90/10

  வாழ்க்கையில் சில விடயங்கள் யாரும் சொல்லும் போது ஏற்கத்தோணாது.. ஆனால் , ஒரு முறை பட்டுணர்ந்த விடயங்களை யாராவது சொல்லும் போது அட ஆமால்ல என்று யோசிக்கத்தோன்றும்.. அப்படியான விடயங்கள் வாசிக்கும் போது நன்றாகவும் பிரயோசனமாகவும் இருக்கும்... அப்படியான விடயங்களில் ஒன்றைப்பற்றித்தான் நானிங்கு கதைக்கப்போகிறேன்...

  என்னடா அறிவுரை சொல்லி அறுக்கிறானே என்று ஆதங்கப்படுபவர்களுக்கு ஆள்வைத்து அடிக்கப்டும்..
  மளமளவெண்டு பேசாம வாசிக்கலாம் எல்லாரும்...
  ஆக்களைப்பார்.. ஹ்ம்ப். ! x-( ! :@
  :P


  :D ... சரி விடயத்துக்கு வருவம்..


  உங்களுக்கு கல்யாணம் ஆகிடிச்செண்டு வச்சுக்கொள்ளுவம்.. ஓரு கிழமை நாள் உங்க குடும்பத்தோட நீங்க breakfast எடுத்திட்டிருக்கீங்க ..
  வேலைக்குப்போற அவசரம்.. போன உடன மீட்டிங்க் ஒண்டு வேற இருக்கு...
  பரொஜெக்டரை டெஸ்ட் பண்ண மறந்திட்டீங்க..
  வழமை போல மக்கர் பண்ணுமா என்ற சந்தேகம்..
  விறுக்கு விறுக்குன்னு இட்லியைப்பிச்சு வாய்க்க தள்ளிக்கொண்டிருக்கீங்க..

  உங்க மகள் பஸ் வரப்போகுதெண்ட அவசரத்தில தன்ட ரூமுக்கு ஏதோ கொப்பியை எடுக்க ஓடின நேரம் , மேசைக்கரையில இருந்த தேத்தண்ணி கோப்பை தட்டுப்பட்டு ... அட நாச‌மே..  Tieக்கு மச்சா தேடி அயன் பண்ணி போட்டிருந்த சேட்டு நாசமாப்போச்சு.. மகள் பயத்தில் கண்கலங்கி நிற்கிறாள்.

  எல்லா எரிச்சலம் சேர்ந்து ”சிர்ர்” எண்டு கோபம் உச்சி மண்டைக்கு ஏற
  ”தரித்திரம்.. பிள்ளையா நீ? பிசாசு.. போகவரும்போது கண்ணை பிடரிக்கயா வச்சிருக்காய்? நீயெல்லாம் பள்ளிக்கூடம் பொய் என்னத்தை படிச்சு கிழிக்கப்போறாய்..”
  கடுமையாக பேசிவிடுகிறீர்கள்..


  மகள் அழ ஆரம்பிக்கிறாள்.. மிகவும் காயப்படுத்திவிட்டீர்கள்.. அதிர்்சயடைந்த மனைவி ”ஏனப்பா பள்ளிக்கூடம் போற பிள்ளைய பேசுறியள் ? தேத்தண்ணிதானே ஊத்திண்டது ? அதுக்கு ஏன் இப்பிடி குதிக்கிறியள் ?” எண்டு மகளுக்கு சப்போட்டுக்கு வர , கோபமும் ; ”சே போம்பிளைப்பிள்ளையை பேசிப்போட்டேன‌ே ” என்ற சுயஆத்திரமும் மனைவி மீது திரும்புகிறது..

  ”உன்னை எத்தின தரம் சொன்னனான்.. கோப்பையள குடிச்சா கொண்டுபோய் குசினிக்க வையெண்டு.. விடிஞ்சா பொழுது பட்டா போய் டிவிக்கு முன்னால இரு.. உன்னைக்கலியாணம் கட்டி நான் படுற பாடு..” என்று ஆரம்பிக்க மனைவிக்கும் சுர் என்று ஏறிவிடுகிறது..

  பிறகென்ன சண்டை வழமை போல வலுத்து மனைவியும் அழுதுகொண்டு பெட்ரூமுக்கு போக நீங்கள் மாடிக்கு போய் கசங்கிய சேட்டொன்றை போட்டுக்கொண்டு ஓபிசுக்கு போகிறீர்கள்..

  அழுதுகொண்டிருந்த உங்கள் மகள் பஸ்ஸை தவறவிட்டுவிட்டதால் , அ‌வளை கொண்டு பொய் அவள் பாடசாலையில் இறக்கிவிட ,அவள் குட்பை சொல்லாமல் அழுது வீங்கிய முகத்துடன் செல்கிறாள்.. ஓபிசில் லேட்டாகிவிட , ப்ரெசென்டேசன் அறையில் மெலதிகாரி ஏனையவர்களுடன் உங்களுக்கு வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறார்... நீங்கள் மன்னிப்பு கேட்டுவிட்டு ப்ரொஸெக்டரை ஆரம்பிக்க அது மக்கர் செய்கிறது.. ப்ரெசென்டேசன் இன்னொருநாள் ஒத்திவைக்கப்படுகிறது. அவமானம்..

  கவலையுடன் ஆறுதல் தேடி வீடு திரும்பும் உங்களுடன் எவரும் கதைக்க விரும்பவில்லை.. அன்றைய நாள் நரகமாயிற்று..

  *******************************************************

  சரி.. இப்ப கொஞ்சம் றிவைண்ட் செய்து பிள்ளை டீ யை கவிட்டுக்கொட்டிய இடத்துக்கு வருவம்..

