புல்லட் மிக்ஸ்  சும்மா வெறுமையா விட்டு வச்சிருக்க அலுப்படிப்பதால் கொஞ்சும் கொசுறு மாட்டர்களை கலந்து ஒரு பதிவு


  சினிமா

  வாழ்க்கையிலயே முதன்முதலா நெளிஞ்சு நெளிஞ்சு ஒரு படத்தை பாக்க வேண்டியிருந்தது .. ஈரோசில கோவா போட்டாங்கள்.. வெங்கட பிரபுவை நம்பி ப்ரென்ச கம்பெல் பண்ணி கோவா பாக்க கூட்டிட்டு போனேன்.. அவங்க படம் முடியறப்போ காறி மூஞ்சிலயே துப்பிட்டாங்க..
  அவனா நீயி எண்டு ஆளாளுக்கு கேள்வி வேற!  அங்க முன்னலாம் ஏதாவது படம்போட்டா சிங்களவன்தான் கூட்டமா இருப்பான்.. ரூம் போடுறதுக்கு காசில்லாம லவ்வரோட அங்க வந்து அரை மணித்தியாலம் படம் ஓட்டுவான்.. நமக்கு எந்தப்பக்கம் ஓடுற படத்தை பாக்கிறது எண்ட குழப்பம் இருக்குமே தவிர குடுத்த காசு வீணாப்போனதா ஒரு பீலிங்க்ஸ் வராது.. (சும்மா பகிடிக்குங்க) இந்த முறை பாக்கிறதுக்கு அவங்க கூட இல்ல..

  பின்ன ஆம்பிளையும் ஆம்பிளையும் கட்டிப்பிடிச்சு ரொமான்ஸ் பண்ணிட்டிருந்தா எவன்பா இருப்பான்?

  வாசிப்பு

  உந்த படத்தை பற்றி யாராவது நல்லா கமெண்ட் எழுதினா அவன் காக்காவலிப்பு வந்து சாகவேணும் எண்டு கடவுளை கும்பிடுவம் பதிவுலகத்தை உருட்டினா ஒரே ஒருத்தர் அம்பிட்டார்.. அவர்தான் சாருநிவேதிதா..

  அந்தாள் ஒரு அரைலூசன் என்று நான் கணக்கிலெடுப்பதேயில்லை.. மற்றவன் முன்னுக்குபோவதை சகிக்காத மற்றும் தான்தான் பெரிதென்ற ஆணவம் அவரிடம் காணப்படுவதாக நான் நினைக்கிறேன்.. பெண்களினை ஏதோ அந்த மேட்டருக்கு அலைபவர்கள் என்று வர்ணித்து ஆண்களுக்கு பீதியை கிளப்புவது அவர் எழுத்துகள் என நினைக்கிறேன்.. அவருடைய எழுத்து அறிமுகம் கிடைத்தது ஒரு தற்செயலான சம்பவம்..


  முன்னொருநாள் , மிகவும் தங்கமானவள் என்று நாம் கதைக்கும் ஒரு பெண் வெள்ளவத்தை லொட்ஜ் ஒன்றில் காதலனுடன் இருந்தபோது மயக்கமாகிவிட , மேட்ர் வெளியில் தெரிந்து அன்று பிரச்சனை பூதாகாரமாகி விட்டிருந்தது.. எனக்கும் ஒரே அதிர்ச்சி என்னடா இப்பிடி இருக்கிறாளயளே என்று யாரை நம்புவது என்று தெரியவில்லயே என்று ..

  சேசே எல்லாரும் அப்பிடி இருக்காதுகள் ஆயிரத்திலொன்றுதானிப்படி என்று நமக்குநாமே சொல்லி ஆறுதல்பட்டு திரும்புகையில் , வந்தியர் லோசன் அண்ணரிடம் கொடுக்குமாறு ஒரு புத்தகத்தை தந்தார்.. நானும் சரி ஏதோ இப்படியான ஆக்களின் புத்தகத்தை வாசித்தால்தான் எனக்கு வாசிப்பு பழக்கம் உண்டு என பீற்றிக்கொள்ளலாம் என்று குழப்பம் நிறைந்திருந்த மனதை மாற்றுவதற்காக குளித்து ப்ரெஷ்ஷாக புத்தகத்தை திற்நதேன்.. பெயர் சீரோ டிகிரியாம்..  யாரெழுதுவது என்று பாத்தால் யாரோ சாரு நிவேதிதாவாம்…

  ஸ்டாட்டிங்கில , புத்தகம் படிக்கிற நீ இப்ப என்ன செஞ்சிட்டிருப்பாய் எண்டு ஏதோ சொல்ல வெளிக்கிட்டார்..அதுவே பத்துப்பக்கம் இருந்தது.. சரி என்னடா இது பக்கம் பக்கமா சொல்லுறாரெண்டு வாசிக்க வெளிக்கிட்டன்.. கொஞ்சத்தூரம் போக ஒரு பின்னவீனத்துவ ட்ரிபிள் எக்ஸ் கதை போல தொடங்க ஆரம்பித்தது.. அதிலும் பெண்களைத்தான் குறிவைத்து பின்னியிருந்தார்.. ஆத்தாடி என்று பயந்து போய் புத்தகத்தை மூடிவிட்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு றண்டமாக ஒரு பக்கத்தை திறந்தேன்.. அங்கே ஒரு தலைப்பிருந்தது
  “குரங்கை கற்பழித்த பெண்”

