சமூக வலயங்கள்  கடந்த
  2012 திகில்கதை பதிவு பயங்கர ஹிட்டாகிவிட்டது.. யாழ்தேவி நட்சத்திர எல்வார ஓப்பினிங்கே அசத்தல்.. ஓட்டிட்ட , பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.. ஒரு காமெடிக்கதையை தொட ர்ந்து இந்தப்பதிவு சற்று சீரியசாக , ஒரு கருத்துக்கட்டுரையாக் வருகிறது.. கொஞ்சம் மனவியல் உளவியல் சம்பந்தப்பட்டது ..

  நான் கம்பசில் படிக்கும்போது எனக்கு மிகவும் பிடித்த பாடங்களாக பல இலத்திரனியல் சார் பாடங்களை அடுக்கிகொண்டே பொனாலும் , என் துறை சாாராத ஒரு பாடமான ஓர்கனைசேசனல் மனேஜ்மெண்ட் (Organizational Management) என்ற சப்ஜெக்ட்இன்று வரை மனதை விட்டு அகலாமல் நின்று நிலைக்கிறது..  அதற்கு காரணம் அந்தப்பாடத்தின் உள்ளடக்கமும் அதைக்கற்பித்த ராமச்சந்திரன் என்ற ஆசிரியரும்தான்..

  அந்த
  பல்கலையில் எங்களுக்கு கற்பித்த இரண்டு தமிழ் ஆசிரியர்களும் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்கள மாணவர்களுக்கும் பிடித்தமானவர்கள்..

  ஆனால்
  துரதிஸ்ட வசமாக இருவரும் தற்போது உயிரொடு இல்லை..

  கம்யூட்டர்
  நெட்வெர்க் கற்பித்த தமிழ் ஆசிரியர் , திடீரென்று ஒருநாள் தலைமறைவாகி , பின்னர் வன்னி டெக்கில் உச்ச அதிகாரியாக வேலைசெய்து , பின்னர் கடைசி யுத்த்தில் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது.. அவர் கட்டுநாயக்காதாக்குதலில் பாதுகாப்பு கணிணி வலையமைப்பை உடைத்தமைக்காக தேடப்பட்டவர் என்பது ம் குறிப்பிடத்தக்கது..

  பின்னவர்
  இயற்கையான மரணம் எய்தினாலும் , லெக்சரில் ஒருநாள் negotiation பற்றி கற்பிக்கும்போது அவரது கணீர்குரலில் அத்தனை சிங்களமாணவர்களுக்கு மத்தியில் தமிழ்செல்வனை உதாரணப்படுத்தி ஏற்றுக்கொள்ள வைத்தது இன்னும் மறக்கவில்லை..

  எவருக்குமே தூக்கமே வராமல் , சீட் நுனியில் இருந்த கவனிக்கவைக்கும் லெக்சர்கள் அவருடையது..

  ஒருநாள் தன் வகுப்பில் , அவர்
  வாழ்க்கையின் சில கட்டங்களை , சில எதிர்பார்ப்புகளை நான்கு Zone களை வைத்து அருமையாக விளங்கப்படுத்தியருந்தார்... இன்னும் பசுமரத்தாணிபோல் பதிந்து ஞாபகமிருப்பதால் ஏறத்தாழ 4 வருடங்களின் பின் அவற்றை உங்களிடம் பகிர்கிறேன்..
  வாசித்துத்தான்
  பாருங்களேன் ..
  ஏன் மனிதனுக்கு பாசம் அவசியப்டுகிறது? ஏன் குழந்தைகள் மீது அன்பு செலுத்துகிறான்? ஏன் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான்? ஏன் அம்மாவில் உருகிவழிகிறான்?

  இப்படி
  நீங்கள் யாராவது சிந்தித்துண்டா?
  இப்படி
  ஒரு சிக்கல் இல்லாவிட்டால் மனிதன் எப்பொதும் சந்தோசமாகத்தான் இருப்பான்..
  தான்
  எனக்கு மட்டும்தான் என்று வாழ்பவன் எந்த றிஸ்க்கையும் எடுத்து , வெற்றிபெற்றாலோ இல்லை தோல்வியுற்றாலோ தானே அதை அனுபவித்து வாழ்ந்து மடியமுடியும்.. அனால் , ஏன் பாசம் என்ற பெயரில் தனக்குத்தானே வரையறைகளையும் பொறுப்புக்களையும் கவலைகளையும் ஏற்றுக்கொண்ட கஸ்டப்படுகிறான் ?
  இப்படி
  ஒரு கேள்விக்கு விடைகாண்பதற்கு ஒரு வலயக்கோட்பாடு பற்றி அறிந்து கொள்ளவேண்டும்..


  மனிதனைப்பொறுத்த
  வரையில் அவன் உலகை , சமூகத்தை நான்கு வலயங்களுக்குள் அடக்கிக்கொள்கிறான்..
  அதாவது, தனக்கும்
  சமூகத்துக்குமான டிஸ்டன்ட்சை நான்கு வலயங்களுக்குள் வைத்துள்ளான்..

  தன்
  பாதுகாப்புக்காகவும் , ஜாலியாகவோ போமலாகவோ கதைப்பதற்காகவும் , தன் பாசத்தை வெளிப்படுத்தவும் , பயத்தின்காரணமாகவும் இந்த வலயங்களை ஒவ்வொரு மனிதனும் அறியாமலேயே தன் வாழ்க்கையில் உணர்கிறான் .. கடைப்பிடிக்கிறான்..

  உளவியல்
  ஆய்வாளர்கள் அவற்றை பின்வரமாறு அழைப்பர்..

  Social distances


  Public Zone : 3 மீட்டருக்கு அப்பால் நிக்கும்பொது


  தெரியாத
  ஆட்களை இந்த வலயத்திலிருந்து பார்க்கத்தான் யொசிப்பீர்கள்.. தப்பித்தவறி , அவன் உங்களை அடிக்க நினைத்தாலும் கை எட்டாது.. நாம் ஒடிவிடலாம்.. அதற்காகத்தான் இந்த ஏற்பாடு... எதிரிகள், முரட்டு வலங்குகள் பொன்றவற்றை இங்குதான் வைத்திருக்க நினைப்பீர்கள்.. சிலர் குழந்தைகளையும் மாமியார்களையும் இங்கு வைத்திருக்க நினைப்பது விதிவிலக்காகும்.. :p


  Social Zone : 1.5 மீட்டருக்கும் 3 மீட்டருக்குமிடையில்  ஓரளவாக
  நெருக்கமாக உணர்ந்தவர்கள் மற்றும் ஏதொ குழுவாக இருக்கும்போது இப்படி இருப்பீர்கள்.. தனிப்பட்ட ரீதியிலான அன்புப்பரிமாற்றம் இரக்காது.. அநெகமாக தெரிந்த ஒருவருடன் போமலாக கதைத்தல் இந்த வலயத்தில் வரும்..

  Personal Zone : அரை மீட்ருக்கும் ஒன்றரை மீட்டருக்கும் இடையில்  இங்கு
  நின்று கதைப்பவர்களுக்கிடையில் நல்ல அண்டஸ்ராண்டிங்க இருக்கும்.. நண்பர்களாக இருப்பார்கள்..

  Intimate Zone : 50 சென்டிமீட்ருக்கு உள் நிற்கும்போது  இது
  மிகவும் ஆபத்தான வலயம்.. அதற்குள் இருப்பவர்கள் உங்களை மனதளவிலோ உடலளவிலொ காயப்படுத்திவிட வாய்ப்புண்டு.. அகவே இதற்குள் வர அனுமதிப்பதற்குமுன்னம் கடுமையாக சிந்திப்பிர்கள்.. நெருக்கமான நணபர்கள், மனைவி, தாய், பிள்ளைகள் , நாய்க்குட்டி , பூனைக்குட்டிகள் போ்னவை இங்கு வரும்.. ஆனால் , அனெகமாக மனைவியிடம் மென்டலாக தாக்குப்படுபவர்கள்தான் அதிகம்.. இப்போது இந்த கடைசி இன்டிமேட்சோன் பற்றி விளக்கமாக பார்க்கலாம்..