  சேட்டில டீ ஊத்திண்ட உடன கோபம் வருது.. நீங்கள் அதை சட்டென்று அடக்கிறியள்.. உங்கட சேட்டில டீ ஊத்திண்டத கண்டு பிள்ளை பயத்தில கண்கலங்க , நீங்கள் ” பரவால்ல அப்பன்.. அடுத்த முறை அவசரமாப்போகும் போது கவனமாயிருக்கவேணும் என்ன ?” என்ற படி சேட்டை மாற்ற மாடிக்குச் செல்ல , மனைவி ஓடிவந்து வேறு ஒரு சேட்டையும் டையயும் அயன் பண்ணி தருகிறார்..  நீங்கள் வெளிவரும்பொது மகள் பஸ்ஸில் உங்களுக்கு டாட்டா காட்டியபடி ஏறுகிறாள்.. மனைவி உங்களுக்கு கன்னத்திலொரு முத்தமிட்டு விஷ் பண்ணி அனுப்புகிறாள்.. ஓபிசுக்கு 10 நிமிடம் முன்னதாகவே வந்து சேருகிறீர்கள்.. ப்ரொஜெக்டரை சரிபண்ணி மகிழ்ச்சியாக பரெசென்டேசனை முடித்துவிட்டு மனைவிக்கு கோல் எடுத்து ”இன்டைக்கு தமிழ்ப்படம் பாக்கபோவம்.. ரெடியா இருங்கோ ” என்று சொல்கிறீர்கள்.. நாள் இனிதே அமைந்தது..

  சரி இப்ப நாங்கள் ரெண்டு சம்பவத்தையும்ஆராய்வம்..
  இ‌ரண்டு சம்பவங்களும் வேறு பட காரணம் என்ன?

  தேனீரா? மகளா? இல்லை ப்ரொஜெக்டரா?

  பதில் மேற்குறிப்பிட்ட எதுவுமில்லை..

  நடந்தவற்றுக்கு முழுக்காரணமும் சாட்சாத் நீங்கள்தான்..

  இப்போது ஒரு pause பட்டனை அழுத்திவிட்டு , நான் Stephen Covey என்ற பேராசிரியரின் 90/10 என்ற principle பற்றி கூறப்போகிறேன்.. ஏனெனில் நான் வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் , மேற்படி குழப்பத்தில் சம்பந்தப்பட்ட கொள்கைளில் இதுவும் ஒன்று..  அதென் 90/10 கொள்கையென்று யொசிக்கிறீர்களா? இதோ மெதுவாக புரியும்படியாக சொல்கிறென்..

  உங்கள் வாழ்க்கை சம்பவங்களாலானது.. அவற்ற்றில் பல சிக்கல்களும் கவலைகளும் சில சந்தோசங்களும் திருப்பங்களும் இருக்கும்..

  அப்படியான உங்கள் வாழ்க்கையில் 10 வீதமான சம்பங்கள் , ”தற்செயலாக” நடைபெற்று விடுகிறன..
  அதாவது அவற்றை நீங்கள் எதுவும் செய்யமுடியாது..
  அது உங்கள் கைகளிலிலல்லை..
  உங்களால் தடுக்வோ நெறிப்படுத்வோ முடியாது ..
  உதாரணத்துக்கு அந்த டீ ஊற்றியதை சொல்லலாம்..

  ஆனால் , மேற்படி 10 வீதத்துக்கும் நீங்கள எப்படி ரியாக்ட் செய்கிறீர்கள் என்பதே மிகுதி 90 வீதமான சம்பவங்களாக அமைந்து விடுகிறது.. உதாரணத்துக்கு டீ ஊத்தியதன் பின்னர் உஙக்ள றியாக்சனை சொல்லலலாம்..


  இப்போ லைட்டாக இந்த 10/90 புரிந்திருக்குமே?
  ம்ம்!
  இந்த 10/90 மேட்டர்தான் வாழ்க்கையில் எல்லோராலும் உணர்ப்பட்டாலும் , அவர்களுக்கு வெளிப்படையாக தெளிவாகாமல் ஒளிந்திருக்கும் ஒருரகசியம்..

  இப்போ மறுபடி அந்த pause பட்டனை அழுத்திவிட்டு டீ ஊத்தின சம்பவத்தை யோசித்தால் , முதலாவது அசுப முடிவு ஏற்பட ஒரே காரணம் டீ கொட்டுண்ட வேளை உங்களால் உங்களை கட்டுப்படுத்த முடியவில்லை.. அந்தக்கணத்தில் உங்களை கட்டுப்படுத்தியிருந்தால் விளைவு என்ன வென்று இரண்டாவது சுபமுடிவு பகுதியில் அறிந்திருப்பிர்கள்.. காலை நடந்த அந்த நிகழ்வு மிகுதி அனைத்தையுமு் பாதித்துதானே?

  அந்த குறித்த பத்து சதவீத சம்பங்களும் நிகழும்போது , அது மகிழ்ச்சிக்குரியதோ இல்லை கவலைக்குரியதோ எதுவாயினும், உங்களை கணநேரத்துக்கு கட்டுப்படுத்தினால் மிகுதி 90 வீதமும் நிச்சயம் நிறைவாயிருக்கும் .. இதை நான் சும்மா சொல்லவில்லை.. என் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியே சொல்கிறேன்.. நிச்சயம் ஒரு மாறற்த்தை காண்பீர்கள்..  அப்போது எல்லாரும் உங்களுடனிருக்க ஆசைப்படுவார்கள்.. உங்களுடன் கதைக்க ஆசைப்படுவார்கள்.. தங்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்வார்கள்.. உங்களிடம் ஆறுதல் தேடுவார்கள்..
  எல்லாவற்றுக்கும் ஒரே வழி அந்த பத்துவீதம் நிகழும்போது ஒரு கணம் நின்று நிதானித்து றியாக்ட் செய்வதுதான்..

