கபோதி [ only for boys ;-) ]


  அண்மையில் தமிழ்ப்படம் பாரக்கக்கிடைத்தது .. அது எனது பழைய கம்பஸ் ஞாபகங்களை திருப்பிவிட்டது.. தமிழ்ப்படத்த பார்த்து என்னடா பிளாஸ்பக் ஞாபகம் வந்தது எண்டு உங்களுக்கு குழப்பம் ஏற்படலாம்.. அதற்கு காரணம் நாங்களும் தமிழ்ப்படம் பாணியிலேயே கம்பஸ் காலத்தில் ஒரு நக்கல் படம் எடு்த்திருந்தோம்.. நட்சத்திர வாரப்பதிவின் கடைசிப்பதிவாக இதை வெளியிடுகிறென்..

  உங்களுக்கெல்லாம் அனுபவமிருக்கலாம்... அடுத்த கிழமை எக்சாமென்றால் அப்போது படிக்கும் கதைப்புத்தகத்துக்கும் , பார்க்கும் திரைப்படத்துக்கும் , நடக்கும் கிரிக்கட்டுக்கும் சற்று சுவை அதிகம்..

  இன்னும் ஒன்றுமே படிக்கவில்லை , ஆகவே 30 நிமிடம் டிவி பார்த்துவிட்டு உடனடியாய் படிப்பம் என்று மனதினுள் உறுதி எடுத்துவிட்டு , 31வது நிமிடம் ; ஓகே இன்னொரு அஞ்சு நிமிசம் என்று எமக்கு நாமே சமாதானம் சொல்லியவாறு , ஒரு குறு குறு உணர்வுடன் படத்தை ரசிக்கும் அனுபவம் , எக்சாம் முடிந்து ஹொலிடேய்சில் எத்தனை படம் பார்த்தாலும் கிடைக்காது..

  அதே உணர்வுடன்தான் செமஸ்டர் எக்சாமுக்கு 3 கிழமைக்கு முதல் சங்கமத்துக்கு என்ன ப்ரொக்ராம் போடலாம் என்று விவாதித்த வேளை என் ஐடியாவைச் சொன்னேன்.. ” மச்சான் ! ஒரு படம் எடுப்பம் மச்சான் என்று..”

  எல்லோரும் அதை வரவேற்க , எக்சாம் அழுத்தங்கள் அசைன்மென்ட் கோர்ஸ் வேக் சப்மிசன் டெட்லைனுகள் எல்லாம் தலையிலழுத்த ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்தேன்..


  அந்தப் படத்தை (படம் என்று சொல்லமுடியாது ) எடுப்பதற்குள் சீவன் சித்திரகுப்தனிடம் சீட் புக் பண்ணிவிட்டது.. அவ்ளோ கஸ்டம்.. ஸகிரிப்டிங்.. சூட்டிங்.. எடிட்டிங்.. டப்பிங்.. மியுசிக் ப்ரோவிசன் அது இது எண்டு் , எல்லாவற்றையும் கிடந்த குப்பைகளை வைத்து செய்தோம் .. யாருக்கும் எதுவும் பட எடுப்பது பற்றி தெரியாது..


  ( போட்டோ எடுக்கிற கமெராவால எடுத்த படத்துக்கு இந்தப்படம் கொஞ்சம் ஓவர்டா என்பவர்களுக்கு ரகசிய முறையில் சூனியம் வைக்கப்படும் )

  சொன்னால் நம்பமாட்டீர்கள்.. கடைசிநாள் 1 நிமிடம் கூட தூங்கவில்லை.. இணைப்புவேலைகள் கடைசிநேரம் வரையும் நாறடித்தது.. ஏன்டா இறங்கினோம் என்றாகிவிட்டது..

  ஆனால் வலி எரிச்சல் எல்லாம் விழாவில் கைதட்டு வாங்கும்வரைதான்.. எல்லாரும் காட்சிக்கு காட்சி கைதட்டும்போது களைப்பும் கஸ்டமும் பற்ந்துபோய்விட்டது..

  கதையின் படி ஒரு ஆண் பெண்ணாக நடிக்கறார் (ஓளவை சண்முகி போர்முலா)..

  படமெடுக்கும்போது ஹீரோவை பெண்ணாக வெளிக்கிடுத்தி படமெடுக்க வேணும்.. அதுவும் யாருடைய கண்ணும் படாமல்.. ஆகவே அதுக்குரிய தயாரிப்புகளை முதலில் செய்தோம்.. ஒருபெடியன் தன் தங்கையின் சல்வாரை அதுககு தெரியாமல் கொண்டு வந்து தந்தான்.. கொண்டை மேக்கப்பு எல்லாம் ரெடி.. சரி ஒருக்கா சும்மா ஹீரொவை வெளிக்கிடுத்தி போட்டொ செசன் ஒண்டு வைக்கலாமெண்டு ஆரம்பிச்சா , பொம்பிளை கெட்டப்பில ஹீரோவிற்கு ஏதோ குறைவாயிருப்பது தெரிந்தது..

  ஹிஹி புரிஞ்சிருக்கும்தானே..! சரியெண்டு நிறைய பழையபேப்பரெல்லாம் அடைஞ்சு செட்டப்பண்ண வெளிக்கிட்டால் கொஞ்ச நேரத்தில பேப்பர் நெஞ்சிலருந்து வயிறு வரைக்கும் இறங்கி பயங்கரமா இருந்தது.. எங்கடை டீமில அடிக்கடி நேரகாலம் தெரியாம நேர்மையா கொமெண்டு விட்டு அடிவாங்கிற அப்பாவி ஐடியா மணி கேசொண்டு இருந்தது .. அவன் அப்பதான் வந்து ”ஹிஹி! டேய் அலி! உன்னைப்பாக்க உந்த அப்பம் விக்கிற சிங்களக்கிழவி மாதிரி இருக்கு ” எண்டான்.. நல்லகாலம் அடி விழமுன்னம் ஓடி்ட்டான்..

