அவுஸ்திரேலியா அடித்த ஆப்பு..


    முற்குறிப்பு: இது AUstralian Skilled Migration குறித்தானது... என்னுடைய பல நண்பர்கள் இது குறித்து என்னிடம் கேட்பதால் இந்த பதிவு.. :-)





    பல இந்தியர் மற்றும் சீனர்களின் கனவு தேசங்களில் பிரதான இடம் வகிப்பவை இரண்டு.. முதலாவது அமெரிக்கா.. இரண்டாவது அவுஸ்திரேலியா..

    கணக்கியல் மற்றும் பொறியியலில் ஆரம்ப பட்டப்படிப்பை முடித்தவர்கள் முதல்வகுப்பில் பாஸாகியிருப்பின் , மேற்கொண்டு படிக்க விரும்பினால் அமெரிக்கா போவதும் , அப்படி விருப்பமோ அல்லது தகுதியோ குறைவாயிருந்தால் ஒரு வருடம் தம்நாட்டில் வேலை செய்துவிட்டு அவுஸ்திரேலியாவுக்கு SKILLED MIGRATION இல் போவதும் வழமை..




    ஆனால் இன்று ( பெப் 8) அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வு அமைச்சர் ஆற்றிய உரையை தொடர்ந்து இரண்டாவது ஓப்சனுக்கு பாரிய அடிவிழுந்திருக்கிறது..
    என்ன நடந்தது என்பது குறித்து சற்று விபரமாக ஆராய்வோம்..

    அவுஸ்திரேலியாவில் SKILLED MIGRATION மூலம் பிர எடுத்து குடியேறுவதாயின் உங்கள் பட்டப்படிப்பு குறித்த சில அமைப்புகளால் அங்கீகரிக்கப்படவேண்டும்.. உதாரணமாக பொறியியல் என்றால் IE AUSTRALIA என்பதாலும் கணணிப்படிப்பு என்றால் ACS ஆலும் ரெயில் சிக்னலிங் என்றால் IRSE ஆலும் என்று ஒவ்வொன்றுக்கு ஒன்று வைத்திருக்கிறார்கள்..

    நீங்கள் அந்த அமைப்புகளால் நேரடியாக அங்கீகரிக்கப்பட அவுஸ்திரேலிய அல்லது அமெரிக்க அல்லது குறித்த சில UK பல்கலைகளில் படிப்பை முடித்திரு கவேண்டும . தவறும் பட்சத்தில் , அதாவது வேறு ஏதாவது இந்திய சீன பல்கலைகளில் கற்றிருந்தால் ,நீங்கள் 1 வருடம் குறித்த துறையில் வேலை செய்து அதை CDR (competency demonstration report )எனும் அறிக்கையாக 40 ,50 பக்கங்களில் எழுதி குறித்த அமைப்புகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.. (கணணித்துறயாயின் CDR தேவையில்லை.. ஆனால் 4 வருட அனுபவம் வேண்டும் )

    அதை அனுப்பி ஏறத்தாழ 4 அல்லது 5 மாதங்களின் பின்னர் , குறித்த அமைப்பால் உங்கள் தகுதி அங்கீகரிக்கப்பட்ட படிவம் உங்களுக்கு கிடைக்கும்.. பின்னர் நீங்கள் நிரந்தர வதிவிட விசாவுக்கு அப்ளை செய்யலாம்.. அதற்கு elligible ஆகுவதற்கு உங்களுக்கு இமிகிரேசன் பொயிண்ட் சிஸ்டத்தின்படி 120 மார்க்கு தேவை.. (அது கணிக்கும் முறையை பின்னர் கூறுகிறேன்.. )

