தமிழினமே ஒன்றாகப்பார்த்த நீலப்படம்
எல்லாரும் போட்டு பிழிந்தெடுத் துவிட்ட விடயம் இது.. இனி நானும் கிழிக்க வேண்டிய அவசியமில்லை... ஆனால் அந்த சம்பவத்திலிருந்து படிக்க வேண்டிய சில விடயங்கள் இருக்கிறது.. அவற்றை நாம் ஆராய்வோம் ..
நித்தியின் படுக்கையறையின் உள்ளேயே கொண்டு போய் கமராவை வைத்துள்ள படியால் , அந்த மடத்தினுள் நடந்த ஏதோ உட்கசப்புகள்தான் இத்தனைக்கும் காரணம் எனத்தெரிகிறது.. எவனோ கூட இருந்து கழுவித்துடைத்தவன்தான் தேரை இழுத்து தெருவில் விட்டிருக்கிறான்..
காசு விடயங்களிலும் சரி , பெண் விடய்ஙகளிலும் சரி , ரகசியமாக ஈடுபடுவதானால் நெருங்கியவர்களை , அதிலும் அந்த ரகசியங்களை அறிந்தவர்களை ஒருபோதும் பகைக்கக் கூடாது..
காரியதரிசியுடன் படுக்கைக்கு செல்வதும் , ட்ரைவருடன் தண்ணியடிப்பதும் உன் சந்தோச வாழ்க்கையின் முடிவென்று என் மனேஜர் ஒரு முறை சொல்லியிருந்தார்..
நித் யாசாமி கீழுள்ளவர்களை வடிவாக கவனிக்காததோ இல்லை அந்த நடிகை யுடன் ஜல்சா பண்ணுவதை பிடிக்காத சிலர் ஆசிரமத்தில் இருந்ததோதான் இத்தனைக்கும் காரணம் என்பது என் கருத்து.. கட்டையில போனவன் கமராவை சாமியின் கவட்டிலேயே கட்டித் தொங்கவிட்டிருக்கிறான்.. எல்லாற்ற கதவையும் திறக்கச் சொன்னவர் தன்ட கதவையும் திறந்விட்டுட்டார் ... இப்ப எங்கிட்டு எப்பிடி என்னத்தை யோசிசிட்டு இருப்பாரோ? நானாயிருந்தால் தூக்கில் தொங்கியிருப்பேன்.. எப்படி இனி உலகத்தின் மூஞ்சையில் முழிப்பது?
எனக்கு சாமி க்கு கால் பிடித்து விட்டதோ இல்லை ஆங்கில பலான படங்களில் வருவது போல கண்டபடியெல்லாம் கசமுச செய்வதோ உறுத்தவில்லை .. ஆனால் அதை காவி உடையில் செய்ததுதான் அருவருப்பாக இருக்கிறது.. ஒரு நெறியையே அவமானப்படுத்திவிட்டான் நாசப்பயல்.. காவி துறவறத்தின் அடையாளம் இல்லையா?
இதற்கும் முந்தி அமெரிக்கன் கழிப்பறையில் பிள்ளையார் படத்தை போட்டதற்கும் என்ன வித்தியாசம்?
அதெல்லாம் கிடக்க, உந்த சாமியார்களி்டம் போன பொண்டுகள் , தங்கட புருசான்மாரை எப்பிடி பாக்கப்போகினம் ?.. அதிலும் சர்ச்சை புகழ் சாருநிவேதிதா என்ற எழுத்தாளர் இது குறித்து உளறியுள்ளதை ஒரு நண்பர் மெயிலில் அனுப்பியிருந்தார்.. அவற்ற மனுசியும் அந்த சாமியிண்ட ஆசசரமத்திலதான் படுத்து கிடந்ததாம்.. அதை கூச்சமில்லாம சொல்லுது மனுசன்.. அந்தாளை எல்லாம் ஏன் ஒரு கூட்டம் மதிக்குதென்று எனக்கு புரியவில்லை..
தான் இவ்வளவு காலமும் சாமிக்கு காவடி எடுத்ததை ஒரு வரியில் ”விட்றுவிட்று ” என்று சமாளித்துவிட்டு , கள்ளச்சாமியவன் நடிகையை நக்குவதாகவும் நாசப்பயலெனவும் , உதெல்லாம் தனக்கு முன்னமே தெரியுமெனவும் சொல்கிறார் இந்த நிவேதிதா!.. உன்னை நம்பி நான் அவருக்காக பணம் செலவழித்தேன் என்று கடிந்த ஒருவருக்கு உன்னை யாரடா வாசிக்க வரச்சொன்னது என கேட்கிறார்? என்ன கொடுமை? கொஞ்சமாவது மூளையுள்ளவன்தான் மற்றவனுக்கு ஏதாவது சொல்லவேண்டும்.. உப்பிடியான சோணங்கிகளை கள்ளச்சாமிகளின் கால்நக்கிகளை கூடக்கழுவில் ஏற்றவேண்டும்...
சரி விடுவம்.. உவங்களைப்பற்றி கதைச்சு என்னாவறது? நம்ம வேலையப்பாப்பம்!