  அதற்காக ஆக இளிச்சவாயனாகவும் இருக்காமல் எல்லை மிறும்போது தட்டியும் வைக்கவேண்டியது இந்த உலகில் அவசியம்.. :)

  ஆகவே ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.. அடுத்தமுறை அந்த 10வீதம் உங்களை உணர்சி வசப்படுத்தி , உசார் மடையராக்கி , மிகுதி 90 வீதத்தை நாசமாக்க முன் நின்றொருமுறை நிதானியுங்கள்.. அப்புறம் இந்த புல்லட்டுக்கு நள்பாகத்தில் ஒரு பாலப்பம் வாங்கித் தருவீர்கள் பாருங்களேன்.. :p (சிந்து கபே புட்டெண்டாலும் பரவால்ல)  10% of life is made up of what happens to you
  90% of life is decided by how you react......
  Stephen R Covey


  57 Responses

  1. தெய்வமே.....
   சீ... எல்லாருக்கும் ஒண்டப் பாவிக்கக்கூடாது.
   கடவுளே....

   10% of life is made up of what happens to you.
   90% of life is decided by how you react...

   நல்லாத்ததான் மனுசன் சொல்லியிருக்குது.
   நல்லதொரு கோட்பாட்டை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி அண்ணா.
   வாழ்க்கைக்கு சாத்தியமான கோட்பாடாக இருக்கிறது.
   எதிர்காலத்தில் இன்னும் படிக்கத் தூண்டிவிட்டீர்கள்...
   வழமையைப் போல ஆகோ ஓகோ சுப்பர் பதிவு தான்...
   ஆனால் இது ஏதோ எனக்கு அதிகமாகப் பிடித்துப் போய்விட்டது...

  2. நல்ல கருத்து . உணர்ச்சிவசப்பாடாமல் , நிதானமாக கருத்திடுகிறேன். அருமை. வாழ்த்துக்கள்.

  3. //சரி.. இப்ப கொஞ்சம் றிவைண்ட் செய்து பிள்ளை டீ யை கவிட்டுக்கொட்டிய இடத்துக்கு வருவம்..//

   என்னப்பா மணிரத்தினம் பட கதை போல இருக்கு...

   சொல்ல வந்த விஷயம் அருமை. என்னைப் போல சுடு தண்ணி பாட்டிகளுக்கு நெத்தியடி. எனக்கு வர மனைவியை நினைக்க பரிதாபமா இருக்கு.

  4. வாசிக்க நல்லாத்தான் இருக்கு. கொஞ்ச நாளா என்ன நடந்தது... பதிவு எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு :P

  5. 0% of life is made up of what happens to you
   90% of life is decided by how you react......//
   நல்ல கருத்து

   அம்மா அப்பா வேலைக்கும் பிள்ளைகள் பாடசாலைக்கும் போகும் வீடுகளில் காலையில் நடக்கும் திருவிழா ஒரேமாதிரியானவை. //நான் Stephen Covey என்ற பேராசிரியரின் 90/10 என்ற principle பற்றி கூறப்போகிறேன்..// இப்படி ஒரு principle
   உள்ளது என்று தெரியாமலே நான் இந்த நடைமுறையை பின்பற்றினேன். ஆனால் நின்று நிதானித்து முடிவெடுக்க முடியா தருணமொன்றில் எடுத்த முடிவினால் //அப்படியான உங்கள் வாழ்க்கையில் 10 வீதமான சம்பங்கள் , ”தற்செயலாக” நடைபெற்று விடுகிறன..
   அதாவது அவற்றை நீங்கள் எதுவும் செய்யமுடியாது..
   அது உங்கள் கைகளிலிலல்லை..
   உங்களால் தடுக்வோ நெறிப்படுத்வோ முடியாது ..// ..................

   இன்று எதுவும் செய்யமுடியாது.. இருக்கிறேன்.

  6. புல்லட்...எழுத்தில கொஞ்சம் அங்க இஞ்சயெண்டு எழுத்துப்பிழை கிடந்தாலும் அசத்தலா நல்ல ஒரு பதிவு.நல்ல ஒரு மகனா,
   அண்ணாவா,அப்பாவா, இஞ்சாருங்கோவா இருந்துதான் எழுதுறியள்.பொய் சொல்லாமச் சொல்லுங்கோ அப்பன்.ரியலா நீங்க இப்பிடியோ !இருந்திட்டா சந்தோஷம்தான்.சுத்தி இருக்கிறவையளும் கொடுத்து வச்சவையள்.

   உண்மையா இந்தப் பதிவைப் படிச்சிட்டு சொல்லுக் கேட்டு நடந்தா நல்ல பிள்ளையள்தான்.

   ஒரு வயசு வந்து மனசு பக்குவப்பட இந்த யோசனையும் அமைதியும் தனாவே வரும்.கோபமும் எரிச்சலும் அடங்கும்.நான் நேரில கண்டது இது.

   பதிவுகள் தொடர்ந்து வருது.
   சந்தோஷம் புல்லட்.

  7. தலிவா எங்க இருந்து தலைவா இப்படி எல்லாம் போடுறிங்க..... எல்லாம் 100% அனுபவமா????

   //”இன்டைக்கு தமிழ்ப்படம் பாக்கபோவம்.. ரெடியா இருங்கோ ” என்று சொல்கிறீர்கள்.. நாள் இனிதே அமைந்தது..//

   அண்ணா இது உங்க கத போலத்தான் இருக்கு .... நீங்கதான் இப்பிடி படத்துக்கு போறதா கேள்வி (எப்ப கோவா பாக்கிரத கைவிட்டனியல்)

   // இதை நான் சும்மா சொல்லவில்லை.. என் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியே சொல்கிறேன்.. நிச்சயம் ஒரு மாறற்த்தை காண்பீர்கள்..//

   அப்ப அனுபவம்தான்.....

   //அப்போது எல்லாரும் உங்களுடனிருக்க ஆசைப்படுவார்கள்.. உங்களுடன் கதைக்க ஆசைப்படுவார்கள்.. தங்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்வார்கள்.. உங்களிடம் ஆறுதல் தேடுவார்கள்...//

   இப்படி நடந்தா நல்லம் அண்ணா...


