அம்மாளாச்சி தாயே!


    தலைப்பை பாத்திட்டு சிறுகதை அப்பிடி ஏதாவது நினைச்சீங்களெண்டால் நான் பொறுப்பில்ல..
    இந்த வசனம் சின்ன வயசில பொம்மர் குத்தும் போது எங்கட அப்பம்மா கத்துவது.. அதாலதான் என்னுடைய ஒரு கட்டுரைக்கு இப்பிடி ஒரு தலைப்பு.. இங்க நான் கதைக்க போறது சமயபாடம் சிறுவயதில நமக்கு தேவையா என்பதை பற்றித்தான்.. ஆறுதலா தலைப்புக்கும் உள்ளடக்க த்துக்கும் லிங்க் எடுப்பம்.. இப்ப தொடர்ந்து வாசியுங்க..

    நான் படிச்சது ஒரு கிறஸ்தவ பள்ளிகூடம்.. அங்க 98 வீதம் சைவர்கள்தான் படித்தாலும் கோயில் கிடையாது ஒரு சேர்ச் உண்டு.. புதன் கிழமைகளில் ப்ரேயர் எண்டு கிறஸ்தவ மாணவர்கள் சேர்ச்சுக்கு சென்று விட ,சைவர்கள் எல்லாரும் பெரிய மண்டபமொன்றில் கூடி தேவாரம் பாடி ,ஏதாவது ஒரு நாயனாருடைய கதையை வாசிச்சு , எவராவது பக்திப்பழத்தை கூட்டியாந்த ஒரு பிரசங்கத்தை வைச்சு, எல்லாரையும் காலங்காத்தால நித்திரையாக்கிட்டு ஒரு மணித்தியாலம் கழிச்சு கொட்டாவிவிட்டபடி கிளாசுக்கு போவம் .. இதைப்பார்த்து கடுப்பான எமது அதிபர் (அவர் சைவராயிருந்த கிறிஸ்தவராகியவர்) உடனடியாக தான் களத்திலிறங்கி நிகழ்ச்சி அட்டவணையை தானே தயார் செய்தார்.. பெரும் எடுப்புகளுடன் புதிய மிரட்சியூட்டும் கள அமைப்புகளுடன் ஒரு புதன்கிழமை நிகழ்வு ஆரம்பமாயிட்டு..

    முதலாவது ப்ரோக்கராம் பட்டி மன்றம்.. என்டா தலைப்பென்று பாத்தால்
    ”சிறந்தவர் யார்? சம்பந்தரா? அப்பரா ? சுந்தரரா?" ”




    முக்கோணப்பட்டி மன்றமாம்.. புது அப்ரோச்சாம் எண்டு வெளிக்கிட்டு முதல் பத்து நிமிசம் தேவாரம் கீவாரம் எல்லாம் பாடி ஒழுங்காத்தான் பொச்சு.. பிறகுதானே பிரச்சினை பூதாகாரமா வெளிகிட்டிச்சு..
    முதலில தத்தமது நாயனாரின் பெருமையள சொன்னவங்கள் பொயிண்ட்ஸ் பற்றாக் குறையால மற்ற நாயன்மாரை எல்லாம் தாக்க வெளிக்கிட நாயன்மார் வரலாறு நடு ஹொலில கிழிஞ்சு தொங்கியது..

    ”டேய் .. பதினாறு வயசில கலியாணம் கட்டுறது க்கு அலைஞ்ச கபோதி அவன் .. கள்ளப்பால் குடிச்ச கஸ்மாலம்.. அவனுக்கு வக்காலாத்து வாங்கிறியா நீ?”

    ”டேய் அவன் கிழட்டுப்பயல் ! களவாணி ! சமண சமயத்தில இருந்து வயித்தாலடி வந்துதாண்டா ஓடியாந்தவன்.. அவனுக்கு சப்போட்டா நீங்களெல்லாம் ஒரு டீம்.. நம்ம ஆள் வைச்ச பெயர்தான்டா அப்பர்.. மருள்நீக்கியெண்டு கேட்டால் ஒருபயலுக்கும் தெரியாது.. ஒரு கதவைத்திறக்குவே நம்ம ஆள் வரணும்.. இதுக்குள்ள பெருசா வந்திட்டின..”

    திடீரெண்டு எழுந்த இந்த வாத்தால் எல்லாரும் ‌ ஹோஹோ எனச்சிரிக்க , இது என்னடா புதுசா இருக்கே பெடியங்கள் சிரிக்கிறாங்கள் எண்டு கடைசி சீட்டிலிருந்து தூங்கிக்கொண்டிருந்த மௌலீ வாத்தி எழும்பி , சுதாரித்து , நிலையை விளங்கி , மேடைக்கு ஓடிச்செல்வதற்குள் எல்லா நாயன்மாருக்கும் கள்ளக்காதலிகள் உருவாகியிருந்தார்கள்..

    அன்றைய அந்தச்சம்பவம்தான் எனக்கு சமயம் குறித்தான எதிரான சில கருத்துக்களை விதைத்தது.. ஏன் நாம் சமயத்துக்கு எதிராக சிந்திக்காமல் அதன் வழியிலேயே சிந்த்திக்கிறோம் என்று ஒரு வினா தொடுக்கப்பட்டது.. இப்போது அது ஒரு உச்சமாக பல தேடல்களுக்கும் குழப்பத்துக்கும் வழிவகுத்துள்ளது..