  அண்மையில் கூட தெகிவளை சூவுக்கு செல்லும் போது குரங்குகளை ஒரு சந்தேக கண்ணோடுதான் பார்க்க முடிந்தது.. அந்த புத்தகம் எனக்கு சத்தயமாக விளங்கவில்லை. வெட்கத்தை விட்டுசொல்கிறேன்.. என்னால் 3 ஓ 4 பக்கங்களுக்கு மேல் படிக்க என்ன புரட்டவே முடியவில்லை.. அவ்ளோ போர்..

  அத்துடன் பல காலத்துக்கு பின் எனக்குள் உருவாகிய தமிழ் வாசிப்பு பழக்கம் மீள ஓளித்துக்கொண்டுவிட்டது..

  இத்தகைய பெருமையுடைய அந்த மனிதர்தான் கோவாவை நல்லபடமென்று புகழ்ந்திருந்தார்.. எனக்கு அப்போ அவர் பெண்கள் மீது கடுப்பு பாட்டுவதற்கான காரணம் லைட்டாக புரிந்தது.. :P

  நிகழ்ச்சிகள்

  மேற்படி கோவா படம் தயாரித்த சொளந்தர்யா ரஜனிகாந்த் படத்தை பாதி எடுத்தபோதே பாத்திட்டாரோ என்னவோ , சட்டுபுட்டண்டு கலியாணம் கட்டப்போறாராம்.. பட்ட கடனெல்லாம் தகப்பன்தான் அடைச்சதாம்.. ரஸினி காசில வெங்கட் கும்பல் மலேசியா முழுக்க சுத்திட்டுது… அத்தோட சௌந்தர்யாவோட கனவுத்திட்டமான சுல்தான் த வாரியர் படமும் கைவிட்டாச்சு போல கிடக்கு..
  செமையா வாங்கிக்கட்டினாலும் முயற்சியும் உழைப்புமுடைய அந்த அக்கா முன்னுக்கு வரவேணும்.. ஏனெண்டா ஒரு தவறான உதாரணமா மற்ற ஆர்வுமுள்ள பெண்களுக்கு அவங்க அடைந் விடக்கூடாதில்லயா?

  என்னதான் இருந்தாலும் அவவுடைய ஆண்மைத்தனமான ஆங்கிலம் எனக்கு பிடித்தமான ஒன்று.. சும்மா கதைச்சாங்களெண்டால் அதிரும் .. டெரரா இருக்கும்.. அமெரிக்காவில அனிமேசன் படிச்சவவாம்.. மனப்பர்வமான நிச்சயதார்த்த வாழ்த்துக்கள்..

  அரசியல்

  சரத்தை பிடிச்சு உள்ளபோட்டதை தொடர்ந்து ஒரே அமளி துமளி.. சிங்களவன் தங்களுக்கயே கட்டிப்பிச்சு அடிபடுறாங்கள்.. லசந்தவை போட்டுதள்ளினது மற்றும் ரவிராஜ் போன்ற பலரை போட்டுதள்ளினது சரத்தானெண்டு கதையடிபடுகுது.. சனியனுக்கு நல்லா வேணும்.. நல்லகாலம் தமிழ்ச்சனம் அவனுக்கு ஓட்டுப்போட்டது.. இனி ஒருகாலமும் சிங்களச்சனம் அவனை ஏறெடுத்தும் பாக்காது.. குறைஞ்சது 5 வருசம் உள்ள என்பது நிச்சயம் போல கிடக்கு.. அமரிக்காவும் நோர்வேயும் ஏதாவது செய்வமெண்டுபாக்க கோத்தாமாமா முந்திகொண்டு ”டேய்! நீங்கதானே அவனுக்கு காசு குடுத்தனியள் .. பொறுங்கடா வாறன்” எண்டு கத்த , ரெண்டுபேரும் ஐயையோ ! நானில்ல நானில்ல எண்டுகொண்டு கையத்தூக்கிட்டாங்கள்..

  இனி கொஞ்சம் படங்கள்..

  பிக்குவின் பிஜாமாவையே உருவும் கலகமடக்கும் பொலீசார்


  பொலீஸ்காரர் பொலிஸ்காரர் ! நான் ஆம்பிளை பொலி ஸ்காரர்.. அதுக்குள்ள என்னத்தை எட்டிப்பாக்கிறீங்க?