மெயில் நண்பர்கள்

ஆரம்பத்தில் என் ப்ளொக் மெயில் ஐடியில் ஒரு நாளைக்கு ஆககூடியது ஓரிரு மெயில்கள் வரும்.. சில வேளை கிழமைக்கணக்கில் எதுவுமே வராது .. வருவதும் , அனேகமாக யாராவது பெடியங்கள் பெண்கள் பெயரில் ஐ லவ் யு என்று அனுப்புவார்கள்.. ஆகவே நான் அதிகமாக திறப்பதில்லை.. ஆனால் இப்போ நிலை வேறு ..
ஒரு வாரத்தின் பின் நேற்று மெயிலை திறந்தபோது எதை படிப்பது என்று தெரியாமல் FIFO முறையில் வாசித்து பதிலனுப்ப தீர்மானித்துள்ளேன்.. நெருங்கிய நண்பர்களின் மெயிலும் அதற்குள் மூழ்கிக்கிடப்பதால் அவர்கள் ஏன் பதிலனுப்பவில்லை என கடிகிறார்கள்..
உண்மையில் இந்த பிரச்சனைக்கும் இந்த சாமியார்கள் பிரச்சனைக்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு.. அதற்காகத்தான் எழுதுகிறேன்..
இந்த மெயில் குவிப்பு ஆரம்பித்தது நான் மொக்கைகளிலிலருந்து வாழ்க்கைத்தத்துவங்கள் அது இது என்று சீரியசாக சில பதிவுகள் எழுத ஆரம்பித்ததன் பின்பே.. அதைப்படித்துவிட்டு ”தனக்கும் அப்பிடித்தான்..” ,” எனக்கு இப்படி ஒரு பிரச்சனை உங்களுடன் பகிர்வதில் ஏதோ ஆறுதல் ” என்று வருபவை தான் அதிகம்... நானும் அடடா நம்மை நம்பி ஏதோ அட்வைஸ் எல்லாம் கேட்கிறாங்கள் என்று உடனடியாக றிப்ளை பண்ணி விடுவேன்..
என் பதிலில் நாலைஞ்சு கடிகளும் கட்டாயம் நடுவில் இருககும்.. இருந்தும் அவர்கள் விரும்புகிறார்கள்... இந்த திடீர் புல்லட் ஆனந்தா அவதாரம் திணிக்கப்பட்டதன் காரணத்தை நான் ஆராயத்தலைப்பட்டபோதுதான் விளங்கியது இந்த சாமியார்கள் சனத்தை திரட்டுவதன் சூட்சுமம்..
எல்லா மனிதருக்கும் கவலை உண்டு.. அதை தீர்க்க மனிதர்கள் ஆறுதல் தேடுகிறார்கள்.. அப்படி தருபவர்களை மலைபோல் நம்புகிறார்கள்.. தமது intimate zone அனுமதிக்கிறார்கள்.. அதை சில களவாணிகள் தமக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்டு பணத்தை சுரண்டி கற்பை களவாடி நேரத்தை சூறையாடி கடைசியில் நடுத்தெருவில் விட்டுவிட்டு சன்டீவியில் மிட்நைட்மசாலாவில் நதிர்தினா தினனனா! என்று பாடிக்கொண்டு வருகிறார்கள்.. ஆகவே யாரையும் நம்பி உங்கள் மனக்கவலைகளை கொட்டாதீர்கள்..(என்னிடம் கூடத்தான்)
எப்படியிருந்தாலும் உந்த மெயில் flooding ஒரு வித சந்தோசமே... ஆனால் சிலர் சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்பார்கள்.. காமெடியாக இருக்கும் .. அதற்கு காட்டமான பதில்கள்தான் அனுப்புவேன்...கடைசியாக அப்படியானதொரு மெயிலில் ஒரு பகுதி.. ( நண்பர் மன்னிக்கவும்..:) )
”எனக்கு திருமணம் செய்ய மிகவும் பயமாக உள்ளது புல்லட்! வீட்டில்நிச்சயித்துவிட்டார்கள்.. பெண்அழகாக இருக்கிறாள்.. ஆனால் சரியான வாய் போல இருக்கிறது.. எல்லா இடத்திலும் அவளை திருப்பதிப்டுத்த முடியுமோ என அஞ்சுகிறேன்..”
பதில்:
இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? உங்களுக்கு நம்ம சிலோன் மாத்ரு பூதத்தை நான் ரெகமண்ட் செய்கிறேன்.. :D
சரி.. ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள்.. நித்தயானந்தாவின் நீலக்கிளிப் பார்த்திருப்பிர்கள்தானே? எந்தப்பெரிய சாமி அவர்? அவரே ஆட்டுமாமிச லேகியம் போட்டுட்டுதான் பெபோமன்ஸ் குடுக்கும்போது உங்களுக்கு ஒரு சிட்டுக்குருவி லேகியமோ இல்லை ஒரு பலாக்கொட்டைக்குருவி லேகியமோ கிடைக்காமலா போய்விடும்? எஞ்ஜோய் ப்ரதர் எஞ்ஜோய் .. பிள்ளைண்ட பிறந்தநாளைன்னிக்கு சொக்கா அனுப்ப மறந்திடாதீங்க ..
இதுக்குப்பிறகும் அந்தாள் மெயில் அனுப்பினா அவற்ற வுட்பியின் போன் நம்பரைக்கேட்பதாக உள்ளேன்.. இப்பிடியான மெயில்கள் அனுப்பினா பதில் இப்பிடித்தான் வரும் குறைநினைக்காதீங்க பப்ளிக்..