    அந்த விசாவுக்கு அப்ளை பண்ணியதன் பின்னர் , அதன் முடிவு வர இன்னும் ஏழு எட்டு மாதங்களாகலாம்.. நடுவில் பொலிஸ் றிப்போர்ட் அது இது என்று ஊருப்பட்ட ஆய்க்கினை செய்வார் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட CO (case officer). அதையெல்லாம் தாண்டி ஒரு மாதிரியாக விசாவை பெற்று , இங்கு எல்லாப்பிளளையாருக்கும் விழுந்துருண்டுவிட்டு , அங்கு போய் ஒரு மூன்று அல்லது நான்கு மாதம் கோப்பை கழுவ வேண்டும்.. ஏனெனில் அங்கு உடனடியாக யாரும் professional வேலை எடுத்ததாக சரித்திரம் இல்லை.. கொஞ்சக்காலம் கழுவிக்காயவைத்து பிழிஞ்சு ஊறப்போட்ட பின்பு , 15 வது இன்டவியுவில் ஒரு நல்ல வேலை கிடைத்து ஒரு வீட்டை வாங்கி அப்படி இப்படி என்று செட்டிலாகி; பின்பு அங்கிருந்து தெருவால் சிவனே என்று போகும் கங்காருவுடன் படமெடுத்து , அதை பேஸ்புக்கில் போட்டுவிட்டு இங்கிலிசில் மாறி மாறி "WOW ! SO CUTE !" என்று கமெண்ட் அடிப்பார்கள்.. இதுதான் வழமை..




    உப்படி அத்தனை கனவுகளை யும் நனவாக்கும் அந்த பாயிண்ட் சிஸ்டத்து 120 மார்க்குக்குதான் இப்போது பாரிய வெடி விழுந்திருக்கிறது..

    உங்கள் பட்டப்படிப்புக்கும் அனுபவத்துக்கும் (SOL - skilled occupation list இல் இருந்தால் மட்டும் ) 60 புள்ளிகள்.. உங்கள் IELTS RESULTக்கு 25 புள்ளிகள்.. (எல்லாக்கூறுக்கும் 7 க்கு மேல் இருக்குவேண்டும் ) .. உங்கள் வயசுக்கு 30 புள்ளிகள் ( 29 க்கு உட்பட்டதாயின் )... தொழில் MODL ( migration occupations in demand list) இல் இருந்தால் அதற்கு 25 புள்ளிகள் .. ஆகமொத்தம் 140 புள்ளிகள் வழமையாக எல்லாருக்கும் வரும்.. ஆனால் அந்த கட்டையில போன மந்திரி MODLக்கான 25 புள்ளி இனி இல்லை என்று அறிவித்து விட்டான்.. ஆகவே தற்போது எல்லார்கையிலும் 115 புள்ளிகள்தான் இருக்கப்போகிறது.. அப்போ இனி யாரும் இல் அவுஸ்திரேலியா போகமுடியாது என்றுதானே மறைமுக அர்த்தம்.?

    அவுஸ்திரேலியா அப்படி ஒரு முடிவெடுக்க என்ன காரணம்?

    பெரிய காரணம் இருக்கு... இந்த பெரும்பாலான இந்தியர்களும் சீனர்களும் SKILLED MIGRATION இல் அங்கு போனாலும் , அங்கு யாரும் இஞ்சினியராயோ எக்கொண்டனாயோ வேலை செய்வதில்லை.. காரணம் அங்கு தனிக்கட்டைகளுக்கு வருமானத்தில் 45 வீதம் வரி அடிப்பார்கள் .. கலியாணம் கட்டினால் கொஞ்சம் குறைத்து அடிப்பார்கள்.. பிள்ளை குட்டி இருந்தால் இன்னும் குறையும்.. சுருக்கமாக சொல்லப்போனால் உனக்கு தேவாயனதை மட்டும் விட்டுட்டு மிச்சத்தை கொடுப்பது மாதிரி கொடுத்து பின் தானே உறுஞ்சிவிடும அந்த நாடு..

    இது நம்மாக்களுக்கு பிடிப்பதில்லை.. ஆகவே , பதிவு செய்யாத, கணக்கு காட்ட தேவையில்லாத தொழில்களில் இறங்கி காசு அள்ள ஆரம்பித்தார்கள்.. உதாரணத்து டக்சி ட்ரைவிங்.. முடிவெட்டுதல் ,சொதிக்கு பாலூத்துதல் (அதுதாங்க சமையல்) போன்ற குறைவான திறமையுடைய வேலைகள‌ை GSM இல் சென்றவர்கள் செய்யவே , அங்கு திறமையாளருக்கான தேவை அதிகரித்தே காணப்பட்டது..