   அண்ணா மொக்கையா நல்ல விஷயம் சொல்ல்றதும் நீங்கதான் கொல்ற மாதிரி நல்ல விஷயம் சொல்லவும் உங்கள விட்டா ஆள் இல்ல

  8. புல்லட் அண்ணாவின் எழுத்துக்களை இரசிப்பவர்களுக்கு ஓர் வேண்டுகோள்...

   அவருக்கென்று பேஸ்புக்கில் தனியே இரசிகர் மன்றம் இயங்குவதாக அறிந்தேன்.

   வேண்டுமானால் (இது கலைஞர் அரசின் வேண்டுகோள். அன்பான மிரட்டல்) இணைந்து கொள்ளுங்கள்...

   http://www.facebook.com/group.php?gid=304915684647&ref=nf

  9. ரொம்ப நல்ல பதிவு..

  10. நல்ல கருத்துக்கள் புல்லட்...இப்படியான பதிவுகளையே நான் மிகவும் ரசிப்பேன்....

  11. ///வாழ்க்கையில் சில விடயங்கள் யாரும் சொல்லும் போது ஏற்கத்தோணாது.. ஆனால் , ஒரு முறை பட்டுணர்ந்த விடயங்களை யாராவது சொல்லும் போது அட ஆமால்ல என்று யோசிக்கத்தோன்றும்.. ///

   அட ஆமால்ல....

  12. தெய்வமே! நீங்க எங்கையோ போய்டீங்கள்.

   அண்மைக்கால என் வாழ்க்கைக்கு பொருத்தமான பதிவு, எனக்கு கோபம் உடன வருது.. சொந்தகாரரில இருந்து, வேலைசெயுற இடத்தில இருந்து நண்பர்கள் வரை எல்லோருடனும் கோப பட்டு நிறைய பகையை சம்பாதித்து வைத்திருக்கிறேன்.

  13. அண்ணா...... அருமை அருமை... வழமையாக ஓர் வீட்டில் நடக்கிற உண்மைச்சம்பவம் நீங்கள் முதலில் சொன்னது அப்பிடியில்லாம இப்பிடியிருக்கலாம் என அவர்கள் எல்லாம் முடிஞ்சாப்பிறகு எண்ணுவது நீங்க 2 வதாக சொன்னது... என்னுடைய உறவுக்காரர் ஒருவரும் இப்பிடித்தான் கோப்படும் போது பாரக்க சரியாக வில்லன் போல இருக்கும் பிறகு சாந்தமானதன் பின்னர் இவரா இது என எண்ணத் தோன்றும்.... இப்படியான இடங்களில் "தான் அவனா நீ" தத்துவங்கள் பிறக்கின்றதோ... இருந்தாலும் இந்தப்பதிவு பெண்களை கொஞ்சம் கூட சாடவில்லை என்பதால் சந்தேகம் வலுக்கிறது...... ஹி... அண்ணா ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்...

  14. வழமைபோல் கலக்கல் பதிவு புல்லட் ரொம்பவே ரசிச்சேன். நானும் இனி திருந்தி உணர்ச்சி வசபடாமல் நடக்க முயற்சிக்கிறேன்

  15. நம்பவே முடியல புல்லட்! நீங்களா ..
   ஒரே பிக்கலும் பிடுங்கலும் நக்கலும் நளினமுமாக எழுதின நீங்கள் இப்பிடி சிந்திக்கிற மாதிரி வித்தியாசமா தொடர்ந்து எழுதுறீங்களே!

  16. ரொம்ப சரி புல்லட்
   ஆனால் அந்தக் கண நேரத்திற்கு நம்மை கட்டுப்படுத்தல் சாத்தியமா எனத்தான் தெரியவில்லை. எனக்கெல்லாம் உள்ள பெரிய ப்ரோப்லமே இதுதான். இதனால் நான் இழந்ததும் நிறைய.

  17. முக்கியமான பதிவு, சண்டையை நேர்ல அனுபவிச்சவர் போல எழுதியிருக்கிறீங்க. கண நிமிடத்தில் வரும் கோபத்தை கட்டுப்படுத்துவது பெரிய கஷ்டம்...

  18. யோவ் ! பதிலை போடாமல் எந்த 'பஷன் பக்' ல போய் நிக்கிறீர்...

  19. VARO
   யோவ் ! பதிலை போடாமல் எந்த 'பஷன் பக்' ல போய் நிக்கிறீர்... //
   அப்பன் வரோ! தாயக்குலங்கள் தாறுமாறா வரகை தருவது உம் செல்வாக்கைப்புலப்படுத்துகிறது.. :P

   ஹாப் டே லீவெடுத்துவிட்டு சக்தியின் மனிதம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச்சென்றிருந்தேன்.. (இலத்திரனியல் வல்லுனராம்.. அவங்க சொல்லித்தான் எனக்ககே தெரியும்..) 9 மணிக்கு தொடங்க வெண்டிய சூட்டிங் 1மணிக்கு ஆரம்பத்ததில் வேலைக்கு வர 4 மணியாகிவிட்டது.. மனேச்சசர் மானாட மயிலாட ரேஞ்சுக்கு பெபோமன்ஸ் கொடத்துக்கொண்டுள்ளார்..வெள்ளைக்காரன் என் தாலிய அறுக்கப்பொறான்..இன்று இரவு 10 மணிவரை ஒபிசில் இருப்பதாக உத்தேசம்.. 10 மணிக்கு பின் அனைவருக்கும் கட்டயாம் பதிலளிக்கிறேன்.. நன்றி

   வரோ உங்கள் இன்புலூவன்ஸ் சுப்பரோ சுப்பர்.. ;) கரி ஓன்.. :P

  20. அப்பன் வரோ! தாயக்குலங்கள் தாறுமாறா வரகை தருவது உம் செல்வாக்கைப்புலப்படுத்துகிறது.. :P//

   பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல கூடாது.
   ஆரம்ப காலங்களில் பதிவுகள் நான் பெரிதாக இடாததட்கும் காரணம் இணைய வசதி சீரான முறையில் எனக்கு இல்லாதாதே! தாய்குலங்கள் இப்பொழுது தொடர்சியாக பதிவேளுதுவதட்கும் காரணம் அவர்களுக்கு கிடைத்திருக்கும் வசதிகள். ஒரு விருப்பம் பதிவுலகில் வந்துவிட்டால் காசு செலவழித்தும் பதிவேளுதுவார்கள். (நான் எழுதியிருக்கிறேன்)

   //சக்தியின் மனிதம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச்சென்றிருந்தேன்.. //

   பார்ப்பதை விட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.

