யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்பிளக்கத்தொடங்கினது அப்பத்தான்.. அதில லயன்கிங் 1.5 எண்ட படத்தில ககூனமடாட்டா எண்ட ஒரு வசனம் வரும்.. அப்பிடீன்ன கவலையே இலலாமைன்னு அர்த்தம்.. அதை அடையிறதுக்கு see beyond What you See ங்கிறதுதான் தாரக மந்திரமாம்னு ஒரு கிழட்டுக்குரங்கு சொல்லும்.. அது மனசில ஆழமா பதிஞ்சிட்டுது..
நீ இப்ப உனக்கு கிட்டவா தெரியிற இலக்குகளை மட்டுமல்லாமல் , அங்கால தள்ளி தெரியிற இலக்குகளையும் பாக்கணும்.. அதுதான் அந்த வசனத்தோட தார்ப்பரியம்..
செஸ் விளையாட்டை எடுத்துக்கொண்டீங்களெண்டால் ஒரு மூவ் பண்ணும் போது அதுக்கடுத்த 64 மூவ் பற்றி சிந்திக்கவேணும்.. ஒரு எக்சாமுக்கு காசு கட்டிறீங்களெண்டால் பைனல் எக்சாம் வரைக்கும் போக வசதிவருமா எண்டு யோசிக்கணும்..
அப்பிடி யோசிச்சு வாழ்ந்தா நிச்சயம் லைப் நல்லாத்தான் இருக்கும்.. இருபத்தைஞ்சு வயிசில நல்ல வேலைக்கு போய் , சொந்தக்காசில அம்மாவுக்கு சாறி எடுத்துக் குடுக்கணும் , நம்ம பக்கத்து வீட்டு பிகருக்கு பவுடர் வாங்கி குடுக்கணும் , எண்டு விதவிதமா யோசிச்சு ஓலெவல் படிக்கிறதில ஒரு சுகமப்பா..
ககூனமடாட்டா! :)
இப்போ 25 வயசாயிடுச்சு.. நல்ல வேலைக்கு போயாச்சு.. அம்மாவுக்கு சாறியும் எடுத்து குடுத்தாச்சு.. ( ஆனா பக்கத்து வீட்டுக்கு பிகருக்குதான் எவனோ கிழவாடி கனடாவிலருந்து வந்து பவுடரப்போட்டுட்டான்.. அதை விடுங்க.. :( ) ..
இப்போ இந்த வயசில கலகல ஜலஜல எண்டு இருக்கும்போது , ட்ரிப்புகள் போகும் போது, ஜாலியா இருக்கும்போது , ரோட்ல டைட் டீசேட் போட்டு மசில்ச காட்டி நடக்கும் போது , பிகருகள் ரகசியமா பாக்கிறதை ரசிக்கும்போது , இதுதான்டா சொர்ககம் எண்டு புல்லரிக்கும்.. எதையும் சாப்பிடலாம் , எதையும் ரசிக்கலாம், பாடலாம் ஆடலாம் பகிடிவிடலாம், டெங்கு நுளம்பு வந்தா ஏய் இங்க குத்தேன் ஏய் இங்க குத்தேன் எண்டு லுலுலாயி காட்டலாம்.. மதர் மதர்ப்பு தெனாவட்டு இளரத்தம்.. அப்பிடி வாழ்க்கை இனிக்கும் போதுதான் குறுக்கால ஒரு கிழவன் போனான்.
கால்மூட்டெல்லாம் தேஞ்சு, 2 தரம் பைபாஸ் செஞ்சு, வாதம் வந்து , கண்பார்வை போய், பின்னாடி வாற ஓட்டோக்காரன் ஹோண் அடிச்சது கேக்காம அவன் கிட்ட ” கிழட்டு முண்டம் வயசானா வீட்ட கிடந்து சாவுறதுதானே ” எண் பேச்சு வாங்கிட்டு தட்டுத்தடுமாறி விழப்பாத்து என்னில தாங்கிப்பிடிச்சிட்டு பரிதாபமா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு தாண்டிதாண்டி போனான்..
ஒருவித இனம்புரியாத அதிர்ச்சி..
மறுபடி கனகாலத்துக்கு பிறகு ”ககூனமடாட்டா ”.