ஜாலி யால சபாரி

கடந்தவாரம் இலங்கையின் யால வனாந்தரப்பகுதிக்கு safari ஒன்றுக்கு சென்றிருந்தேன்.. 3 தினங்கள் தங்கியிருந்து மகிழ்ச்சியின் உச்சத்தை அனுபவிக்க முடிந்தது.. உச்சகட்டமாக , காட்டினுள் , கரடிகள் முதலைகள் சூழ்ந்திருக்க ஒரு ஆற்றங்கரையில் டென்ட் அடித்து பாபேக்யு போட்டு ரணகளப்படுத்தினோம்.. இரவு எந்த செயற்கையுமில்லாத அந்த காட்டுப்பகுதியில் , தெளிவானத்தில் முழு நிலாவை படுத்திருந்து நெற்றிக்கு நேர்மேலே பார்த்த அனுபவத்தை சாகும் வரை மறக்கமுடியாது.. அத்துடன் யானை காட்டுபபன்றி காட்டெருமை சிறுத்தை மயில் காடை கௌதாரி , காட்டுக் கோழி , மான் , மரை , பாம்பு , அது இது என்று
ஏராளமான மிருகங்களை அவற்றின் இயற்கைச் சூழலில் பார்க்க முடிந்தது..


இயற்கை ரசிகர்கள் அனைவரையும் கட்டாயம் ஒரு முறை விசிட் செய்யச்சொல்வேன்.. பாதுகாப்பு அது இது என்று எதுவிதமான தடங்கலும் இல்லை.. உண்மையைச்சொல்லப்போனால் தற்போது இலங்கை அமைதியாக இருக்கும்போது மிக அழகாக இருக்கிறது..

நாம் உணவட்டுண பீச், காலி blow hole அது இதென்று திரிந்து , ஒரு பத்து யானை நாலுமாசத்துக்கிருந்து சாப்பிடக்கூடிய சாப்பாட்டு ஐட்டங்களையெல்லாம் தின்று தள்ளியும் 8 பேர் 60000/= க்குள் சமாளிக்க கூடியதாயிருந்தது.. மிகவும் அருமை..

பிகு: நாம் தங்கியிருந்தது http://yalaedge.com/ மிகவும் அருமையான சேவை.. சமையல் மற்றும் காம்பிங் தொடர்பான சகல வசதிகளையும் இன்முகத்துடன் செய்துதந்தார்கள்.. மிகவும் தரமாயிருந்தது..

மிக்ஸ் நீண்டு விட்டதால் அடுத்து ஏதாவது நல்ல பதிவுடன் சந்திப்போம்.. நன்றி..
27 Responses
////இதற்கும் முந்தி அமெரிக்கன் கழிப்பறையில் பிள்ளையார் படத்தை போட்டதற்கும் என்ன வித்தியாசம்?////
இதுக்கு பெயர்தான் புல்லட் பஞ்சோ?
யால மிகவும் அழகான இடம்.
கோபிக்கு பதிலாக இன்று நான்தான் முதலில் ஜனநாயக கடமையை நிறைவேற்றியது.
ஆமாம் ஒரு சின்ன டவுட்.
////உங்களுக்கு நம்ம சிலோன் மாத்ரு பூதத்தை நான் ரெகமண்ட் செய்கிறேன்..////
அது யார்?
ஆஹா! நன்றி நன்றி! கலக்கிடடீங்கள்.. உங்க முழுவியளம் எ்பிடியிருக்கெண்டு பாப்பம்.. கோபி அடிச்சால் 20 ஓட்டு 30 பின்னூட்டம் எண்டு அள்ளுகொள்ளையா வரும் .. உங்கட ராசி எப்பிடின்னு இன்னும் 10 மணித்தியாலத்தில தெரிஞ்சிடும்..:P
சிலோன் மாத்ருபூதத்தை தெரியாதா? நீங்க இலங்கைப்பதிவர்தானே? நித்தியானந்தாவோட வீடியோ அழிக்ப்பட அழிக்கப்பட விடாமல் 24 மணிநேரமும் ஒன்லைனில இருந்து அப்லோட்டிக்கொண்டிருந்த ஒரே பூதம்தான் அந்த பூதம்..
//சரி விடுவம்.. உவங்களைப்பற்றி கதைச்சு என்னாவறது? நம்ம வேலையப்பாப்பம்!//
என்ன உங்க ஆச்சிரமம் தொடங்குற வேலையா?
//உண்மையில் இந்த பிரச்சனைக்கும் இந்த சாமியார்கள் பிரச்சனைக்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு.. அதற்காகத்தான் எழுதுகிறேன்..//
ம்.., நாங்களும் ரவுடிதான் :P
//இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? உங்களுக்கு நம்ம சிலோன் மாத்ரு பூதத்தை நான் ரெகமண்ட் செய்கிறேன்.. :D//
அதுக்குத்தானே உங்களைக் கேட்டிருக்கிறார்?
அருட்திரு புல்லட்டானந்தாவே, உங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்
////நித்தியானந்தாவோட வீடியோ அழிக்ப்பட அழிக்கப்பட விடாமல் 24 மணிநேரமும் ஒன்லைனில இருந்து அப்லோட்டிக்கொண்டிருந்த ஒரே பூதம்தான் அந்த பூதம்..////
அவரா? அவரை நன்றாக தெரியும்.