  அதெல்லாம் பிரச்சினையில்ல சாமி.. இப்போதான் ஈரோசில கோவா பாத்திட்டு வாரோம்.. கொஞ்சம் கோஆப்பரேட் பண்ணுங்க ப்ளீஸ் !  ஆத்தாடி ! எவண்டா அவன் கோவாவை இலங்கையில றிலீஸ் பண்ணது? இவன் பாவி பொம்பளை புள்ளைங்கள விட்டுட்டு நம்மளத்‌ தொரத்துறானே?

  நாமலும் களத்தில இறங்கிட்டார்.. ஆகவே அடுத்த 50 வருசத்தில நாட்டுக்கு பெயரே சிறிபக்சா எண்டு மாறினாலும் மாறிடும்போலருக்கு.. ஏதோ நடந்து துலையட்டும்.. ஒண்டும் நம்ம கையில இல்லை.. ஏதோ மிஞ்சியிருக்கிற சனம் மனுசர் மாதிரி வாழ ஏதாவது வகையிருந்தா தற்போதைக்கு காணும்.. மறுபடி அடுத்த எலெக்சன் வருதாம் ..  சிறீலங்கா நமோ தாயே தாயே..


  பிகு: அடுத்தவாரம் ஏழுநாட்களும் ஏழு பதிவுகள் தர திட்டமுள்ளேன்.. டைமிருந்தா வந்து வாசிங்க..  45 Responses

  1. மிக்சர் படம் அருமை.... ஆசையா இருக்கு... எங்க வாங்கினியள்?

   கோவா? ஹி ஹி...
   உங்கட சோகக் கதையே கதை தான்...
   வெள்ளவத்தையில இப்ப பொம்பிளப் பிள்ளையள் முந்தின காலத்தில திரியிற மாதிரி நிலத்தப் பாத்து நடந்து திரியிறியளாம்?

   சாரு நிவேதிதா?
   ஹி ஹி...

   //அந்தாள் ஒரு அரைலூசன் என்று நான் கணக்கிலெடுப்பதேயில்லை.. //
   நான் உத ஒருக்கா ருவிற்றரில சொல்ல ஒரு விசுவாசி என்னட்ட சண்ட பிடிக்க வந்திற்றான்...
   ஒரே இரத்தம்...

   //வந்தியர் லோசன் அண்ணரிடம் கொடுக்குமாறு ஒரு புத்தகத்தை தந்தார்.//

   2 பேரின் பெயர் வெளில வந்திற்று... வேற யார் விருப்பப்பட்டு படிச்சது? :P

   //குரங்குகளை ஒரு சந்தேக கண்ணோடுதான் பார்க்க முடிந்தது.. //

   :(

   //அவவுடைய ஆண்மைத்தனமான ஆங்கிலம் எனக்கு பிடித்தமான ஒன்று.. //

   அண்மைக்கால உங்கள் பீற்றர் விடும் முயற்சிக்கும் இதற்கும் ஏதும் சம்பந்தமுண்டா? :P


   //லசந்தவை போட்டுதள்ளினது மற்றும் ரவிராஜ் போன்ற பலரை போட்டுதள்ளினது சரத்தானெண்டு கதையடிபடுகுது.. //

   சரத் ஜனாதிபதியா வந்து இப்ப இருக்கிறவர உள்ளுக்க போட்டிருந்தா சனம் மாறிக் கதைச்சிருக்கும்...

   பொலிஸ்.. ஹி ஹி...
   கோவா படப்பாதிப்பு எங்கயெல்லாம் போகுது பாத்தியளா?
   நீங்கள் எப்பிடி?


   //சிறீலங்கா நமோ தாயே தாயே..//

   அப்பே ஸ்ரீ லங்கா....

  2. அண்ணே,

   கோவா வெங்கட் மாமா, சாரு ஆன்ரி கோவா படம் இது ஏதோ குடும்பத்தோட பார்க்கமுடியாத படம் போல கிடக்கு ஆதோட நான் ப.பா. எண்டதால படம் பாக்கேல..:p

   //அந்த அக்கா முன்னுக்கு வரவேணும்.//

   ஏதாவது உள்குத்து இருக்கா? #சந்தேகம்

   ஆனா அக்கா பாவம் சுல்தானை எதிர்பார்த்து இருந்தனான்..ச்சா... வடபோச்சே..;(

   //ஆங்கிலம் எனக்கு பிடித்தமான ஒன்று//

   யூ மீன் தங்லீஸ்..:p

   அட போட்டோ கமெண்டுகளும் சூப்பரு சிரித்துச் சிரித்து முடியல,

   //பிகு: அடுத்தவாரம் ஏழுநாட்களும் ஏழு பதிவுகள் தர திட்டமுள்ளேன்.. டைமிருந்தா வந்து வாசிங்க.//

   ஆஹா... இத.இத... இதத்தான் எதிப்பார்த்தோம்..;)

  3. //சாரு ஆன்ரி //

   ha ha ha,,,,,,
   lol... ROFL......

