத்தையும் உருவலானான்..
    இதென்னடா மறுபடி வம்பாப்போச்சு என்று கோண்டாவை அவர்களை மேய்க்க அனுப்பிவைத்தோம்.. அவனும் அவர்களை சத்தம்போடாமல் தண்ணியடிக்க மேற்பார்வை செய்து கொண்டிருந்தான்.. நாம் மறுபடியும் தூங்கலானோம்… அப்போதான் விலங்கம் புது உருவத்தில் வந்தது..

    12 மணிக்கு கிறிஸ்மஸ் கரோல் வந்து கொண்டிருந்தது.. இரு பாதிரியார்கள் , ஊர்மக்கள்; கொஞ்சம் , ஒரு கிறிஸ்மஸ் பாப்பா எண்டு தாரை தப்பட்டைகள் முழங்க ஒரு கேட்டுக்கேள்வியின்றி படலையை திறந்து கொண்டு உள்ளேயே வந்து விட்டார்கள்..

    என்னடா பிரச்சனை என்று வாசலுக்கு வந்த கோண்டா , கூட்டத்தை கண்டு திக்கித்து நின்றவேளை , கரோல்சை வரவேற்று டீ கொடுப்பதற்காக அன்டி நம் வீடு நோக்கி வருவதை கண்டதும் , “டேய் ! அன்டி வாறா ! எல்லாத்தையும் தூக்கி ஒளியுங்கடா” என்று அலறினான்..

    அவன் கத்தின கத்தலில நாங்களும் எழும்பி தண்ணியடிக்கிற பக்கம் ஓடினால் தண்ணிச்சாமான் எல்லாம் அதிலயே கிடக்கு .. ஆக்களைக்காணம்.. என்னடா வெண்டு பாத்தால் பின் வளவுக்குள , ஒருத்தன் கறிச்சட்டியை தூக்கிட்டு ஓட அவனுக்கு பின்னால மிச்ச எல்லாம் ஓடிக்கொண்டிருந்தது.. வாய்க்குள் வந்த வார்ததையெல்லாவற்றாலும் திட்டியபடி நாம் எல்லாவற்றையும் எடுத்து ஒளிக்கையில் , சேந்தன் குடிமக்களை பிடித்து இழுத்து வந்து விட்டான்..

    வந்த பாதிரியார்களில் ஒருவர் எல்லாரையும் பார்த்துவிட்டு ஏதோ தண்ணி தெளித்தார்.. பிறகு கைகொடுத்தார்.. அப்போது திடீரென்று உணர்ச்சிவசப்பட்ட சொத்தை , அவரை கட்டிப்பிடிச்சு “பாதர் பாதர் என்ட அப்பப்பாவுக்கு ஆமீன் குடுங்க பாதர்” எண்டு கத்த ஏனைய குடிமக்களெல்லாம் பாய்ந்து பாதர்களை கட்டிப்பிடித்து அழுதவாறு பிழிய ஆரம்பித்தனர்..

    பயந்து போன நாம் நடுவில புகுந்து அவர்களை விலக்கி விட்டோம் (சொத்தை 6.3 அடி உயரம் 110 கிலோ , சுயிந்து ஆறடி 103 கிலோ ; இன்னொரு ஒரு பத்து செக்கன் விட்டிருந்தா பாதர் பாக்குவெட்டில அம்பிட்ட பலாக்கொட்டையாகியிருப்பார் )

    விக்கித்து முழித்த அந்த குள்ள பாதர் கேட்டார்.. (சற்றேனும் மாற்றப்படவில்லை)
    “பக்தர்களே .. உங்கள் அனைவரிலும் பட்டை சாராயம் மணக்கிறதே.. அது என்ன ரகசியம்? “
    குறைக்கண்ணால் பார்த்தபடி குழறும் நாக்குடன் சொத்தை சொன்னான்
    “ அது ஒரு பரம ரகசியம் பாதர்..”

    உப்படி ஒரு சம்பாசணையை கேட்ட நான் நான் என்ன றியக்சன் குடுப்பது என்று தெரியாமல் விழிக்க , “நான் உங்களுக்கு காதில சொல்லுறன் பாதர் ” என்ற படியே பாதரை நோக்கி முன்னேறினான் சொத்தை..

    குளோக்கை தூக்கிப்பிடித்துக்கொண்டு பாதர் ஓடிய ஓட்டம் இன்னும் கண்முன் நிற்கிறது..