//காசு விடயங்களிலும் சரி , பெண் விடய்ஙகளிலும் சரி , ரகசியமாக ஈடுபடுவதானால் நெருங்கியவர்களை , அதிலும் அந்த ரகசியங்களை அறிந்தவர்களை ஒருபோதும் பகைக்கக் கூடாது..//
நல்ல அறிவுரை முன்யோசனையாக செயற்பட வேண்டும்.
//கதவைத்திற ஆனால் கவடு பத்திரம்: நித்தியானந்த பரமஹம்சர் newly updated//
ஆகா மாத்திட்டாங்கய்யா..
//இதற்கும் முந்தி அமெரிக்கன் கழிப்பறையில் பிள்ளையார் படத்தை போட்டதற்கும் என்ன வித்தியாசம்?//
"தவமறந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று."
புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிபெ்பதற்கும், தவக் கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.
//தற்போது இலங்கை அமைதியாக இருக்கும்போது மிக அழகாக இருக்கிறது..//
அண்ணா எல்லாமே அமைதியாக இருக்கும் வரை அழகுதான்.... ஹி..
//எவனோ கூட இருந்து கழுவித்துடைத்தவன்தான் தேரை இழுத்து தெருவில் விட்டிருக்கிறான்..//
நித்தியானந்தரின் சீடன்...
தர்மானந்தா...
//காரியதரிசியுடன் படுக்கைக்கு செல்வதும் , ட்ரைவருடன் தண்ணியடிப்பதும் உன் சந்தோச வாழ்க்கையின் முடிவென்று என் மனேஜர் ஒரு முறை சொல்லியிருந்தார்..//
அதாவது அந்த நெருங்கிய வலயத்துள் இருப்பவர்களோடு தான் தண்ணியடிக்க வேண்டுமா? :D :D :D
ஆனால் நல்ல தத்துவம்....
//நானாயிருந்தால் தூக்கில் தொங்கியிருப்பேன்.. எப்படி இனி உலகத்தின் மூஞ்சையில் முழிப்பது?//
மனச்சாட்சி உள்ளவன் உந்தக் களவெடுக்கிற சாமியார் வேல செய்வானா?
மனச்சாட்சி இல்லாதவன் படம் சன் தொலைக்காட்சியில போறதப் பற்றி யோசிப்பானா?
பிபிசி இல் சாய் பாபா லிங்கம் எடுப்பதைக் காட்டிய பிறகும் அந்தாள் உயிரோடு தானே இருக்கிறது? அந்தாளை நம்பி சனம் வால் பிடிக்குது தானே?
ஒரு மாசத்தில எங்கட சனம் எல்லாத்தையும் மறந்து திரும்பவும் கடவுளத் தேடிப் போயிடும்....
நித்தியானந்தா ஒருக்காலும் கவலைப்பட மாட்டான்...
//ஆனால் அதை காவி உடையில் செய்ததுதான் அருவருப்பாக இருக்கிறது.. ஒரு நெறியையே அவமானப்படுத்திவிட்டான் நாசப்பயல்.. காவி துறவறத்தின் அடையாளம் இல்லையா?//
அது தான் பிரச்சினையே...
அத்தோடு எவ்வளவு பேருக்கு உபதேசித்து விட்டு ஏமாற்றியிருக்கிறான்?
//அவற்ற மனுசியும் அந்த சாமியிண்ட ஆசசரமத்திலதான் படுத்து கிடந்ததாம்.. அதை கூச்சமில்லாம சொல்லுது மனுசன்.. //
அவர் உதப் போட்டோண்ண ஒரு எதிர்ப்பதிவு போட்டார் ஒரு பதிவர்...
அவர் உத மேற்கோள் காட்டி 'அப்ப இன்னும் நிறைய வீடியோ வரும் போல' எண்டு நக்கலடிச்சிருந்தார்...
//அந்தாளை எல்லாம் ஏன் ஒரு கூட்டம் மதிக்குதென்று எனக்கு புரியவில்லை.. //
விதிவிலக்குகளை பின்தொடரும் கூட்டம் எப்போதுமே உண்டு.
//உண்மையில் இந்த பிரச்சனைக்கும் இந்த சாமியார்கள் பிரச்சனைக்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு.. //
உண்மைதான்...
மக்களின் கவலைகள், நோய்கள் (மன ரீதியானவை) தான் இவர்களின் மூலதனங்கள்....
//ஆகவே யாரையும் நம்பி உங்கள் மனக்கவலைகளை கொட்டாதீர்கள்..(என்னிடம் கூடத்தான்)//
எச்சரிக்கைக்கு நன்றி...
இனி அரட்டையில் கவனமாக இருக்கிறேன்... :D :P
//”எனக்கு திருமணம் செய்ய மிகவும் பயமாக உள்ளது புல்லட்! வீட்டில்நிச்சயித்துவிட்டார்கள்.. பெண்அழகாக இருக்கிறாள்.. ஆனால் சரியான வாய் போல இருக்கிறது.. எல்லா இடத்திலும் அவளை திருப்பதிப்டுத்த முடியுமோ என அஞ்சுகிறேன்..”//
என்ன்ன்ன்ன்ன கொடுமை புல்லட் அண்ணா இது....
உந்தளவுக்கு வருதா?