  4. @கன்கொன் - அறியாத பையன் தெரியாம சொல்லிட்டான்...;)

  5. முதல் இதை சொல்லியே ஆகணும்.. சாருவ Aunty எண்டு பவன் சொன்னதில என் பிரிமென்தகடெல்லாம் சப்பளிஞ்சு போச்சு.. என்ன கொடுமைடா இது? ஏனிபபிடி இவ்ளோ நாளும் நான் சிரிக்கல எண்டு யொசி்சிட்டிருக்கேன்..கடவுளே.. ஹாஹாஹா! முருகா!

  6. //புல்லட் said...
   முதல் இதை சொல்லியே ஆகணும்.. சாருவ Aunty எண்டு பவன் சொன்னதில என் பிரிமென்தகடெல்லாம் சப்பளிஞ்சு போச்சு.. என்ன கொடுமைடா இது? ஏனிபபிடி இவ்ளோ நாளும் நான் சிரிக்கல எண்டு யொசி்சிட்டிருக்கேன்..கடவுளே.. ஹாஹாஹா! முருகா!//


   :)
   நானும் சேர்ந்து தான் சிரிக்கிறன்...
   யாரும் சாரு பக்தர் வந்து அடிக்காதவரை சிரிக்கலாம்... :)

  7. புல்லட் பட படனு பறக்குது...(பெட்ரோல்தானே? இல்ல ...)

  8. கன்கொன் || Kangon said...

   மிக்சர் படம் அருமை.... ஆசையா இருக்கு... எங்க வாங்கினியள்? //

   என்னதான் இருந்தாலும் யாழ்பப்பாணம் அல்பா மிக்சரையும் சொக்கன் கடை பகோடாவையும் யாராலும் படமெடுத்கோவதை போல வராது

   வெள்ளவத்தையில இப்ப பொம்பிளப் பிள்ளையள் முந்தின காலத்தில திரியிற மாதிரி நிலத்தப் பாத்து நடந்து திரியிறியளாம்? //

   உன்னைவெட்டுறதுக்கு அப்பிடி கண்டும்காணாதது போல போயிருப்பன்.. கண்ணால் அண்ணே ஒரு நாலு பரோட்டா வாங்கித்தந்திட்டு பொங்கண்ண எண்டு அலுப்படிப்பாயல்லோ.. அதுதான்..:P

   2 பேரின் பெயர் வெளில வந்திற்று... வேற யார் விருப்பப்பட்டு படிச்சது? :P //

   அதுக்காக கட்டிப்புடிச்சு உருண்டு அடிபட்டாக்களெல்லாம் இரக்கின.. புத்தகம் இப்ப ஆதிரை கையில.. மாசக்கணக்கா வைச்சு பாடமாக்கிறான்..

   அண்மைக்கால உங்கள் பீற்றர் விடும் முயற்சிக்கும் இதற்கும் ஏதும் சம்பந்தமுண்டா? :P //

   சும்மா இருடா பப்ளிக் சந்தேகமா பாக்கப்போகுது ..


   சரத் ஜனாதிபதியா வந்து இப்ப இருக்கிறவர உள்ளுக்க போட்டிருந்தா சனம் மாறிக் கதைச்சிருக்கும்... //

   தம்பி தக்கன பிழைக்கும்.. அது மட்டும்தான் கூற முடியும்..:P

  9. சரத்துக்கு வேணும்

   ஊர் ரெண்டு பட்டா யாருக்கோ கொண்டாட்டமாம்

  10. ஏதேனும் பார்த்த படங்களிற்கு விமர்சன பதிவெழுத யாரும் விரும்பினால் உடனடியாக வினவு டொட் கொம் இற்கு போய் அந்த படத்தை பற்றி ஏதாவது விமர்சனம் எழுதியிருக்காவெண்டு முதல்ல பார்த்திட்டு வாங்கோ.

  11. Bavan said...

   ஏதாவது உள்குத்து இருக்கா? #சந்தேகம்
   ஆனா அக்கா பாவம் சுல்தானை எதிர்பார்த்து இருந்தனான்..ச்சா... வடபோச்சே..;(//
   ஆராச்சும் மேடையில ஏறுறவன் மெலதானே சாணியடிக்க முடியும்.. நம்ம தமிழ்ப்பண்பு... நான் மட்டும் விதிவல்க்கா ? :P

   //ஆங்கிலம் எனக்கு பிடித்தமான ஒன்று// யூ மீன் தங்லீஸ்..:p //

   அது சரி ! அவா தமிழ் கதைச்சா தங்கிளீஸ்தான்..

   அட போட்டோ கமெண்டுகளும் சூப்பரு சிரித்துச் சிரித்து முடியல,//

   நன்றிடாப்பா! கமெண்டு சிங்கம் நீுயே சொல்லும் போது விரு மாதிரி..

   ஆஹா... இத.இத... இதத்தான் எதிப்பார்த்தோம்..;)//

   மேடையில ஏத்துறானோ?

  12. அண்ணாமலையான் said...

   புல்லட் பட படனு பறக்குது...(பெட்ரோல்தானே? இல்ல ...) //

   கழிவொயிலிலயே ஓடுவோம் நாம.. :P நன்றி சேர்..