   //இரவு 10 மணிவரை ஒபிசில் இருப்பதாக உத்தேசம்.//

   நளபாகத்தில் புட்டு கொத்து அல்லது ரொட்டி கொத்து, எது வாங்கி வர?

   //வரோ உங்கள் இன்புலூவன்ஸ் சுப்பரோ சுப்பர்.. ;) கரி ஓன்.. :P///

   பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல கூடாது.

  21. இதுவரைக்கும் போட்ட பதிவுகளில் இது பெஸ்ட்.
   (அது சரி 12B படம் எத்தினை முறை பார்த்தீர்?.)

  22. Enakkum kobam udana varum. Neenka sonnathu pola kobaththa adakki ellarodayum anba irukkavenum.. very nice post bullet.

   (reminder: It has been 1 week!!! busy or forgotten? )

  23. அண்ணே இப்பெல்லாம் பதிவுகள் ஒரு மார்க்கமா, ஆனா நல்லா இருக்கு :)

   //9 மணிக்கு தொடங்க வெண்டிய சூட்டிங் 1மணிக்கு ஆரம்பத்ததில் வேலைக்கு வர 4 மணியாகிவிட்டது..//

   நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்

  24. கன்கொன் || Kangon said...

   தெய்வமே.....
   சீ... எல்லாருக்கும் ஒண்டப் பாவிக்கக்கூடாது.
   கடவுளே....//
   ஹாஹாஹா! வடுவா! :P

   நல்லாத்ததான் மனுசன் சொல்லியிருக்குது.
   நல்லதொரு கோட்பாட்டை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி அண்ணா.
   வாழ்க்கைக்கு சாத்தியமான கோட்பாடாக இருக்கிறது.
   எதிர்காலத்தில் இன்னும் படிக்கத் தூண்டிவிட்டீர்கள்... //

   என்னடா கங்கோன் சென்டிமெண் டாயெல்லாம் கதைக்கிறாளன்? :P

   வழமையைப் போல ஆகோ ஓகோ சுப்பர் பதிவு தான்...
   ஆனால் இது ஏதோ எனக்கு அதிகமாகப் பிடித்துப் போய்விட்டது...

   நன்றிடா ஆனா இலங்கன் உன்னில ஏதோ கொப்பிரைட் வழக்கு பொடப்போறதா கதைடிபடுது.. :P

  25. Madurai Saravanan said...

   நல்ல கருத்து . உணர்ச்சிவசப்பாடாமல் , நிதானமாக கருத்திடுகிறேன். அருமை. வாழ்த்துக்கள். //

   கனபேர் ஓட்டுப்போடுறதுக்கும் நிண்டு றிதானிச்சிருப்பதால பதிவு படுதோல்வியாப்போட்டுது... :P

   நன்றி சரவணன் உங்க பின்னூட்டத்துக்கு.. :)

  26. இளந்தி... said...

   என்னப்பா மணிரத்தினம் பட கதை போல இருக்கு...

   ஏன்?...(silence)... எப்பிடி?...(silence).. எதுனால?..(silence)..

   சொல்ல வந்த விஷயம் அருமை. என்னைப் போல சுடு தண்ணி பாட்டிகளுக்கு நெத்தியடி. எனக்கு வர மனைவியை நினைக்க பரிதாபமா இருக்கு.

   பரவால்லங்க மனைவி 90 10 ஐ கைப்பிடிச்சா நீங்க தனால திருந்திடுவீங்க.

   ஆனா உங்களை மாதிரி வெளிப்படையா இருக்கிற ஆண்களையும் பெண்களுக்கு பிடிக:குமாம்னு பட்சி சொல்லறது..:

  27. //கனபேர் ஓட்டுப்போடுறதுக்கும் நிண்டு றிதானிச்சிருப்பதால பதிவு படுதோல்வியாப்போட்டுது... :P //

   என்ன நக்கலா?
   5 தமிழ்மணம் பரிந்துரைகள், 18 தமிழிஷ் வாக்குகள் காணோதோ?
   பிச்சுப் புடுவன் பிச்சு,..

   //என்னடா கங்கோன் சென்டிமெண் டாயெல்லாம் கதைக்கிறாளன்? :P //

   இப்பிடித்தான்....
   நமக்குள்ளும் ஒரு சீரியஸ் மனுசன், கோபப்படுற, முன்கோபக்காரன் இருக்கிறானெல்லோ....

  28. நிரூஜா said...

   வாசிக்க நல்லாத்தான் இருக்கு. கொஞ்ச நாளா என்ன நடந்தது... பதிவு எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு :P

   நன்றி.. ஏதாவது ஒரு மார்க்கத்தினிறும் ஒழுகி முக்தியடைவதே அடியேனின் சித்தம்..:P

  29. archchana said...