  மனிதனுக்கு
  மன உளைச்சலை தீர்க்க இந்த கடைசி வலயத்தில ஓரிருவராவது இரப்பது அவசியம்.. அந்த வலயத்திருப்பவர்களிடம்தான் அவன் தன் ரகசியங்களை , தன்னால் மறைத்து வைக்கமுடியாதவற்றை சொல்லி ஆறுதல் தெடத்தலைப்படுகிறான். சிறுவயதில் தாயிடமும் பின்னர் நண்பர்களிடமும் பின்னர் மனைவியிடமும் சொல்லி அவர்களை அணைத்து தழுவி தன் மன இறுக்கத்தினை தளர்த்திக்கொள்கிறான்.. அனால் அந்த வலயத்துக்குள் அவன் மற்றவரை அனுமதிக்க முன் , தன் நம்பிக்கைக்கு பாத்திரமானவரா என்று அறிய த்தலைப்படுவான்.. ஏனெனில் அவனுடைய ரகசியங்களை அறிந்த பின் வெளியில் சொல்லதவராகவோ , என்ன நடந்தாலும் தன்னை விட்டு பிரியாதவனாயோ இருக்குவேண்டுமென அவன் எதிர்பார்க்கிறான்.. தனக்கு தன் கவலைகளுக்கு ஒரு தீர்வாயும் அந்த வலயங்களுக்குள் இரப்பவர்கள் இருக்கவேண்டுமென எதிர்பர்ப்பான்..


  கமலஹாசனின் கட்டிப்புடி வைத்தியத்தின் மகிமையும் அதுதான்.. மனிதமனம்போல் அதன் உடலும் தழுவலுக்கும் அணைப்பிற்கும் வெகுவாக ஏங்கும்.. சிறுவயதில் தாயின் அன்புத்தழுவல் , பின்னர் நண்பர்களின் தோழமை இறுக்கம், பின்னர் மனைவியின் ஆசைத்தழுவல் , பின்னர் குழந்தைகளின் இன்பத்தழுவல் என்ற வகையில் அதற்கும் அந்த நெருக்க வலயத்தில் தீர்வு கிடைக்கிறது..
  இந்த
  வலயத்தில் வேண்டாதவர்களின் பிரவேசம் எரிச்சலைத்தரும்.. உதாரணமாக பஸ்களில் செல்லும்பொது ஒரு முரடன் அரகில் வந்து நின்றால் கடுப்பாகவிருக்கும்.. (பெண்கள் வந்த நின்றால் கிளுகிளுப்பாக இருப்பது வேற கதை.. :P )
  அதேவேளை
  ஒருத்தன் மற்றவனை பயமுறுத்த இந்த வலயத்துக்குள் வந்துதான் கோபத்தை வெளிப்படுத்துவான்.. அதுதான் மூக்கும் மூக்கும் முட்ட கத்துவது போல சினிமாவில் காட்டுவார்கள்..

  எல்லாம்
  சரி.. இந்த வலயத்தை பற்றி அறிந்து என்ன பிரயோசனம் என்கிறீர்களா? இருக்கிறது.. நீங்கள் மரியாதையாகவும் மதிப்பாகவும் இருக்க வேண்டுமாயின், மற்றவர்களை அந்ததந்த வலயங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.. அவ்வாறே நீங்களும் எல்லை மீறாமல் குறித்த வலயங்களுக்குள் நின்று கொள்ளுங்கள்.. உங்களை நம்பி தன் நெருக்கவலயத்துக்குள் அனுமதித்தவர்களின் தீர்வாக நிற்க முயலுங்கள்.. துரோகம் செய்யாதீர்கள்..தொணதொணக்காதீர்கள்.. வாழ்க்கை இனிக்கும்.. !
  ஸ்ஸபா !அறிவுரைப்பதிவொண்டும் போட்டாச்சு.. இனி நாளைக்கு வேற ஏதாவது புதுசா போடறென்.. பிடிச்சிருந்தா ஓட்டைக்குத்துங்க.. பிடிக்கலீன்னா என் போட்டோவை பிரிண்டெடுத்து அதில குத்துங்க.. வர்ட்டா என்ன இனிய நண்பர்களா.. :) ! (அது சரி நீங்கள்ளாம் என்ட வலயத்தில எங்க நிக்கிறீங்க ? நிக்க ஆசைப்டுறீங்க ? சோசலா , பேசனலா இல்லை இன்டிமேட்டா?? :P நீ இருக்கிறவரைக்கும் இலங்கைப்பக்கமே வரமாட்டோம்கிறவங்களுக்கு அம்மாவாசைக்கு விஜய் வெருட்டும் சொல்லிக்கிடக்கு :-X )


  59 Responses

  1. //நீங்கள் மரியாதையாகவும் மதிப்பாகவும் இருக்க வேண்டுமாயின், மற்றவர்களை அந்ததந்த வலயங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.. அவ்வாறே நீங்களும் எல்லை மீறாமல் குறித்த வலயங்களுக்குள் நின்று கொள்ளுங்கள்.. உங்களை நம்பி தன் நெருக்கவலயத்துக்குள் அனுமதித்தவர்களின் தீர்வாக நிற்க முயலுங்கள்.. துரோகம் செய்யாதீர்கள்..தொணதொணக்காதீர்கள்.. வாழ்க்கை இனிக்கும்.//

   இது 100 % உண்மை .
   ஆனால் எல்லோரும் 1 .5 இற்கும் 3 இற்கும் இடையில இருந்தால் பிரச்சனை இல்லை.
   வலயக் கோட்பாடு நன்றாக இருக்கிறது.

  2. // கமலஹாசனின் கட்டிப்புடி வைத்தியத்தின் மகிமையும் //

   அது முன்னாபாய் படம் எடுத்தவருடையது

  3. /அம்மாவாசைக்கு விஜய் வெருட்டும் சொல்லிக்கிடக்கு :-X )
   /
   :-))))

   ரசிக்கும்படியாகவும் புரியும்படியாகவும் இருந்தது தங்கள் இடுகை!

  4. //ஆனால் துரதிஸ்ட வசமாக இருவரும் தற்போது உயிரொடு இல்லை.. //

   பின்னை உங்களுக்கெல்லோ படிப்பிச்சிருக்கினம்…

   //அம்மாவாசைக்கு விஜய் வெருட்டும் சொல்லிக்கிடக்கு//

   உடம்பு எப்பிடியிருக்கு!

  5. archchana said...
   வலயக் கோட்பாடு நன்றாக இருக்கிறது.
   ஆனால் எல்லோரும் 1 .5 இற்கும் 3 இற்கும் இடையில இருந்தால் பிரச்சனை இல்லை. //

   அது சரிதான்.. கிட்டக்க வந்தால் அர்ச்சனாவின் அர்ச்சனைதான் கிடைக்குமோ? உப்பிடித்தள்ளி நிண்டா மாமா ரெக்கமண்ட் பண்ணாக்கூட உங்கள சிரிக்க வக்க முடியாது போலருக்கு? :P

   நன்றி பீட்பக்குக்கு :)

  6. பேநா மூடி said...

   // கமலஹாசனின் கட்டிப்புடி வைத்தியத்தின் மகிமையும் // அது முன்னாபாய் படம் எடுத்தவருடையது //

   முன்னாபாயோ ,புல்லுப்பாயோ நமக்கெண்டால் கட்டிப்புடி வைத்தியம் கண்டுபிடிச்சது தலைவர்தான்..:P..

   ஙிந்திப்படம் அதிகம் பாக்காதீங்க பாஸ் கெட்டுப்போயிடுவீங்க..:P

  7. சந்தனமுல்லை said...