வயசு போய் மண்டையப்போடுறது ஒரு கரையா இருந்தாலும் , அதில எத்தினை பிடுங்குப்பாடுகள்? வாழ்க்கை சந்தோசமா இருக்க காரணமான சகல சாமானும் ஒரு 50 வயசில போக தொடங்கிடும்.. கண்ணு , காது , மூக்கு , நாக்கு எண்டு எல்லாம் ப்யுஸ் போய் , இப்போ தேக்கு இருக்கிற பாடி , பின்னாடி சக்கு மரத்தில செஞ்ச பாத்ரூம் கதவு மாதிரி ஆயிரும்..
ஆகவே அதே ககூனமட்டாட்டா ..... இப்போ சந்தோசமாயில்ல..
நாமளும் தூரத்தில வாற ஆள் மங்கலா தெரிய நொண்டி நொண்டி உடம்பெல்லாம் நோக கிட்டபோய், ”ஆ? என்ன மோனை சொன்னனீஈஈஈ?” எண்டு வாய்கிழிய கத்திறத நினைக்க வயத்த கலக்கிச்சு..
எமன் எல்லாம் எருமைக்கு ஏசி போட்டுட்டு வந்தன்னா ஒரு கம்ஃபடபிள் சீட்டா பாத்து இப்பவே ஏறி ப்போயிரலாமுன்னு கூட நெச்சேன்.. எவ்ளோ கொடுரம்.. :-o
அப்போதான் கிட்டடியில யாழ்ப்பாணம் போனப்போ எங்க அம்மம்மா கூட கனநேரம் கதைக்க முடிஞ்சுது. ஏப்ரல் வெக்கையில யாழ்ப்பாணம் புழுங்குவதால பலாமரத்துக்கு கீழ கதிரைய போட்டு கடலைய போட்டுட்டிருந்தப்ப அந்த கேள்வியகேட்டேன்.. ”அம்மம்மா ! வயசு போனது உங்களுக்கு கஸ்டமாயில்லயோ ? எல்லாம் முடிஞ்சுது எண்டு பயமாயில்லயோ? பழசை நெச்சு பாக்க மறுபடி அங்க போகமாட்டமோ எண்டு கவலையாயில்லயோ? ”
ஏதோ ஆறுதல் தேடி என்ட பயத்தை சொன்னேன்.. மனுசி 5 ஆம் வகுப்பு பாஸ் பண்ணிச்சோ தெரியல்ல.. ஆனாலும் சொன்னன்..
வாழ்க்கையில் சில விடயங்கள் பளாரெண்டு அறையும்.. அத மாதிரித்தான் அந்த மனுசி சொன்ன பதிலும்..
”என்னோட இருந்த , வளர்ந்த எல்லாரும் இப்ப இப்பிடித்தானேயாடா ராசா இருக்கினம் ? எங்கட வருத்த துன்பங்களை ஆளாளுக்கு சொல்லிக்கொள்றதிலயும் ஒரு பெருமைமாதிரி இருக்கும்.. அதுவும் ஒரு சுகம்தானடா! அண்டைக்கு நம்மோட படிச்சவளிண்ட செத்தவீட்டுக்கு போகேக்க அவளிண்ட பொடிய பாத்து எனக்கு சற்று பொறாமையாயும் பெருமையாயும் இருந்திச்சு மோன.. நாம வாழ்ந்து களைச்சது காணும்.. .இனி படுக்கைப்பாயில கிடந்து சீரழியாம போற வேலைய பாப்பம்” சொன்னபடி மனுசி தேத்தண்ணி வைக்கப்போச்சு.. அந்த வெக்கையிலும் அவாண்ட பிளேண்டிய குடிக்கிறதில எனக்கு ஒரு தனிருசி தெரிஞ்சுது..