    சரி விடயத்துக்கு வருவோம்.. குடி பிள்ளை பாக்கியத்தையும் பாதிக்குதாம்.. புதுசா ஒருத்தன இந்த உலகத்துக்கு கொண்டு வந்து அவனையும் ஏன் கஸ்டப்படவேணும் எண்டு நினைக்கிறாக்கள் நன்கு குடிக்கவும்.. குடியால நரம்புத்தளர்ச்சி அது இது என்று ஏராளமான மூளை சம்பந்தப்பட்ட பல வியாதிகளும் வருமாம்..

    வீட்டில பிரச்சனை , பேசனாலிட்டியில் தாக்கம் என்று மனவியல் பாதிப்புகளும் வருமாம்..

    முடிவா சொல்லுறது என்னண்டா , மொத்தத்தில குடிக்காதவனுக்கு குடிகாரங்க ஒரு கோமாளிதான்.. உங்க ரகசியம் எல்லாம் அறிஞ்சு அதை நினைச்சு உள்ள சிரிச்சிட்டிருப்பாங்க.. ஆகவே கவனம்.. குடிக்காதவங்களை தவிர்க்கிறதிலும் பாக்க குடியை தவிர்க்கலாம்தானே? புகை போதை மாது போன்ற கெட்ட பழங்கங்களுக்குள் பிரவேசிப்பதற்கு முதலாவது படிக்கல் குடி என்பது என் கருத்து..

    உங்க பிள்ளைகளுக்கு சின்ன வயதில அப்பாதான் ஹீரோ.. ஹீரோவே தண்ணியடிச்சா ? அம்மா ஓடி வந்து “மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு” எண்டு சப்டைட்டில் போடமுடியாதுதானே? யோசிச்சு பாருங்க ..

    ஆகவே இன்னும் நீங்க குடிக்க ஆரம்பிக்காதவரா இருந்தீங்கன்னா என் சொல்லை கேளுங்க.. தற்போது குடிப்பவர்கள் கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்க..



    தவறினால் பிற்காலத்தில மனுசி பொட்டைப்பயலே என்று பேசும் போது குடி குட்டியை (குழந்தையை) கெடுக்கும் என்று நான் எழுதியதை ஒரு முறை ஞாபகப்படுத்தி பார்க்கவேண்டி வரலாம்.. :P வர்ட்டா !


    27 Responses

    1. நல்ல நகைச்சுவையாய் சொல்லிவிட்டு கடைசியில் நெத்தியடி அடித்து இருக்கிறீர்கள் புல்லட். சுவராசியமான பதிவு உண்மையுடன் சேர்த்து வாழ்த்துக்கள்..............!

    2. வழக்கம் போல நகைச்சுவை தூக்கல் அண்ணே, அப்படியே சொல்ல வந்த விடயத்தையும் சொல்லிட்டீங்க.

      தண்ணியடிச்சவன் அரசியல் கூடப் பேசிக்கொண்டு திரிவாங்கள் சிலநேரம்..ஹீஹீ

      //"அடேய் உன்ட அப்பப்பாக்கு வால் இந்த இடத்தையோ இருந்தது "//

      அறிவு பூர்வமான கேள்வி..:p

      பதிவு கலக்கல்...;)

    3. அண்ணே....

      என்னண்ணே.... இப்பிடி ஒவ்வொரு பதிவிலயும் 'கலக்கீற்றீங்கண்ணே....' எண்டு சொல்ல வைக்கிறீங்களே?

      பதிவு முழுவதும் இழையோடிய நகைச்சுவையையும் அதன் பின்னர் அதற்குள்ளிருந்த செய்தியையும் இரசித்தேன்...

      //மொத்தத்தில குடிக்காதவனுக்கு குடிகாரங்க ஒரு கோமாளிதான்..//

      அழகு வார்த்தைகள்....


      //தவறினால் பிற்காலத்தில மனுசி பொட்டைப்பயலே என்று பேசும் போது குடி குட்டியை (குழந்தையை) கெடுக்கும் என்று நான் எழுதியதை ஒரு முறை ஞாபகப்படுத்தி பார்க்கவேண்டி வரலாம்.. :P வர்ட்டா !//

      :)
      நான் இல்ல நான் இல்ல நான் இல்ல....


      அருமையான பதிவு..... :)

    4. "குடி குட்டியைக் கெடுக்கும்" சுவாரஸ்யத்துடன் கூடிய நல்ல பதிவு புல்லட்.

    5. //ஆகவே இன்னும் நீங்க குடிக்க ஆரம்பிக்காதவரா இருந்தீங்கன்னா என் சொல்லை கேளுங்க//

      கேக்குறன் பாஸ்...