   ரசிக்கும்படியாகவும் புரியும்படியாகவும் இருந்தது தங்கள் இடுகை! //

   நன்றி அக்கா! :)

  8. VARO said...

   //ஆனால் துரதிஸ்ட வசமாக இருவரும் தற்போது உயிரொடு இல்லை.. //
   பின்னை உங்களுக்கெல்லோ படிப்பிச்சிருக்கினம்… //
   குஞ்சு ஒரு குறிக்கொளோடதான் இறங்கியிருக்கிறாய்.. இரத்தம் காணாம பொகமாட்டியோ? ஐ ஆம் பாவம்..:(

   என் கூட கதைக்கிற பிள்ளையளில யாராவதை நீ சைட் அடிபப்தானால் தயவுசெய்து சொல்லிவிடப்பா.. அட்வைஸ் பண்ணி அனுப்புகிறேன்.. நான் நல்ல பையன்.. (ஐயோ சும்மா ஜோக்குதான்.. என்னுடன் யாரும் கதைப்பதில்லை.. :-o )


   //அம்மாவாசைக்கு விஜய் வெருட்டும் சொல்லிக்கிடக்கு//
   உடம்பு எப்பிடியிருக்கு! //

   நீ விஜய் ஜோக் ஒண்ணுமே படிச்சதில்லியா ராசா? இன்னும் எப்பிடியப்பா? அவருக்கு வக்காலாத்து வாங்கிறாய்? உனக்கு றொகசிக்கு முன்னால சிலையெழுப்பணுமடா ராசா.. :P


   கொபத்தில ஓட்டு குத்தலே போலரக்கு :P

  9. //ஓர்கனைசேசனல் மனேஜ்மெண்ட் (Organizational Management) என்ற சப்ஜெக்ட்இன்று//

   அட சூப்பர் சப்ஜெக்டா இருக்கு இதுகளை ஸ்கூல்ல படிப்பிச்சிருந்தா நாங்களும் ஒழுங்காப் படிப்பமுல்ல..ஹிஹி

   //ஆனால் துரதிஸ்ட வசமாக இருவரும் தற்போது உயிரொடு இல்லை.. //

   இப்ப ஒருத்தர் புதுசா வந்திருக்கிறாராம் பெயரும் ஏதோ புல்லட்டாம்...:p

   //கமலஹாசனின் கட்டிப்புடி வைத்தியத்தின் மகிமையும் அதுதான்.. மனிதமனம்போல் அதன் உடலும் தழுவலுக்கும் அணைப்பிற்கும் வெகுவாக ஏங்கும்.//

   ஹாஹா இப்ப புதுசா பிரீத்தி ஜிந்தாவும் தொடங்கியிருக்கிறா அதுக்கு காரணம் இதுதானாஆஆ....lol


   கலக்கல் அண்ணா, நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்..;)

  10. அண்ணா புல்லட் ஆகா சுப்பர் கோ சுப்பர்...

   அண்ணா உண்மையாக சொல்லுறன் அடிக்கடி இப்படியான அறிவுரை பதிவுகளை இடுங்கள்..

   நீங்கள் மட்டும் உரு ஆசானாக இருந்திருந்தால் எப்புடி இருக்கும் .. ......

   மற்றது

   அதனால் தான் போராளிகளுக்கு இந்த நீங்கள் சொன்ன முதலாவது வலய பயிற்சி வழங்கப்படுகின்றது போலும் படைக்கு போன பின்னர் அவர்களின் மனநிலை அம்மா, அப்பா , நண்பர்கள் மற்றையோர் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வர்.

   ஏன் தற்கொலைப் படைகாரருக்கும் மூளைச்சலவை செய்வது என்பது மற்றவரிடம் ஆசாபாசங்களை இல்லாமல் செய்வது தான் போலும்.

   ஒரு விதத்தில் நீங்கள் சொன்ன முதலாவது வகையில் இருப்பது மிக்க நலம் காரணம் கவலைகளே இராது....

  11. //லெக்சரில் ஒருநாள் negotiation பற்றி கற்பிக்கும்போது//

   பீற்றர் அண்ணே...
   negotiation எண்டா? பேரம் பேசுதலா? :P


   //இப்படி நீங்கள் யாராவது சிந்தித்துண்டா? //

   சிந்தித்திருக்கிறேன்...


   //இப்படி ஒரு சிக்கல் இல்லாவிட்டால் மனிதன் எப்பொதும் சந்தோசமாகத்தான் இருப்பான்.. //

   அப்படி என்று தான் இதுவரை நம்புகிறேன்.


   //தான் எனக்கு மட்டும்தான் என்று வாழ்பவன் எந்த றிஸ்க்கையும் எடுத்து , வெற்றிபெற்றாலோ இல்லை தோல்வியுற்றாலோ தானே அதை அனுபவித்து வாழ்ந்து மடியமுடியும்.. //

   இப்படி வாழ்வதை விரும்புகிறேன்.


   //Public Zone : 3 மீட்டருக்கு அப்பால் நிக்கும்பொது//

   இதில் தான் பிரச்சினையும் இருக்கிறது அண்ணா.
   கல்லெறிபவன் இங்கிருந்து தான் கல்லெறிவான்.
   வதந்திகளைக் கிளப்புபவனும் இங்குதான் இருப்பான்.


   //Social Zone : 1.5 மீட்டருக்கும் 3 மீட்டருக்குமிடையில்//

   மகிழ்ச்சியாக இருக்கலாம்.
   பெரிதான ஆபத்து, றிஸ்க் இல்லாத வலயம்...

   //அநெகமாக தெரிந்த ஒருவருடன் போமலாக கதைத்தல் இந்த வலயத்தில் வரும்..//

   ம்.... :)


   //இங்கு நின்று கதைப்பவர்களுக்கிடையில் நல்ல அண்டஸ்ராண்டிங்க இருக்கும்.. நண்பர்களாக இருப்பார்கள்..//

   ம்...
   எனக்குப் பிடித்த வலயம்.


   /Intimate Zone : 50 சென்டிமீட்ருக்கு உள் நிற்கும்போது//

   உயர் பாதுகாப்பு வலயம். :P


   //அகவே இதற்குள் வர அனுமதிப்பதற்குமுன்னம் கடுமையாக சிந்திப்பிர்கள்..//
   சிலவேளை நீங்கள் சிந்திக்கும்போது ஒருமாதிரி இருப்பவர்கள், உள்ளே வந்த மறுகணத்தில் வேறுமாதிரி சிந்திக்கவும் இடமுண்டு.


   //மனிதனுக்கு மன உளைச்சலை தீர்க்க இந்த கடைசி வலயத்தில ஓரிருவராவது இரப்பது அவசியம்.. //

   அதாவது அந்தப் படத்தில இருக்கிற மாதிரி 2 பேராவது ஆகக்குறைஞ்சது இருக்கோணும் எண்டுறீங்க? :P :D


   //அந்த வலயத்திருப்பவர்களிடம்தான் அவன் தன் ரகசியங்களை , தன்னால் மறைத்து வைக்கமுடியாதவற்றை சொல்லி ஆறுதல் தெடத்தலைப்படுகிறான். //

   உண்மைதான்...
   இந்த வலயம் இல்லாமல் கஷ்ரப்பட்ட நாட்களுண்டு...


   //கமலஹாசனின் கட்டிப்புடி வைத்தியத்தின் மகிமையும் //

   என்னடாப்பா கமல் பேரச் சொல்லிப் போட்டீங்க எதிர்ப்புகளெல்லோ வரப்போகுது எண்டு நினச்சிற்றுப் பாத்தா பின்னூட்டத்தில கிடக்குது...
   தலைவர் வாழ்க...


   //பெண்கள் வந்த நின்றால் கிளுகிளுப்பாக இருப்பது வேற கதை.. :P//

   சும்மா போங்கண்ண...
   இது தான் பெருங்கொடுமை...


   //உங்களை நம்பி தன் நெருக்கவலயத்துக்குள் அனுமதித்தவர்களின் தீர்வாக நிற்க முயலுங்கள்.. துரோகம் செய்யாதீர்கள்..தொணதொணக்காதீர்கள்.. //

   கதம் கதம்.... :)
   அருமையான அறிவுரை...
   எல்லோரும் இதைப் புரிந்து கொண்டு நடந்தால் அழகாக இருக்கும்...