அதுசரி, உத அனுப்பினது ஆ! ஸ்கீறின் எண்டு கத்துறவரா? :D :D :D :D :D :D :D :D :D :D :D
//இதுக்குப்பிறகும் அந்தாள் மெயில் அனுப்பினா அவற்ற வுட்பியின் போன் நம்பரைக்கேட்பதாக உள்ளேன்..//
ஆகா....
அப்ப நானும் வீடியோ எடுக்கிற தொழிலத் தொடங்கலாம் எண்டிருக்கிறன்... :P
//கடந்தவாரம் இலங்கையின் யால வனாந்தரப்பகுதிக்கு safari ஒன்றுக்கு சென்றிருந்தேன்.. //
படங்கள் பார்த்தேன்...
நன்றாக அனுபவித்திருக்கிறீர்கள்...
அழகான இடம்....
// கோபிக்கு பதிலாக இன்று நான்தான் முதலில் ஜனநாயக கடமையை நிறைவேற்றியது. //
விதாவ இற்குச் சென்றிருந்தேன்....
பின்பு படத்தின் தாக்கம் காரணமாக இரவு பின்னூட்டவில்லை..... :(
//நித்தியானந்தாவோட வீடியோ அழிக்ப்பட அழிக்கப்பட விடாமல் 24 மணிநேரமும் ஒன்லைனில இருந்து அப்லோட்டிக்கொண்டிருந்த ஒரே பூதம்தான் அந்த பூதம்..//
உத வடிவாச் சொல்லவும்....
நானும் உந்தத் தொழிலச் செய்தன்...
பொதுசனம் என்னப் பிழையா நினைக்கப் போகுது... :P
புல்லட் மிக்ஸ் அருமை.... :)
//எல்லாரும் போட்டு பிழிந்தெடுத் துவிட்ட விடயம் இது.. இனி நானும் கிழிக்க வேண்டிய அவசியமில்லை... ஆனால் அந்த சம்பவத்திலிருந்து படிக்க வேண்டிய சில விடயங்கள் இருக்கிறது.. அவற்றை நாம் ஆராய்வோம் ..//
இது புல்லட் சுவாமிகளின் பாணியாம்...
பதிவர்களே குறித்து வைத்து கொள்ளுங்கள்....
//நித்தியின் படுக்கையறையின் உள்ளேயே கொண்டு போய் கமராவை வைத்துள்ள படியால் , அந்த மடத்தினுள் நடந்த ஏதோ உட்கசப்புகள்தான் இத்தனைக்கும் காரணம் எனத்தெரிகிறது.. எவனோ கூட இருந்து கழுவித்துடைத்தவன்தான் தேரை இழுத்து தெருவில் விட்டிருக்கிறான்..//
எவனோ இல்லை அவரின் கவட்டை துடைத்தவன் போலதான் இருக்குது அண்ணா ...
//காசு விடயங்களிலும் சரி , பெண் விடய்ஙகளிலும் சரி , ரகசியமாக ஈடுபடுவதானால் நெருங்கியவர்களை , அதிலும் அந்த ரகசியங்களை அறிந்தவர்களை ஒருபோதும் பகைக்கக் கூடாது..//
அண்ணா இதை சொல்லியே ஆக வேண்டும் .. உங்களின் இந்த தத்துவம் பெரிதாக இருக்கிறது... இலகுவில் பாடமாக்கும் விதமாக போடவும்
//இப்ப எங்கிட்டு எப்பிடி என்னத்தை யோசிசிட்டு இருப்பாரோ? நானாயிருந்தால் தூக்கில் தொங்கியிருப்பேன்.. எப்படி இனி உலகத்தின் மூஞ்சையில் முழிப்பது?//
அண்ணா நீங்கள் நித்தியானந்தாவின்
இடத்தில் இருந்தால் தூங்கி இருக்கமாடிர்கள் என்று அடித்து சொல்வென்....அவர் இன்னும் தூங்க இல்லையே!!!!
//எனக்கு சாமி க்கு கால் பிடித்து விட்டதோ இல்லை ஆங்கில பலான படங்களில் வருவது போல கண்டபடியெல்லாம் கசமுச செய்வதோ உறுத்தவில்லை .. ஆனால் அதை காவி உடையில் செய்ததுதான் அருவருப்பாக இருக்கிறது..//
அப்படி என்றால் காவி இல்லாமல் செய்தால் தவறுகளை சரி என்று ஒத்து கொள்வீர்களா?? அண்ணா ஒன்று மட்டும் என் அறிவுக்கு எட்டிய வகையில் சொல்கிறேன்... காவி உடுத்தாமல் தவறு செயும் ஆசாமிகள் அதிகம் அவர்கள் காவி உடுக்காத ஒரே காரணத்துக்காகத்தான் வெளியில் தெரிவது இல்லை.
//அதெல்லாம் கிடக்க, உந்த சாமியார்களி்டம் போன பொண்டுகள் , தங்கட புருசான்மாரை எப்பிடி பாக்கப்போகினம் ?.//
இது என்ன கேள்வி... புருசன பாக்க பிடிக்காமத்தானே அவர பாக்க போயிருப்பினம் ...பிறகு பார்த்தா என்ன பாக்காட்டி என்ன???