    சிறுவயதில் பொய்சொல்லாமல் களவெடுக்காமல் இருக்க இந்த சமயமும் சாமியும் எனக்கு பயமுறுத்தி வழிநடத்திச்சென்றனதான்.. அதை மறுப்பதற்கில்லை.. அதற்காக அத்தனை புளுகுக்கதைகளையும் ( உதாரணத்துக்கு பிள்ளையார் டான்ஸ் ஆடி நிலா தேய்ந்த கதை) புகழ்பாடும் தேவாரங்களையும் கற்பித்து பின்னர் அதை ஒப்பிக்க தவறும்போது கிளுவம் தடிகளால் எங்கள் மீது ட்ரம்ஸ் வாசித்து எத்தனை கொடுமைகளை செய்தார்கள்.. இப்போது நினைத்தால் பல்லெல்லாம் நறுமுகிறது.. அந்த நேரத்தில் ஐந்தாறு பாரதியார் பாடல்களை படிப்பித்திருக்கலாம்.. ஏன் அப்படிச்செயகிறார்கள்? இந்த ஐடி யுகத்திலும் சற்றும் சிலபஸ் மாறாமல் சமயபாடம் இருக்கிறது .. சரி அப்பிடி இரந்தாலும் அதை ஏன் ஒப்சனல் பாடமாக மாற்றக்கூடாது..


    எங்களுக்கு கோயிலுக்குப்போகும்போது எப்படிப்போகணும் எண்டு 2ஆம் ஆணடில சொன்னவங்கள்.. குளித்து புத்தாடை அணிந்து பூு எல்லாம் கொண்டு கோபுரத்தை கண்டா அதுக்கொரு சலூட் அடிச்சிட்டு உள்ள பொகணும் எண்டு.. அப்பிடித்தான் அண்டைக்கும் 42வது லேனுக்கு பக்கத்தயும் பளிச்சுபளிச்சசெண்டு குமரியள் பொக நானும் என்னடா புதுக்கோவிலாக்கும் எண்டு எண்ரியை குடுத்துட்டன்..

    உள்ள போனா ஒரே சனம்..
    ப்ரொஜக்டரில அம்மாவகவான் புருசன் சகிதம் சுவரில விழுகிறா..



    ஒருத்தர் சூமிங் சரி பண்ணுறார்.. இன்னொருத்தர் சும்மா 7 வே சப் வூபர் சறொண்டிங் சிஸ்த்தில bass ஹையா வைச்சு பக்ரௌண்ட் மியுசிக் குடுக்கிறார்.. ஏதோ றிமிக்ஸ் பக்திப்பாட்டாம்.. நான் பொலோ பண்ணிப்போன பிகருங்களெல்லாம் சும்மா ஜம்பிங்கில , சின்ப்பிள்ளையள் நேசரில றைம் சொல்வது போல முணுமுணுத்தபடி ஆடி ஆடி கும்பிடுதுகள்..

    இருந்தாப்போல ஏதோ தீபம் காட்டப்போறாங்களாம் எண்டு சனம் அடிபுடிப்ப‌ட , நானும் ஏதோ LED பல்பில செஞ்ச பஞ்சாராத்தியா இருக்குமோ எண்ட நப்பாசைல எட்டிப்பாத்தன் ..
    பாத்தா
    பழைய டெக்னிக்குதான்..

    கற்புரப்புகை ப்ரொஜெக்டர் ஒளிபட்டு பூதாகாரமாய் பின்னால் விழுந்தது.. முன்னுக்கு அடிபட்டு பஞ்சாராத்தியை தொட்டதுகளெல்லாம் பத்து பதினைஞசு வயசுக்குள்ள உள்ளதுகள்.. ஏதோ கவலையா இருந்திச்சு..



    சமயம் படிப்பிங்க பாஸ் பிரச்சனையில்ல.. எது எது நெறியில்லை எண்டு சொல்லிகுடுங்க.. நீங்க கடைப்பிடிக்க வேண்டிய நெறி எப்பிடியிருக்கணும் எண்டு சொல்லி குடுங்க.. அத்தோட கடவுளை வைச்சு ஏமாத்துறவங்களை எப்பிடி கண்டுபிடிக்கணும் தண்டிக்கணும் எண்டு சொல்லிிக்குடுங்க .. எங்கட பழைய சமூகம் விட்ட பிழையளாலதான் பல முடிச்சவிக்கிகள் அப்பாவி சனங்களிண்ட காசுகளை சுருட்டுறாங்கள்..

    எனக்குப்பயம் எவனாவது அம்மா பகவான் பக்தன் புத்தகவெளியீட்டு திணைக்களத்தில இருந்தால் , விரைவில அவா ஸ்கைப்பில குடுத்த உரைய ஆண்டு ஒண்டு சமய புத்தகத்தில பப்ளிஸ் பண்ணிடுவாுனோ எண்டதுதான்..
    பாப்பம்..

    அம்மாளாச்சி தாயே காப்பாத்து!


    பிகு: 60 வயதுவரைக்கும் தேடிவிட்டு அதுக்கப்புறமும் விடைகிடைக்காமல் உயிரோட இருந்தா மறுபடியும் சைவசமயத்திடம் சரணடைவதே என் திட்டம்..ஹிஹி

    44 Responses

    1. புல்லட் இது நீங்களேதானோ.. மூண்டு வருசத்துக்குள்ள என்ன ஒரு மாற்றம்? ரூமில நான் கதைக்க வெளிக்கிட்டா பிச்சை வேண்டாம் நாயைப் பிடி கணக்கில ஓடுவியளே... சந்தோசமா இருக்கு இப்பிடிக் கதைக்கிறத நினைக்க..

    2. ஹாய் புல்லட்,

      நல்ல நகைச்சுவைப் பதிவு. வாழ்த்துக்கள்.

    3. //எனக்குப்பயம் எவனாவது அம்மா பகவான் பக்தன் புத்தகவெளியீட்டு திணைக்களத்தில இருந்தால் //

      ஹா ஹா...

      அருமையான பதிவு...