   //பி‌டிச்சிருந்தா ஓட்டைக்குத்துங்க..//

   ஜனநாயக்க கடமையை மறப்பமா? :P


   நல்ல பகிர்வு அண்ணா....
   நட்சத்திர வாரத்தில் உங்கள் வழமையான பதிவுகளுக்கு மாறான ஒரு பதிவை, அதுவும் சிறப்பாக இட்டமைக்கு வாழ்த்துக்கள்...

  12. //என் கூட கதைக்கிற பிள்ளையளில யாராவதை நீ சைட் அடிபப்தானால் தயவுசெய்து சொல்லிவிடப்பா.. அட்வைஸ் பண்ணி அனுப்புகிறேன்..//

   அட! நானிக்கிழவிகள் எனக்கெதுக்குப்பா! நான் ஒரு 16 இலிருந்து 21 குள் தேடுறன். அந்த வயசுக்காரருக்கும் உமக்கும் எட்டாப் பொருத்தம். ஸோ.. டோன்ட் வொறி! பி ஹப்பி!

   //நீ விஜய் ஜோக் ஒண்ணுமே படிச்சதில்லியா ராசா? இன்னும் எப்பிடியப்பா? அவருக்கு வக்காலாத்து வாங்கிறாய்? உனக்கு றொகசிக்கு முன்னால சிலையெழுப்பணுமடா ராசா.. :P//

   நான் உங்க தேக நலனை விசாரிச்சன், நீங்க ஆரோக்கியமா இருந்து எங்களுக்கு இதுபோல பல நல்ல விசயங்களை எழுதனும்.

   எழுப்புறது தான் எழுப்புறியள், றொக்ஸிக்கு முன்னால வேண்டாம். பெயின்ட் கடையடி அவ்வளவு நல்லா இல்லையாம், அலரி மாளிகைக்கு முன்னால எழுப்புங்கவன். ஒவ்வொரு ஜனாதிபதியும் காலைல என்னை தரிசிச்சுட்டுப் போகட்டும்.

   //கொபத்தில ஓட்டு குத்தலே போலரக்கு :P//

   குத்தியாச்சு குத்தியாச்சு! நல்லாக்குத்தியாச்சு.. அட! ஓட்டுத்தாங்க..

   சாரி மறந்திட்டன் நட்சத்திரப் பதிவரானதுக்கு வாழ்த்துக்கள்

  13. வாவ்.. என்ன மாதிரியான ஒரு அலசல் இது. ரொம்ப கரெக்ட்.. எல்லா விஷயமும்
   100% உண்மை. அதுவும் அந்த கடைசி வளையம் பற்றிய கருத்துக்கள் அட்டகாசம்

  14. அண்ணே எல்லாமே நல்லாருக்கு. எதைக் குறிப்பிடதெண்டு தெரியேல்லை. கலக்கல் :))

  15. //அண்ணே எல்லாமே நல்லாருக்கு. எதைக் குறிப்பிடதெண்டு தெரியேல்லை. கலக்கல் :)) //

   புல்லட் அண்ணா!
   நான் இதுக்கு முதல் பதிவு பற்றிச் சொன்னது ஞாபகம் இருக்கா?
   அதுதான் இது... :P

  16. அட... வர வர நம்ம புல்லட்டு தம்பி கலக்கிறான்... என்னாச்சு? என்ன தான் ஆச்சு? இல்லை பரவாயில்லை... சொல்லடா தம்பி.. உனக்கு என்ன தான் ஆச்சுது?

   உண்மையா பதிவு பிடிச்சிருக்கு... ஒரு நிமிஷத்துக்கெண்டாலும் யோசிக்க வைக்கிற மாதிரி (அதாவது இப்பிடி) உருப்படியா எழுதடாப்பா.. சும்மா மொக்கைப் பயலுகளோட(நீயே ஒரு மொக்கை எண்டதை அந்தப் பக்கமா தூக்கி வைச்சிட்டு..) சேர்ந்து மொக்கை போடாமல்...


   PS: தம்பி எண்டதால ஒருமையில விளிக்கப்பட்டிருக்குது... சரியே...

  17. Bavan said...
   அட சூப்பர் சப்ஜெக்டா இருக்கு இதுகளை ஸ்கூல்ல படிப்பிச்சிருந்தா நாங்களும் ஒழுங்காப் படிப்பமுல்ல..ஹிஹி //

   எல்லாம் படிக்கும்போது நல்லாத்தான் இருக்கும்.. ஆனா எக்சாம் டைம்டேபிள் குடுக்கும்போதுதான் புகைவரும் :P

   //ஆனால் துரதிஸ்ட வசமாக இருவரும் தற்போது உயிரொடு இல்லை.. // இப்ப ஒருத்தர் புதுசா வந்திருக்கிறாராம் பெயரும் ஏதோ புல்லட்டாம்...:p

   எனக்கும் படிப்பிக்க ஆசைதான்.. ஆனா பிஎச்டி, எம் எஸ் ஸி இண்டு இன்னும் படிச்சிட்டு வரட்டாம்.. நானென்னத்தை செய்ய? :(

   //கமலஹாசனின் கட்டிப்புடி வைத்தியத்தின் // ஹாஹா இப்ப புதுசா பிரீத்தி ஜிந்தாவும் தொடங்கியிருக்கிறா அதுக்கு காரணம் இதுதானாஆஆ....lol

   அது கிழவியாயிட்டப்பா! அதுகட்டிப்பிடிச்சா கசம்தான் வரும் இனி!


   கலக்கல் அண்ணா, நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்..;)

   நன்றியப்பன்.. :)

  18. //அது கிழவியாயிட்டப்பா! அதுகட்டிப்பிடிச்சா கசம்தான் வரும் இனி!//

   ஓமோம்... 35 வயசு...

   எண்டாலும் 35 வயசுப் பொம்பிளய 45 வயசுக்காரர் கிழவி எண்டுறது நல்லாயில்ல எண்டு இந்த 15 வயசுப் பொடியன் நினைக்கிறன்....

  19. இலங்கன் said...

   அண்ணா புல்லட் ஆகா சுப்பர் கோ சுப்பர்...

   டாய்ய்ய்ய்! உன்ட வீடு எவடம்டா? வந்து முதுகுத் தோலை உரிச்சு மூணு கிலோ உப்பைத்தேச்சாத்தான் எனக்கு எரிச்சலடங்கும்.. தெரியாம ஒரு நாலுமாசத்துக்கு முன்னம் சொன்னதை இன்னும் வ்சு பழிவாங்கிறியே இது நியாயமா?

   அண்ணா உண்மையாக சொல்லுறன் அடிக்கடி இப்படியான அறிவுரை பதிவுகளை இடுங்கள்..

   அப்படீங்கறே? ஹ்ம்!

   நீங்கள் மட்டும் உரு ஆசானாக இருந்திருந்தால் எப்புடி இருக்கும் .. ......

   நாட்டில பாதி பள்ளிக்குடத்தை இழுத்து மூடியிருப்பாங்க.. :P

   அதனால் தான் போராளிகளுக்கு இந்த நீங்கள் சொன்ன முதலாவது வலய பயிற்சி வழங்கப்படுகின்றது போலும் படைக்கு போன பின்னர் அவர்களின் மனநிலை அம்மா, அப்பா , நண்பர்கள் மற்றையோர் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வர். ஏன் தற்கொலைப் படைகாரருக்கும் மூளைச்சலவை செய்வது என்பது மற்றவரிடம் ஆசாபாசங்களை இல்லாமல் செய்வது தான் போலும்.

   இருக்குமடாப்பா.. அடுத்ததாய யாராவது இயக்கம் ஸ்டார்ட் பண்ணினா உங்களை சீப் சைக்கியா ரெகமெண்ட் பண்றேன்.. :P

   ஒரு விதத்தில் நீங்கள் சொன்ன முதலாவது வகையில் இருப்பது மிக்க நலம் காரணம் கவலைகளே இராது....

   கிழிஞ்சுது.. 3மீட்டருக்கு அங்கிட்டு இருந்து கத்தி கத்தி தொண்டையில பெரிய ஓட்டைல்லாம் வந்திடும் :P

  20. கன்கொன் || Kangon said...