  இப்பிடி பந்து , பேணி , சிரட்டை எதை வைச்சாலும் நழுவி கீழ வந்துகொண்டிருந்தது.. உது சரிவராதெண்டு எ்லாருமா சேர்ந்து பெண்களி்ன் மேலுள்ளாடை வாங்குவதா முடிவு பண்ணினம்.. எ்லாரும் முடிவு பண்ணிட்டு யார்வாங்கப்போறதெண்டதில தகராறு வந்திட்டுது.. யாரும் அதை தங்களால வாங்கவே முடியாது எண்டுட்டாங்கள்.. வேணுமெண்டா கெள்ஸ் ஹொஸ்டலுக்க இறங்கி சுடுவமோ என்று ஐடியாக்குடுத்த ஐடியாமணி கடுமையான தாக்குதலுக்குள்ளானார்..


  கடைசியாக அங்கசுத்தி இங்க சுத்தி பொறுப்பு என் தலையில விழுந்திட்டு.. நான் அழுது குழறி யாராவது துணைககாவது வாங்கடா என்று கேட்க ம்ஹூம் என்று ஒரே ஆட்டாக ஆட்டி பஸ் ஏத்தி அனுப்பிவிட்டார்கள்.. பயந்து பயந்து கொஞ்சம் தள்ளியிருந்த Fashion Bug போய் பெண்கள் ஆடைப்பகுதியில் பார்த்தால் எல்லாம் பெண்மயம்.. ஒரு பையனக்கூடிக்காணம்..
  யாராவது விற்கிற பையன்கள் நின்றால் காலில விழுந்து கதறி அழுதாவது என் பிரச்சனையை சொல்லிவாங்குவம் என்றால் ஒரு பையனையும் காணம்.. அப்போ ஒரு விற்பனைப்பெண் நான் தர்மசங்கடத்துடன் நிற்பதைக்கண்டு என்ன வேண்டுமென்று கேட்டாள்.. எனக்கு வேர்த்து வழிந்து நாக்கு உள்ளே போய்விட்டது.. தட்டுத்தடுமாறி விக்கி விலங்கித்து மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டு அது இருந்த பக்கமாக கையைக்காட்டினேன்.. ஏதோ கேட்டாள்.. யெஸ்யெஸ் எண்டேன்..


  அவள்
  எடுக்கப்போய்விட , நான் பல்லைக்கடித்துக்கொண்டு , தலையை குனிந்து கொண்டு , மேசையை குத்திக்கொண்டிருந்தேன்.. அந்தவேளை சற்றும் எதிர்பார்க்காமல் ஹாய்! என்ற இனிய பெண்குரல் ‌ பின்னால் கேட்டது.. திடுக்கிட்டு திரும்பிபபார்த்தால் பியுமி..

  அவள் என்னுடன் படிக்கும் சிங்களப்பெட்டை.. அய்யகோ.. இப்ப என்ன செய்வது.. உடுப்பெடுக்க போனவள் திரும்பி வரமுன் உண்மையை சொல்லிவிடலாம் என்று லைட்டாக டோக்கைப்போட்டேன்..

  நாங்கள் நாடகம்போடப்போவதாயும் அதற்கு பெண்களின் துணி வாங்கவந்ததாயும் லைட்டாக சொன்னேன்.. அவளும் ”ஓ‌ஹோ!” என்று சந்தேகத்துடன் கேட்டவள் எனக்கு பின்னால் யாரையோ பார்த்ததும் சட்டென்று முகம் மாறினாள்..

  அவள் றியாக்கனை கண்டு குழம்பி என்னவென்று திரு்ம்பினால் அங்கே கண்டகாட்சி ! அந்த மூதேவி கறுப்பு சிவப்பு பச்சை எண்டு நாலைஞ்சு கலரில் கீழுள்ளாடையை வைத்திருந்தது..

  சேர் விச் கலர் டு யு லைக்?

  ஙே?

  ஆத்தாடி .. அடியேய் கூறு கெட்ட மூதி .. ஆப்பைக்கொண்டுவந்து ஆள்வளம் தெரியாமல் அடிக்கிறாளே..

  நாடகத்துக்கு இதையெல்லாம் வாங்கினெண்டு வெளில சொல்லப்போறாளே இந்த பக்கி!.. இப்ப நானென்ன செய்ய?

  நான் நோநோ நொட் திஸ் ! தட் ! தட் வன் ! என்று அலறியடித்து மறுக்க அவள் விடாமல் for her ,right? என்றாள்?

  அடியே கட்டையில போறவளே .. உன்ட வாயில சனி ஏறி சங்காத்தமாட.. தேரை இழுத்துத் தெருவில விட்டுட்டாளே...!

  நான் என்ன றியக்சன் குடுப்பது என்று தெரியாமல் முழிந்துகொண்டிருக்க பியுமி முறைத்தபடி போய்விட்டாள்.. கடைசியா ஒருமாதிரி உருட்டிப்புரட்டி ஐந்நூறு ருபாயக்கு ஒன்றை வாங்கிவந்த எல்லார் முகத்திலும் எறிந்தவிட்டு இருந்த கோலத்தைப் பார்த்து எவனும் எதுவும் கேட்கவில்லை..

  ரத்தக்களரி.. சர்வமானநாசம்!

  அதைத்தொடர்ந்து , ஒரு நாள் இந்த பொம்பிளைக்காட்சியை சூட் பண்ண யோசிச்சிருந்த ஒரு குப்பைப்பிரதேசத்தில் , அங்கு வசித்த எல்லாரும் எங்கேயொ போய்விட , சரி குறித்த பகுதியை சூட் பண்ணி முடித்துவிடலாமென்று அவசர அவசரமாக ஹீரோவை வெளிக்கிடுத்தினோம்..