வாழ்க்கையில அந்தந்த வயசில பலப்பலவிடயங்கள் பிடிக்கும்.. உதாரணமா 3 வயசில கலரடிக்கிற புத்தகம் வாங்கி கிறுக்க ஆசை.. அப்பிடியே 7 வயசில சின்ன ஆமிக்காரன் நிறைய வாற அந்த செட் வாங்கி தம்பியோட பிரிச்சு விளயாட ஆசை, அப்புறம் கிரிக்கட், றோட்டு சுத்துறது, அது இதெண்டு ஒவ்வொரு வயசிலயும் பலப்பல.. ஆனா இப்போ கலர் புத்தகத்தை கண்டா நிண்டு கிறுக்கதோணாது.. தூக்கி எறிஞ்சிட்டு போயிடுவம்.. ஏனெண்டால் வயசோட ஆசையளும் தேவையளும் மாறும்.. இப்ப நமக்கு பிடிக்கிறது பிறகு பிடிக்காமபோகும். அந்த நேரம் வேற ஏதாவது பிடிக்கும்.. இது நியதி.. நீங்களும் யோசிச்சு பாருங்க... உண்மைதானே? ஆகையால வயசு பேனாப்புறம் மனம் விரும்பிறது நமக்கு இப்ப புரியாது.. அப்ப கிடைக்கிறத வச்சு நம்ம மனம் சந்தோசப்பட்டுக்கும்.. அது சிலவேளை நம்ம கண்பார்வை குறையிறத நம்ம கூட ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவன் கூட பகிர்ந்துக்கிறதாயும் இருக்கலாம்.. ஆகவே டோன்ட் வொறி பீ ஹப்பீ....
உண்மைதானே.. உங்களோட பெஸ்ட் பிரெண்ட றோட்டு வழில கண்டு ”மச்சான் இப்ப ஒண்டுமே தெளிவா தெரியிதில்ல” எண்டு நீங்க சொல்ல அந்தாள் தன்ட நாரிப்பிடிப்பை பற்றி கதைக்க ரெண்டுபேரும் செத்துப்போன உங்கட ப்ரெண்டோட சேர்ந்து செஞ்ச குறும்பை நினைச்சு சிரிக்க.. நாம வாழ்ந்து முடிச்சவங்கடா எண்ட பெருமையோட றோட்டில சிரிச்சிட்டே நடக்கும்போது கிழடுங்க விழப்போகுதுங்க எண்டு தாங்கி பிடிக்க வாற இளவட்டத்தை பாத்து சிரிச்சிட்டு பொவீங்க.. இது நடக்கும் பாருங்களேன்.. :-)
ம்ம்.. Anyway, இப்போ மறுபடியும் இனிக்குது..
அதே ககூனமடாட்டா! :)
ஆகவே இப்பவே நமக்கு நெருக்கமான , நம்ம கடைசிக்காலத்தில நம்ம கூட சிரிச்சிட்டே சந்தொசமா மறையக்கூடிய உறவுகளை உருவாக்கிக்கொள்ளறது முக்கியம்பா.. முக்கியமா பொஞ்சாதி புருசன் எல்லாம் கவனமா செலக்ட் பண்ணணும்.. காசுக்கும் கனடாவுக்கும் ஆசைப்பட்டு கண்ட கஸ்மாலத்தையெல்லாம் கட்டினால் கடைசிக்காலத்தில தனிய இருந்து சுறா படம்தான் பாக்கணும்.. நல்ல நண்பர்களை யும் வாழ்க்கைத்துணையையும் தேடுவதில இளமைக்காலத்தை கொஞ்சம் இன்வெஸ்ட் பண்றதா நான் மடிவெடுத்திருக்கேன்.. நீங்க எப்பிடி? ;-)
வர்ட்டா! சேசே!
ககூனமடாட்டா ;)
சிரிப்பு வகைகள்
- நக்கல் (9)
- நழுவல் நரசியல் (12)
- பிக்கல் பிடுங்கல் (4)
- பொது (11)
சிதறிய சிரிப்புக்கள்
இங்கிட்டிருந்தெல்லாம் சிரிக்கிறாங்கப்பா... :D
சிரித்தவர்களும் சிந்தித்தவர்களும்
ஆனானப்பட்ட புல்லட்டையே புல்லரிக்கச் செய்வோர்
-
-
பொன்னியின் செல்வன் - ஒலி நூல்8 months ago
-
ரணிலின் கில்லி10 months ago
-
எச்சரிக்கை2 years ago
-
-
இறுதிச்சடங்கு5 years ago
-
-
-
-
-
Life of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி!10 years ago
-
”முடியல...... ” கதைகள்10 years ago
-
Testing Blog10 years ago
-
வேண்டாம்.. விலகிவிடு!11 years ago
-
2010 - 140 எழுத்துக்களில்12 years ago
-
இதயமே இல்லையா காதலுக்கு?12 years ago
-
போலிப் பதிவர் சந்திப்பு...13 years ago
37 Responses
தல....