   எண்டாலும் 35 வயசுப் பொம்பிளய 45 வயசுக்காரர் கிழவி எண்டுறது நல்லாயில்ல எண்டு இந்த 15 வயசுப் பொடியன் நினைக்கிறன்.... //

   வந்தியண்ணர் எப்ப சிந்தாவைகிழவியெண்டவர்? எனக்கு தெரியாது..

   அது சரி வயசு என்பது உடல் ரீதியாக கணிப்பது.. மனது ரீதியாக நீ 15 அல்ல அதை விட குறைவு..சந்தோசமா ? உன்னைப்போன்றவர்களைதான் செல்லமாக Moron என்றழைப்பர்கள்..:P

  21. //வந்தியண்ணர் எப்ப சிந்தாவைகிழவியெண்டவர்? எனக்கு தெரியாது..//

   இதற்குள் வந்தியண்ணாவைத் தேசவையில்லாமல் இழுத்து அவரின் உண்மையான வயதை நான் இந்த இடத்தில் சொல்வதன் மூலம் அவரை காண்டாக்கும் உங்கள் புத்தியை கடுமையாகக் கண்டிக்கிறேன்...


   //அது சரி வயசு என்பது உடல் ரீதியாக கணிப்பது.. மனது ரீதியாக நீ 15 அல்ல அதை விட குறைவு..சந்தோசமா ? //

   உடல் ரீதியாக எண்டா எனக்கு 12 அண்ணே....

   //உன்னைப்போன்றவர்களைதான் செல்லமாக Moron என்றழைப்பர்கள்..:P//

   ஐயோ அண்ணே.... இது பச்சிளம் பாலகத்தன்மை...
   Moron எண்டுறது வேற...
   அது எனக்குத் தெரிஞ்ச சுடும் பதிவருக்கு இருக்கிறது...

  22. கன்கொன் || Kangon said...

   //லெக்சரில் ஒருநாள் negotiation பற்றி கற்பிக்கும்போது//
   பீற்றர் அண்ணே...
   egotiation எண்டா? பேரம் பேசுதலா? :P

   காளமேகமே! பெரிய பிசினசில் negotiation என்பது ஒரு பெரிய விடயம்.. அது குறித்தான மேசையமைப்பு .. டீம் மெ்மபர்கள்எ ன்று தனியே ஒரு பெரிய பாடமேஇருக்கிறது.. அதுவுமு் ஒருவகை பேரம்பேசுதல்தான்.. இரு பிசினஸ்காரர் தங்களுக்கு டீஸ் பேசும்போதும் பெரிய போராட்டமே நடக்கும்.. Negotiation Skills என்று google பண்ணிப்பார்.. அருமையா இருக்கும்


   //இப்படி நீங்கள் யாராவது சிந்தித்துண்டா? //

   சிந்தித்திருக்கிறேன்...
   சிந்தித்துவட்டு என்ன செய்தாய்? சிந்து கபேயில் 2 பராட்டவை முழுங்கிவிட்டு போய் படுத்திருப்பாய்.. அதுதானே? :P


   //இப்படி ஒரு சிக்கல் இல்லாவிட்டால் மனிதன் எப்பொதும் சந்தோசமாகத்தான் இருப்பான்.. //
   அப்படி என்று தான் இதுவரை நம்புகிறேன்.

   சிக்கல் தேவை கண்ணா தேவை..! :P


   //தான் எனக்கு மட்டும்தான் என்று வாழ்பவன் எந்த றிஸ்க்கையும் எடுத்து , வெற்றிபெற்றாலோ இல்லை தோல்வியுற்றாலோ தானே அதை அனுபவித்து வாழ்ந்து மடியமுடியும்.. //
   இப்படி வாழ்வதை விரும்புகிறேன்.
   உன்ட கலியாணத்தில இதைக்காட்டி கல்லுக்குத்துவன்..


   //Public Zone : 3 மீட்டருக்கு அப்பால் நிக்கும்பொது//
   இதில் தான் பிரச்சினையும் இருக்கிறது அண்ணா.
   கல்லெறிபவன் இங்கிருந்து தான் கல்லெறிவான்.
   வதந்திகளைக் கிளப்புபவனும் இங்குதான் இருப்பான்.

   ம்ம் இருக்கும்.. ஒருவேளை இந்த கொன்செப்டை எழுதினகாலத்தில பீட்பக் போடுற பீச்சர் இருந்திருக்காதோ?   /Intimate Zone : 50 சென்டிமீட்ருக்கு உள் நிற்கும்போது//

   உயர் பாதுகாப்பு வலயம். :P
   சிலவேளை நீங்கள் சிந்திக்கும்போது ஒருமாதிரி இருப்பவர்கள், உள்ளே வந்த மறுகணத்தில் வேறுமாதிரி சிந்திக்கவும் இடமுண்டு.

   என்னத்தை செய்யிறது.. ஆக்களை கூப்பிட்டு ஒரு லெமன்பப்ப ைஉடைச்சு கொட்டிட்டு மறுபயும் வேலையப்பாக்க போகவேண்டியதுதான்..:P

   //மனிதனுக்கு மன உளைச்சலை தீர்க்க இந்த கடைசி வலயத்தில ஓரிருவராவது இரப்பது அவசியம்.. //
   அதாவது அந்தப் படத்தில இருக்கிற மாதிரி 2 பேராவது ஆகக்குறைஞ்சது இருக்கோணும் எண்டுறீங்க? :P :D

   ரசினி சந்திரமுகில சொன்னது மாதிரி ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லயாம்.. அவனுக்கு... :P


   //அந்த வலயத்திருப்பவர்களிடம்தான் அவன் தன் ரகசியங்களை , தன்னால் மறைத்து வைக்கமுடியாதவற்றை சொல்லி ஆறுதல் தெடத்தலைப்படுகிறான். //
   உண்மைதான்...
   இந்த வலயம் இல்லாமல் கஷ்ரப்பட்ட நாட்களுண்டு... //

   பாத்தியா ? என்னை மறந்திட்டாய்தானே? நானொருத்தன் உனக்கெண்டு இரக்கறிறது ஞாபகம் வரல்லியா?
   என்னட்டை சொல்லியழு திருக்கலாம்தானே?

   நிறைய ஹிட்டுள்ள பதிவு போட்டு எவ்ளோ காலம் சொல்லுபாப்பம்? :(


   //பெண்கள் வந்த நின்றால் கிளுகிளுப்பாக இருப்பது வேற கதை.. :P// சும்மா போங்கண்ண...
   இது தான் பெருங்கொடுமை...

   தம்பி கோவா அடிக்கடி பாக்காதயும்.. ப்ளீஸ்..


   நல்ல பகிர்வு அண்ணா....
   நட்சத்திர வாரத்தில் உங்கள் வழமையான பதிவுகளுக்கு மாறான ஒரு பதிவை, அதுவும் சிறப்பாக இட்டமைக்கு வாழ்த்துக்கள்...

   நன்றியப்பன்.. கடிகிடி யெல்லாம் சும்மா பகிடிக்குத்தான்டா! குறை நெக்காத.. :)

  23. VARO said...

   அட! நானிக்கிழவிகள் எனக்கெதுக்குப்பா! நான் ஒரு 16 இலிருந்து 21 குள் தேடுறன். அந்த வயசுக்காரருக்கும் உமக்கும் எட்டாப் பொருத்தம். ஸோ.. டோன்ட் வொறி! பி ஹப்பி!

   பார்த்தீர்களா பார்த்தீர்களா நான் எவ்ளோ பாவம்? sniff sniff!


   எழுப்புறது தான் எழுப்புறியள், றொக்ஸிக்கு முன்னால வேண்டாம். பெயின்ட் கடையடி அவ்வளவு நல்லா இல்லையாம், அலரி மாளிகைக்கு முன்னால எழுப்புங்கவன். ஒவ்வொரு ஜனாதிபதியும் காலைல என்னை தரிசிச்சுட்டுப் போகட்டும்.

   ஜனாதிபதியை கொடுரமா கொல்ல முயன்ற குற்றத்துக்கா என்னையுமு் சரத்தோட சேர்த்து காற்றோட்டமில்லாத அறைக்க அடைச்சுப்போடுவாங்கள்.. நான் மாட்டன்..