//அவற்ற மனுசியும் அந்த சாமியிண்ட ஆசசரமத்திலதான் படுத்து கிடந்ததாம்.. அதை கூச்சமில்லாம சொல்லுது மனுசன்.. அந்தாளை எல்லாம் ஏன் ஒரு கூட்டம் மதிக்குதென்று எனக்கு புரியவில்லை.. //
அண்ணா உது எல்லாம் ஒரு விளம்பரம்தான்....
//அனேகமாக யாராவது பெடியங்கள் பெண்கள் பெயரில் ஐ லவ் யு என்று அனுப்புவார்கள்..//
அப்ப பெண் பிள்ளைகள் அனுப்பிறதே இல்லையா???
//அதைப்படித்துவிட்டு ”தனக்கும் அப்பிடித்தான்..” ,” எனக்கு இப்படி ஒரு பிரச்சனை உங்களுடன் பகிர்வதில் ஏதோ ஆறுதல் ” என்று வருபவை தான் அதிகம்... நானும் அடடா நம்மை நம்பி ஏதோ அட்வைஸ் எல்லாம் கேட்கிறாங்கள் என்று உடனடியாக றிப்ளை பண்ணி விடுவேன்..//
இது எனக்கு தெரியாதே!!!!!! நானும் பலரை உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன்......
// ஆகவே யாரையும் நம்பி உங்கள் மனக்கவலைகளை கொட்டாதீர்கள்..(என்னிடம் கூடத்தான்)//
எங்க புல்லட் சாமியார் ரொம்ப எச்சரிகையாகவே இருக்கிறார்...
//”எனக்கு திருமணம் செய்ய மிகவும் பயமாக உள்ளது புல்லட்! வீட்டில்நிச்சயித்துவிட்டார்கள்.. பெண்அழகாக இருக்கிறாள்.. ஆனால் சரியான வாய் போல இருக்கிறது.. எல்லா இடத்திலும் அவளை திருப்பதிப்டுத்த முடியுமோ என அஞ்சுகிறேன்..”//
பதில்:
அண்ணா பேசாம நீங்க பிரமச்சாரியாக இருப்பது புல்லட்அண்ணா போன்ற அன்பர்களுக்கு நீங்கள் செயும் பெரிய உதவி.....!
//யால பற்றி................??
NO COMMENTS
// உங்க முழுவியளம் எ்பிடியிருக்கெண்டு பாப்பம்.. கோபி அடிச்சால் 20 ஓட்டு 30 பின்னூட்டம் எண்டு அள்ளுகொள்ளையா வரும் .. உங்கட ராசி எப்பிடின்னு இன்னும் 10 மணித்தியாலத்தில தெரிஞ்சிடும்..://
நானும் சமுகவலயங்களுக்கு எதிர்பாராது முதலாவதாக பின்னூட்டமிட்டபோது நான் முதலாவதாக பின்னூட்டிவிட்டேனே. இந்த பதிவு ஹிட்டாக வேண்டுமே என்று நினைத்திருந்தேன்.அப்ப தங்களிற்கும் இந்த முழுவியளம் etc இல் நம்பிக்கை இருக்கு..
ரஞ்சிதாக்கள் ஒழுங்காக இருந்தால் நித்தியானந்தாகள் பிழைவிட சந்தர்பம் குறைவு.
Subankan said...
என்ன உங்க ஆச்சிரமம் தொடங்குற வேலையா? //
அதுக்கார ஆரம்பகட்டவேலைகள் நடக்கிறன.. கமரா இயக்கத்தெரியாத பக்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறன..
ம்.., நாங்களும் ரவுடிதான் :P //
இல்லாம பின்ன? :P
அதுக்குத்தானே உங்களைக் கேட்டிருக்கிறார்? அருட்திரு புல்லட்டானந்தாவே, உங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்//
நிச்சயம் உங்களுக்காக கொலை கற்பழிப்பு போன்ற நிகழ்சிகள் எமது ஆச்சரமத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
இலங்கன் said...
நல்ல அறிவுரை முன்யோசனையாக செயற்பட வேண்டும். //
உடனடியா சந்தாப்பணத்தை கட்டி ஆசிரமத்தில் பக்தராக சேரவும்
”தவமறந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று."
ஏதாவது கோபமிருந்தால் தமிழில் வையவும்.. தெலுங்குத்தூசணம் போல இருக்கு
அண்ணா எல்லாமே அமைதியாக இருக்கும் வரை அழகுதான்.... ஹி..
கேள்பிரெண்ட் இருககு போல? :P
கங்கோன் உன் பின்னூட்டம் மிகவும் சீரியசாக ஆனால் சிறப்பாக இருந்தது..
மனச்சாட்சி உள்ளவன் உந்தக் களவெடுக்கிற சாமியார் வேல செய்வானா?நித்தியானந்தா ஒருக்காலும் கவலைப்பட மாட்டான்...
உண்மைதானப்பு.. :(
அதுசரி, உத அனுப்பினது ஆ! ஸ்கீறின் எண்டு கத்துறவரா? :D :D :D :D :D :D :D :D :D :D :D
ஹாஹாஹா! அவனில்லை.. ஆனால் அவனை அந்த இடத்தில் வைத்து யொசித்து பார்த்தேன் சிரிப்பு தாங்க முடியல
விதாவ இற்குச் சென்றிருந்தேன்....