  13. V.A.S.SANGAR said...

   சரத்துக்கு வேணும்

   ஊர் ரெண்டு பட்டா யாருக்கோ கொண்டாட்டமாம் //

   அப்போ அவங்க கூத்தாடினாங்க.. இப்போ நாம ஆடுவோம் அதில தப்பென்னங்க இருக்கு? திருப்பி கொஞ்ச நாளில அவங்க ஆடக்கூடும் :)

  14. PRAKASH said...

   ஏதேனும் பார்த்த படங்களிற்கு விமர்சன பதிவெழுத யாரும் விரும்பினால் உடனடியாக வினவு டொட் கொம் இற்கு போய் அந்த படத்தை பற்றி ஏதாவது விமர்சனம் எழுதியிருக்காவெண்டு முதல்ல பார்த்திட்டு வாங்கோ. //

   அய்யோ நானெங்கங்க எழுதினேன் விமர்சனம்? சும்மா ஒரு டைம்பாசுக்கு கிடந்த குப்பையெல்லா்தையும் கூட்டி அள்ளி மிக்சரா கொட்டியிருக்கேன் அவளோதான்.. ஏன் வினவில என்ன ஸபெசல்?

  15. கோவா தனியா பசங்களோட பார்க்கிற படமில்ல, அப்புறம் உங்க கற்புக்கு யார் பாதுகாப்பளிப்பது?

   அவ்வ்வ்வ்வ்வ்

  16. புல்லட் மிக்சர் நல்ல டேஸ்ட்ப்பா..

  17. //சரத்தை பிடிச்சு உள்ளபோட்டதை
   தொடர்ந்து ஒரே அமளி துமளி.. சிங்களவன் தங்களுக்கயே கட்டிப்பிச்சு அடிபடுறாங்கள்//
   உவனுகளுக்கு எப்பவும் அடிபட்டுக்கொண்டே இருக்கணும் போல நல்ல பழக்கம் கீப் இட் அப்..

  18. கோவா பாக்க கூட்டிட்டு போனேன்.. அவங்க படம் முடியறப்போ காறி மூஞ்சிலயே துப்பிட்டாங்க..
   அவனா நீயி எண்டு ஆளாளுக்கு கேள்வி வேற!//

   நல்ல காலம் நான் இன்னும் பாக்கல பாக்கணும் ன்னு பிளான் பண்ணிருந்தேன் தாங்யூ போர் தகவல்..புல்லட்.!!

  19. //பின்ன ஆம்பிளையும் ஆம்பிளையும் கட்டிப்பிடிச்சு ரொமான்ஸ் பண்ணிட்டிருந்தா எவன்பா இருப்பான்?//

   புல்லட்! ஷேம் BLOOD என்காதாலையும் கண்ணாலையும் வழிஞ்சுது.

   வெ.பி நம்பி ஏமாந்து போனன். அவன் ஒரு பே.பி போல… கோவாவுக்கு போய் வித்தியாசமாப்படமெடுக்கிறன், ஓரினச்சேர்க்கையாளர்களை பற்றி படமெடுக்கிறன் என்று புதுமையா தொடங்கின வெ.பி, ஏன் பிளாஸ்பாக்கில கரகாட்டக்காரன் பமிலி கோயில்ல சாமியைக்கும்பிட்டோன கர்ப்பம் தரித்து வாந்தி எடுக்கிற சீனை வைச்சான்?

   ஓரினச்சேர்கையைப்பற்றி காட்ட வெளிக்கிட்ட வெ.பி, ஏன் அதில ஒரு பாத்திரத்தை பொம்பிளைத்தன்மையோட படைச்சான். ஓரினச்சேர்கையாளர்களில ஒரு ஆள் எதிர்ப்பால் தன்மையுடையவர்கள் என்ற தப்பான பாடத்தை படப்பிக்கின்றான். இவன்ட முதிர்ச்சி இல்லாத திரைக்கதை அமைப்பு.

   ஜாலியா முதலாவது படத்தில கிரிக்கட் மச் விளையாடின மாதிரி, இரண்டாவது படத்தில மச் பார்க்க போனமாதிரி இதையும் ஏதையாவது விளையாடவிட்டிருக்கலாம்.

   மிக்ஷர் சூப்பர். வசந்தன் கடையா?

  20. வழி தேங்காய(கோவா) எடுத்து அன்னத்தின் தலையில உடைசாச்சு...
   மாமாக்கு மணி அடிக்கறது எப்ப? அதுக்கு யேதாவது வழி...
   (சும்மா பகிடிக்கு) :))

  21. சிங்களவனின் வரலாற்றை எடுத்து பார்த்தல் எப்பவும் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டே இருப்பான், தமிழனின் வரலாற்றை பார்த்தால் எப்பவும் காட்டி கொடுத்து கொண்டிருப்பான்.

   ஆனால் பொது எதிரி என்று வந்தால் சிங்களவன் ஒன்றாய் சேர்ந்து அடிப்பான். அது தான் கடந்த 30 ஆண்டுகளாக எங்களை போட்டு அடி அடி என்று அடித்து கடைசியில் வெற்றியும் பெற்றான்.