      சமய பாடங்கள் முதலில் பாடசாலையில் தவிர்க்கப்படவேண்டும், அல்லது எல்லாச் சமயங்களும் கற்பிக்கப் படவேண்டும்.
      சமய பாடங்கள் கற்பிக்கப் போகிறீர்கள் என்றால் கடவுள் எதிர்ப்பையும் படிப்பியுங்கள்...
      பிள்ளை தனக்கு வேண்டிதை எடுத்துக் கொள்ளட்டும்.

      கடவுள் என்றால் மதங்கள் தானென்று மாறிவிட்டன.

      அம்மா பகவான் ஆட்கள் தொல்லை தாங்கவில்லை.

      அனானிகளிடம் நிறைய அடிவாங்க வாழ்த்துக்கள்.... ;)

    4. // மன்னார் அமுதன் said...
      ஹாய் புல்லட்,

      நல்ல நகைச்சுவைப் பதிவு. வாழ்த்துக்கள். //

      என்ன கொடுமை இது..... :)

    5. இடைக்கிடை ஒழுங்காவும் எழுதச் செய்றான் பயல்.. :P

    6. இந்தியாவுல சமயப் பாடம்னு ஒன்னும் இல்லாததால இந்தப் பதிவை சாய்ஸ்ல விட்டுடறேன்..

      ஒரு படத்துல கமலஹாசன் வசனம் இப்பிடி வரும்

      “இந்த சாமி இல்லன்னு சொல்றாம்பாரு அவன நம்பிரலாம். சாமி இருக்குன்னு சொல்றாம்பாரு அவனக்கூட நம்பிரலாம். ஆனா நாந்தான் சாமின்னு சொல்றாம்பார் அவன மட்டும் நம்பக்கூடாது”

      :))

    7. அம்மா பகவானின் அடியார்(ட்)களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள வாழ்த்துக்கள் :P

    8. சும்மா பிச்சு ஒதர்றீங்க.. புல்லட்டு.. நடத்துங்க

    9. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!

    10. //அத்தோட கடவுளை வைச்சு ஏமாத்துறவங்களை எப்பிடி கண்டுபிடிக்கணும் தண்டிக்கணும் எண்டு சொல்லிிக்குடுங்க .. எங்கட பழைய சமூகம் விட்ட பிழையளாலதான் பல முடிச்சவிக்கிகள் அப்பாவி சனங்களிண்ட காசுகளை சுருட்டுறாங்கள்....//

      வருத்தமான விடயம் புல்லட்! எவ்வாறு இப்படி ஏமாற்றுபவர்களை எல்லாம் இலகுவாக நம்பி விடுகிறார்களோ தெரியவில்லை. அதுவும் இலட்சக்கணக்கான பேர்.

    11. ஏதிர்மறையான கருத்துக்கள் வராமை எனக்குக் கவலை தருகிறது....

      அப்படியான கருத்துக்கள் தான் எங்கள் பக்கப் பிரசாரங்களை ஊக்குவிக்கும்....

      வாருங்கள் நண்பர்களே....

    12. இங்கும் இந்தக் கூத்துக்களுக்குக் குறையில்லை. பெற்ற தாய் தகப்பனைக் கும்பிடாததெல்லாம்; இதுகளைக் கும்பிடுகுதுகள்.
      இது ஒரு வகை மன நோய் போலும்.
      அடுத்து நீங்கள் பருத்தித்துறையோ? என நண்பர் இந்த "அம்மாளாச்சி தாயே!" என அடிக்கடி கூறுவார்.

    13. /அடுத்து நீங்கள் பருத்தித்துறையோ? என நண்பர் இந்த "அம்மாளாச்சி தாயே!" என அடிக்கடி கூறுவார். //

      தலை அரியாலையைச் சேர்ந்தவர்....
      எங்கள் (அரியாலை) ஊரிலும் சொல்வார்கள்.
      இது பொதுவாக யாழ்ப்பாணத்திற்குரிய சொல் என்று நம்புகிறேன்.... :)

    14. நானும் பாடசாலையில் மதக்கல்வி தேவையா என ஒரு பதிவு எழுதினேன், இப்படியே போனால் நம்ம சனம் மெஜிக் செய்பவனையும் கோவிடுல் கட்டி கும்பிடும்.

      சில வேளை அதுக்கு டேவிட் ப்லேயினை அகில உலக கடவுளாக ஏற்றுக் கொள்வார்களோ தெரியவில்லை.

      இந்த சும்மா பகவான் ஆட்களின் தொல்லை தாங்க இயலவில்லை, எங்கள் வீட்டுக்கு அருகாமையிலும் இந்த சும்மா பகவானுக்கு இன்ஸ்டண்ட் கோவில் ஒன்று தோன்றியிருக்கிறது

    15. அம்மா பகவான் படத்தை பொக்கற்றுக்குள்ளும், பர்சிலையும் வைச்சுக்கொண்டு இங்கை கனபேர் பீட்பக்கிலை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கினம்.

    16. மதுவதனன் மௌ. / cowboymathu said...

      புல்லட் இது நீங்களேதானோ.. மூண்டு வருசத்துக்குள்ள என்ன ஒரு மாற்றம்? //

      தனிமையும் சிந்திப்பும் தேடலும் நிறையவே கடந்த 3 வருடத்தில் கிடைத்தது மது.. :-)

    17. மன்னார் அமுதன் said...

      ஹாய் புல்லட்,

      நல்ல நகைச்சுவைப் பதிவு. வாழ்த்துக்கள்.

      கிழிஞ்சுது போ!

    18. கன்கொன் || Kangon said...
      சமய பாடங்கள் முதலில் பாடசாலையில் தவிர்க்கப்படவேண்டும், அல்லது எல்லாச் சமயங்களும் கற்பிக்கப் படவேண்டும்.
      சமய பாடங்கள் கற்பிக்கப் போகிறீர்கள் என்றால் கடவுள் எதிர்ப்பையும் படிப்பியுங்கள்...
      பிள்ளை தனக்கு வேண்டிதை எடுத்துக் கொள்ளட்டும். //

      கடவுள் என்றால் மதங்கள் தானென்று மாறிவிட்டன.