    இதென்னடா புதுக்குழப்பம் என்று அதிகாரிகள் தலைய சொறிந்து கொண்டிருக்கையில் சென்ற வரும் ஒரு லட்சத்து எழுபதினாயிரம் பேர் போய்ச்சேர்ந் விட்டார்கள்..ஆகவே தற்போதுள்ள முறையில் ஏதாவது மாற்றம் கொண்டுவருவதற்காக தற்காலிகமாக மறைமுகமாக SKILLED MIGRATION ஐ நிறுத்தியுள்ளார்கள்..

    ஆனால் சீனாவிற்கான அதிகரித்த வழங்கலை தேவையை சமாளிக்க புதிய தொழிலாளர்கள் தேவைப்படும்.. ஆகவே நிலமை மறுபடியும் வரும் ஏப்ரல் இறுதியில் சரியாகும் என் பலர் நம்புகிறார்கள்.. பார்க்கலாம்..


    ஆனால் இந்த பிரச்சனைக்குரிய 120 பொயிண்ட் பற்றாக்குறையை உடைக்க ஒரு வழியிருக்கிறது.. NAATI என்ற பரீட்சை றையில் ஒரு தமிழ்மொழிப்பரீட்சையை எடுத்து பாஸ் பண்ணினால் எக்ஸரா ஒரு 5 பாயிண்ட் கிடைக்கும்.. ஆகவே 115 +5 = 120 வந்துவிடும்.. அல்லது உங்கள் நெருங்கிய உறவினர் யாராவது அவுசியிலிருந்து ஸ்பொன்சர் செய்வாராயின் மொத்தமாக வெறும் 100 பொயிண்ட் போதுமானது.. ஏதாவது வழி நண்பர்காள் டோன்ட் வொறி பி ஹப்பி..


    ஆனால் SKILLED MIGRATION PROCESS ஆனது ஏறத்தாழ 4 இலட்சம் ரூபாய் முதலீட்டில் நடைபெறுவது.. ஆகவே சற்று பணத்தில் றிஸ்க் எடுப்பவர்கள் சிந்தித்து முடிவெடுங்கள்..

    ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்…உதெல்லாம் இலங்கையில இருப்பவனை எள்ளளவும் பாதிக்காது.. சடாரெண்டு ஒரு கோர்சுக்கு அப்ளிக்கேசன போட்டுட்டு அங்க ய்ச்சேர்நதிடுவாங்கள்.. அங்க எங்கயாவது ஒரு அவுஸ்திரேலியன் பொலீசை கண்டவுடன “அண்ணாத்தே ! ஐ வோண்ட் அசைலம் “ எண்டு கொப்பிய கீழபோட்டுட்டு கையை தூக்கிடுவாங்கள்..

    கோஸ் பீயும் றிடேர்ன் பண்ணி மாசாமாசம் செலவுக்கு காசும் தந்து ப்ரியா படிப்பிச்சும் விடுவாங்கள் அப்பாவி அவுஸ்ரேலியங்கள்.... உள்ள போகும் வரையும்தான் நம்மாளுக்கு சிக்கல்.. போட்டானோ? ப்ரைம்மினிஸ்டருக்கே பப்பாப்பழம் தீத்துவாங்கள்..

    உப்பிடி என்னுடைய நிறைய்ய நண்பர்கள் இப்போ அவுசியிலதான் ஜம்மெண்டு இருக்காங்க.. இப்போ ஒரு குரூப்பு அவுசி ப்ளானுக்காக மலேசியா போய் நிக்குது.. ப்ளான் சக்சசாகி அசைலம் குத்திட்டானுங்கன்னா உங்களுக்கு அந்த கதைய விலாவாரியா சொல்றேன்.. அவங்களுக்கா கொஞ்சம் ஆண்டவனை வேண்டிக்குங்க.. :P




    :-)

    P:S -

    Recent MODL changes

    From 8 February 2010 all MODL occupations are removed from the MODL. Therefore, all applicants who lodge an application on or after this date will not be eligible for the award of MODL points unless the applicant:

    • holds a subclass 485 (Skilled-Graduate) visa or has applied for a subclass 485 (Skilled Graduate) visa and is yet to apply for a permanent or provisional General Skilled Migration (GSM) visa
      or
    • on 8 February 2010 had a pending application for a GSM visa.