கலக்கல்....
அப்பாடா...
நான் தான் முதலாவது...
ஊரில பாட்டி கூடிற்றுது...
தல,
உண்மையாவே அருமையான பதிவு...
வாழ்க்கையின் தத்துவமே இதுதான்...
அதை உங்கட வழமையான பாணியில சொல்லியிருக்கிறது வாசிக்கவும் அருமையா இருக்கு...
தலிவா...
ரொம்ப நாளைக்குப்பிறகு சூப்பரான பதிவோட வந்திருக்கீறீங்க..;)
கலக்கல் அண்ணே..;)))
நல்ல பதிவு அண்ணே. சில இடங்களில் டச் பண்ணிட்டிங்க. அதன் அன்ன பக்கத்து வீட்டுப்பெண்களிடம் உங்களுக்கு கண். அந்த கிழவன் தள்ளிட்டு போனதெண்டின்களே அப்போ நீங்கள் பார்த்த பிகள் கிழவியா?
புள்ளட்டுக்கும் கான்கொனுக்கும் இடையிலான தொடர்பு அம்பலம்...
me: புல்லட் பதிவு போட்டிருக்கார் கும்முவோமா
Idleboy: சீரியஸ் பதிவு தல... நாளைக்கு விட்டிற்று நாளண்டைக்கு குமு:முவம்
me: அடப்பாவி நாம சீரியஸ் பதிவில் கூட காமெடி பண்ணுவம்
Idleboy: புல்லட் அண்ணா என்னட்ட வாக்குறுதி வாங்கினனவர் உடன கும்மக் கூடாது எண்டு
புல்லட் கனநாளைக்குப் பிறகு பதிவு வருது.சுகம்தானே !
நல்ல தெளிவான சிந்தனைப் பதிவு புல்லட்.நீங்கள் சொன்னதை விட உங்கட அம்மம்மா சொன்னதுதான் மனசில பளீர் எண்டு பட்டுது.
யோசிக்கவேண்டிய தத்துவம் அது.
nice and touching.
Hakuna matata
:)
அடேங்கப்பா! புல்லட்டு நீர் லேசுப்பட்ட ஆளில்லை எண்டு இப்ப தெரியுது. அது சரி கனநாளா ஆளை காணேல்லை எங்கள் போயிருந்தீர்? புத்தன் மாதிரி வாழ்க்கை தத்துவம் பற்றி ஆராய போயிருந்தீரோ?
நல்ல நண்பர்களை யும் வாழ்க்கைத்துணையையும் //
வாழ்க்கைத்துணைகளையும் என்று எழுத நினைத்திருப்பீர்கள், பிழை திருத்தவும்
அண்ணே, நல்லா எழுதுறியள்..
இலங்கைப்பதிவர் தலமை பதவி உமக்குத்தான் இருக்கவேணும். விட்டுறாதேயும்..
ககூனமடாட்டா ;)
// EKSAAR said...
அண்ணே, நல்லா எழுதுறியள்..
இலங்கைப்பதிவர் தலமை பதவி உமக்குத்தான் இருக்கவேணும். விட்டுறாதேயும்..
ககூனமடாட்டா ;) //
ஆகா...
அண்ணை எக்சாராலயே பாராட்டப்பட்ட புல்லட்டு எண்டு வரலாறு சொல்லப் போகுதண்ணே...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...
Gud one! Hakunamatata!!:-)
உங்கள அம்மம்மா பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். மகிழ்ச்சி. அவ எபப்டி இருக்கிறா.
கொடிகாமம் - சாவகச்சேரியில் இருந்து லாண்ட் மாஸ்டரில் அர்யாலை வந்தபோது அவ, உங்கள் தாத்தாவைப் பார்த்தபோது (அந்நேரம் அவர் பற்றிய ஒரு பொய் நம்ப்பப்பட்டிருந்தது) அவர் முகத்தில் பரவிய சந்தோஷம் இருக்கிறதே, இம்முறையும் அப்பாவுடன் அது பற்றிக் கதைத்தேன்.....