    6. நல்லா அருமையா எழுதியிருக்கீங்க

    7. உண்மைதான் இந்த மதுவருந்தும் பழக்கம் ஆபத்தானது ஆனால் என்னவென்றால் இது மதுவருந்துபவனுக்கு ஒரு போதும் புரியப்போவதில்லை என்பது உண்மை. யாராவது வந்து மதுத் தடைச் சட்டம் கொண்டுவந்தால்தான் உண்டு!

    8. தலையங்கமே அசத்தல் புல்லட்
      குட்டிங்க லாயிக்கே புரியாது.

      தண்ணியடிக்கிரவனை கெட்டவன் என்று முடிவுகட்டும் பெண்கள் தண்ணியடிக்காத காமுகர்களிடம் பலியாகின்றனர். ஒருவனின் குணம் தண்ணி அடிப்பதில் இல்லை. அவன் ஆழ மனதை புரிந்து கொள்ள வேண்டும்.

    9. நல்ல அருமையாக நகைச்சுவையாக எழுதுறீங்க. மேலும் தொடருங்கள்

    10. "எவனோ ஆசுப்பத்திரிக்கால்வாயில பிறந்தவன்...!!!!"
      சார் என்ன இது.... கொஞ்சம் கூட இரக்கம் இல்லாம... இப்படி Gap விடாமல் சிரிக்க வைத்தால்.... ஏதாவது வருத்தம் வந்திடப்போகுது... இந்தவருஷத்தின் மிக முக்கியமான Taskகளில் ஒன்று உங்களிடம் ஆட்டோக்ராப் வாங்கிறது தான்.....!!!!! அப்படியே ஒரு போட்டோக்ராப்....!!!!!!! கலக்குறீங்க பாஸ்.. வாழ்த்துக்கள்.

    11. ஒரு பதிவை நான் இரண்டு தரம் வாசிக்கிறதே மிகக்குறைவு..... It has become one of my favorits. இப்ப நான்காவது தரம் வாசிக்கிறன். Once again.... வாழ்த்துக்கள்..!!!!!

    12. ஆக மொத்தத்தில புல்லட் அண்ணனுக்குள்ள நிறைய ஒளிஞ்சிருக்கு. (பல கெட்ட எண்ணங்கள்) அதால தான் தன் மனதுக்குள் இருப்பது வெளியில தெரிஞ்சிரும் என்கிற பயம்...
      ம்.....

      குடி குடியைக் கெடுக்கும்....... உண்மை சத்தியம்..

      ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்..

    13. நல்ல நகைச்சுவையாய் சொல்லிவிட்டு கடைசியில் நெத்தியடி அடித்து இருக்கிறீர்கள் புல்லட்.

      இல்லாட்டா மொக்கைப்பதிவர் என்று மீட்டிங் போட்டு சொல்லுறாங்களே ? வேறு என்ன செய்வது அக்கோய்! அடிக்கத்தான் வேண்டும்..

      சுவராசியமான பதிவு உண்மையுடன் சேர்த்து வாழ்த்துக்கள்..............!

      நன்றி நன்றி... நீங்களும் பதிவுகளை போட்டால் நாங்களும் பதிலுக்கு வாழ்த்துவமல்லோ!

    14. Bavan

      வழக்கம் போல நகைச்சுவை தூக்கல் அண்ணே, அப்படியே சொல்ல வந்த விடயத்தையும் சொல்லிட்டீங்க. //

      அப்டியா? நன்றி நன்றி! நல்லா சாப்பிடுவீங்குளோ? உப்பு குறைவு காரம் தூக்கல் போல பின்னூட்டம் இருக்கு..

      தண்ணியடிச்சவன் அரசியல் கூடப் பேசிக்கொண்டு திரிவாங்கள் சிலநேரம்..ஹீஹீ //

      அவன் கதைக்கிறது சிலவேளை தெளிவாயிருக்கும் நம்ம அரசியல்வாதியளவிட..

      அறிவு பூர்வமான கேள்வி..:p //

      அந்த இடத்த அப்பிடி கேட்பதுதான்மா அறிவுபூர்வமான கேள்வி.. இல்லாம ஓபாமாண்ட பொங்சாதிக்கு என்ன பெயரெண்டு கெட்டால் தான் அவளைத்தான் லவ் பண்ணினனான் எண் டு புதுப்பக்கமா போயிரும் கதை..

      பதிவு கலக்கல்...;) //

      நன்றி நன்றி..

    15. கனககோபி said...

      அண்ணே.... //

      தம்பீ..

      என்னண்ணே.... இப்பிடி ஒவ்வொரு பதிவிலயும் 'கலக்கீற்றீங்கண்ணே....' எண்டு சொல்ல வைக்கிறீங்களே? //

      நீ என்னதான் சொன்னாலும் உனக்கு சிந்து கபேயில றோல்ஸ் வாங்கி தரமாட்டன்..