    Refer :
    Recent MODL changes


    Ausie Migration Ministers site: http://www.minister.immi.gov.au/


    37 Responses

    1. நெறய தகவல் இருக்கு.. மிக்க நன்றி, பலருக்கு பயன் படும்

    2. இந்தியால பொறந்து வளந்து படிச்சிருந்தும் எனக்கு இன்னிக்கு வரைக்கும் இப்பிடியெல்லாம் ஆஸ்திரேலியா போக வழிகள் இருக்குது என்று தெரியாது..

    3. நல்லா சொன்னிங்க

      இங்க நம்மட லங்கையில இருதுதானே அந்த படகில 2 லட்சம் குடுத்து ஆசி போனவையல்

    4. அப்ப என்னமாதிரி 30 வயசுக் காரங்கள் 4 வருட அனுபவம் இருந்தாலும் போக ஏலாதோ???

    5. என்னடான்னு பயந்துட்டடே வாசிச்சுட்டு வந்தா கடைசி வரில பால வாத்தீங்க.

      //நெருங்கிய உறவினர் யாராவது அவுசியிலிருந்து ஸ்பொன்சர் செய்வாராயின் மொத்தமாக வெறும் 100 பொயிண்ட் போதுமானது//.

      பேசாம எங்கட மூத்த பதிவரை ஆசிக்கு அனுப்பியிருக்கலாம். பதிவுலக நெருங்கிய சொந்தம் எண்டு சொல்லிப்போட்டு நூறோட எஸ்கேப்பியிருக்கலாம்.

      அண்ணே ஆசிதான் எண்டில்லை, எதியோப்பியா, சொமாலியா எதெண்டாலும் ஓகேதான். அதுக்கு எத்தின பொயின்ட்ஸ் வேணும்?

    6. good info :)
      but i m nt interested.. lol

    7. அந்த ஆப்பு முடிஞ்சு அடுத்த ஒரு வாரத்துல இப்படி ஒரு பெரிய ஆப்பா வச்சிட்டாங்கள்.....


      படுபாவிகள்,இப்படிச் செய்வாங்கள் என்று யாருக்குத் தெரியும்....

    8. தெரியாத பல தகவல்கள் சொல்லியிருக்கிறீங்கஇ என் நண்பர்கள் பலர் அவுஸ்திரேலியாவில் இருக்கிறாங்க. அவங்களும் இப்படிதான் போனாங்களோ தெரியவில்லை

    9. நல்ல துறைசார் பதிவு புல்லட் அண்ணா...

      கலக்குகிறீர்கள்...
      இதைத்தவிர என்ன சொல்வது என்று தெரியவில்லை.
      ரஜினி விருதுப் படங்களில் நடிப்பது போலிருக்கிறது...
      (கேவலமாச் சொல்லேல, புகழுறன்...)

    10. This comment has been removed by the author.
    11. அண்ணாமலையான் said...

      நெறய தகவல் இருக்கு.. மிக்க நன்றி, பலருக்கு பயன் படும் //

      நன்றி Sir

    12. - இரவீ -
      :)
      // உண்மைய சொல்லுங்க ! நீங்க வாசிக்கலத்தானே? :P

    13. முகிலன் said...

      இந்தியால பொறந்து வளந்து படிச்சிருந்தும் எனக்கு இன்னிக்கு வரைக்கும் இப்பிடியெல்லாம் ஆஸ்திரேலியா போக வழிகள் இருக்குது என்று தெரியாது.. //

      அடடா கொஞ்சம் லேட்டாப்போசசே.. கவலைப்படாதீங்க.. எல்லாம் பழைய நிலைக்கு வந்தவுடன அறியத்தாறன்.. வேணுமெண்டா ப்ரீ அட்வைசும்தாறன்.. :P ..