பின்பு படத்தின் தாக்கம் காரணமாக இரவு பின்னூட்டவில்லை..... :(
உன் பார்வையை பதிவாக போடு வந்து படைக்கிறேன் ஒரு படையல்..
// ஆங்கில பலான படங்களில் வருவது போல கண்டபடியெல்லாம் கசமுச செய்வதோ உறுத்தவில்லை ..//
இதை நான் பார்க்கவில்லையே
அனுதினன் said...
இது புல்லட் சுவாமிகளின் பாணியாம்...
பதிவர்களே குறித்து வைத்து கொள்ளுங்கள்....
புல்லட் சுவாமி? பெயர் ஒரு கிக்கா இல்லை புதுப்பெயர் பரிசிலனை செய்யவும்...
அண்ணா இதை சொல்லியே ஆக வேண்டும் .. உங்களின் இந்த தத்துவம் பெரிதாக இருக்கிறது... இலகுவில் பாடமாக்கும் விதமாக போடவும்
கிழிஞ்சுது
அப்படி என்றால் காவி இல்லாமல் செய்தால் தவறுகளை சரி என்று ஒத்து கொள்வீர்களா?? அண்ணா ஒன்று மட்டும் என் அறிவுக்கு எட்டிய வகையில் சொல்கிறேன்... காவி உடுத்தாமல் தவறு செயும் ஆசாமிகள் அதிகம் அவர்கள் காவி உடுக்காத ஒரே காரணத்துக்காகத்தான் வெளியில் தெரிவது இல்லை.
காவி ஒரு துவறத்தின் அடையாளம்.. அதை உடுத்தினால் ஒரு தனி மரியாதை பக்தி.. இனி உண்மையான துறவிகளையும் எவனாவது மதிப்பானா?
இது என்ன கேள்வி... புருசன பாக்க பிடிக்காமத்தானே அவர பாக்க போயிருப்பினம் ...பிறகு பார்த்தா என்ன பாக்காட்டி என்ன???
சாரு கேட்டால் நேரே வைகுண்டம் ஏகவேண்டியதுதான்.. அதற்குள் அவர் தனக்கு மது மாது எல்லாம் பிடிக்கும் என்று பப்ளிசிட்டி வேறு..
அண்ணா உது எல்லாம் ஒரு விளம்பரம்தான்....
உண்மை உண்மை
அப்ப பெண் பிள்ளைகள் அனுப்பிறதே இல்லையா???
சும்மா பெருமைக்கு 10 பேர் அனுப்பினதுகள் என்று சொல்லலாம்.. ஆனால் நிஜத்தில் ஒண்ணும் வருவதில்லை.. சில பெண்கள் அடிப்பதை நீங்கள் பார்த்தால் நான் நாக்கை பிடிங்கி் கொண்டு சாகுவேண்டியதான்.. நம்ம ராசி அப்படி.. :(
இது எனக்கு தெரியாதே!!!!!! நானும் பலரை உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன்......
உன் தலையில இடி விழ
//யால பற்றி................??
NO COMMENTS
ஏன் ? ஏன்?
archchana said...
நானும் சமுகவலயங்களுக்கு எதிர்பாராது முதலாவதாக பின்னூட்டமிட்டபோது நான் முதலாவதாக பின்னூட்டிவிட்டேனே. இந்த பதிவு ஹிட்டாக வேண்டுமே என்று நினைத்திருந்தேன்.அப்ப தங்களிற்கும் இந்த முழுவியளம் etc இல் நம்பிக்கை இருக்கு..
அடப்பாவி சும்மா நக்கலுக்கு சொன்னேன்..
ரஞ்சிதாக்கள் ஒழுங்காக இருந்தால் நித்தியானந்தாகள் பிழைவிட சந்தர்பம் குறைவு.
ரஞ்சிதாவோ ராகசுதாவோ.. அவர்களின் தொழில் அது.. சாமியார்களின் தொழில் அதுவா? :P
தர்ஷன் said...
இதை நான் பார்க்கவில்லையே //
நக்கீரன் இணைய தளத்தில் இணைத்திருந்தார்கள்.. விளக்கணைக்கப்பட் ட பின்னரான காட்சிகளை IR தொழிநுட்பம் மூலம் பார்க்க நீங்கள் சந்தாதாரராக இணையவேண்டும்.. :P
நித்தியானந்தாவின் சேவை அளப்பரியது. மதங்களுக்கெதிரான எந்தப் பிரச்சாரத்தையும் மிஞ்சக்கூடிய பிரச்சாரம் அது.
இதைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறம். எல்லாம் இயற்கை. பாழாய்ப் போன மதங்களுக்குள் போய் இயற்கையையும் கெடுத்து உங்களையும் கெடுக்காதேங்கோ.
---------------------
உங்களிடம் வரும் கடிதங்கள் எவ்வாறு சாமியார்கள் பிழைக்கிறார்கள் என்ற உவமை.. மிகச் சரியானது.
எனக்குக் கான்சர் மாறினது என்று யாரும் சொல்லமாட்டார்கள். ஆனால் அங்க ரண்டு பேருக்கு நித்தியானந்தா கான்சர் மாத்தினவராம் என்ற கதையே அவனை நோக்கி எல்லாரையும் ஈர்க்க வைத்தது.