அது போல ககூனமடாட்டாவுடன் கொடிகாமம் அய்யா மற்றும் அப்புவை இணைத்து யோசித்துப் பார்த்தீர்களா?
ஆகா...
தலைவா அருமையான பதிவு..
அப்பிடியே.. தலைவரின்
ரா.. ரா.. ராமையா பாட்டு கேட்ட பீலிங்...
//ஆகவே இப்பவே நமக்கு நெருக்கமான , நம்ம கடைசிக்காலத்தில நம்ம கூட சிரிச்சிட்டே சந்தொசமா மறையக்கூடிய உறவுகளை உருவாக்கிக்கொள்ளறது முக்கியம்பா..//
சத்தியமான உண்மை அண்ணா
நாமெல்லாம் குருத்தோலைகள் இன்னும் கொஞ்சக்காலத்தில் காவோலைகள் தான் என்பதை தங்கள் பதிவு உணர்த்திற்று..
நீண்டகாலத்திற்கு பதிவு போட்டிருக்கிறீங்க..
அடுத்த பதிவை எதிர்பாத்த வண்ணம்..
ஆகா..ஓகோ...
அருமை ஐயா ! :)
இப்போ 25 வயசாயிடுச்சு.. நல்ல வேலைக்கு போயாச்சு.. அம்மாவுக்கு சாறியும் எடுத்து குடுத்தாச்சு.. ( ஆனா பக்கத்து வீட்டுக்கு பிகருக்குதான் எவனோ கிழவாடி கனடாவிலருந்து வந்து பவுடரப்போட்டுட்டான்.. அதை விடுங்க.. :( ) ..//
பாவம் எங்கள் புல்லட்! இதைத் தான் சொல்லுறது காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். சந்தர்ப்பம் ஏதாச்சும் கிடைச்சுதெண்டால் லபக்கெண்டு கவ்விப் பிடிக்க வேண்டியது தானே?
புல்லட் திருமணமான பின்னர் பதிவினை எழுதுவதால் அனுபவ முதிர்ச்சி புல்லட்டின் வார்த்தைகளில் தெரிகிறது. பதிவு முழுக்க தத்துவம் நிரம்பியிருக்கு,
//நல்ல நண்பர்களை யும் வாழ்க்கைத்துணையையும் தேடுவதில இளமைக்காலத்தை கொஞ்சம் இன்வெஸ்ட் பண்றதா நான் மடிவெடுத்திருக்கேன்.. நீங்க எப்பிடி? ;-)//
ஏற்கனே திருமணமாகி விட்டதாகக் கேள்வி? பிறகென்ன இன்னொன்றா??
// லயன்கிங் 1.5 எண்ட படத்தில ககூனமடாட்டா எண்ட ஒரு வசனம் வரும்.. அப்படீன்னா See beyond What you See எண்டு அர்த்தமாம்..//
சிங்களத்தில் சின்காலோகனைய ,சுனபாலோகனைய என்று சொல்வார்கள். சிங்கத்தின் மீது கல்லெறிந்தால் அது கல் வந்த திசையைப் பார்க்குமாம். நாயின் மீது கல்லெறிந்தால் அது கல்லைப் பார்க்குமாம். இதுதான் ஞாபகம் வந்தது.
//இப்போ 25 வயசாயிடுச்சு.. நல்ல வேலைக்கு போயாச்சு.. அம்மாவுக்கு சாறியும் எடுத்து குடுத்தாச்சு.. ( ஆனா பக்கத்து வீட்டுக்கு பிகருக்குதான் எவனோ கிழவாடி கனடாவிலருந்து வந்து பவுடரப்போட்டுட்டான்.. அதை விடுங்க.. :( ) .. //
Why blood same blood
//அப்பிடி வாழ்க்கை இனிக்கும் போதுதான் குறுக்கால ஒரு கிழவன் போனான்.//
நல்லாத்தானே போயிட்டுருந்துச்சு
//காசுக்கும் கனடாவுக்கும் ஆசைப்பட்டு கண்ட கஸ்மாலத்தையெல்லாம் கட்டினால் கடைசிக்காலத்தில தனிய இருந்து சுறா படம்தான் பாக்கணும்.. //
கார்ப்பரேட் கம்பனில வேலைன்னு போனியேடி அவன் அங்க கக்கூஸ் கழுவிக்கிட்டு இருக்கானேடி
//நல்ல நண்பர்களை யும் வாழ்க்கைத்துணையையும் தேடுவதில இளமைக்காலத்தை கொஞ்சம் இன்வெஸ்ட் பண்றதா நான் மடிவெடுத்திருக்கேன்.. நீங்க எப்பிடி? ;-)//
Me too
அருமையான பதிவு அண்ணே
நிறைய அடிவாங்கின கடைசிப்பதிவுக்குப்பிறகு கனநாள் காணேல்லை. இப்ப இப்படியொரு பதிவு போட்டதும் ஒரு ககூனமடாட்டா ரைட்டா?