  கஸ்ட காலத்துக்கு ஷேப்பண்ணி வைத்திருந்த இரண்டு சிரட்டைகளையும் காணோம்.. எல்லாரும் எங்கடா எங்கடா தேட ஹீரோ சிரித்துக்கொண்டிருந்தார்.. ”ஹிஹி இன்னிக்கு எடுத்தமாதிரித்தான்டி!”

  ஐடியாமணியை ரவிகடையில் ரெண்டு சிரட்டை வாங்கிவருமாறு அனுப்பிவிட்டு மீண்டும் தேடுகையில் சிரட்டை கிடைத்துவிட்டது.. உடனே ஹீரோ தன் பெனியனை காணவில்லை என தேடலானார்.. அவருக்கு ரெண்டு குத்தை விட்டு ஒண்ணும்தேவையில்லை எண்டு சிரட்டை வெறும்மேலில் பொருத்தி வாங்கிவந்த ஐட்டத்தை அணிவித்து சல்வாரை கொழுவி சூட்டிங்குக்கு தயாரான நேரம்.. திடீரென்று ஹீரோ குட்டிபோடும் ஆடுபோல் வாள்வாள் என கத்தலானான்..

  என்னடா இது என்று பார்த்தால் ”டேய் கழட்டடா கழட்டடா” என்று கத்திக்குழறினான்.. என்ன பிரச்சனை என்று அறிய முன் சல்வாரை கழற்றிவீசி மற்றதை கழற்ற முடியாமல் பிடிங்கி வீசி சிரட்டைய கழட்டி எறிந்து விட, பின்னர்தான் பார்த்தோம்.. உள்ளே கொஞ்சம் கடி எறும்புகள்.. எடுத்து மேஜையில் வைத்திருந்த நேரத்தில் ஏறிவிட்டிருக்கிறன.. நாமும் கவனிக்காமல் சே!

  கடிகடிஎன்று கடித்து சிவந்து வீங்கி அனுங்கிக்கொடிருந்த ஹிரோவைப்பார்க்க பாவமாக இருந்தது.. அந்த வேளை இரு சிரட்டைகளுடன் வந்த ஐடியா மணி அவனை குறுகுறுவென்று ஒரு முறை பார்த்துவிட்டு சீரியசாய் சொன்னனான்..
  இவனுக்கு சிரடடை தேவையில்லை போலருக்கே? ..”

  ஐடியா மணியை ஆஸ்பத்திரியில் அனுமதித்த பின்னர் , முதலில் படத்துக்கு வைத்த பெயர் சிரட்டை.. ஹீரோவின் கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டு கபோதி என்ற பெயர் வைக்கப்பட்டது.. படத்தின் கதை பின்னூட்டதில் போடுகிறேன்..


  சரி சொல்ல வந்த கருத்துக்கு வருவம்... இந்த படத்தை எடுத்து முடிச்சபிறகு எனக்கு ஒரு வித்தியாத்தை உணர முடிஞ்சது.. அந்த அனுபவத்துக்கு பின்னர் ஒவ்வொரு சினிமாப் படத்தை பார்க்கும் போதும் அந்தபடத்தின் ஒவ்வொரு நுணுக்கமான அம்சங்களையும் அதன் பின்னாலுள்ள உழைப்பபையும் பார்க்கமுடிந்தது.. அனுபவிக்க முடிந்தது.. ரசிக்க முடிந்தது..

  நீங்கள் ஒரு கதை எழுதினால்தான் இன்னொரு ஒரு கதையை அதன் மக்சிமத்துக்கு ரசிக்கமுடியும்.. அதற்கு தேவையான திறமையையும் உழைப்பையும் பாராட்ட முடியும்.. அவ்வாறேதான் இசையும்.. இசையை ரசிப்பவர் இன்னும் ரசிப்பில் அடுத்தநிலையை காண அதை பழகவேண்டும்..
  நீங்களும் புதிதாய் உருவாக்க முயலவேண்டும்..

  எப்படி இதை செய்திருப்பார்கள் என அதிசயித்தவாறு பார்ப்பது ஒரு புது அனுபவம்... இன்பஅனுபவம்! ஆகவே நீங்கள் பார்த்து படித்து கேட்டு ரசிக்கும் எல்லாவற்றையும் நீங்களே ஒரு முறை உருவாக்கத்தலைப்படும் போது அதன் இன்னொரு பரிமாணத்தை உணர்வீர்கள்..


  பிகு: உங்கள் எ்லாருக்கும் எண்ணெயில் தண்ணியில் வழுக்கிவிழுந்த அனுபவம் இருக்கும்.. ஆகவே வழுக்கும் தரையில் நடப்பது தொடர்பாக உங்களுக்கு ஒரு எண்ணக்கரு இருக்கும்.. ஆகவே பின்வரும் ஐஸ் டான்சிங் ரசிக்கும் போது உங்கள் கண்களும் மனமும் அகல விரிவதை உணர்வீர்கள்..
  34 Responses

  1. //பியுமி முறைத்தபடி போய்விட்டாள்.. கடைசியா ஒருமாதிரி உருட்டிப்புரட்டி ஐந்நூறு ருபாயக்கு ஒன்றை வாங்கிவந்த //

   றொம்ப கோஸ்லியோ,

   நாடகத்துக்கு ஏன் ஓய் 'பஷன்பக்' போனீர், வெள்ளவத்தை கரையால நடக்கிறேலயோ?

   நான் ஆண்கள் பாடசாலையில் படித்ததனால் இது போன்ற அனுபவங்கள் நிறைய இருக்கு. பெண் வேடமிடும் இரு அழகுராணிகள் என் வகுப்பில் உள்ளார்கள். சுபாங்கனுக்கும் தெரியும்.