      ஆனா ஒண்டை மட்டும் மனசில வச்சுக்குங்க.. வாழ்க்கையில சந்தோசம் தான் முக்கியம்.. :)அது எங்க கிடைக்குதோ அங்கயே இருங்க

    14. V.A.S.SANGAR said...

      நல்லா சொன்னிங்க

      இங்க நம்மட லங்கையில இருதுதானே அந்த படகில 2 லட்சம் குடுத்து ஆசி போனவையல் //

      அப்பிடி போறாக்களுக்கு பட்டம் படிப்பு இங்கிலிசு எதுவும் தேவையில்ல.. உண்ணாவிரதம் இருக்க தெரிஞ்சிருந்தா மட்டும் காணும்.. கிறிஸ்மஸ் தீவில கொஞ்சம் பைட்டும் போடவேண்டியருக்கும்.. குங்பு கராட்டி எதாவது பழகிட்டு பொகலாம்..

    15. Mayooresan said...

      அப்ப என்னமாதிரி 30 வயசுக் காரங்கள் 4 வருட அனுபவம் இருந்தாலும் போக ஏலாதோ??? //

      MODLஇல உங்க லாங்குவேஜோ இல்லை specializationஓ இல்லாட்டா கொஞ்சம் கஷ்டம்...

    16. Subankan said...

      பேசாம எங்கட மூத்த பதிவரை ஆசிக்கு அனுப்பியிருக்கலாம். பதிவுலக நெருங்கிய சொந்தம் எண்டு சொல்லிப்போட்டு நூறோட எஸ்கேப்பியிருக்கலாம். //

      அப்புறம் அங்க இருக்கிற கங்காருக்களின் கற்புக்கு யார் பதில் சொல்லுறது?

      அண்ணே ஆசிதான் எண்டில்லை, எதியோப்பியா, சொமாலியா எதெண்டாலும் ஓகேதான். அதுக்கு எத்தின பொயின்ட்ஸ் வேணும்? //

      என்ன சரத்தை பிடிச்சு உள்ள பொட்டவுடன கடுமையான முடிவெல்லாம் எடுக்கிறியள்? :P

    17. LOSHAN said...

      good info :)
      but i m nt interested.. lol //

      மனிதாபிமானமே இல்லாம ஒரு நாளைக்கு 3 4 கிரிக்கட் பதிவு போடும்போது இதை யோசிசிசருக்கணும்.. :P

    18. Atchu said...

      அந்த ஆப்பு முடிஞ்சு அடுத்த ஒரு வாரத்துல இப்படி ஒரு பெரிய ஆப்பா வச்சிட்டாங்கள்.....


      படுபாவிகள்,இப்படிச் செய்வாங்கள் என்று யாருக்குத் தெரியும்.... //

      என்னப்பன்? அவுஸ்திரேலியா பங்குச்சந்தையும் திறக்கிற ஐடியாவில இருந்தனியளோ? உன்னைப்போல ஆக்கள் எங்க இருந்தாலும் கொடி கட்டிப்பறப்பாங்கள் கவலைப்படாத ராசா.. :)

    19. யோ வொய்ஸ் (யோகா) said...

      தெரியாத பல தகவல்கள் சொல்லியிருக்கிறீங்கஇ என் நண்பர்கள் பலர் அவுஸ்திரேலியாவில் இருக்கிறாங்க. அவங்களும் இப்படிதான் போனாங்களோ தெரியவில்லை //

      இருக்கும் எதுக்கும் நேர கேட்டுடாதீங்க .. குமட்டில குத்திப்போடுவாங்கள்..

    20. கன்கொன் || Kangon said...

      நல்ல துறைசார் பதிவு புல்லட் அண்ணா...

      கலக்குகிறீர்கள்...
      இதைத்தவிர என்ன சொல்வது என்று தெரியவில்லை.
      ரஜினி விருதுப் படங்களில் நடிப்பது போலிருக்கிறது...
      (கேவலமாச் சொல்லேல, புகழுறன்...) //

      அடேய்! நீ நல்லவனா கெட்டவனா? தெரியலயே?

    21. முகிலினி said...

      //டக்சி ட்ரைவிங்.. முடிவெட்டுதல் ,சொதிக்கு பாலூத்துதல் (அதுதாங்க சமையல்) //

      U MORON, u could say driving does not need that much skills but cooking and hair dressing are not that easy and whoever has those skills are blessed. //

      இந்த தொணதொண தொல்லைஎங்கிருந்தாலும் விடாது போல.. யாராச்சும் இந்த ஜந்துவை பிடிச்சு கூவத்தில குளிப்பாட்டுங்கப்பா.. என்னால முடியல..