   நல்ல கருத்து

   அம்மா அப்பா வேலைக்கும் பிள்ளைகள் பாடசாலைக்கும் போகும் வீடுகளில் காலையில் நடக்கும் திருவிழா ஒரேமாதிரியானவை. இப்படி ஒரு principle
   உள்ளது என்று தெரியாமலே நான் இந்த நடைமுறையை பின்பற்றினேன். ஆனால் நின்று நிதானித்து முடிவெடுக்க முடியா தருணமொன்றில் எடுத்த முடிவினால்
   இன்று எதுவும் செய்யமுடியாது.. இருக்கிறேன். //

   உஙக்ளுக்கு வழிகாட்ட நான் பரமஹம்ச நித்திாயானந்தர் அல்ல.. ஆனால் நானாகவிருப்பின் கதம் கதம் என்று நடந்த எல்லாத்தையும்அந்த 10 பேசண் டுக்குள் என்று நினைத்துவிட்டு மிகுதி90 பேசென்டை நொக்கி ஜாலியாக பயணிப்பேன்.. :) எல்லாருக்கும் ரணங்கள் இரக்கு அர்ச்சனா.. அதற்கு காலம் ஒரு அருமருந்து.. :)

  30. ஹேமா said...

   புல்லட்...எழுத்தில கொஞ்சம் அங்க இஞ்சயெண்டு எழுத்துப்பிழை கிடந்தாலும் அசத்தலா நல்ல ஒரு பதிவு. //

   நான் முதலாவது ட்ராப்டையெ வெளியிட்டுவிடுவேன்.. ஏனெனில்திருத்தி வெளியிட சரிபார்க்க நேரம் காணாது.. ஒரு பதிவுக்கு ஒன்றரை மதல் இரண்டு மணித்தியாலம் வரை கூட எடுக்கும்.. பிறகு முக்கியமான வேறு வெலைகள் தொக்கிவிடும்


   நல்ல ஒரு மகனா,
   அண்ணாவா,அப்பாவா, இஞ்சாருங்கோவா இருந்துதான் எழுதுறியள்.பொய் சொல்லாமச் சொல்லுங்கோ அப்பன்.ரியலா நீங்க இப்பிடியோ !இருந்திட்டா சந்தோஷம்தான்.சுத்தி இருக்கிறவையளும் கொடுத்து வச்சவையள். //


   ஆங்!”அப்ப” ???”இஞ்சாருங்க”??? என்ன கொடமை? நான் சின்னப்பொடியன்.. :D

   அப்படி எதிர்காலத்தில கட்டாயம் இருப்பன்.எனக்கு கிடைத்த ஒரே வாழ்க்கையை எரிச்சல் கரச்சல் இல்லாமல் அனுபவிப்பதற்காக புல்லட்டை பண்படுத்தும் வேலைகள் முன்னெடுத்துச்செல்லப்படுகிறன..


   உண்மையா இந்தப் பதிவைப் படிச்சிட்டு சொல்லுக் கேட்டு நடந்தா நல்ல பிள்ளையள்தான்.

   ஒரு வயசு வந்து மனசு பக்குவப்பட இந்த யோசனையும் அமைதியும் தனாவே வரும்.கோபமும் எரிச்சலும் அடங்கும்.நான் நேரில கண்டது இது.

   உண்மைதான் ஹேமாக்கோய்! :)

   பதிவுகள் தொடர்ந்து வருது.
   சந்தோஷம் புல்லட்.

   இதை யாழ்தேவி வாரத்தில எழுத யோசிச்சிருந்தென் மிஸ்ஸாயிட்டு.. இனி லைட்டா விக்கும். :P

  31. அனுதினன் said...

   தலிவா எங்க இருந்து தலைவா இப்படி எல்லாம் போடுறிங்க..... எல்லாம் 100% அனுபவமா????
   அண்ணா இது உங்க கத போலத்தான் இருக்கு .... நீங்கதான் இப்பிடி படத்துக்கு போறதா கேள்வி (எப்ப கோவா பாக்கிரத கைவிட்டனியல்)


   கிராதகா! என்னைப்பாத்தா கலியாணம்கட்டி ரெண்டு பிள்ளைப்பதெ்தவன் மாதிரியா கிடக்கு? :D

   அண்ணா மொக்கையா நல்ல விஷயம் சொல்ல்றதும் நீங்கதான் கொல்ற மாதிரி நல்ல விஷயம் சொல்லவும் உங்கள விட்டா ஆள் இல்ல

   இவன் நக்கலடிக்கிறானோ பாராட்டிறானோ எண்டெ புரியாமக்கிடக்கு.. :P

   ந்ன்றியப்பன்..

  32. கன்கொன் || Kangon said...

   புல்லட் அண்ணாவின் எழுத்துக்களை இரசிப்பவர்களுக்கு ஓர் வேண்டுகோள்...

   அவருக்கென்று பேஸ்புக்கில் தனியே இரசிகர் மன்றம் இயங்குவதாக அறிந்தேன்.//

   என்டா இந்தக்கொலைவெறி?யாருக்கு ரசிகர் மன்றம்வச்சாங்குளோ அங்க அவனைுயே போட்டுத்தாக்கிற கொடுமை அதிலதான்டா நடக்குது! :D

  33. அண்ணாமலையான் said...

   ரொம்ப நல்ல பதிவு..//

   நன்றி செர்!

  34. தாருகாசினி said...

   நல்ல கருத்துக்கள் புல்லட்...இப்படியான பதிவுகளையே நான் மிகவும் ரசிப்பேன்.... //

   தெரியும் நீங்க கொஞ்சம் சென்டிமென்ட் டைப்புதானெண்டு.. :) நன்றி ஹாசினி!

  35. //நன்றி செர்! //

   நான் அண்டைக்கு சொல்லேல? :P :D

  36. VARO said...

   தெய்வமே! நீங்க எங்கையோ போய்டீங்கள்.