   ஆனாலும் கொஞ்சநாளா நீர் தாறு மாறாப் போகேக்கையே தெரியும், ஆளுன்ட ஓமோன்களில ஏதோ ஒண்டு கூட சுரக்குது எண்டு. அது இந்தளவு சுரந்திட்டுதே! கடவுள் காக்க…

  2. வரோ ஒழிக...
   நான் முதலாவதாக பின்னூட்டமிடுவம் எண்டு ஓடிவந்தா அதைக் கெடுத்த வரோ ஒழிக...
   வரோவின் இந்தச் செயலால் நான் தற்கொலை முயற்சி செய்யப் போகிறேன்... :(

  3. அண்ணே...
   பியுமி .. ஹி ஹி... மாட்டுப் பட்டுற்றியள்... சொந்தச் செலவில சூனியம் வச்சிற்றியள்...
   யாராவது உந்தப் பெயர மறப்பாங்கள் எண்டு நினைக்கிறியளோ?
   ம்ஹ்ம்...

   உங்கள் உழைப்பு வாழ்க.
   ஏற்கனவே அந்தப் படத்தைப் பார்த்து விட்டதால் அதன் உருவாககத்தைப் கேட்பது வித்தியாசமானதாக இருக்கிறது...

   உங்களுக்கு fashion bug --- வாங்கப் போன அண்ணல் எண்டு பட்டம் குடுக்கப் போயினமாம்...

   என்னவோ போங்கோ...
   எல்லாமே உங்களுக்கெண்டு வாய்க்குது...

   எனக்கொரு உண்மை சொல்லுவியளோ?
   நீங்களா விரும்பித்தானே 'அது' வாங்கப் போனனியள்?
   சும்மா வெக்கப் படாமச் சொல்லுங்கோ...

   இது நட்சத்திர வாரக் கடைசிப் பதிவல்ல...
   நாளை பதிவு போட வேண்டும்.
   ஞாயிறு தான் கடைசி நாள்...

  4. கபோதி கதை!
   குட்டிக்க‌தைதான்.. கம்பசில் ஒரு குழுவினர் வருடாவருடம் மிஸ் கம்பஸ் என்று ஒரு sms வெளியிடுவார்கள்.. பெண்கள் அதை எதிர்த்தாலும்.. வெற்றிபெற்ற பெண்களின் கண்களில் ஒரு மிதப்பை காணலாம்.. ஆகவே கதை அந்த சம்பவத்துடன் தான் ஆரம்பிக்கிறது..


   மிஸ்கம்பஸில் தெரிவு செய்யப்படாத மாணவிகள் மனஅழுத்தம் காரணமாக டொக்டர் பொஸ் ஐ சந்திப்பதையும் , கம்பஸ் வளாகத்தில் இடம்பெற்ற மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்க ஸ்கொட்லன்ட் யாட் பொலிசார் வருவதையும் ஒரு செய்தியாளர் வாசிப்பதுடன் படம் ஆரம்பமாகிறது.. அதைத்தொடர்ந்து டொக்டர் பொஸ் ஐ சந்திக்கும் ஒரு பெண்ணுக்கு பையன்கள் வாளிவைக்க (வழிய) தடையாயிருப்பது அவவுக்கு வந்திருக்கும் யூரின்மணமோமேனியா என்கிற வருத்தமேயெனவும் அதற்கு தீர்வாக யாராவது நபரின் கிட்னியை பிழிந்து யூஸ் பண்ணி குடிக்க வேண்டுமெனவும் கூறுகிறார்.. நெஞ்சிலிரக்கும்வரை படத்தை பார்த்து ஐடியா எடுக்குமாறும் கூறுகிறார்.. அதைத்தொடர்ந்து மேற்படி பெண் நெஞ்சிலிருக்கும்வரை படத்தை பார்த்து காதலன் இதயம் செயலிழந் போன காதலிக்கு தன் இதய்த்தை கொடுப்பதை போல கிட்னியை யாரிடமிருந்தாவது பெற முயற்சிக்கிறாள்.. .. கம்பசில் ஒரு இளிச்சவாயனை ( வரலாறு அஜித் போல் 50 % பெண்ணான அவன்தான் பட ஹீரொ ) காதலிப்பது போல் ஏமாற்றி அவனிடம் தனக்கு கிட்னி பெயியிலர் என் சொல்ல நினைக்கிறாள்.. அதை ஹீரோவுக்கு sms பண்ணுகிறாள்..ஆனால் அந்த வேளை தற்செயலா ஹீராவின் போன் கம்பசி்ன் நரித்தனம்நிறைந்த வில்லனிடம் மாட்டிவிடுகிறது.. அவனுககு அவள் திட்டம் புரிந்து விட , கூத்துப்பார்க்க எண்ணி தனக்கு புரியவில்லை எனக்கூறி றிப்ளை பண்ணுகிறான். உடனே அவள் நெஞ்சிருக்கும் வரை படம் பார்த்தில்லையோ என் கேட்க வில்லன் இல்லை என டெக்ஸ்ட் செய்கிறான்.. அந்தவேளை ஹீரோ வந்துவிட sms எல்லாவற்றையுமு் அழித்துவிட்டு நல்ல பிள்ளையாக போனை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு ஹீரொவுடன் சகஜமாக கதைக்கிறான்.. அதேவேளை அவளிடமிருந்த இன்னொரு sms வருகிறது.. கம்யுட்டர் லாப்பில் குறித்த போல்டரில் படத்தை கொப்பி விடவதாகவும் பார்த்து அதன் படி செய்யவும் என மசேஜில் காணப்பட அடிமுடி தெரியாமல் குழப்பமடைந்த ஹீரோ என்ன இழவென்று பார்க்கலாம் என்று புறப்பகிறான்.. அதை தடுத்துநிறுத்திய வில்லன் உடனடியாக ஓடிச் சென்று குறித்த போல்டரிலிருந்த படத்தை அழித்து விட்டு இரண்டு படுபயங்கர பலான படங்களை (XXX) கொப்பி பண்ணிவிடுகிறான்.. அதைப்பார்த்து அரண்டுபோன ஹீரொவுக்கு அவள் வேற பிளானுக்கு ஆசைப்படுவதாக கூறி வில்லன் கூத்து பார்க்க யோசிக்கிறான்.. ஆனால் கட்டுப்பெட்டி ஹீரோவோ ஹீரெயினுக்கு போன் பண்ணி உன் எண்ணம் புரிந்தது.. உதெல்லாம் என்னிடம் நடவாது என கத்துகிறான்.. ஹீரொயினும் போடா பேயா என்று வெட்டி விட , உனக்கு ஆண்மைக்குறைவு இருப்பதால்தான் அவள் உன்னை வெட்டிவிட்டதாக வில்லன் ஹீரொவுக்கு உசுப்பேற்றி அவனை நைசாக நஞ்சேற்றுகிறான்..