   தமிழர்கள் இப்ப செய்யவேண்டியது தங்களுடைய பிறப்பு புத்தியான காட்டி கொடுத்தல் , வால் பிடித்தல் போன்றவற்றை விட்டிட்டு: இருந்து வேடிக்கை பார்ப்பது தான். ஐயா சம்பந்தனை பாருங்கள் ஏதாவது ஒரு வாய் திறந்தார SF ஐ கைது செய்ததுக்கு. கமுக்கமாக இருக்கிறார்.

   இப்படியே நாங்கள் வாயை மூடி இருந்து எங்கள் முன்னேற்றத்தில் அக்கரை கொண்டவர்களாக இருந்தோம் ஆனால் நாங்களும் வெகு விரைவில் கிரிபத்தோ பொங்கலோ சாப்பிடலாம்.

   நேற்று
   http://www.youtube.com/watch?v=CA5JoPBfr_M

   இன்று
   http://thissidesrilanka.blogspot.com/

  22. This comment has been removed by the author.
  23. ஆஹா புல்லட்டும் கிளம்பிட்டான் நல்லாத்தான் இருக்கு ஆனால் ஷீரோ டிகிரிக் கதையை பொது இடத்தில் எழுதியமைக்கு கண்டனங்கள் அந்தப் புத்தக்த்தை இன்னொரு பிரபல வலைப்பதிவரும் வாசித்த உண்மையை ஏனோ புல்லட் மறைத்துவிட்டான் ஹிஹிஹி (ஆதிரை அல்ல அவனின் நண்பன்).

   கோவா எல்லாம் நான் பார்க்கவில்லை, கடைசியாக வேட்டைக்காரன் பார்த்தேன் அதன் பின்னர் வெளியான எந்தப் படமும் பார்க்கவில்லை. படம் பார்க்கின்ற காசுக்கு நாலு நல்ல சுவெட்டர் வாங்கலாம்.

   அரசியலை அப்பட்டமாக எழுதி இருக்கின்றீர்கள். பிக்குமாருக்கு உடுப்பு கிழிவது இது முதல் தடவை அல்ல ஒருக்கால் பார்லிமென்டில் ஒருவருக்கு படாத இடத்தில் அடிபட்டது.

  24. //அந்தப் புத்தக்த்தை இன்னொரு பிரபல வலைப்பதிவரும் வாசித்த உண்மையை ஏனோ புல்லட் மறைத்துவிட்டான் ஹிஹிஹி (ஆதிரை அல்ல அவனின் நண்பன்).//

   யாரு யாரு....
   உண்மையைப் போட்டுடைக்கவும்...

  25. யோ வொய்ஸ் (யோகா) said...

   கோவா தனியா பசங்களோட பார்க்கிற படமில்ல, அப்புறம் உங்க கற்புக்கு யார் பாதுகாப்பளிப்பது?

   அவ்வ்வ்வ்வ்வ் //

   ம்ம்... இது குறித்து கௌபாய் மதுவிடம்தான் ஆலோசனை பெறவேண்டும் .. கோவா வெளியானது குறித்து மிகுந்த சந்தாசமாக இருகப்பாரென் நினைக்கிறேறன்.. :P

  26. Balavasakan said...

   புல்லட் மிக்சர் நல்ல டேஸ்ட்ப்பா..//
   நன்றி டாக்டர்


   உவனுகளுக்கு எப்பவும் அடிபட்டுக்கொண்டே இருக்கணும் போல நல்ல பழக்கம் கீப் இட் அப்.. //
   ம்ம் அவன் அந்தக்காலத்தில நம்மைப்பாத்து அப்பிடித்தான் சொல்லியிருப்பான்..:P

   நல்ல காலம் நான் இன்னும் பாக்கல பாக்கணும் ன்னு பிளான் பண்ணிருந்தேன் தாங்யூ போர் தகவல்..புல்லட்.!! //
   ம்ம் எதுக்கும் ரகுவை கூட்டிட்டு போடாதையப்பன்..

  27. VARO said...

   புல்லட்! ஷேம் BLOOD என்காதாலையும் கண்ணாலையும் வழிஞ்சுது. //

   ஆ பாவத்தை .. எனக்கு துப்பல்தான் வழிஞ்சது..

   ஓரினச்சேர்க்கையாளர்களை பற்றி படமெடுக்கிறன் என்று புதுமையா தொடங்கின வெ.பி, ஏன் பிளாஸ்பாக்கில கரகாட்டக்காரன் பமிலி கோயில்ல சாமியைக்கும்பிட்டோன கர்ப்பம் தரித்து வாந்தி எடுக்கிற சீனை வைச்சான்?

   ஓரினச்சேர்கையாளர்களில ஒரு ஆள் எதிர்ப்பால் தன்மையுடையவர்கள் என்ற தப்பான பாடத்தை படப்பிக்கின்றான். இவன்ட முதிர்ச்சி இல்லாத திரைக்கதை அமைப்பு.