   சாரி மறந்திட்டன் நட்சத்திரப் பதிவரானதுக்கு வாழ்த்துக்கள்

   நன்றி ராசா நன்றி! :)

  24. கவிதை காதலன் said...

   வாவ்.. என்ன மாதிரியான ஒரு அலசல் இது. ரொம்ப கரெக்ட்.. எல்லா விஷயமும்
   100% உண்மை. அதுவும் அந்த கடைசி வளையம் பற்றிய கருத்துக்கள் அட்டகாசம் //

   நன்றி காதலன்.. உங்க கவிதைங்க படிச்சேன் நிஜமாவே சூப்பர்.. வாழ்த்துக்கள் :)

  25. //காளமேகமே!//
   ஆகா...

   //பெரிய பிசினசில் negotiation என்பது ஒரு பெரிய விடயம்.. அது குறித்தான மேசையமைப்பு .. டீம் மெ்மபர்கள்எ ன்று தனியே ஒரு பெரிய பாடமேஇருக்கிறது.. அதுவுமு் ஒருவகை பேரம்பேசுதல்தான்.. இரு பிசினஸ்காரர் தங்களுக்கு டீஸ் பேசும்போதும் பெரிய போராட்டமே நடக்கும்.. Negotiation Skills என்று google பண்ணிப்பார்.. அருமையா இருக்கும் //

   உந்தப் பீற்றர் விடுற கதையெல்லாம் வேணாம்... எனக்குத் தமி்ழ் வேணும்...
   தரமுடியுமா இல்லயா?


   //சிந்தித்துவட்டு என்ன செய்தாய்? சிந்து கபேயில் 2 பராட்டவை முழுங்கிவிட்டு போய் படுத்திருப்பாய்.. அதுதானே? :P //

   2 பரோட்டா என்று சொல்லி என்னை அவமானப்படுத்திய உங்களை கடுமையாகக் கண்டிக்கிறேன்...


   //சிக்கல் தேவை கண்ணா தேவை..! :P //

   அது உறவுகள் சார்ந்து, உணர்வுகள் சார்ந்த சிக்கல், அதாவது பீற்றர் மொழியில emotional problems, பெரியளவுக்க மன உளைச்சலைத்தரும்...


   //உன்ட கலியாணத்தில இதைக்காட்டி கல்லுக்குத்துவன்..//

   நடந்தால் அழைக்கிறேன்.


   //ம்ம் இருக்கும்.. ஒருவேளை இந்த கொன்செப்டை எழுதினகாலத்தில பீட்பக் போடுற பீச்சர் இருந்திருக்காதோ? //

   :P


   //என்னத்தை செய்யிறது.. ஆக்களை கூப்பிட்டு ஒரு லெமன்பப்ப ைஉடைச்சு கொட்டிட்டு மறுபயும் வேலையப்பாக்க போகவேண்டியதுதான்..:P //

   மிக்சர், முறுக்கு... லெமன் பவ் ஓட இந்த 2ம் தேவை..
   உங்களுக்கு வடிவாத் தெரியேல...


   //ரசினி சந்திரமுகில சொன்னது மாதிரி ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லயாம்.. அவனுக்கு... :P //

   மிச்சத்தச் சொல்லேலுமா?
   :P


   //பாத்தியா ? என்னை மறந்திட்டாய்தானே? நானொருத்தன் உனக்கெண்டு இரக்கறிறது ஞாபகம் வரல்லியா?
   என்னட்டை சொல்லியழு திருக்கலாம்தானே?//

   ஹி ஹி... :)
   அது பழசு...
   அப்ப நீங்களே பக்கத்து வீட்டுப் பெட்டையள், காஞ்ச மாடு கட்டையில போறதோ ஏதோ எண்டு எழுதின ஞாபகம்...


   //தம்பி கோவா அடிக்கடி பாக்காதயும்.. ப்ளீஸ்.. //

   அதுக்கு முதலே அப்பிடித்தான்...


   //நன்றியப்பன்.. கடிகிடி யெல்லாம் சும்மா பகிடிக்குத்தான்டா! குறை நெக்காத.. :)//

   சீ சீ...
   நீங்கள் எப்பிடி இப்பிடிக் கதைக்கலாம்?
   நான் இனி உங்கட பதிவுப்பக்கம் வரமாட்டன்...
   (அப்பாடா.. சந்தோசம் எண்டு பெருமூச்சு விடுறது இங்க கேக்குது...) :P

  26. //நிறைய ஹிட்டுள்ள பதிவு போட்டு எவ்ளோ காலம் சொல்லுபாப்பம்? :( //

   உங்கட கடைசிப் பதிவு கூட பெரிய ஹிற் என அறிந்தேன்?

  27. Subankan said...

   அண்ணே எல்லாமே நல்லாருக்கு. எதைக் குறிப்பிடதெண்டு தெரியேல்லை. கலக்கல் :))

   நன்றி பொட்டிமாஸ்டர்.. நன்றி

   கன்கொன் || Kangon said...

   புல்லட் அண்ணா!
   நான் இதுக்கு முதல் பதிவு பற்றிச் சொன்னது ஞாபகம் இருக்கா? அதுதான் இது... :P

   வடுவா! அவனுக்கு ஏதாவது அசைன்மெனட் குடுக்வேண்டியிருக்கும் .. அதுதான் டெம்லேட்டை பாவிச்சிட்டான்.. அதுக்கா இப்பிடி பப்ளிக்கில பாவாடைய உருவுறதா? :D

  28. Vishnu said...

   அட... வர வர நம்ம புல்லட்டு தம்பி கலக்கிறான்... என்னாச்சு? என்ன தான் ஆச்சு? இல்லை பரவாயில்லை... சொல்லடா தம்பி.. உனக்கு என்ன தான் ஆச்சுது?

   தெரியலயே? ஒருவேளை இரவு படித்திருக்கும் பொது ஏதாவது எலிகிலி கடிச்சிருக்குமொ? :-o

   உண்மையா பதிவு பிடிச்சிருக்கு... ஒரு நிமிஷத்துக்கெண்டாலும் யோசிக்க வைக்கிற மாதிரி (அதாவது இப்பிடி) உருப்படியா எழுதடாப்பா.. சும்மா மொக்கைப் பயலுகளோட(நீயே ஒரு மொக்கை எண்டதை அந்தப் பக்கமா தூக்கி வைச்சிட்டு..) சேர்ந்து மொக்கை போடாமல்...

   புல்லட் மற்றும் சகா சகோக்களே ! இந்த அவமானத்துக்கு எந்தக்குளத்தில் குதித்து சாவது?

   PS: தம்பி எண்டதால ஒருமையில விளிக்கப்பட்டிருக்குது... சரியே..

   திட்டுறதுன்னு முடிவெடுத்திட்டீங்க.. அப்புறம் அதை இலகுவாக்க புதுப்புது மெதேட்டா அறிமுக்படுத்தினா கேட்கவா முடியும்? :P ஜமாய்ங்க அக்கா! ;)

  29. //புல்லட் மற்றும் சகா சகோக்களே ! இந்த அவமானத்துக்கு எந்தக்குளத்தில் குதித்து சாவது? //

   கூப்பிட்டியளோ? :P

   அண்ணே...
   கடைசி பதிவர் சந்திப்பில மொக்கைப் பதிவு எழுதிறது தான் பயங்கரக் கஷ்ரம் எண்டும், அத எழுதிறாக்கள தொடர்ந்து எழுதச் சொல்லியும் ஒரு தீர்மானம் போடாத குறையாச் சொல்லிச்சினமே? மறந்திற்றியளா?

  30. அண்ணா நட்சத்திர பதிவர் ஆனமைக்கு வாழ்த்துக்கள் முதலில்....

   அண்ணா இது எல்லாம் o/L A/L பாடங்களுள இங்க சேக்க மாட்டான்களோ... நல்லா இருக்கு அன்னா... எனக்கு 2 தடவை வாசிச்ச பிறகுதான் நல்லா நல்லா விளங்கினது.... ஆனா நல்லா இருக்கு அண்ணா

  31. கன்கொன் || Kangon said...