   அப்போது புதுசாக ஒருவர் அறிமுகமாகிறார்.. அவர்தான் மசுக்குட்டி சுவாமி.. ஆண்களை பெண்களாயும் பெண்களை ஆணாயும் மாற்றுவதாகவும் சகல சக்திகள் நிறைந்தவராயும் இருப்பதை அறிந்த வில்லன் மற்றும் ஹீரொவின் நண்பர்கள் ஹீரொவை சாமியாரிடம் தூக்கிச்சென்று அவனை 100 வீதம் ஆணாக்குமாறும் குறித்த பெண்ணை வசியம் செய்து தருமாறும் வேண்டுகிறனர்.. ஹீரொயினின் போட்டொவை வாங்கிப்பார்த்த சாமியாருக்கு அவள் மேல் ஐடியா வந்துவிடுகிறது.. உடனே அவர் வந்தவர்கள‌ை வழியனுப்பிவிட்டு அவளை மடக்கிவிடுகிறார்.. இதனை அறிந்து மனமுடைந்து போயிருந்தவனை அவனது நண்பர்கள் புதுப்பிளான் ஒன்று போட்டு தெம்பேற்றுகிறனர்.. அதன்படி ஹீரோ பெண்வேடம் போட்டு சாமியாரை மடக்குகிறான்.. சாமியாரும் ஹீரோயினை கழட்டிவிட்டு ஹீரோமேல் ஈடுபாடு வரும்போது ஹீரொ தனக்கு இன்னொரு ஆண்மேல் காதல் உள்ளதாயும் தன்னால் முடியாதெனவும் மறுக்கிறான்.. எ்லாப்பெண்களும் இப்படித்தான் என எரிந்து விழும் சாமியார் நீ அணாகப்போகககடவது என ஹீரோவைச்சபிக்கிறார்.. அதைத்தான் எதிர்பார்த்திருநத ஹீரொ தான் யார் என்பதை வெளிப்டுத்தி சாமியாருடன் மோதுகிறான்.. அந்தநேரம் ஸ்கொட்லன்ட் யாட் பொலீஸ் யார்காலையாளி என கண்டுபிடித்து ஹீரா வீட்டுக்கு வருகிறது.. அதே நேரம் சாமி ஹீரொவைப் போட்டு கும்மி எடுத்துக்கொண்டிருந்தார்.. கடசியில் தோற்கும் தறுவாயில் ஹூரோ 6 மாசமாய் தோய்க்காத தன் சொக்சை கழட்டி சாமியின் வாய்க்கு அடைந்துவிட சாமி பரமுக்தி அடைகிறார்.. பெண்ணியல்புடைய ஆண்தான் பழைய கொலை செய்துள்ளார் என்று ஆதாரம் வைத்திருக்கும் பொலீசாரால் தற்போது 100 % ஆணாகவுள்ள ஹீரொவை கொலையாளி என நிருபிக்க முடியவில்லை.. பொலீசார் மறுபடியும் தோலவியுடன் செல்ல பழைய கொலைக்கான காரணத்தை எழுத்தோட்டத்துடன் காட்டுவதாக முடிகிறது படம்..

  5. ///கன்கொன் || Kangon
   February 20, 2010 6:07 PM
   வரோ ஒழிக...
   நான் முதலாவதாக பின்னூட்டமிடுவம் எண்டு ஓடிவந்தா அதைக் கெடுத்த வரோ ஒழிக...
   வரோவின் இந்தச் செயலால் நான் தற்கொலை முயற்சி செய்யப் போகிறேன்... :(///

   எலே! அசந்தா அடிச்சிட்டுப் போற உலகமப்பா இது, என்னடா கோபியை காணல, கொமண்ட் எங்காவது மறைஞ்சு கிடக்கோ எனத் தேடிப்பார்த்ததிலேயே 5 நிமிசம் போச்சு, அதுக்குள்ளையாவது வந்து அடிச்சிருக்கக் கூடாதா!

  6. டைரக்டர் சங்கருக்கு போட்டியா களமிறங்கலாம் அண்ணா.
   ஏன் மீதி படம் போடல?

  7. //கன்கொன் || Kangon

   எனக்கொரு உண்மை சொல்லுவியளோ?
   நீங்களா விரும்பித்தானே 'அது' வாங்கப் போனனியள்?
   சும்மா வெக்கப் படாமச் சொல்லுங்கோ...//

   இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன், கேட்க ஆள் இல்லை எண்ட தைரியமோ… புல்லட்டுக்கு ஆதரவாக நான் இருக்கின்றேன். புல்லட் ஒரு பாவமும் அறியாத அப்பாவி! அவரை வேண்டுமென்டே சில முரட்டு ஆசாமிகள் பஷன்பக்கிற்கு ஆட்டோ பிடித்து அனுப்பியிருக்கிறார்கள். ஒருபாவமும் அறியாத புல்லட் குடுத்த 500 ரூபாவுக்கும் பெரிஸ்ஸ்ஸ்ஸா வாங்கியிருக்கு, மற்றவங்களா இருந்தா 150 ரூபாக்கு பேமன்ட்ல வாங்கிட்டு 350 ரூபாவை அடிச்சிருப்பங்கள்.