      சரி.. நான் தகவல் எடுத்தது washingtonpost.com , BBC, immi.au website மற்றும் குறித்த அமைச்சரின் உரையிலிருந்து.. washingtonpost இல் தெளிவாக குறிப்பிட்டுளர்கள் சமையல் முடியலங்காரம் ப்ளம்பிங் பொன்றவற்றை LOW SKILLED WORKS என்று .. ஆகுவே என்னுடன் சண்டைக்கு வரவேண்டாம்..தாங்கள் எஞ்சினீசயும் டொக்டர்சயும் எதிர்பாத்தா குப்பை குப்பையா இவங்கதான் வாாங்கள் மற்றவங்கள் வாற வலு குறைவு எண்டு.. ஆளுக்கு மேல டக்சையும் அளவுக்கு மீற குவாலிபயிங் எக்சாம்களயும் வைச்சா எவன் வருவான்?


      Even if you have 150 points they dont give PR now. There are so many other criteria. Dont give false info.... //

      ஹையோ ஹையோ .. :D

    22. சசிகுமார் said...

      good informations //

      Thankyou Sasi..

    23. Here(UK) also tight the immigration rules ha ha ha

    24. Nice info.. Thanks alot for the post

    25. More info regarding Student visa to Ausie:

      http://www.minister.immi.gov.au/media/media-releases/2010/ce10008.htm

    26. Migration Minister's speech on Feb 8th:
      http://www.minister.immi.gov.au/media/speeches/2010/ce100208.htm

    27. //
      // உண்மைய சொல்லுங்க ! நீங்க வாசிக்கலத்தானே? :P //

      வாசிக்காமலா சிரிப்பு ??? நீங்க தொடர்ந்து சுட்டு தல்லுங்க.

    28. //அண்ணே ஆசிதான் எண்டில்லை, எதியோப்பியா, சொமாலியா எதெண்டாலும் ஓகேதான். அதுக்கு எத்தின பொயின்ட்ஸ் வேணும்? //

      என்ன சரத்தை பிடிச்சு உள்ள பொட்டவுடன கடுமையான முடிவெல்லாம் எடுக்கிறியள்? :P //

      சிரிச்சு அடங்கல... நல்ல டைமிங்.

    29. SKILLED MIGRATION இல் முயற்சி செய்பவர்களுக்கு அரிய தகவல்கள்

      "ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்…உதெல்லாம் இலங்கையில இருப்பவனை எள்ளளவும் பாதிக்காது.. சடாரெண்டு ஒரு கோர்சுக்கு அப்ளிக்கேசன போட்டுட்டு அங்க ய்ச்சேர்நதிடுவாங்கள்.. அங்க எங்கயாவது ஒரு அவுஸ்திரேலியன் பொலீசை கண்டவுடன “அண்ணாத்தே ! ஐ வோண்ட் அசைலம் “ எண்டு கொப்பிய கீழபோட்டுட்டு கையை தூக்கிடுவாங்கள்.."

      இபவும் இதெல்லாம் சாத்தியம் போல தெரியவில்லை. இதை படித்து விட்டு கொப்பியை கீழ போட்டிட்டு ஆரும் கொழும்பு வந்து செரபோகினம் !!

    30. பலருக்கு பயன்படும் பதிவு...,

    31. This comment has been removed by the author.
    32. This comment has been removed by the author.
    33. //அடேய்! நீ நல்லவனா கெட்டவனா? தெரியலயே?//

      இதில என்ன சந்தேகம்.... நல்லவன் தான்.... ரொம்ப நல்லவன்... :)

    34. Nice Work Bullet,

      I met a retired Australian government officer in Jakarta, and he explained the political context of the asylum seekers in Australia. If you are applying for a genuine visa you need to produce so many documents, evidence, security clearance, etc etc. But if you a former member of a banned organization, or a relative or even if you are an ex-military commander who committed serious crimes can simply go there and claim an asylum and live happily ever after!
      This is the complicated Australian immigration policy!