   //புல்லட் மற்றும் சகா சகோக்களே ! இந்த அவமானத்துக்கு எந்தக்குளத்தில் குதித்து சாவது? //

   கூப்பிட்டியளோ? :P

   அண்ணே...
   கடைசி பதிவர் சந்திப்பில மொக்கைப் பதிவு எழுதிறது தான் பயங்கரக் கஷ்ரம் எண்டும், அத எழுதிறாக்கள தொடர்ந்து எழுதச் சொல்லியும் ஒரு தீர்மானம் போடாத குறையாச் சொல்லிச்சினமே? மறந்திற்றியளா? //


   இந்த விஸ்ணு அக்கா முந்தி ஒருக்கா அடிச்ச பின்னூட்டத்தால பாத்தவனுக்கெல்லாம் பேதி புடு்ங்கினது.. வாங்கின நான் கனநாள் கவலை்க்கிடமா இருந்து இப்பதான் கஷ்டபபட்டு தேறிவாறன் ..

   இப்போ மறுபடியும் வாறாங்கோ! :P
   ஆள் கொஞ்சம் சீரியஸ் டைப் கவனம்.. :P

   வேணுமெண்டா மொக்கை ரசிகர் சார்்பா நம்ம கும்குக்குவை அவகூட Negotiationக்கு அனுப்பலாம்..

  32. //இப்போ மறுபடியும் வாறாங்கோ! :P
   ஆள் கொஞ்சம் சீரியஸ் டைப் கவனம்.. :P //

   நாங்களும் சீரியஸ் தான்...
   இருக்கிற ஆக்களக் கேட்டுப் பாருங்கோ... :P

  33. அனுதினன் said...

   அண்ணா நட்சத்திர பதிவர் ஆனமைக்கு வாழ்த்துக்கள் முதலில்....

   அண்ணா இது எல்லாம் o/L A/L பாடங்களுள இங்க சேக்க மாட்டான்களோ... நல்லா இருக்கு அன்னா... எனக்கு 2 தடவை வாசிச்ச பிறகுதான் நல்லா நல்லா விளங்கினது.... ஆனா நல்லா இருக்கு அண்ணா //

   நன்றியப்பன்..

   அனு உந்தப்பாடங்கள் தமிழ்ப்புத்தகங்களில காண்பது கடினம்.. ஆனால் ஆங்கிலத்தில் இணையத்தில வாசித்தறிந்து கொளள முடியும்.. மேற்படிப்பு படிக்கும் பொது கட்டாயம் இவற்றை கற்பிப்பார்கள்.. மீண்டும் நன்றி.. உங்கள் ஆர்வத்துக்கு பாராட்டுக்கள்..

  34. மிகவும் அருமையான பதிவு. இதை வாசித்து பின்னூட்ட முதல் சுய சோதனை செய்து கொண்டேன், அதுவே உங்கள் பதிவிற்கு கிடைத்த வெற்றியே.

   வழமையான நகைச்சுவையுடன் கூடிய புல்லட் பதிவு..

   ஆமா அந்த நெருங்கிய வலயத்துக்குள் எத்தினை பெண்களை சேர்த்து கொண்டால் பிரச்சினை வராது????

  35. மிக மிக அருமையான கட்டுரை அண்ணா....

  36. Bullet,

   Excellent article.
   Did you graduate from SJC ?
   - Bobby G

  37. சமூகத்துக்கும் ஒரு மனிதனுக்கும் இடையிலான தூரம் நாலாகப் பிரிச்சிருக்கு.அதன் கருத்துக்கள் விளக்கத்தோட நல்லாயிருக்கு புல்லட்.

  38. நான் அடிக்கடி யோசிக்கின்ற விஷயங்கள் தான்.. ஆனால் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறது கட்டுரை.. அருமை..

   //அம்மாவாசைக்கு விஜய் வெருட்டும்சொல்லிக்கிடக்கு :-X )// அய்யோ அம்மா..

   //குழந்தைகளையும் மாமியார்களையும் இங்கு வைத்திருக்கநினைப்பது விதிவிலக்காகும்.. :ப//
   குழந்தைகள் என்றால் பாவம்.. மாமியார் என்றால் விதி.. ;)

  39. Hope u r talking abt Pratheeban anna, and Ramachan sir,
   wonderful memories of uni lecturers

  40. யோ வொய்ஸ் (யோகா) said...

   மிகவும் அருமையான பதிவு. இதை வாசித்து பின்னூட்ட முதல் சுய சோதனை செய்து கொண்டேன், அதுவே உங்கள் பதிவிற்கு கிடைத்த வெற்றியே.

   வழமையான நகைச்சுவையுடன் கூடிய புல்லட் பதிவு..

   மிகுந்த கிழ்ச்சி யோ! :) சுயரோதனை எல்லாம் செய்யுறியள்? வாழ்த்துக்கள் . ;)

   ஆமா அந்த நெருங்கிய வலயத்துக்குள் எத்தினை பெண்களை சேர்த்து கொண்டால் பிரச்சினை வராது????

   அதையும் சுயசோதனை செய்து பாக்கவேண்டியதுதானே? :P

  41. Nivethan said...

   மிக மிக அருமையான கட்டுரை அண்ணா....

   நன்றியப்பன்.. :)

   faceblogger களைகட்டுது பொல? :)

  42. என்னுடைய எல்லாப் பின்னூட்டங்களுக்கும் பதில் போடுமாறு எச்சரிக்கை விடுக்கிறேன்....

  43. ஹேமா said...

   சமூகத்துக்கும் ஒரு மனிதனுக்கும் இடையிலான தூரம் நாலாகப் பிரிச்சிருக்கு.அதன் கருத்துக்கள் விளக்கத்தோட நல்லாயிருக்கு புல்லட். //

   நன்றி அக்கா!

   டெம்ப்லேட் கொஞ்சம் புதுசா இருக்கு? :P

  44. LOSHAN said...

   நான் அடிக்கடி யோசிக்கின்ற விஷயங்கள் தான்.. ஆனால் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறது கட்டுரை.. அருமை.. //

   ம்ம்அதுகளையும் எழுதலாம்தானே? தனிய கிரிக்கட்டை மட்டும் போட்டு உருட்டிட்டிருந்தா என்னசெய்றது? :P

   //அம்மாவாசைக்கு விஜய் வெருட்டும்சொல்லிக்கிடக்கு :-X )//

   அய்யோ அம்மா..

   அதான் விஜய் டொம்மா!

   //குழந்தைகளையும் மாமியார்களையும் இங்கு வைத்திருக்கநினைப்பது விதிவிலக்காகும்.. :ப//
   குழந்தைகள் என்றால் பாவம்.. மாமியார் என்றால் விதி.. ;)

   அண்ணி எங்கன்னு தேடுங்கடா! :P

  45. Bobby said...

   Bullet,

   Excellent article.
   Did you graduate from SJC ?
   - Bobby G


   Thank you!

   I completed upto my Collegiate level education there.. :)

  46. செந்தில் said...

   Hope u r talking abt Pratheeban anna, and Ramachan sir,
   wonderful memories of uni lecturers //

   :) I really enjoyed their lectures :( I still can't believe that Rama is mo more .. :(

  47. கன்கொன் || Kangon said...

   என்னுடைய எல்லாப் பின்னூட்டங்களுக்கும் பதில் போடுமாறு எச்சரிக்கை விடுக்கிறேன்....//

   கட்டயாம் போடுறனப்பு.. :Pமுதல் உன் பின்னூட்டங்களை வாசிச்சு முடிகக்ணும்.. வாசிச்சுகொண்டு கீழ பொகும் மேல வாசிச்சது மறந்த போகுது.. :P

  48. //கட்டயாம் போடுறனப்பு.. :Pமுதல் உன் பின்னூட்டங்களை வாசிச்சு முடிகக்ணும்.. வாசிச்சுகொண்டு கீழ பொகும் மேல வாசிச்சது மறந்த போகுது.. :P //

   கொஞ்சமா வாசிச்சு கொங்சம் கொஞ்சமா பதிலளிக்கவும்... :P

  49. கன்கொன் || Kangon

   உந்தப் பீற்றர் விடுற கதையெல்லாம் வேணாம்... எனக்குத் தமி்ழ் வேணும்...
   தரமுடியுமா இல்லயா? //

   உன்னைப்போல ரெண்டு பேர் இருந்து கேட்டிருந்தா தமீழீழத்தை எப்பவோ குடுத்திருப்பாங்கள்.. :P யாராவது வர்த்தக்த்துறையிலிரப்பவர்களிடம் கேட்கலாம்.. அச்சுவிடம் கேட்பமா?
   2 பரோட்டா என்று சொல்லி என்னை அவமானப்படுத்திய உங்களை கடுமையாகக் கண்டிக்கிறேன்...