   புல்லட் வாழ்க! அவன் கடமை, கண்ணியம் வாழ்க!

  8. அண்ணே, முக்கியமான விசயத்தை விட்டுட்டியள், கடைசியில பியூமிய எப்படிச் சமாளிச்சியள்? கயூகலேல அடுத்தநாள் சூரசம்காரமே நடந்திருக்குமே?

  9. இ்ததால் நான் அறியத்தருவது யாதெனில் புல்லட் அண்ணாவின் உழைப்புக்காக அவர் பின்னூட்டங்களைப் பெறவேண்டும், என் பின்னூட்டம் கொடுமைகள் அவற்றைப் பாதிக்கக் கூடாது என்பதால் பின்னூட்டமிடுதலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறேன்....

  10. பாகம் இரண்டிற்கு waiting
   முழுப் படத்தையும் பார்த்த பின் விமர்சனம் எழுதி விடலாம்.
   படத்தை விட திரைக்குப் பின்னரான சங்கதிகள் சுவாரசியம் மிக்கவை. ஆயுத எழுத்தில் மணிக்குப் பிறகு உங்களுக்குத் தான் தைரியம் இருந்திருக்கிறது த்ரிஷாவை சொந்தக் குரலில் பேச வைக்க

  11. அண்ணா உங்கள் பாணியில் ஒரு உண்மை கதை கலக்கிட்டிங்கள் போங்கள்...

   ரொம்ப கஸ்டடபட்டு இருப்பிங்கள் போல பிறகு எப்படி அந்த அக்காட்ட தப்பினிகள்????

   அண்ணா உங்கள பார்த்தா ரொம்ப பொறாமையா இருக்குது அண்ணா... எல்லா இடத்திலையும் 100% வாழ்ந்து இருக்கிங்கள் போங்கள்.....

   அண்ணா பின்னுட்டத்தில் கதை சூப்பர்.... ஆனாலும் இது திரைக்கதையாக எடுத்து இருந்தால் நல்லா ஓடி இருக்கும் அண்ணா...

   வாழ்த்துக்கள் அண்ணா

  12. //30 நிமிடம் டிவி பார்த்துவிட்டு உடனடியாய் படிப்பம் என்று மனதினுள் உறுதி எடுத்துவிட்டு , 31வது நிமிடம் ; ஓகே இன்னொரு அஞ்சு நிமிசம் என்று எமக்கு நாமே சமாதானம் சொல்லியவாறு , ஒரு குறு குறு உணர்வுடன் படத்தை ரசிக்கும் அனுபவம் , எக்சாம் முடிந்து ஹொலிடேய்சில் எத்தனை படம் பார்த்தாலும் கிடைக்காது//

   WOW!!! ஆதே.. அதே...

   ஐயோ அண்ணே என்னால டைப்ப பண்ண முடியல, இன்னும் சிரிச்சு முடியல...

   ஐயோ... யப்பா... தாங்கமுடியலயே என்னால...

   கடவுளே...

   ஹாஹா அதுவும் நீங்க கடைக்குப் போன விசியத்தை S.J.Suryaக்கு அல்லது வெங்கட் பிரபுக்கு சொன்னா அடுத்த படத்தில காமடி சீன்ல போட்டுடுவார்..:p

   கதை நல்லாத்தான் இருக்கு அந்தப்படத்தின் லிங்(முழுவதும்) இருந்தால் பிளீஸ் பிளீஸ் பிளீஸ்... தாருங்கள்.......

  13. வழமை போல கலக்கல் நகைச்சுவைப் பதிவு....

   /*நீங்கள் ஒரு கதை எழுதினால்தான் இன்னொரு ஒரு கதையை அதன் மக்சிமத்துக்கு ரசிக்கமுடியும்.. அதற்கு தேவையான திறமையையும் உழைப்பையும் பாராட்ட முடியும்.. அவ்வாறேதான் இசையும்.. இசையை ரசிப்பவர் இன்னும் ரசிப்பில் அடுத்தநிலையை காண அதை பழகவேண்டும்..
   நீங்களும் புதிதாய் உருவாக்க முயலவேண்டும்..
   */

   ரிப்பீட்டு....

   நட்சத்திர வார பதிவுகள் அத்தனையும் கலக்கல்....

  14. ம்ம்ம்... இன்னொரு அரசியல்த்தனம்.

   விடயம் கசிந்து - கத்தரிக்காய் மலிவதற்கு முன்னரே படத்துக்கு வாங்கப் போனேன் என விலை ஏற்றிவிட்டாரே...

   நல்லதொரு பதிவு!!!!

  15. புல்லட்டு வழக்கம் போல பின்னி எடுத்துட்டீங்க...

  16. VARO said...

   றொம்ப கோஸ்லியோ,
   நாடகத்துக்கு ஏன் ஓய் 'பஷன்பக்' போனீர், வெள்ளவத்தை கரையால நடக்கிறேலயோ?

   இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன், கேட்க ஆள் இல்லை எண்ட தைரியமோ… புல்லட்டுக்கு ஆதரவாக நான் இருக்கின்றேன். புல்லட் ஒரு பாவமும் அறியாத அப்பாவி! அவரை வேண்டுமென்டே சில முரட்டு ஆசாமிகள் பஷன்பக்கிற்கு ஆட்டோ பிடித்து அனுப்பியிருக்கிறார்கள். ஒருபாவமும் அறியாத புல்லட் குடுத்த 500 ரூபாவுக்கும் பெரிஸ்ஸ்ஸ்ஸா வாங்கியிருக்கு, மற்றவங்களா இருந்தா 150 ரூபாக்கு பேமன்ட்ல வாங்கிட்டு 350 ரூபாவை அடிச்சிருப்பங்கள்.

   புல்லட் வாழ்க! அவன் கடமை, கண்ணியம் வாழ்க!

   எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லப்பா! உங்களுக்கு நிறைய இருக்குபோல.. விஜயகாந்து மாதிரி புள்ளிவிபரங்களோட சொல்லுறியள்? :P

   நான் ஆண்கள் பாடசாலையில் படித்ததனால் இது போன்ற அனுபவங்கள் நிறைய இருக்கு. பெண் வேடமிடும் இரு அழகுராணிகள் என் வகுப்பில் உள்ளார்கள். சுபாங்கனுக்கும் தெரியும்.

   சுபாங்கன் என்ன வேடமிட்டவர்?

   ஆனாலும் கொஞ்சநாளா நீர் தாறு மாறாப் போகேக்கையே தெரியும், ஆளுன்ட ஓமோன்களில ஏதோ ஒண்டு கூட சுரக்குது எண்டு. அது இந்தளவு சுரந்திட்டுதே! கடவுள் காக்க…

   அதுக்கு பெயர் அதிரினலீன்..

  17. கன்கொன் || Kangon said...

   பியுமி .. ஹி ஹி... மாட்டுப் பட்டுற்றியள்... சொந்தச் செலவில சூனியம் வச்சிற்றியள்... //

   அவள் சரியான அண்டஸ்டான்டிங்கான பிள்ளை :P

   உங்கள் உழைப்பு வாழ்க.
   ஏற்கனவே அந்தப் படத்தைப் பார்த்து விட்டதால் அதன் உருவாககத்தைப் கேட்பது வித்தியாசமானதாக இருக்கிறது...

   நன்றிடா கங்கோன்

   உங்களுக்கு fashion bug --- வாங்கப் போன அண்ணல் எண்டு பட்டம் குடுக்கப் போயினமாம்...

   என்னெண்டாலும் செய்யுங்க..ஆனால் பட்டம் தரும்போது பொன்னாடைக்கு பதிலா அந்த உள்ளாடையை போர்த்துவிட்றாதீங்க .. :(

   என்னவோ போங்கோ...
   எல்லாமே உங்களுக்கெண்டு வாய்க்குது...

   அது ராசி..

   எனக்கொரு உண்மை சொல்லுவியளோ?
   நீங்களா விரும்பித்தானே 'அது' வாங்கப் போனனியள்?
   சும்மா வெக்கப் படாமச் சொல்லுங்கோ...

   ஏன் உனக்கு அது விருப்பமோ? :P

   இது நட்சத்திர வாரக் கடைசிப் பதிவல்ல...
   நாளை பதிவு போட வேண்டும்.
   ஞாயிறு தான் கடைசி நாள்...

   ஸ்ஸப்பா! என்னால முடிஞ்ச மக்சிமம் ட்ரை பண்ணிட்டன்.. நாளைக்கு சுத்தமா டைம் இல்ல.. :(

  18. இளந்தி... said...

   டைரக்டர் சங்கருக்கு போட்டியா களமிறங்கலாம் அண்ணா.
   ஏன் மீதி படம் போடல? //

   ஏற்றுவதற்கு பஞ்சி.. மற்றும் பல இடங்களில் டபுள் மீனிங் அர்த்தங்கள் வரும்.. (கம்பஸ் படைப்புதானே :P) .. சில பகுதிகள் வெட்டி ஏற்றப்பட்டுள்ளது.. லிங்க் பின்னர் தருகிறேன்..

  19. Subankan said...

   அண்ணே, முக்கியமான விசயத்தை விட்டுட்டியள், கடைசியில பியூமிய எப்படிச் சமாளிச்சியள்? கயூகலேல அடுத்தநாள் சூரசம்காரமே நடந்திருக்குமே? //

   அடேய் இதென்டா சுபாண்டம்! சே அபாண்டம்! நான் கஜீக்கலைப்பக்ம் காத்துவாங்குவே போறேல்ல.. நீவேற.. :-o

  20. தர்ஷன் said...

   பாகம் இரண்டிற்கு waiting
   முழுப் படத்தையும் பார்த்த பின் விமர்சனம் எழுதி விடலாம்.

   ஹாஹஹா! அய்யோ வேணாம் சேர்! நம்மால தாங்க முடியாது..பின்னாளில் நல்ல குறும்படம் ஒன்று எடுக்கும் எண்ணம் உள்ளது..அப்போ விமர்சியுங்கள்.. இதெல்லாம் சும்மா டைம் பாஸ்.. :D

   படத்தை விட திரைக்குப் பின்னரான சங்கதிகள் சுவாரசியம் மிக்கவை. ஆயுத எழுத்தில் மணிக்குப் பிறகு உங்களுக்குத் தான் தைரியம் இருந்திருக்கிறது த்ரிஷாவை சொந்தக் குரலில் பேச வைக்க

   ஹாஹாஹ! அதற்கு குரல் வழங்கிய பெண் கெட்டால் மண்டையைப்போட்டுவிடப்போகிறார்..கம்பசில் இருந்த பிள்ளைகளில் ஓரளவு நல்ல குரல் அவருடையதுதான்.. தங்கமான பிள்ளை வேறு..:)

  21. அனுதினன் said...

   அண்ணா உங்கள் பாணியில் ஒரு உண்மை கதை கலக்கிட்டிங்கள் போங்கள்...
   வாழ்த்துக்கள் அண்ணா
   நன்றியப்பன்.. :)

   ரொம்ப கஸ்டடபட்டு இருப்பிங்கள் போல பிறகு எப்படி அந்த அக்காட்ட தப்பினிகள்????

   பிறகென்ன வழமையப்போல வாளியப்போட்டதுதூன்..:P

   அண்ணா உங்கள பார்த்தா ரொம்ப பொறாமையா இருக்குது அண்ணா... எல்லா இடத்திலையும் 100% வாழ்ந்து இருக்கிங்கள் போங்கள்.....