      அருமையான கருத்து கங்கோன் ..

      அனானிகளிடம் நிறைய அடிவாங்க வாழ்த்துக்கள்.... ;)

      அருமையான எண்ணப்பாடு கொடுங்கோன் :P

    19. Vishnu said...

      இடைக்கிடை ஒழுங்காவும் எழுதச் செய்றான் பயல்.. :P


      நீங்க அதே பழைய விஸ்ணுதானே?
      என் கூட தனகுறதே உங்களுக்கு வேலையாப்போச்சு..:P

      haha...பரவால்ல எல்லாம் ஒரு அன்பிலதானே? :P

      ஆனாலும் இந்த postஐ விஸ்ணுவே வாழ்த்தியதுதான் அதிசயம்.. ஆடுத்து சிவனும் பிரம்மனும் வரலாம் :P

    20. முகிலன் said...

      இந்தியாவுல சமயப் பாடம்னு ஒன்னும் இல்லாததால இந்தப் பதிவை சாய்ஸ்ல விட்டுடறேன்.. //

      குடுத்து வைச்ச தமிழ்நாட்டு சிறார்கள்.. ஹ்ம்..

      “இந்த சாமி இல்லன்னு சொல்றாம்பாரு அவன நம்பிரலாம். சாமி இருக்குன்னு சொல்றாம்பாரு அவனக்கூட நம்பிரலாம். ஆனா நாந்தான் சாமின்னு சொல்றாம்பார் அவன மட்டும் நம்பக்கூடாது” //

      அங்க நிக்கிறார் நம்ம பத்ம சிறீ

    21. Subankan said...

      அம்மா பகவானின் அடியார்(ட்)களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள வாழ்த்துக்கள் :P //

      உனக்கு அவங்களே பரவால்ல ..வடுவா.. :P

    22. அண்ணாமலையான் said...

      சும்மா பிச்சு ஒதர்றீங்க.. புல்லட்டு.. நடத்துங்க //

      நாம என்னத்தை பிச்சு ஒதறினாலும் அவன் கூட்டி அள்ளிட்டு தன்பாட்டுக்கு போயிட்டிருக்கான்.. அதுதான் கவலை சேர்..

    23. - இரவீ - said...

      நல்ல பதிவு. வாழ்த்துக்கள்! //

      நன்றி இரவீ

    24. யாழினி said...

      வருத்தமான விடயம் புல்லட்! எவ்வாறு இப்படி ஏமாற்றுபவர்களை எல்லாம் இலகுவாக நம்பி விடுகிறார்களோ தெரியவில்லை. அதுவும் இலட்சக்கணக்கான பேர். //

      சும்மா ஊடகவியலாளரை போட்டுத்தள்ளுறவங்கள் உப்பிடி அப்பாவிச்னங்களை ஏமாத்துறவங்களையும் போட்டுத்தள்ளினால் எனக்கு சந்தோசம்.. ஏன் அப்படிச் செய்கிறானுகளில்லை எண்டுதான் தெரியல்ல!

    25. யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

      இங்கும் இந்தக் கூத்துக்களுக்குக் குறையில்லை. பெற்ற தாய் தகப்பனைக் கும்பிடாததெல்லாம்; இதுகளைக் கும்பிடுகுதுகள்.
      இது ஒரு வகை மன நோய் போலும். //

      உண்மைதான்..

      அடுத்து நீங்கள் பருத்தித்துறையோ? என நண்பர் இந்த "அம்மாளாச்சி தாயே!" என அடிக்கடி கூறுவார். //

      இது யாழுக்கு பொதுவானது.. பல பழைய பாட்டிமார் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன்.. தற்போது ஓ மை காட் தான் புதிய பாட்டிகள் மத்தியில் பரவலாக அடிபடுகிறது..

    26. // சும்மா ஊடகவியலாளரை போட்டுத்தள்ளுறவங்கள் //

      ஹலோ... ஒருக்கா வான் இல வந்து ஏற முடியுமா?
      அந்தா நிக்குது, அந்த வெள்ளை நிற வான் தான்... ஓம் அதே தான்....

    27. யோ வொய்ஸ் (யோகா) said...

      இப்படியே போனால் நம்ம சனம் மெஜிக் செய்பவனையும் கோவிடுல் கட்டி கும்பிடும். //

      உண்மைதன்..

      எங்கள் வீட்டுக்கு அருகாமையிலும் இந்த சும்மா பகவானுக்கு இன்ஸ்டண்ட் கோவில் ஒன்று தோன்றியிருக்கிறது //

      பேசாம ஏதாவது சுண்டல் வடை பொட்டாங்களெண்டால் போய் வடிவா உட்கார்ந்து சாப்பிட்டுட்டு வாங்க.. அவ்ளோதான் நம்மால பண்ணமுடியும்..

    28. PRAKASH said...

      அம்மா பகவான் படத்தை பொக்கற்றுக்குள்ளும், பர்சிலையும் வைச்சுக்கொண்டு இங்கை கனபேர் பீட்பக்கிலை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கினம். //

      என்ன நண்பா ! யாரது? நம்ம கங்கோனா? :-o அவன் தான் லவ் பண்ணுற பெட்டையோட படம் மட்டும்தான் பேசில இருக்குமெண்டவன்.. அப்போ? :P

    29. // என்ன நண்பா ! யாரது? நம்ம கங்கோனா? :-o அவன் தான் லவ் பண்ணுற பெட்டையோட படம் மட்டும்தான் பேசில இருக்குமெண்டவன்.. அப்போ? :P //

      ஆகா..... ஏன் இந்தக் கொலைவெறி?