      பதிவு முழுவதும் இழையோடிய நகைச்சுவையையும் அதன் பின்னர் அதற்குள்ளிருந்த செய்தியையும் இரசித்தேன்... அழகு வார்த்தைகள்.... //

      அய்யோ.. அப்பவே உனக்கு படிச்சு படிச்சு சொன்னேன்.. உந்த அசோக் பரனோட சேராதே சேராதே எண்டு.. பார் நீயும் ஏதோ பண்டிதமணி போல கதைக்கிறாய்.. பயமாயிருக்குடா .. ப்ளீஸ்..


      நான் இல்ல நான் இல்ல நான் இல்ல.... //

      ஏண்டா வடுவா பதறுறாய்?உனக்கு என்னதான் பிரச்சனையெண்டாலும் நாலுபேராச்சேந்து ஒரு லெமன் பப்பை உடைச்சு சாப்டுட்டு பொயிடுவீங்க.. உங்களுக்கெல்லாம் பியுசு போகாது.. சிலவேளை டயபிற்றிஸ் வரும் கவனம்..


      அருமையான பதிவு..... :)//

      நன்றிடா வடுவா.. :)

    16. மாதேவி said...

      "குடி குட்டியைக் கெடுக்கும்" சுவாரஸ்யத்துடன் கூடிய நல்ல பதிவு புல்லட்.

      நன்றி அக்கா.. பதிவு ரோசாக்களோட நிக்குது .. எப்ப புதுசு போடுறதா உத்தேசம் ? :-)

    17. Balavasakan said...

      //ஆகவே இன்னும் நீங்க குடிக்க ஆரம்பிக்காதவரா இருந்தீங்கன்னா என் சொல்லை கேளுங்க//

      கேக்குறன் பாஸ்... //

      மெடிக்கல் பக்க ல்டிக்காரன் குடிக்கலன்னு சொன்னா நம்புறது கஷ்டம் .. அதிலும் நீ சொன்னா நம்புவே முடியாது.. வெறில புழு எண்டு நினைச்சு எத்தினை பேற்ற குடலை உருவியிருப்பாய் எண்டு வார்ட்டில நிக்கிறவன கேட்டாத்தான் தெரியும்.. :P..
      நன்றிடா பின்னூட்டத்துக்கு.. :)

    18. அண்ணாமலையான் said...

      நல்லா அருமையா எழுதியிருக்கீங்க //
      நன்றி சேர்

    19. என்.கே.அஷோக்பரன் said...

      உண்மைதான் இந்த மதுவருந்தும் பழக்கம் ஆபத்தானது ஆனால் என்னவென்றால் இது மதுவருந்துபவனுக்கு ஒரு போதும் புரியப்போவதில்லை என்பது உண்மை. யாராவது வந்து மதுத் தடைச் சட்டம் கொண்டுவந்தால்தான் உண்டு! //

      தங்களுக்கு எதிர்காலத்தில் அரசில் மீது நாட்டமிருந்தால் தற்போதே குடிமக்களின் கணிசமான வாக்குகளை இழந்து விட்டீர்கள்.. :(

    20. VARO said...

      தண்ணியடிக்கிரவனை கெட்டவன் என்று முடிவுகட்டும் பெண்கள் தண்ணியடிக்காத காமுகர்களிடம் பலியாகின்றனர். //

      என்னைத்தான் சொல்லுறாரோ? அய்யோ காமுகன் எல்லாம் எனக்கு கொஞ்சம் ஓவர் சார்.. ப்பயங்கரமா இருக்கு..

      ஒருவனின் குணம் தண்ணி அடிப்பதில் இல்லை. அவன் ஆழ மனதை புரிந்து கொள்ள வேண்டும். //

      லைட்டா பாவிப்பீங்க போலருக்கு .. :P பரவால்ல பரவால்ல.. கொஞ்சம் ஓவரா பாவிச்சீங்கன்ன ஆழ்மனது வெளில வந்து தொங்கும்போது தெளிவா புரிசு்சிக்கலாம்.. :P .. jst joking.. :)

    21. சந்துரு Chanthru said...

      நல்ல அருமையாக நகைச்சுவையாக எழுதுறீங்க. மேலும் தொடருங்கள் //

      நன்றி சந்ரு

    22. ஜெகதீபன் said...