   ஹாஹாஹ! அப்படியில்லை அனு.. எல்லாரும் ஒரேமாதிரித்தான்..நீங்கள் அனுபவிக்கும் சில விடய்ங்களை கண்டு நான் ஆச்சரியப்படக்கூடும்ஃஃ காலம் எல்லாருக்கும் சந்தர்ப்பம் வழஙகும்..இப்போதானே ஸ்கூல் முடித்திருக்கிறீர்கள்? இனித்தான் விளையாட்டு..

   அண்ணா பின்னுட்டத்தில் கதை சூப்பர்.... ஆனாலும் இது திரைக்கதையாக எடுத்து இருந்தால் நல்லா ஓடி இருக்கும் அண்ணா...

   அப்படிங்கறீங்க? ஹம்ம்!
   நன்றி பின்னூட்த்துக்கு..:)

  22. Bavan said...

   ஐயோ அண்ணே என்னால டைப்ப பண்ண முடியல, இன்னும் சிரிச்சு முடியல... ஐயோ... யப்பா... தாங்கமுடியலயே என்னால... கடவுளே... //
   ஓவரா உணர்ச்சி வசப்படக்கூடாது! :P


   கதை நல்லாத்தான் இருக்கு அந்தப்படத்தின் லிங்(முழுவதும்) இருந்தால் பிளீஸ் பிளீஸ் பிளீஸ்... தாருங்கள்....... //

   சரி தாறன் தாறன்.. ஏத்தி முடிச்சிட்டு பிரைவேட் லிங்க அனுப்பிறன்.. :)

  23. Thinks Why Not said...

   நட்சத்திர வார பதிவுகள் அத்தனையும் கலக்கல்....

   நன்றி நன்றி.. :)

  24. ஆதிரை said...

   ம்ம்ம்... இன்னொரு அரசியல்த்தனம்.

   விடயம் கசிந்து - கத்தரிக்காய் மலிவதற்கு முன்னரே படத்துக்கு வாங்கப் போனேன் என விலை ஏற்றிவிட்டாரே... //

   இன்னா வில்லத்தனம்? :-o

   நல்லதொரு பதிவு!!!!

   ந்னறி ஆதிரை :)

  25. அண்ணாமலையான் said...

   புல்லட்டு வழக்கம் போல பின்னி எடுத்துட்டீங்க... //

   வழக்கம் போல பின்னூட்டத்துக்கு நன்றி சேர்.. :P

  26. //ஹாஹாஹ! அப்படியில்லை அனு.. எல்லாரும் ஒரேமாதிரித்தான்..நீங்கள் அனுபவிக்கும் சில விடய்ங்களை கண்டு நான் ஆச்சரியப்படக்கூடும்ஃஃ காலம் எல்லாருக்கும் சந்தர்ப்பம் வழஙகும்..இப்போதானே ஸ்கூல் முடித்திருக்கிறீர்கள்? இனித்தான் விளையாட்டு.. //

   அது உண்மை அண்ணா... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகை அனுபவங்கள் அமையும்...
   உங்களை போன்ற பதிவர்களின் அனுபவங்களை கேக்கும் போதுதான் பல்கலைகழகத்துக்கு போக மெல்லும் ஆசை வருகிறது.... எப்ப தொடங்கும் எண்டு காத்து இருக்கிறேன் அண்ணா...


   அண்ணா உண்மையிலேயே இப்போது நான் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன்....

  27. SMS வதந்தியில் காட்டப்பட்ட பெண்களில் என்னோடைய நண்பி ஒருத்தியும் இருந்தா. இப்ப கிட்டடியிலதான் திருமணமாச்சு.. ஹி..ஹ.. அடப் பாவிங்களா..!

  28. அண்ணா கலக்கல்.. நீங்க தானா அது? அப்பிடியெண்டால் நீங்க ஏன் நான் பரிந்துரைத்த அந்த பதிவர் நல வாரியத்துக்காக ஒரு படம் எடுக்கக்கூடாது...? மற்றது சாதாரணமாக ஒரு பாட்டை பிரிமியர் ல போட்டு எடிட் பண்ணப் படுகிற பாடு நாம் அப்ப இந்த சினிமாக் கலைஞ்ர்களின் அந்த நுணுக்கமான உழைப்பு.. எப்படியானது.. எவ்வளவு பொறுமை வேணும்.... //ஆகவே 30 நிமிடம் டிவி பார்த்துவிட்டு உடனடியாய் படிப்பம் என்று மனதினுள் உறுதி எடுத்துவிட்டு இ 31வது நிமிடம் ; ஓகே இன்னொரு அஞ்சு நிமிசம் என்று எமக்கு நாமே சமாதானம் சொல்லியவாறு இ ஒரு குறு குறு உணர்வுடன் படத்தை ரசிக்கும் அனுபவம் // படிக்கும் போது வழமையாக எனக்கும் இருந்த, இருக்கிற பிரச்சனை நாளை நாளை என இன்றை இழந்தது... அண்ணா ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்.....

  29. அண்ணா, கபோதி படம் எடுக்க இவ்வளவு கஷ்டப்பட்டீங்களோ? படம் நல்லாயிருந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்கள் எண்டு நான் நினைக்கவில்லை.

  30. நானும் அந்த படத்தை என்ர கணணியில் சேவ் பண்ணி வைச்சிருந்தனான். Format பண்ணேக்க அழிஞ்சிட்டுது. நக்கல் படம். உதே நேரத்தில உங்கள் Batchல் இன்னோர் குழுவும் இன்னொர் படத்தை தந்திருந்தார்கள் அல்லவா?

  31. நல்லா பதிவு உள்ளது

  32. அண்ணே நான் ஊருக்கு புதுசு ....
   எக்ஸாம் டைம் ல மூவி பாக்கிற கதை ரொம்ப சூப்பர்னே... உங்கட எக்ஸாம் டைம் அனுபவங்கள பத்தி எழுதுங்கண்ணே...