   மொக்குப்பயல்.. ஹட்ரிக் எண்டு நெச்சன்.. நாறவிட்டுட்டான் பயபுள்ள

   மிக்ஷர் சூப்பர். வசந்தன் கடையா?


   இல்ல.. அது எது வசந்தன் கடை.. சொன்னா நாங்களும் பொவமுல்ல.. ப்ளீஸ்.. அது எங்க இருக்கு?

  28. - இரவீ - said...

   வழி தேங்காய(கோவா) எடுத்து அன்னத்தின் தலையில உடைசாச்சு...
   மாமாக்கு மணி அடிக்கறது எப்ப? அதுக்கு யேதாவது வழி...
   (சும்மா பகிடிக்கு) :)) //

   மாமாவுக்கு மணி அடிப்பேன் .. குடைபிடிப்பேன்.. ஏன் காவடி கூட எடுப்ுபேன்.. உங்களை மாதிரி வெளில செட்டிலாகும் வரை :P (நானும் சும்மா பவுடிக்குதான் பாஸ்)

  29. சூர்யகதிர் said...

   ------
   இப்படியே நாங்கள் வாயை மூடி இருந்து எங்கள் முன்னேற்றத்தில் அக்கரை கொண்டவர்களாக இருந்தோம் ஆனால் நாங்களும் வெகு விரைவில் கிரிபத்தோ பொங்கலோ சாப்பிடலாம்.//

   அருமையான கருத்துககள் கதிர்.. கலக்கிட்டீங்க..

  30. முகிலினி said...
   நீயும் சாருவும் ஒன்டு தான் பெண்களைப்பற்றி கதைக்க வெளிக்கிட்டால்... //

   இது அபாண்டமன குற்றச்சாட்டு .. அவர் பெண்கள் பரத்தைகளாய் இருப்பதை விரும்புவது போல எழுதுவார்.. நான் அப்பிடியா?


   நீ இதை எழுதுவாய் என்ட தால் தானோ என்னவோ என்ட லெக்சரருக்கு ஹாட் அட்டாக் வந்து நான் இஞ்ச திரும்பி வர வேண்டி இருந்தது.

   அய்யய்யோ.. எனக்கு ஹாட் அட்டாக் வரப்போகுது.. எப்படிுயோ நாளை நாளண்டைக்கு திரும்பி பொயிடுவீங்கள் தானே ?அப்பாடி ஸ்ஸபா!

   இது நான் சொன்னது தான... உனக்கு சுயமா சிந்திக்க இயலாதா??? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........

   பார்த்ீர்களா என்னே ஒத்த கருத்துக்கள்.. சாரி காறியதை துப்பி விட்டு போய்விடுங்கள் அக்கா..

   அது என்ன ஆண்மைத்தனமான ஆங்கிலம்... அப்படி ஒன்டு இருக்கா.. நீயா ஏன் இல்லாததை எல்லாம் எழுதிறாய்..

   ஒரு கெத்தா கதைக்கிறாங்க எண்டு சொல்ல வந்தேன்..

   இந்தா... அண்டைக்குத் தான அவுஸ்ரேலியா விசாவைப் பத்தி பிழையான தகவல் குடுக்காத என்டு சொன்னனான்... திருப்ப ஏன் பிழையா எழுதிறாய்....

   எனக்கு யாரோ சொன்னாங்கள்.. அதை வைத்துதான் எழுதினேன்..மூன்றாம் தகவலாகத்தான் சொலலியிருக்கன் கவனிக்கவும்.. அவுசி விடயம் அப்படியில்லை

  31. வந்தியத்தேவன் said...

   இன்னொரு பிரபல வலைப்பதிவரும் வாசித்த உண்மையை ஏனோ புல்லட் மறைத்துவிட்டான் ஹிஹிஹி //

   ஹாஹா .. அரைக்காச்ட்டையோட கவர்ச்சியா வந்து தந்தவர்.. நாமெல்லாம் பேராணமை பாத்திட்டு வநது கொண்டிருந்தனாங்கள் .. நெய்தலூரானோ?குறிஞ்சியூரானோ? ஏதோ ஒரு ஊரான்..

   படம் பார்க்கின்ற காசுக்கு நாலு நல்ல சுவெட்டர் வாங்கலாம். //

   ஹாஹா சிறந்த முடிவு

  32. மிக்சர் சுவையா இருக்கு

  33. நான் ஒரு ஆம்பிளை செக்ஸ் கதை எழுதலாமின்னு இருக்கேன். என்ன ஓய் இப்படி திட்டுறீர்.

  34. சினிமா அரசியல் எண்டு ஒரு மாதிரி கலந்து கட்டி அடிச்சிட்டியள்.
   நல்லாத்தான் இருக்கு புல்லட்.மிக்ஸர் தட்டில கொஞ்சம் குறைஞ்சிருக்கு.
   சாப்பிட்டுச் சாப்பிட்டு வாசிச்சனான்.
   இன்னும் கொஞ்சம் போட்டு நிரப்பிவிடுங்கோ.வாறன்.