      அது feedback ஆ? எ.கொ.இ.இது....

      என் பேர்ஸ்ஸில எதுவுமே இல்ல...

      எந்தப் பெட்டை பெடியனின்ர (கோவா வந்தாப் பிறகு இதயும் சொல்லோணுமாம்) படமும் இல்ல அதில....

    30. சமயம் குறித்தான எதிரான சில கருத்துக்கள் தோன்றும் எப்போதெனில் எமக்கு விரும்பியதெல்லாம் நிறைவேறி கேட்டதெல்லாம் கிடைக்கும் பொழுதுகளில். நீங்களும் வாழ்க்கையின் சில வலிகளை அனுபவிக்க நேரிட்டால் கோவிலை கண்டவுடன் உங்கள் கை automatic ஆக உயர்ந்து கண்ணையும் நெஞ்சையும் தொட்டுச்செல்லும். இதை யாராலும் மறுக்க முடியாது. ....
      நானும் பிறந்ததினத்திற்கு மட்டும் கோவில் சென்று கடவுள் இற்கு ஓர் ஹாய் சொல்லி பின் சமயத்தையும் மனிசரை யாரும் மூளை இருப்பவர்கள் கும்பிடுவாங்களா என்றும விமர்சித்தபடி இருந்தவள். இன்று எதிரே வரும் புல்லட் தான் கடவுளாம் என்று யார் சொன்னாலும் உடனே காலில் விழுந்து என் வேண்டுதலை சொல்லி என் வேண்டுதல் நிறைவேற வேண்டுமென கும்பிடுவேன். நம்பிக்கை தான் வாழ்க்கை.எமது எஞ்சிய வாழ் நாட்களை நகர்த்த நாம் கொண்டுள்ள அதாரம் இது தான்.

    31. ஹையோ ஹையோ..... போங்கள்...

    32. ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்..

      அண்ணா..
      சின்ன வகுப்பில இப்பிடித்hதன் ஒரு பொடியன் தேவாரம் பாடேக்குள்ள உண்மையான வரிகளை மறந்து உல்டா வரிகளை பாடி ரீச்சரிட்ட வாங்கிக் கட்டினத இந்தப் பதிவு ஞாபகப்படுத்துது.

      தோடுடைய செவியன் யாருடைய பொடியனென... தொடங்கும் அப்பதிகம்...

      உண்மையாக பள்ளியில் சமத்துவம் பேணப்பட வேண்டுமெண்டால் சமய பாடங';கள் சிலபஸ் லிருந்து தூக்கப்பட வேண்டும் இல்லாட்டி மாற்றம் கொண்டு வரணும்.
      இங்க மாற்றங்கள் அவசியம் தான்....

    33. archchana said...
      வாழ்க்கையின் சில வலிகளை அனுபவிக்க நேரிட்டால் கோவிலை கண்டவுடன் உங்கள் கை automatic ஆக உயர்ந்து கண்ணையும் நெஞ்சையும் தொட்டுச்செல்லும். இதை யாராலும் மறுக்க முடியாது. ....
      நம்பிக்கை தான் வாழ்க்கை.எமது எஞ்சிய வாழ் நாட்களை நகர்த்த நாம் கொண்டுள்ள அதாரம் இது தான். //

      அக்கா! அற்புதமான நியாயமான கருத்து.. சின்னவயசில காய்ச்சல் வந்தா அம்மாண்ட மடில படுப்பம்.. ஒரு பிரச்சனையும் இல்லாத மாதிரி ஒரு உணர்வு வரும் .. எங்கட பாரத்தை இன்னொ ஆளில சுமத்தி வைச்சா மனசு இலேசாகும்.. இது மனித உளவியல்..

      ஆனா வளந்து பெரியவனாகி உங்க மடியில யாராவது படுத்திருந்து அழும்போது உங்களுக்கும் பிரச்சினை வந்துதெண்டால் உங்களை விட பெரிய அன்பான ஒருத்தரை தேடிப்போறது மனசுக்கு ஒரு ஆறுதல்.. அப்படி ஒரு வலிநீக்கும்,என் பாரம் தூக்க உதவும் ஹீரோவை தேடும் மனவிருப்பை நானும் உணர்ந்நதிருக்கிறேன்.. பலருக்கு அது கடவுளாகத்தான் இக்கிறார்.. அவர் இருக்கிறார் என்னை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை ஓட்டப்படுகிறது ..

    34. பிரபா said...

      ஹையோ ஹையோ..... போங்கள்... //

      என்னாச்சு ? என்னிடம் ஏனிந்த வெட்கம்?
      கோவா படம் பாத்திட்டீங்களோ? :P

    35. இலங்கன் said...

      ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்..//

      நற நற ...

      தோடுடைய செவியன் யாருடைய பொடியனென... தொடங்கும் அப்பதிகம்... //

      பதிகம்????
      உதெல்லாம் எம்மாத்திரம்.. நம்ம பெடியங்கள் திருஞானசம்பந்த மூர்த்திக்கும் காரைக்காலம்மையாருக்கும் கனெக்சன் குடுத்து பாட்டெல்லாம் எழுதினவங்கள் .. கேட்டால் சம்மந்தர் சமண சமயத்தில சேந்திடுவார்..

    36. பம்பர், யுகபாலசிங்கம் சேர் போன்றோரை விட்டு விட்டு மொளலி சேரை மட்டும் இப்பதிவில் வெளிச்சப்படுத்தி காட்டியதை வன்மையாக கண்டிக்கிறோம்.
      இவண்,
      அனானி வித் blogger ஐடி
      ஒன் பிகாவ் ஒவ்
      பம்பர் ரசிகர் மன்றம்.