      இந்தவருஷத்தின் மிக முக்கியமான Taskகளில் ஒன்று உங்களிடம் ஆட்டோக்ராப் வாங்கிறது தான்.....!!!!! அப்படியே ஒரு போட்டோக்ராப்....!!!!!!! கலக்குறீங்க பாஸ்.. வாழ்த்துக்கள். //

      நீங்க சிரித்து சந்தோசமாயிருக்க நானும் ஒரு காரணமெண்டால் அதுவே எனக்கு மகிழ்ச்சி.. கட்டாயம் போட்டோ எடுப்பம் எனக்கும் வேணும்.. :-)

      ஒரு பதிவை நான் இரண்டு தரம் வாசிக்கிறதே மிகக்குறைவு..... It has become one of my favorits. இப்ப நான்காவது தரம் வாசிக்கிறன். Once again.... வாழ்த்துக்கள்..!!!!!

      ஓரு booster பின்னூட்டம்.. மிக்க நன்றி தீபன் :-)

    23. இலங்கன் said...

      ஆக மொத்தத்தில புல்லட் அண்ணனுக்குள்ள நிறைய ஒளிஞ்சிருக்கு. (பல கெட்ட எண்ணங்கள்) அதால தான் தன் மனதுக்குள் இருப்பது வெளியில தெரிஞ்சிரும் என்கிற பயம்...
      ம்..... //

      அடப்பாவி .. அடேய் கொஞ்ச இலட்சியங்களும் கனவுகளும்தான்டா அவை.. எனக்கு வேற எதுவும் இல்லை.. கடவுளே..!



      குடி குடியைக் கெடுக்கும்....... உண்மை சத்தியம்.. //

      ம்ம் அனுபவமா ? யார்ட குடியை நீ கெடுத்தனியப்பன்? (நீங்க மட்டும்தான் உப்பிடி கேட்கலாமோ? நாமளும் கேட்பமுல்ல :P )

      ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்..//

      ராஸ்கல்.. இன்னும் திருந்தலையா நீயி? பொறு வாறன் இன்னொருக்க உனக்கொரு காட்டு காட்டணும்.. :P


      தாங்ஸ்டா கமெண்டுக்கு.. :)

    24. ////உங்க பிள்ளைகளுக்கு சின்ன வயதில அப்பாதான் ஹீரோ.. ஹீரோவே தண்ணியடிச்சா ? அம்மா ஓடி வந்து “மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு” எண்டு சப்டைட்டில் போடமுடியாதுதானே? யோசிச்சு பாருங்க////

      நெத்தியடி புல்லட். நானும் இப்படி குடிக்கிறவங்கள பார்த்து சிரிச்சிருக்கிறேன்.

    25. யோ வொய்ஸ் (யோகா) said...

      நெத்தியடி புல்லட். நானும் இப்படி குடிக்கிறவங்கள பார்த்து சிரிச்சிருக்கிறேன். //

      பொறுங்க வாறன் மேவின் சில்லா கிட்ட சொல்லித்தாரன்.. சிரிக்கிறீங்களா அவரப்பாத்து..

    26. ஷஸ்னி said...

      தண்ணி அடிச்சிட்டு உளறுறது குடி காரங்க ஸ்டைல்
      தண்ணி அடிக்காம பதிவில உளறுறது புல்லட் ஸ்டைலோ ??

      கருத்து நல்லா இருக்கு //

      நீங்க தண்ணில பதிவையே மாறி பின்னூட்டம் போட்டுட்டீங்க போல.. :P

      இந்தப்பதிவுக்கு வரவேண்டிய பின்னூட்டம் கடந்த பதிவுக்கு கீழ போட்டிருக்கு? :P

      தயிர் , தேசிக்காய், வாயப்பயம் இப்பிடி எதனாச்சும் வச்சிருந்துிங்கன்னா உடன தெளிஞ்சுருமாம்.. :P

      சும்மா ஜோக்குக்குதான் கோவிச்சுக்காதீங்க..

      நீங்க இந்தியாவா? அப்போ நம்ம தமிழ் புரியிறது கொஞ்சம் கஷ்டம்தான்.. பாதி பாதி கலந்து தான் எழுதுுவென் .. இருந்தாலும் உளறுவது பொலதான் இருக்கும் .. அடுத்த முறை திருத்திக்கொள்ள முயல்கிறென்.. நன்றி

    27. //ராஸ்கல்.. இன்னும் திருந்தலையா நீயி? பொறு வாறன் இன்னொருக்க உனக்கொரு காட்டு காட்டணும்.. :P//

      ஹி.. ஹி.. நாங்க இப்ப அலேட் ஆயிட்டமுங்கோ.....

      தயவு செய்து ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்...க்கான கொமன்ஸ் உரித்தை எனக்கு தந்துவிடுங்கள்...

      கொமன்ட் அடிக்க கிக்கா இருக்கு...