// நிறைய அடிவாங்கின கடைசிப்பதிவுக்குப்பிறகு கனநாள் காணேல்லை. இப்ப இப்படியொரு பதிவு போட்டதும் ஒரு ககூனமடாட்டா ரைட்டா //
புல்லட் அண்ணா!
உங்கட ரவுசர உருவ வேற யாருமே வேணாம், உந்தப் பய புள்ளகளே போதும்.
இணையம் வழியா கணணிக்குள்ள நடந்த குத்துவெட்டுகள இப்பிடி பொது இடத்தில போட்டுக்குடுக்கிறாங்கள் பாத்தீங்களா?
அண்ணா ரொம்ப நல்ல இர்ந்துது அண்ணா , நீங்கள் Ruthra Mawatha ஆல நடந்து போற Style ஏய் தனி தானே..........எந்தை அம்மாவும் உங்கடை அம்மாவும் கிட்ட தட்ட ஒரே மாதிரி தான்...Touch பண்ணிடீங்க
//நல்ல நண்பர்களை யும் வாழ்க்கைத்துணையையும் தேடுவதில இளமைக்காலத்தை கொஞ்சம் இன்வெஸ்ட் பண்றதா நான் மடிவெடுத்திருக்கேன்.. நீங்க எப்பிடி? ;-)//
மிகவும் நல்ல முடிவு. சிறந்த பதிவும்கூட. Hakuna Matata !!!
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
ஏன் நீண்ட நாட்களாக பதிவிடவில்லை.
அண்ணா உங்கள் வழியில் சிந்திக்க வைத்த ஒரு பதிவு!!! சூப்பர் அண்ணா!
(http://anuthinan0.blogspot.com/)
Soooparappu....Nenja nakkitaa....
'யாத்ரா 2010' விழா நாயகன் புல்லட் அண்ணாவே...
உங்களுக்கும் தாய்க்குலத்துக்கும் ஏதாவது அணுவாயுத ஒப்பந்தமா..?
பதிவு வழக்கம் போல அருமை..
//ஆ? என்ன மோனை சொன்னனீஈஈஈ?//
இந்த டயலாக்க நம்ம பதிவர்கள் ஒவ்வொருத்தரும் சொல்லுற மாதிரி நினைச்சு பாத்தன்...
புல்லட், நல்ல பதிவு.... தென்னிந்திய பேச்சு வழக்கை பாவிக்காமல் எங்கட யாழ்ப்பாண பேச்சு வழக்கிலேயே எழுதுங்கோவன்? நல்லாவும் இருக்கும் எங்களுக்கு பெருமையாகவும் இருக்கும்....
Wikipedia says "Hakuna Matata"
is a Swahili phrase & it meas "no worries".
அருமை...
http://www.jaffnavoice.com/
Annai bullet, neenka Canadavai patri kathikirathi kocham ithulla kuraithirukalam..enakku kobam kovama varukkuthu enathu thainaadiapatri kathaikeke
அண்ணா, உங்களுக்கு என்ன ஆச்சு? ரொம்ப நாளா ஆளையே காணோம். நாங்க உங்களுக்காக wait பண்றோம். pls come again.
வருவேன் தம்பி வருவேன்.. நீ யார் என்றே தெரியாது ஆனாலும் உன் பாசத்துக்கு நன்றி...
Aaha...
It seems like getting your reply via comment page is much easier than getting a reply from your mail. ;-)
Nice Show!
I would highly appreciate if you could guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News
Post a Comment