    37. நல்ல பதிவு புல்லட். நான் படித்தது யாழ்ப்பான சைவ சமுகத்தின் கல்வி அடையாளமாக சொல்லப்படும் கல்லூரியில். எனது குடும்ப சூழலும் கோயிலை சார்ந்த ஒன்றாகவே இருந்தது. பன்னிரண்டு பதின்மூன்று வயதுவரை நான் ஒரு தீவிர சைவனாகவே வளர்க்கப்பட்டேன். சமயம் பற்றிய மாற்று சிந்தனை எனக்குள் உதிக்க காரணம் எனது சமை ஆசிரியர். அவர் கற்பிப்பதை தவிர மற்றைய அத்தனை விடயங்களையும் செய்தார். மதம் வேறு ஆன்மிகம் வேறு என்ற சிந்தனை மெல்ல மெல்ல வளர தொடங்கியது. சமய பாடம் எனக்கு சுத்தமாக ஏறவில்லை, பாடமாக்கி எழுத முடியவில்லை. என்ன செய்ய எங்கள் தலைஎழுத்து சமயம் முதன் விஞ்ஞானம் வரை சிந்திப்பதை விட மனனம் செய்து ஒப்பிப்பதையே முதன்மைப்படுத்தும் நெறிமுறையில் வாழவேண்டிய நிர்ப்பந்தம். யாருடைய நம்பிக்கையையும் நான் குறை கூறவில்லை ஆனால் தன்னம்பிக்கையை குறைக்கும் நம்பிக்கைகள் ஆரோக்கியமானதாக எனக்கு படவில்லை. இறைவன் இருக்கிறானா இல்லையா என்பதைவிட இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம். தேருக்கு கொடுப்பதையும், கோவில் சுவர்கட்ட செலவளிப்பதையும் சிலர் வாழ வழிசெய்ய செய்வது சிறந்தவழிபாடு என்பது என் நம்பிக்கை. சமயம் என்று எல்லா சமயங்களையும் கற்பிப்பது பரஸ்பர நல்லுறவையும் தெளிவையும் வளர்க்க உதவும். மன்னருக்கொரு மடல் எழுதுவோமா?

    38. அருமையான சமூக அக்கரை கொண்ட எழுத்துகள். தொடர்ந்து எழுதுங்கள்

      "சிறுவயதில் பொய்சொல்லாமல் களவெடுக்காமல் இருக்க இந்த சமயமும் சாமியும் எனக்கு பயமுறுத்தி வழிநடத்திச்சென்றனதான்.. அதை மறுப்பதற்கில்லை."

      இப்படி ஒரு மிகவும் பிழையான கருத்தை எமது பெற்றோர்களும் மூத்தவர்களும் செய்து விட்டார்கள். பிள்ளைகளுடன் இருந்து பேசாமல் அவர்களுடன் அதிக பொழுதை போக்காமல், படிப்பு படிப்பு என்று பள்ளிக்கூடம் பின்பு டியூஷன் என்று அனுப்பிவிட்டு சொற்ப நேரத்தையும் கடவுள், பேய், பூதம் என்று சொல்லி பழகி விட்டார்கள்.
      பிள்ளைகள் பிழை விட்டால் பெறோர்கள் தகுந்த அன்புடன் கூடிய கண்டிபுடனேயே நல்வழி படுத்தாலாம் என்பது என் கருத்து.



      "அப்பிடித்தான் அண்டைக்கும் 42வது லேனுக்கு பக்கத்தயும் பளிச்சுபளிச்சசெண்டு குமரியள் பொக நானும் என்னடா புதுக்கோவிலாக்கும் எண்டு எண்ரியை குடுத்துட்டன்.."

      குமாரிகளை பார்க்கிற இடத்தில எல்லாம் என்றி கொடுக்க கூடாது என்ற படிப்பினையை பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.


      அம்மா பகவானின் பெருமை பற்றி இன்னும் ஒரு தளத்தில் பார்த்தேன்.

      http://kallmag.blogspot.com/2008/12/blog-post_28.html

      "பிகு: 60 வயதுவரைக்கும் தேடிவிட்டு அதுக்கப்புறமும் விடைகிடைக்காமல் உயிரோட இருந்தா மறுபடியும் சைவசமயத்திடம் சரணடைவதே என் திட்டம்..ஹிஹி"

      குழம்பாதீர்கள் பாஸ். சமூக கருத்துகள் எழுதுபவர்கள், பேசுபவர்கள் முதலில் தங்களை திடமாக்கி, திருத்தி கொள்ளவேண்டும்..

      பேச்சோடு எழுத்தோடு நில்லாமல், செயலிலும் இறங்க வேண்டும். உங்கள் கருத்துக்கு ஒத்தவர்களுடன் சேர்ந்து இலங்கை கல்வி திண்ணைகளத்துக்கு "சைவ பாடம் அவசியம் தானா" என்று ஏன் ஒரு கடிதம் எழுதி பார்க்க கூடாது. அதில் என்னையும் சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    39. இந்த பகவான்கள் பற்றி சொல்வதற்கில்லை - எனக்கு உடன்பாடுமில்லை அதற்காக இந்து சமயமே பிழை அது கூடவே கூடாது என்று சொல்வது தவறு.

      உண்மையிலேயே இந்து மதத்தை தவறாக Interpret செய்கிறார்கள். இந்த பகவான் சமாச்சாரம், RSS வன்முறை, மதத்தீவிரவாதம் எல்லாம் இந்து நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானவவை. ஆக பலர் மதத்தைப் பிழையாக பின்பற்றுகிறார்கள் என்பது உண்மையே அதை மாற்ற வேண்டும் ஆனால் அதற்காக முழுமையாக இந்து மதத்தைப் புறக்கணித்துவிட முடியாது.

      காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் மதங்கள் கூறும் நல்ல விடயங்களை ஏற்று மனிதன் செயற்படவேண்டும். ஆனால் மனிதன் எப்போதும் மதங்களைச் சுயநலத்திற்கும், சுயலாபங்களுக்குமே பயன்படுத்துவதும், மதத்தலைவர்கள் ஆதிக்கவெறி கொண்டு செயற்படுவதும் அம்மதங்களைக் கொச்சைப்படுத்துவதுடன் அம்மதங்களின் நோக்கங்களையும் கெடுத்துவிடும்.

      நான் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றேன். ஆனால் இந்த பகவான்கள், சாமியார்கள் பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை - நம்பிக்கையுமில்லை. கோயிலில் காசுகொடுத்து அர்ச்சனை செய்வதிலெல்லாம் ஈடுபாடில்லை ஆனால் இந்து மதக் கோட்பாடுகளின் படி தர்ம வாழ்வை வாழ விரும்புகின்றேன். அவ்வளவுதான்.!

    40. Sanjai said...

      பம்பர், யுகபாலசிங்கம் சேர் போன்றோரை விட்டு விட்டு மொளலி சேரை மட்டும் இப்பதிவில் வெளிச்சப்படுத்தி காட்டியதை வன்மையாக கண்டிக்கிறோம்.
      இவண்,
      அனானி வித் blogger ஐடி
      ஒன் பிகாவ் ஒவ்
      பம்பர் ரசிகர் மன்றம்.

      //

      ஹாஹா! யுகத்தாரை கட்டாயம் இழுத்திருக்க வேண்டும்.. பம்மர் பாவம்..யாரப்பா நீ? நம்ம செட்டில ஒராள்தானே.. பொறு பிடிக்கிறன்.. :-)

    41. மானுடன் said...

      நல்ல பதிவு புல்லட். நான் படித்தது யாழ்ப்பான சைவ சமுகத்தின் கல்வி அடையாளமாக சொல்லப்படும் கல்லூரியில். எனது குடும்ப சூழலும் கோயிலை சார்ந்த ஒன்றாகவே இருந்தது. பன்னிரண்டு பதின்மூன்று வயதுவரை நான் ஒரு தீவிர சைவனாகவே வளர்க்கப்பட்டேன். சமயம் பற்றிய மாற்று சிந்தனை எனக்குள் உதிக்க காரணம் எனது சமை ஆசிரியர். அவர் கற்பிப்பதை தவிர மற்றைய அத்தனை விடயங்களையும் செய்தார். மதம் வேறு ஆன்மிகம் வேறு என்ற சிந்தனை மெல்ல மெல்ல வளர தொடங்கியது. சமய பாடம் எனக்கு சுத்தமாக ஏறவில்லை, பாடமாக்கி எழுத முடியவில்லை. என்ன செய்ய எங்கள் தலைஎழுத்து சமயம் முதன் விஞ்ஞானம் வரை சிந்திப்பதை விட மனனம் செய்து ஒப்பிப்பதையே முதன்மைப்படுத்தும் நெறிமுறையில் வாழவேண்டிய நிர்ப்பந்தம். யாருடைய நம்பிக்கையையும் நான் குறை கூறவில்லை ஆனால் தன்னம்பிக்கையை குறைக்கும் நம்பிக்கைகள் ஆரோக்கியமானதாக எனக்கு படவில்லை. இறைவன் இருக்கிறானா இல்லையா என்பதைவிட இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம். தேருக்கு கொடுப்பதையும், கோவில் சுவர்கட்ட செலவளிப்பதையும் சிலர் வாழ வழிசெய்ய செய்வது சிறந்தவழிபாடு என்பது என் நம்பிக்கை. சமயம் என்று எல்லா சமயங்களையும் கற்பிப்பது பரஸ்பர நல்லுறவையும் தெளிவையும் வளர்க்க உதவும். மன்னருக்கொரு மடல் எழுதுவோமா? //

      வழமையைப் போலஅருமையானதொரு பின்னூட்டம் மானுடன்.. உங்களைப்ுபோன்றவர்கள்தான் கல்வித்திணைக்களங்கள் , சமாதானச்செயலகங்களில் இருக்கவேண்டும்..

      மன்னருக்கு மடல் எழுதலாம்..ஆனால் யாரும் கருத்திலெடுக்கமா்டார்கள்.. ஆனந்த சங்கரி யை அட்வைஸ் கேட்டால் சொல்வார்..

    42. சூர்யகதிர் said...
      //

      நன்றி கதி்ர் உங்கள் கருத்தாழமிக்க பின்னூட்டத்துக்கு

      குழம்பாதீர்கள் பாஸ். சமூக கருத்துகள் எழுதுபவர்கள், பேசுபவர்கள் முதலில் தங்களை திடமாக்கி, திருத்தி கொள்ளவேண்டும்.. //