  35. அண்ணே எதைச் சொல்லுறதெண்டு தெரியேல்ல, கோவா, சாரு, அரசியல் எல்லாமே சேம் பிளட்!

   அப்ப அடுத்த ஒருவாரத்துக்கு எங்களுக்கு ஃபுல் மீல்ஸ் எண்டு சொல்லுங்க :)

  36. மிக்சர் நல்லா இருக்கு..:)

  37. நானும் சேர்ந்து தான் சிரிக்கிறன்...
   யாரும் சாரு பக்தர் வந்து அடிக்காதவரை சிரிக்கலாம்..//

   அதுக்கென்ன அடி வாங்கினாலும் சிரிக்கலாம். அப்படிப்பட்ட எழுத்து அது.

  38. //என்னதான் இருந்தாலும் யாழ்பப்பாணம் அல்பா மிக்சரையும் சொக்கன் கடை பகோடாவையும் யாராலும் படமெடுத்கோவதை போல வராது//

   அண்ணா சத்தியமா அந்த அல்பா மிக்சரின்ர பிரியன் நான்.....

   பதிவு ஆகா ஓகோ

  39. நல்ல மிக்சர் கருத்துக்கள்.

  40. சாருவை முதல்ல வாசிக்கிற ஆக்கள் ஸீரோ டிகிரியை படிச்சா சிக்கல்தான்.

   :)

  41. //அவவுடைய ஆண்மைத்தனமான ஆங்கிலம் எனக்கு பிடித்தமான ஒன்று.. //

   அண்மைக்கால உங்கள் பீற்றர் விடும் முயற்சிக்கும் இதற்கும் ஏதும் சம்பந்தமுண்டா? :P
   //

   :)

  42. கோவா பார்த்தால்எங்கட கற்பை யார் பார்கிறது ?ரஜனி மகளை வாழ்த்தி இருக்கீங்க நன்றி

  43. //எனக்கு அப்போ அவர் பெண்கள் மீது கடுப்பு பாட்டுவதற்கான காரணம் லைட்டாக புரிந்தது.. :P

   மனசில தோன்றினதை சொல்லியே ஆகணும்...

   நீங்க "கடுப்பை கிளப்பும் பெண்கள்" என்று எழுதின போதும் அதுக்குப்பிறகு பெண்களை பற்றின உங்கட கருத்துகளை வாசிச்ச போதும் கிட்டத் தட்ட இப்பிடித் தான் நான் புரிஞ்சு கொண்டேன்..

   இப்பிடித் தான் means இந்தளவுக்கு இல்லை..

   முந்தியெல்லாம் யாழ்ப்பாணத்தில இருந்து பெரதேனியாக்குத் தான் ஏற்றுமதியாகிறவங்கள்... அந்த நேரங்களில பெரா பெடியளுக்கும் மொரா பெடியளுக்கும் இடையில வித்தியாசம் இருந்தது..

   இப்ப மொரா வுக்கு யாழ்ப்பாணத்தால வாறவங்கள் கூடிப்போச்சு,.. மொராப் பெடியளும் "சோறு"கள் ஆகிட்டாங்கள்..

   அதாவது A/L வரை விழுந்து விழுந்து படி படியெண்டு படிக்கிறது... இஞ்ச வந்து முதலிரண்டு வருடங்களும் அதே யாழ்ப்பாணத்தப் பெடியளோட தான் திரியிறது... அதுக்குப் பிறகும் கூட... ஆக.. கிணத்துத் தவளைகளாக தான் இருக்கிறீங்க...

   உங்களில மாற்றம் இருக்கோ இல்லையோ எனக்குத் தெரியாது.. ஆனால் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதாக தென்படுது...

   நான் இப்பிடிச் சொன்ன உடன எப்பிடி எதிர்க்கருத்து வருமென்றும் என்னால ஊகிக்க முடிகிறது.. பார்ப்பம் என்னத்தை போடுறியள் என்று...

   இதை வாசிச்ச அண்டைக்கே comment போட நினைச்சன்.. நேரம் கிடைக்கேல... இப்ப போட நினைக்க பின்னூட்டத்தில முகிலினியோ யாரோ கேட்டிருக்காங்க.. அதுக்கு அபத்தமாக குற்றச்சாட்டு என்று சொல்லியிருக்கிறிங்க..
   சாரு எம்மாம் பெரிய மனுசன்.. அது தான் அவர் அப்பிடி எழுதிறார்.. நீங்க சின்ன பெடியன் தானே.. உங்கட லெவலுக்கு எழுதுறீங்கள்.. அம்புட்டும் தான்...


   எனிவே.. உங்களை குற்றம் சொல்லேல... நீங்க வளரக்கிடக்கு தம்பி... கொஞ்சம் வளர்ந்திட்டடிங்க என்று நினைக்கிறன்... வடிவா தெரியேல.. :)

   பதிவே எழுதிப் போட்டேனோ? :D

  44. தமிழ் நகைச்சுவைகளுக்கு https://valaithamizhjokes.blogspot.in/