   சாரி சட்டி மிஸ்ஸாகிடிச்சி.. 2 சட்டி . சரியா?

   அது உறவுகள் சார்ந்து, உணர்வுகள் சார்ந்த சிக்கல், அதாவது பீற்றர் மொழியில emotional problems, பெரியளவுக்க மன உளைச்சலைத்தரும்...

   நீ பிஞ்சில பழுத்திட்டாய்.. நீ கதைக்கிறது எனக்கு என்ன சாமானெண்டே தெரியாது..

   நடந்தால் அழைக்கிறேன்.//
   ஏன்டா? இந்தியாவுக்கு போய் பண்ணிக்க.. இல்லேன்னா இன்னும் 5 வருசத்தில இங்கயும் ஹோமோ கலியாணம் அக்செப்டட் ஆயிடும்.. அப்புறம் பண்ணிக்க..


   மிக்சர், முறுக்கு... லெமன் பவ் ஓட இந்த 2ம் தேவை..
   உங்களுக்கு வடிவாத் தெரியேல...

   மண்டையப்போடமுன்னம் திண்டா பறவால்ல.. இது திண்டுதான் மணடயப்போடுற பிளான் போலருக்கு? :-o


   மிச்சத்தச் சொல்லேலுமா?
   :P //
   ஓம்போது பொண்டாட்டி கேக்குதாம்


   அப்ப நீங்களே பக்கத்து வீட்டுப் பெட்டையள், காஞ்ச மாடு கட்டையில போறதோ ஏதோ எண்டு எழுதின ஞாபகம்...//

   இதென்னடா புதுக்கதை?


   சீ சீ...
   நீங்கள் எப்பிடி இப்பிடிக் கதைக்கலாம்?
   நான் இனி உங்கட பதிவுப்பக்கம் வரமாட்டன்...

   நீயா கேட்டு வாங்கறப்போ தராம இருப்பமா? இந்தா பிடிச்சுக்க.. :P

  50. //உன்னைப்போல ரெண்டு பேர் இருந்து கேட்டிருந்தா தமீழீழத்தை எப்பவோ குடுத்திருப்பாங்கள்.. :P யாராவது வர்த்தக்த்துறையிலிரப்பவர்களிடம் கேட்கலாம்.. அச்சுவிடம் கேட்பமா? //

   தமிழ் சந்தேகத்துக்கும் தமிழீழத்துக்கும் என்ன சம்பந்தம்?
   ஏன் எனக்கும் மஹிந்தருக்குமிடையில பிரச்சினைய ஏற்படுத்தப் பாக்கிறியள்?


   //சாரி சட்டி மிஸ்ஸாகிடிச்சி.. 2 சட்டி . சரியா? //

   நன்றி... :)


   //நீ பிஞ்சில பழுத்திட்டாய்.. நீ கதைக்கிறது எனக்கு என்ன சாமானெண்டே தெரியாது.. //

   என்னப் பிஞ்சு எண்டு ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி.
   ஆனா நான் பழுக்கேல.
   இது சாதாரண விடயம்...
   உணர்வுகள் ரீதியான பிரச்சினைகள் அதிக மனரீதியாக அழுத்தத்தை தரும் எண்டு சொல்ல வந்தன்...


   //ஏன்டா? இந்தியாவுக்கு போய் பண்ணிக்க.. இல்லேன்னா இன்னும் 5 வருசத்தில இங்கயும் ஹோமோ கலியாணம் அக்செப்டட் ஆயிடும்.. அப்புறம் பண்ணிக்க..//

   அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்...
   காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்.
   கோவா படம் 5 தரம் பாத்தவனுக்கு மற்றவனும் கோவா தான்...


   //மண்டையப்போடமுன்னம் திண்டா பறவால்ல.. இது திண்டுதான் மணடயப்போடுற பிளான் போலருக்கு? :-o //

   :) :D


   //ஓம்போது பொண்டாட்டி கேக்குதாம்//

   நிக்கிறதுக்கும் பொண்டாட்டிருக்கும் என்ன சம்பந்தம்? :P


   //இதென்னடா புதுக்கதை? //

   எழுதின பதிவுகள மறக்கக்கூடாது பாருங்கோ...

   http://ariyalion.blogspot.com/2009/09/blog-post.html

   வாழ்க்கையும் வெறுமையும்... கொஞ்சம் சீரியஸாய்...


   //நீயா கேட்டு வாங்கறப்போ தராம இருப்பமா? இந்தா பிடிச்சுக்க.. :P//

   இந்தப் பதிவில கதைச்சு முடிஞ்சாப் பிறகு போறன்...

  51. அருமையான் பதிவு நண்பரே;

   ஆனால் படிக்கும் போது ஒரு ஆணால் மற்ற ஆண்களுக்கு எழுதியதை போல் ஒரு உணர்வு.

   மனிதன் = ஆண் + பெண் ( என்று தான் நான் அறிவேன்)

   நீங்கள் கூற விரும்பும் செய்தி ஆண்களுக்கு மட்டும் தான் என்றல்
   (Only targetted male Audience) என்னை மன்னித்து கொள்ளுங்கள்.

  52. ம்ம்ம்... அருமையான ஆசான்கள்.

   இன்னொரு வலயம் கட்டாயம் வரையறுக்கவேண்டி உள்ளது... அது கங்கோனுக்கும் புல்லட்டுக்குமான வலயம். :P

  53. //ம்ம்ம்... அருமையான ஆசான்கள்.//

   புல்லட் அண்ணா! உங்களுக்கத் தெரிஞ்ச யாரும் கிட்டடியில ரெம்ப்ளற் மாத்திச்சினமா பதிவுகளில?
   நானும் மாத்தப் போறன்... அதுதான் உதவி கேக்க...

   //இன்னொரு வலயம் கட்டாயம் வரையறுக்கவேண்டி உள்ளது... அது கங்கோனுக்கும் புல்லட்டுக்குமான வலயம். :P //

   விளக்கமாக் கதைக்கோணும்...
   உப்பிடி பின், நடு, முன் நவீனத்தில அரைவாசி விளங்கக் கதைக்கப்படாது...

  54. //உப்பிடி பின், நடு, முன் நவீனத்தில அரைவாசி விளங்கக் கதைக்கப்படாது...

   உமக்கு விளங்கின அரைவாசியைச் சொல்லும் பார்ப்பம்....

  55. // உமக்கு விளங்கின அரைவாசியைச் சொல்லும் பார்ப்பம்.... //

   எனக்கு அரைவாசி விளங்கியிருக்கெண்டு நான் எங்கயாவது சொல்லியிருக்கிறனா?
   மகாஜனங்களே பாருங்க மகாஜனங்களே பாருங்கோ...

  56. //வடுவா! அவனுக்கு ஏதாவது அசைன்மெனட் குடுக்வேண்டியிருக்கும் .. அதுதான் டெம்லேட்டை பாவிச்சிட்டான்.. அதுக்கா இப்பிடி பப்ளிக்கில பாவாடைய உருவுறதா? :D //

   கடி விளங்குது அண்ணே :)

   நீ நல்லா இருப்படா கோபி

  57. //நீ நல்லா இருப்படா கோபி //

   உங்களப் போல வயசு போனவயின்ர வாழ்த்து எனக்கு எப்பயும் தேவை சுபா அண்ணா... :P

  58. நல்ல டுமீல் இது... சிறப்பா இருக்கு. வாழ்த்துகள்.

  59. This comment has been removed by the author.