பரமஹம்ஸ பவானந்தா அவர்களே,
ஆசிரமம் ஆரம்பித்தவுடன் எனது உதவியும் உங்களுக்குத் தேவைப்படலாம். மனதில் வைத்திருந்து பின்னாளில் அருள் பாலியுங்கள்.
-------------------------
காசு விடயங்களிலும் சரி , பெண் விடய்ஙகளிலும் சரி , ரகசியமாக ஈடுபடுவதானால் நெருங்கியவர்களை , அதிலும் அந்த ரகசியங்களை அறிந்தவர்களை ஒருபோதும் பகைக்கக் கூடாது..//
வணக்கம் சாமியோவ்! எல்லாம் ஒரு வித அனுபவம் போல இருக்கு... புல்லட் மிக்ஸ் எப்பவுமே நம்பர் 1 தான்...
கில்லட்டானந்தா சர்தாஜி சுவாமிகள் இந்தப் பெயர் எப்பிடிப் புல்லட்?? நம்ம பக்கம் எட்டிப் பார்க்கலாமே??
பி.கு: யாலவில் நின்ற உங்கள் தோழர்கள் தங்களைப் போக விடாது வழி மறித்ததாக ஆதிரை ரகசிய வாக்கு மூலம்.. உண்மையாமோ??
புல்லட் தங்களுடன் சட் பண்ண வேண்டும் வர முடியுமா??
//கங்கோன் உன் பின்னூட்டம் மிகவும் சீரியசாக ஆனால் சிறப்பாக இருந்தது..//
எனது பெரிய பின்னூட்டத்திற்கு பதிலளிக்காமல தப்பும் புது முறையோ இது? ;) ;) ;)
/*எல்லா மனிதருக்கும் கவலை உண்டு.. அதை தீர்க்க மனிதர்கள் ஆறுதல் தேடுகிறார்கள்.. அப்படி தருபவர்களை மலைபோல் நம்புகிறார்கள்.. தமது intimate zone அனுமதிக்கிறார்கள்.. அதை சில களவாணிகள் தமக்கு சாதகமாக பயன் படுத்த...*/
U R Right
Some 1s Misused That Faith.....
வழமை போல பதிவை விட இந்த பின்னுடங்கள் ரொம்ம சுவாரசியம் ஹீ ஹீ
புல்லட்! மசாலா மிக்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு....நகைச்சுவையோட நல்ல விசயங்களையும் சொல்லியிருக்கீங்க.....ம்ம்...உங்கள் இலவச ஆலோசனை சேவை தொடர வாழ்த்துக்கள்....:)
பரமஅம்ஸ புல்லட்டானந்தா சுவாமிகள் பெயர் பெருசா இருந்தாத் தான் பெருசா நன்கொடை கிடைக்குதாம்.
எவனோ கூட இருந்து கழுவித்துடைத்தவன்தான் தேரை இழுத்து தெருவில் விட்டிருக்கிறான்..//
வச்சதே கூட இருந்தவாதானாமே? 50 கோடி கேட்டா குடுக்காததால இழுத்து விட்டாளாம், ஒரு டிவி கம்பெனி மூடி மறைக்க 2 கோடி கேட்டாளாம் அதுக்குள்ள இவா முந்திண்டாளாமே? இதெல்லாம் தெரிந்து வச்சிக்கோங்கோ உபயோகமா இருக்கும் :)
இடுகை அருமை.
//மிக்ஸ் நீண்டு விட்டதால் அடுத்து ஏதாவது நல்ல பதிவுடன் சந்திப்போம்//
அப்போ இது நல்லதில்லையா? என்ன ஒரு தன்னடக்கம்.. ;)
//காரியதரிசியுடன் படுக்கைக்கு செல்வதும் , ட்ரைவருடன் தண்ணியடிப்பதும் உன் சந்தோச வாழ்க்கையின் முடிவென்று என் மனேஜர் ஒரு முறை சொல்லியிருந்தார்..//
நல்ல ஒரு அறிவுரை தான்.. எனக்கும் ஒரு அறிவுரை இதே போல ஏன் முதலாவது மேலதிகாரியால் வழங்கப்பட்டது.. ;)
Dont f--- where u work and Dont work where u f---.
வாழ்க்கை,வேலைக்கு தேவையான தத்துவங்கள்.
//அந்தாளை எல்லாம் ஏன் ஒரு கூட்டம் மதிக்குதென்று எனக்கு புரியவில்லை//
சீரோ டிகிரி பார்த்து பேயறைஞ்ச மாதிரி ஆன போதே நினைத்தேன்..இப்பிடி எப்பவாவது புல்லட் எழுதும் என்று.. ;)
//அடடா நம்மை நம்பி ஏதோ அட்வைஸ் எல்லாம் கேட்கிறாங்கள் என்று உடனடியாக றிப்ளை பண்ணி விடுவேன்..//
சுவாமி புல்லட்டானந்தாய நமக.. வெள்ளவத்தையில் ஆசிரமம் அமைக்க இடம் தேவையோ?
யால அடிக்கடி போகும் மர்மம் என்னவோ? புண்ணிய யாத்திரை? ;)
LOSHAN
http://arvloshan.com/
"யால சபாரி" மூன்று நாட்கள்...ஜாலி.
முன்பு என்மீது வந்த சற்றுப் பொறாமை எல்லாம் காணாமல் போயிருக்குமே :))
படங்களுடன் தகவல்களும் அருமை.
Post a Comment