   அண்மைக்கால என் வாழ்க்கைக்கு பொருத்தமான பதிவு, எனக்கு கோபம் உடன வருது.. சொந்தகாரரில இருந்து, வேலைசெயுற இடத்தில இருந்து நண்பர்கள் வரை எல்லோருடனும் கோப பட்டு நிறைய பகையை சம்பாதித்து வைத்திருக்கிறேன்.//

   கவலைப்படாத ராசா .. எல்லாம் வாலிப வயசு..:P கிழண்ட கிழண்ட சரியாயிடும்.. ;) ( அப்படியானால் இவ்வளவு இளமையான எனக்கு எப்படி என்று யொசிக்கலாம்? அது விதிவிலக்கு! :P )

  37. இலங்கன் said...

   அண்ணா...... அருமை அருமை... வழமையாக ஓர் வீட்டில் நடக்கிற உண்மைச்சம்பவம் நீங்கள் முதலில் சொன்னது அப்பிடியில்லாம இப்பிடியிருக்கலாம் என அவர்கள் எல்லாம் முடிஞ்சாப்பிறகு எண்ணுவது நீங்க 2 வதாக சொன்னது... என்னுடைய உறவுக்காரர் ஒருவரும் இப்பிடித்தான் கோப்படும் போது பாரக்க சரியாக வில்லன் போல இருக்கும் பிறகு சாந்தமானதன் பின்னர் இவரா இது என எண்ணத் தோன்றும்.... இப்படியான இடங்களில் "தான் அவனா நீ" தத்துவங்கள் பிறக்கின்றதோ... இருந்தாலும் இந்தப்பதிவு பெண்களை கொஞ்சம் கூட சாடவில்லை என்பதால் சந்தேகம் வலுக்கிறது...... ஹி... அண்ணா ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்... //


   உண்மைதானப்பு! நானும் அவதானித்திருக்கிறன்.. நன்றி !

   நீ சுப்பர் சுப்பர் எண்டு சுப்பற்ற கொல்லைக்கயே சுத்து! :D

  38. யோ வொய்ஸ் (யோகா) said...

   வழமைபோல் கலக்கல் பதிவு புல்லட் ரொம்பவே ரசிச்சேன். நானும் இனி திருந்தி உணர்ச்சி வசபடாமல் நடக்க முயற்சிக்கிறேன் //

   நன்றி நன்றி! :D
   ஆனா திருந்திற கதையெல்லாம் சும்மா லுலுலாயிக்குதானே? :P

   கட்டி வச்சு அடிச்சாலே எருமைமாடு மாதிரி நிப்பாங்க..பதிவொண்டை படிச்சு திருத்தக்கூடியதா நம்ம ஜனங்க? :P

  39. kippoo said...

   நம்பவே முடியல புல்லட்! நீங்களா ..
   ஒரே பிக்கலும் பிடுங்கலும் நக்கலும் நளினமுமாக எழுதின நீங்கள் இப்பிடி சிந்திக்கிற மாதிரி வித்தியாசமா தொடர்ந்து எழுதுறீங்களே! //

   நம்பவே முடியல கிப்போ! நீங்களா ..
   எனக்கு பின்னூட்டமெல்லாம் போடுறியள்? :P
   நன்றி நன்றி

  40. தர்ஷன் said...

   ரொம்ப சரி புல்லட்
   ஆனால் அந்தக் கண நேரத்திற்கு நம்மை கட்டுப்படுத்தல் சாத்தியமா எனத்தான் தெரியவில்லை. எனக்கெல்லாம் உள்ள பெரிய ப்ரோப்லமே இதுதான். இதனால் நான் இழந்ததும் நிறைய. //

   சாத்தியம் சாத்தியம்.. நான் அடித்து சொல்வேன்.. சாத்தியம்.. :)மெதுமெதுவாக அமுல்படுத்துங்கள்..

  41. roshaniee said...

   முக்கியமான பதிவு, சண்டையை நேர்ல அனுபவிச்சவர் போல எழுதியிருக்கிறீங்க. கண நிமிடத்தில் வரும் கோபத்தை கட்டுப்படுத்துவது பெரிய கஷ்டம்...//

   ஹிஹி! யாழ்ப்பாணத்தில எங்கம்மா எல்லாரும் ஒண்டா டைனிங் டேபிள்ள இரந்து சாப்பிட்டிரக்கோம்? பம்லிக்குள்ள இறுக்கத்தை வளர்்க டைனிங் டெபிள்ள இரந்த ஒண்டா சா்பிடுறது அவசியம்.. :)மேற்படி உதாரணம் குறித்த பெராசிரியரது உதாரம்தான்..மிக்க நன்றி பின்னூட்டத்துக்கு.. :)

  42. ARO said...

   //சக்தியின் மனிதம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச்சென்றிருந்தேன்.. // பார்ப்பதை விட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. //

   நான் இதுவரை சக்திடிவி பார்த்ததே இல்லை.. மனிதம் என்ற ப்ரோக்ராம் எப்படியிருக்குமென்றெ இன்று மதியம் வரை தெரியாது.. :D நட்புக்காக சென்றிருந்தென்.பதிவர் விமலாதித்தனின் அன்பான கவனிப்பு மனத்தை ஈர்த்தது.. வாழ்த்துக்கள் அவருக்கு..

  43. RAKASH said...

   இதுவரைக்கும் போட்ட பதிவுகளில் இது பெஸ்ட். //
   அப்படியா நன்றி நன்றி

   (அது சரி 12B படம் எத்தினை முறை பார்த்தீர்?.) //

   ஹாஹாஹா எழுதும்போது யோசித்தேன்.. யாராவது கெட்பார்களோ என்று கேட்டுவிட்டிர்கள்.. :D

  44. Mathuri said...

   Enakkum kobam udana varum. Neenka sonnathu pola kobaththa adakki ellarodayum anba irukkavenum.. very nice post bullet. //


   thank you very much Mathuri....

  45. Subankan said...

   அண்ணே இப்பெல்லாம் பதிவுகள் ஒரு மார்க்கமா, ஆனா நல்லா இருக்கு :)
   ஹிஹிஹி! நன்றி நன்றி!

   நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்ஈ,,
   ஐயோ அவன் திங் வை நாடு்டு வந்திருந்த தமிழ்பட நாட்டமை ரேஞ்சுக்கு அதிர வைச்சுக்கொண்டிரந்தான்... :D

  46. கன்கொன் || Kangon said...

   //கனபேர் ஓட்டுப்போடுறதுக்கும் நிண்டு றிதானிச்சிருப்பதால பதிவு படுதோல்வியாப்போட்டுது... :P //

   என்ன நக்கலா?
   5 தமிழ்மணம் பரிந்துரைகள், 18 தமிழிஷ் வாக்குகள் காணோதோ?
   பிச்சுப் புடுவன் பிச்சு,..

   டேய் 20 தமிழிஸ் ஓட்டு அல்லது 10 தமிழ்மண ஓட்டுதான் படம் திவாலாகாததன்் அறிகுறி.. :P சுப்பர் ஹிட் எண்டால் அண்ணாமைலையின் கடைசிப்பதிவின் தமிழிஸ் ஓட்டெண்ணிக்கையை பார்.. ;)

   இப்பிடித்தான்....
   நமக்குள்ளும் ஒரு சீரியஸ் மனுசன், கோபப்படுற, முன்கோபக்காரன் இருக்கிறானெல்லோ....

   அய்யோ! ஆதுதான் இடுப்பு சைஸ் 50 இல இரக்கு .. எல்லாரையும் எடுத்து வெளில விடு..

   //நன்றி செர்! // நான் அண்டைக்கு சொல்லேல? :P :D

   அவர் பாரன் ஒரு நாள் அடிவாங்காட்டி பாட்டின்ட செத்தவீட்டுப்பதிவுக்கு சூப்பர் பதிவெண்டு பொட்டு.. :P

  47. நீங்கள் சிவாகர் சேரை மறந்துட்டிங்க. :) உண்மையில் எனக்கு பிடித்த ஆசிரியரில் ராமச்சந்திரன் சேரும் ஒருவர். துரதிஸ்டம் அவர் இப்ப உயிருடன் இல்லை

  48. சூப்பர் தலை.நடைமுறைக்கு பொருத்தமா எழுதிருக்கிங்க .இப்படி எத்தனையோ வீட்டில தினம் தினம் இந்த தேவாரம் தான் நடக்குது .இப்படி யாரும் யோசிகல
   நீங்க யோசிசு எழுதிருக்கிங்க .(சும்மா சொல்லக்கூடாது அந்த பேராசிரியரை தான் சொல்லணும் )

  49. வணக்கம் புல்லட்... நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவினைத் தந்துள்ளீர்கள்..... சின்னச் சின்னச் சிக்கல்கள் தான் வாழ்வில் பெரிய தவறுகளை உருவாக்கக் கூடிய மூல காரணிகள் என்பதை எளிமையாகப் புரிய வைத்த தங்கள் பதிவுக்கு ஒரு ஓ...!

  50. எனது அறிமுகத்தை இலங்கையின் பிரபல பதிவர்களில் ஒருவரும், பிரபல வாளி வள்ளலுமான புல்லட் அவர்களின் அருமையான பதிவில் மேற்கொள்வதில் மெத்த மகிழ்ச்சியடைகிறேன்.
   பதிவு நல்லாயிருக்கு.
   தொடர்ந்து எழுதுங்கோவென?
   வாழ்த்துக்கள்.

  51. பதிவுகள் சூப்பர் தொடர்ந்து எழுதுங்கோ ...........i லவ் சோ மச் ,,,,,,,,,,,

  52. WoW!!!...

   அண்ணே..

   என்ன ஒரு விடயம், டென்சனாகாட்டி நடக்கிறதெல்லாம் நல்லதா நடக்கும், இல்லாட்டி கோப்பிமாதிரி ஊத்திக்கும் எண்டுறீங்க..ம்ம்

   இந்தமாதிரி விடயங்களை இன்னும் எதிரிபார்க்கிறோம்...;)

  53. // கன்கொன் || Kangon said...
   புல்லட் அண்ணாவின் எழுத்துக்களை இரசிப்பவர்களுக்கு ஓர் வேண்டுகோள்...

   அவருக்கென்று பேஸ்புக்கில் தனியே இரசிகர் மன்றம் இயங்குவதாக அறிந்தேன்.

   வேண்டுமானால் (இது கலைஞர் அரசின் வேண்டுகோள். அன்பான மிரட்டல்) இணைந்து கொள்ளுங்கள்...

   http://www.facebook.com/group.php?gid=304915684647&ref=nf//

   அதே அதே... வாருங்கள் இணையுங்கள்..:p

  54. நன்றி ராமன்சி.. ஓம் மறந்து போனேன் எல்லாரும் மறந்து போனதுதான் ஆச்சரியம்..

   நன்றி அசுவத்தாமன்..கமல் பவன் மற்றும் விண்மீன்கள்..

   அநானி வித் ஐடி.. :P இரு இரு வாறன்..

  55. வழமைபோல் கலக்கல் பதிவு.
   தொடர்ந்து எழுதுங்கோ.
   வாழ்த்துக்கள்

  56. ரசித்தேன்.. உண்மை. அனுபவத்தில் நான் கண்டதும் இதே..
   கோபத்தைக் கூடுமானவரி குறைக்க முயல்கிறேன்.. காரணம் நிறைய நஷ்டங்கள். பலரைப் புண் படுத்துகிறேன்.

   புல்லட் நன்றி உங்கள் இந்தப் பதிவுக்கு.. எனது விடியலுக்கு சின்ன ஐடியா ஒன்றை இந்தப் பதிவு வழங்கியுள்ளது.. :)

  57. ரெண்டு தரம் வாசித்தேன:D நல்லாயிருந்தது பதிவு; இப்போதெல்லாம் அருமையான பதிவுகளை எதிர்பார்க்க முடிகின்றது......