      உண்மைதான்.. ஆனால் நான் தேடலை ஊக்குவிக்கிறேனே ஒழிய அந்த சமயத்தை ஒழுகவேணாமென்று கூறவில்லை.. எனக்கு தமிழ் போல இந்து சமயமும் ஒரு ஐடென்ட்டிட்டி .. எத்தனை படையெடுப்புகள் .. எத்தனை அழுத்தங்களிலிருந்து தப் பியிருக்கும் ஒரேயொரு நெறி அது.. அதை என்னுடைய முன்னோடி மூதாதையர் முதற்கொண்டு தழுவி வரும்போது அதை அழிய விடுவதாயில்லை.. அது ஒரு அடையளம்.. அதில் சிறந்த நெறிகள் இருக்கிறன.. தேவையில்லாத விடயங்களும் பல இருக்கிறன.. எமக்கு இயலாத பொழுது சாயவதற்கு ஒரு தூண் தேவையில்லையா? அவ்வாறுதான் சாகும் தறுவாயில் ஒரு நம்பிக்கை வேண்டும் .. நாம் இப்பிடித்தான் வந்தோம்.. செத்தால் இப்படித்தான் ஆவோம் என்று.. விஞ்ஞானம் மற்றும் மனவியல் ஆய்வுகள் மூலம் எதையாவது கண்டுபிடிக்க எம்மல் இயன்ற காலப்பகுதியில் முயற்சி்க்க அடிகோலப்படவில்லை என்பதே எனது வாதம்.. அந்த வயதில் சமயம் திணிக்கப்டுகிறது .. அறிஞர் ஜிட்டு கிருஸ்ணமூர்த்தி சொல்வது போல ஒரு பாதுகாப்பு வளையத்தை நாமாகுவே உருவாக்கி அதற்குள் இருந்து விடுவதுதான் தேடலையும் வாழ்க்கையின் சந்தோசத்தையும் குறைக்கிறது.. மற்றும் படி சைவசமயத்தவர்கள் அடிமடையர்கள் என்ற கருத்தெல்லாம் எனக்கு கண்ணிலம் காட்டப்படாது.. :-)

      பேச்சோடு எழுத்தோடு நில்லாமல், செயலிலும் இறங்க வேண்டும். உங்கள் கருத்துக்கு ஒத்தவர்களுடன் சேர்ந்து இலங்கை கல்வி திண்ணைகளத்துக்கு "சைவ பாடம் அவசியம் தானா" என்று ஏன் ஒரு கடிதம் எழுதி பார்க்க கூடாது. அதில் என்னையும் சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன். //

      நிச்சயமாக செய்யலாம் எப்போதெனில் எம் வயதையொத்தவர்கள் திணகை்களங்களுக்கு வரும்போது அதிகாரத்திற்கு வரும்போது அவர்களிடம் சொன்னால் கேட்கக்கூடும் ..
      இப்போது சொன்னால் , இந்து கலாசார அலுவர்கள் அமைச்சு யார் கையிலென்று தெரியும்தானே? :P

    43. என்.கே.அஷோக்பரன் said...

      இந்த பகவான்கள் பற்றி சொல்வதற்கில்லை - எனக்கு உடன்பாடுமில்லை அதற்காக இந்து சமயமே பிழை அது கூடவே கூடாது என்று சொல்வது தவறு.

      //
      சத்தியமான வார்த்த அசோக்.. நான் ஒரு தமிழன் என்று சொல்லிக்கொள்வது போல ஒரு இந்து ஒரு சைவன் என்று சொல்லிக்கொள்வேன்.. அது ஒரு அடையாம்.. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் என் அப்பாடி அப்பப்பன் முகலாயன் போர்த்துக்கிசன் கொலைமிரட்டலுக்கெல்லாம் அஞ்சாமல் வளர்த்த அடையாளம்.. ஒரு இனம் நாகரிகமாக வளர உறுதுணயாயிருந்த நெறி.. எனக்கு உந்த கடவுள் வடிவமைப்புகள் தேவாரங்கள் செத்தவனை உயிர்ப்பித்த கதைகளில் நம்பிக்கையில்லையே ஒழிய அது தரும் தர்ம கோட்பாடுகளை ஒழுக வரும்புகிறேன்.. புத்தசமயம் இந்து சமயத்தின் ஒரு றிபைன் செய்யப்பட்ட வடிவமே.. நான் ஒருபோதம் இந்து சமயத்தை இழிவாக கதைக்கமாட்டேன்.. அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தைதான் தவறென குறிப்பட்டுள்ளேன்.. உதாரணமாக எனக:கு சிறுவயதில் சைவத்தை படிப்பித்திருக்காவட்டிருந்தா நான் இப்போது அதை பற்றி அதன் வரலாறு பற்றி கட்டாயம் தேடிக்கொண்டிருப்ுபேன்.. நேற்றுக்கூட The lost temples of Indiaஎன்ற ஆவணப்படத்தை புல்லரிக்க பார்த்துக்கொண்டிருந்தேன்.. :-)

    44. அருமையான , சமூகத்துக்குத் தேவையான பதிவு, பாடசாலைகளில சமயக் கல்வியாவது போனாப் போகுதெண்டு பொருத்துட்டுப் போகலாம், அதோட இணைஞ்சு வார இலவச இணைப்பிண்ட தொல்லை தான் குழந்தைகளை சமயம் என்கிற தன்மையை மாற்றிப் பார்க்கவைத்து இடையில் பிறழ வைக்கின்றது.
      உண்மையில் சைவ சமயப் பாடவிதானங்களில் சைவத்தை அடிப்படையாகக் கொண்டவை மிகக் குறைவு, பிற சமய காழ்ப்பும், மூடநம்பிக்கைக் கதைகளுமே பிரதானம்,பட்டுச் சொக்காய் போட்டதெல்லாம் கடவுள் என்கிற மாயம் . பத்து, பதினோறாந் தரங்களில் இறுதி பாடங்களே சைவத்தைப் போதிக்கின்றன, தவிர விழுமியங்களைஎல்லாம் கடவுளாக்கிக் காட்டுகின்ற ஒரு கீழ்த்தர உபாயத்தைத் தான் இந்தப் பாடப் புத்தகங்கள் போதிக்கின்றன. ஒன்று பாடப் பரப்பை மாற்ற வேண்டும், முற்றாக நெறியை நிராகரிக்க முடியாது, நான் சமயத்துக்குப் புறம்பானவளானாலும், முற்றிலுமான நிராகரிப்பை எதிர்க்கிறேன், இன்றைக்கு இது கூட இல்லா விட்டால் சமுதாயத்தில் இம்மட்டுமாவது எம்மவர் நிற்க மாட்டார்.
      கடைசி, வரலாறுகளாவது இதன் மூலம் தெரியட்டும்,